Tuesday, July 4, 2017

புரட்சிகரத் தீவிரவாதம்

நவீனகால இந்தியா : புரட்சிகரத் தீவிரவாதம்

கொள்கை :

நேர்மையற்ற அலுவலர்களைக் கொல்வது, அதன் மூலம் ஆட்சியாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவது, மக்களிடையே பிரிட்டிஷாரை வெளியேற்றும் வகையில் உணர்ச்சிகளைத் தூண்டுவது, அதற்காக மக்கள் போராட்டங்களை நடத்தாமல், தனிநபர் சாகசங்களை நடத்திக் காட்டுவது.
வங்காளம் :

1902 : முதல் புரட்சிகரக் குழுவினர், மிட்னாப்பூர் மற்றும் கல்கத்தாவில் (அனுசீலன் சமிதி)
1906 : யுகாந்த்தர் மற்றும் சந்தியா வங்காளத்தில், கால் – மகாராஷ்டிரத்தில்
1908 : ப்ரஃபுல்லாசாகி, குடிராம் போஸ் இருவரும் முசாஃபர்பூர் நீதிபதி கிங்ஸ்ஃபோர்டைக் கொல்ல முயற்சி.  அலிபூர் சதி வழக்கில் அரவிந்தகோஷ் பரீந்திரகுமார் கோஷ் மற்றும் சிலர் ஈடுபடுத்தப்பட்டனர்.
1912 : ராஷ்பிஹாரி போஸ் மற்றும் சச்சின் சன்யால் வைசிராய் ஹார்டிங் மீது வெடிகுண்டு வீசுதல்.
அனுசீலன் கமிட்டி (ஒரு ரகசியச் சங்கம்)யில் டாக்கா பிரிவில் 500 கிளைகள் இருந்தன.  சந்த்யா, யுகாந்தர் செய்திப் பத்திரிக்கைகள் புரட்சிகர நடவடிக்கைகளை ஆதரித்து வெளிவந்தன.
பஞ்சாப் :

லாலா லஜபதிராய், அஜித்சிங், ஆகாஹைதர் சையத், ஹைதர் ராஜா, பாய்பரமானந்த், லால்சந்த், ஃபலக் மற்றும் சூஃபி அம்பாபிரசாத்
வெளிநாடுகளில் :

1905 : ஷ்யாம்ஜி கிருஷ்ணவர்மா, இந்தியன் ஹோம் ரூல் சொசைட்டி மற்றும் இந்தியா ஹவுஸ் ஆகியவற்றைத் தொடங்கி சோஷியலஜிஸ்ட் என்ற பத்திரிக்கையையும் தொடங்கினார் லண்டனில்.
1906 : கர்சன் வைலியை மதன்லால் திங்ராகொலை செய்தார்.  பாரிஸில் மற்றும் ஜெனிவாவில் இருந்து மேடம் பிகாஜிகாமா ‘வந்தே மாதரம்’ என்ற பத்திரிக்கையை நடத்தினார்.

No comments:

Post a Comment