Showing posts with label Constitution. Show all posts
Showing posts with label Constitution. Show all posts

Saturday, April 7, 2018

#22 பகுதிகள்#

பகுதி 1 (உட்பிரிவு 1-4) இந்திய யூனியன்
பற்றியது. அதாவது மாநில அமைப்பு.
மாநில எல்லை வரையறை போன்றவை.

பகுதி 2 (உட்பிரிவு 5-11) இந்திய
குடியுரிமை பற்றியது.

பகுதி 3 (உட்பிரிவு 12-35) அடிப்படை
உரிமைகள்/ அது மறுக்கப்படும் போது
அதற்கான தீர்வுகள்.

பகுதி 4 (உட்பிரிவு 36-51) அரசு
கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள்.
பகுதி 4A ( உட்பிரிவு 51 A) அடிப்படை
கடமைகள்.

பகுதி 5 (உட்பிரிவு 52- 151) மத்திய
அரசமைப்பு அதாவது குடியரசு தலைவர்,
துணைக் குடியரசு தலைவர், நடுவண்
அமைச்சரவை, பாராளுமன்றம் மற்றும் அதன்
அமைப்பு, உச்ச நீதிமன்றம் மற்றும் அதன்
அமைப்பு.

பகுதி 6( உட்பிரிவு 152-237) மாநில
அரசமைப்பு, கவர்னர், மாநில அமைச்சரவை.
மாநில சட்டமன்றம் / சட்ட மேலவை அதன்
அமைப்பு உயர் நீதி மன்றம் அதன் அமைப்பு.

பகுதி 7 (உட்பிரிவு 238) அரசமைப்பு சட்டம்
முதல் பட்டியலில் உள்ள மாநிலங்கள்
பற்றியது- இந்தப் பிரிவு இப்போது நீக்கப்
பட்டுள்ளது.

பகுதி 8 (உட்பிரிவு 239 -242) ஒன்றியப்
பகுதிகள் குறித்து.

பகுதி 9 ( உட்பிரிவு 243) உள்ளாட்சி
நிர்வாகம் இந்த உட்பிரிவில்
குறிப்பிடப்பட்டுள்ளன.

பகுதி 9A ( உட்பிரிவு 243P-243Z,243ZA-243ZG)
நகராட்சி நிர்வாகம் இந்த உட்பிரிவில்
குறிப்பிடப்பட்டுள்ளன.

பகுதி 10 உட்பிரிவு 244) பட்டியல் சாதிகள்/
பழங்குடியினர்/ ஆங்கிலோ இந்தியர் ஆகியோர்
குறித்து.

பகுதி 11 (உட்பிரிவு 245-263) மத்திய மாநில
அரசு உறவு, மாநிலங்ளுக்கிடையேயான
உறவு.

பகுதி 12 (உட்பிரிவு 264-300) அரசின் நிதி
குறித்த உட்பிரிவுகள் நிதி / நிதியினைக்
கையாளும் நெறிகள்.

பகுதி 13( உட்பிரிவு 301- 307) இந்திய
நாட்டில் வணிகம் செய்யும்
நடைமுறைக்கான உட்பிரிவுகள்.

பகுதி 14( உட்பிரிவு 308-323) அரசுப் பணிகள்
பகுதி 14A (உட்பிரிவு 323ஏ மற்றும் 323 பி)
மத்திய தீர்ப்பாயங்கள்.

பகுதி 15 (உட்பிரிவு 324-329) தேர்தல்கள்,
தேர்தல் ஆணையம்.

பகுதி 16 (உட்பிரிவு 330-342) - பகுதிவாரி
பெரும்பாண்மை சாதிகளுக்கான உரிமைகள்
பற்றி.

பகுதி 17 (உட்பிரிவு 343-351) அலுவல்
மொழி, வட்டார மொழி, நீதி மன்றங்களில்
மொழி.

பகுதி 18 (உட்பிரிவு 352-360) அவசர
நிலைக்கானது (எமெர்ஜென்சி)

பகுதி 19 (உட்பிரிவு 361-367) இதர (இதில்
குடியரசு தலைவர், கவர்னர் இந்தப் பதவிக்கான
சட்ட சிறப்பு பாதுகாப்பு மற்றும் சில)

பகுதி 20 (உட்பிரிவு 368) இந்திய்
அரசமைப்புச் சட்டம் திருத்தம் அதற்கான
நடைமுறை.

பகுதி 21 (உட்பிரிவு 369-392) தற்காலிக,
இடைநிலை மற்றும் சிறப்பு ஒதுக்கீடுகள்

பகுதி 22 (உட்பிரிவு 392-395) குறுகிய
தலைப்பு, ஆரம்பம் தேதி, இந்தி மற்றும்
ரிப்பீல்ஸில் அதிகாரப்பூர்வ உரை.

Thursday, March 29, 2018

*அரசியலமைப்பில் முக்கிய வழக்குகள்*

-----------------------------

#முகவுரை பற்றிய வழக்குகள்
----------------------------
பெருபாரி-1960
கேசவாநந்த பாரதி - 1973
S.R.பொம்மை - 1994
LIC இந்தியா வழக்கு- 1995

#அடப்படைஉரிமைகள் பற்றிய
வழக்குகள்
----------------------------
A.K.கோபாலன் - 1950
மேனகா காந்தி - 1978

#அரசியலமைப்புசட்டத்திருத்த
அதிகார வரம்பு பற்றிய வழக்குகள்
----------------------------
கோலக்நாத் - 1967
கேசவாநந்த பாரதி - 1973
மினர்வா மில்ஸ் வழக்கு - 1980

#பொதுநல வழக்கு
தொடர்தல் பற்றிய
வழக்குகள்
--------------------------
பாரதி சோஷித் கரம்சாரி சங்
வழக்கு - 1981
பந்துவா முக்தி மோர்ச்சா வழக்கு -
1984
ஹீசைரா கார்டூன் வழக்கு

#அடிப்படை உரிமைகள் மற்றும் # DPSP
................
செம்பாக்கம் துரைராஜன்
வழக்கு - 1951
மினர்வா மில்ஸ் வழக்கு - 1980

#மண்டல்கமிஷன் பற்றிய வழக்கு
----------------------------
இந்திராஷகானி வழக்கு - 1992

#விதி_18 பற்றிய வழக்கு
----------------------------
பாலாஜி ராகவன் வழக்கு

#BasicStructure of Constitution
பற்றிய வழக்கு
---------------------------
சங்கரி பிரசாத் வழக்கு - 1951
சாஜன் சிங் வழக்கு- 1965
கோலக்நாத் வழக்கு - 1967

Thursday, February 8, 2018

🍀FIRST IN GOVERNANCE🍀

📖First President of India :
Dr. Rajendra Prasad (1950-1962)

📖First Prime Minister of India :
Jawaharlal Nehru (1947-1964). The first term lasted till 1952 after which he was re-elected.

📖First Vice President of India :
Dr. S Radhakrishan

📖First Deputy Prime Minister of India :
Vallabhbhai Patel

🌺 அதிக தகவல்களுக்கு TNPSC - நண்பர்கள் Fb குரூப்பை பாருங்க 🍁

📖First Prime Minister to be voted out of Office :
India Ghandi (1977) when the Indian National Congress lost to he Janta Party.

📖First Sikh Prime Minister :
Manmohan Singh

📖First Sikh President :
Giani Zail Singh

📖First Non-Congress Government :
by Janta Party with Morarji Desai as the Prime Minister (1977-1980)

📖First Prime Minster of India :
resigned without completing his full term Morarji Desai

📖First Prime Minister to lead a minority government for a full term(five years) :
P.V. Narasimha Rao, June 21, 1991 to May 16 1996

📖First Prime Minster from South India :
P.V. Narasimha Rao, June 21, 1991 to May 16 1996

📖First Governor-General :
Warren Hastings

📖First British Governor-General :
Lord William Bentick

📖First British Viceroy of India:
Lord Canning

📖First Governor General of Independent India :
Lord Mountbatten, 1947

📖First and Last Indian Governor-General of Indian Union  :
C Rajagopalachari, 1948

📖First Chief Justice of India :
Justice Hiralal J Kania

📖First Indian to pass ICS :
Surendra Nath Banerjee

📖First Indian ICS Officer :
Satyendranath Tagore, 1863

📖First Speaker of Lok Sabha :
Shri G.V. Mavlankar

📖First Finance Minister of Independent India :
Shri R.K.Shanmukhan Chettys

📖Presentation of First Budget after India’s Independence :
Shri R.K.Shanmukhan Chettys on Nov. 26, 1947

📖First President to die in Office :
Dr. Zakhir Hussain

📖First Prime Minister who did not face the Parliament :
Charan Singh

📖First Chief Justice of Supreme Court to become President of India :
Justice M Hidaytullah

📖First Education Minister  :
Abul Kalam Azad

📖First Home Minister :
Sardar Vallabhbhai Patel

📖First Chief Election Commissioner :
Sukumar Sen

📖First Minister to regin from Union Cabinet:
Shyama Prasad Mukherjee (1950)

Wednesday, February 7, 2018

இந்திய அரசியலமைப்பு

இந்திய அரசியலமைப்பில் இருந்து முக்கியமான கேள்விகள் - 25
1. மாநில மறுசீரமைப்பு ஆணையத்தின் தலைவர் யார்? ஃபஸல் அலி
2. வரைவு குழுவிற்கான அரசியலமைப்பு ஆலோசகர் யார்? சர் பி N ராவ்
3. சுதந்திர இந்தியாவின் வைசிராய் யார்? பிரபு மவுண்ட்பேட்டன்
4. இந்தியாவில் அதிக காலம் வைசிராயக பணியாற்றிய வைசிராய்? லார்ட் லிங்லிடோ
5. சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவின் முதல் மற்றும் கடைசி கவர்னராக இருந்தவர் யார்? சி ராஜா கோபாலாசரி
6. OBC களில் கிரீமி லேயரைப் படிக்க 1993 ல் எந்தக் குழு நியமிக்கப்பட்டது? ராமநந்தன் குழு
7. பின்தங்கிய வகுப்பினருக்கு எந்த ஆண்டில் நியமன ஆணையம் நியமிக்கப்பட்டது? 1993
8. இந்தியாவை வரையறுக்கிறதா? இறையாண்மை, சமூக அரசு சார்பு ஜனநாயக குடியரசு
9. அரசியலமைப்பிற்கு 42 வார்த்தைகள் அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்ட மூன்று சொற்கள் எவை? சோசலிஸ்ட் , மதச்சார்பற்ற, மற்றும் நேர்மை (Socialist, Secular, and Integrity)
10. அரசியலமைப்பின் எந்தக் கட்டுரை கல்வி உரிமைக்கு உடன்படுகிறது? கட்டுரை -21 ஏ
11. எந்த மாநிலத்தின் சட்டமன்ற சட்டத்திற்கும் குறைந்த பட்சம் எண்ணீக்கை என்ன? 60
12. ஆங்கிலோ-இந்திய சமுதாயத்திலிருந்து சட்டமன்றத் தொகுதிக்கு எத்தனை கவர்னர் நியமிக்கப்படலாம்? 1
13. எந்த அரசியலிலிருந்து ஆளுநரின் அலுவலகம் எடுக்கப்படுகிறது? கனடா
14. ஒரு மாநில ஆளுநராக ஆவதற்கு குறைந்தபட்ச வயது என்ன? 35
15. யாரால் மாநில கவர்னர் நியமிக்கப்படுகிறார்? ஜனாதிபதி
16. 21 வது சட்ட கமிஷனின் தலைவர் யார்? பல்பீர் சிங் சௌஹான்
17. எந்த ஆண்டு டெல்லியின் யூனியன் பிரதேசமானது டெல்லியின் தேசிய தலைநகரமாக மறு சீரமைக்கப்பட்டது? 1992
18. அரசியலமைப்பின் எந்த பாகம் அடிப்படை உரிமைகளைக் கொண்டுள்ளது? பகுதி மூன்றாம்
19. அரசியலமைப்பின் எந்தக் கட்டுரை, தற்போதைய மாநிலத்திலிருந்து ஒரு புதிய அரசை உருவாக்க பாராளுமன்றத்தை அதிகாரம் செய்கிறது? கட்டுரை-3
20. இந்தியாவின் ஜனாதிபதி எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்? ஜனாதிபதி நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல, ஆனால் தேர்தல் கல்லூரி உறுப்பினர்கள்:
21. ஜிஎஸ்டி கவுன்சிலுடன் எந்த கட்டுரை உள்ளது? கட்டுரை 279-ஏ
22. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு பொதுவான உயர் நீதிமன்றத்தை நிறுவுவதற்கான எந்த கட்டுரை அளிக்கப்படுகிறது? கட்டுரை 231
23. இதுவரை எத்தனை முறை நிதி அவசர அறிவித்தார்? பூஜ்யம்
24. இந்தியாவில் சீரான சிவில் கோட் கொண்ட ஒரே மாநிலம் எது? கோவா
25. தில்லி தவிர, எந்த யூனியன் பிரதேசத்தில் சட்டமன்றம் உள்ளது? புதுச்சேரி🌹🌹

Tuesday, January 16, 2018

பாராளுமன்றம் பற்றிய கூறும் முக்கிய விதிகள்:-

பாராளுமன்றம் பற்றி கூறும் விதிகள் - விதி 79 முதல் 123 வரை
🏛 விதி 79 - பாராளுமன்றம் என்பது குடியரசு தலைவர், ராஜ்யசபா, லோக்சபா உள்ளடக்கியது
🏛 விதி 80 - ராஜ்யசபா அமைப்பு
🏛 விதி 81 - லோக்சபா அமைப்பு
🏛 விதி 82 - ஒவ்வொரு சென்சஸ் பிறகும் தொகுதி மறுவரையறை செய்வது
🏛 விதி 83 - பாராளுமன்றம் ஈரவைகளின் ஆயுட்காலம்
🏛 விதி 84 - பாராளுமன்றம் M.P. தகுதிகள்
🏛 விதி 85 - பாராளுமன்றம் கூட்டத்தொடர் கூட்டத்தொடரை கூட்டுதல் குடியரசு தலைவர் லோக்சபா வை கலைத்தல்
🏛 விதி 86 - குடியரசு தலைவர் ஈரவைகளில் உரையாற்றுதல்
🏛 விதி 89 - ராஜ்யசபா தலைவர் (ம) துணை தலைவர்
🏛 விதி 90 - ராஜ்யசபா துணைத்தன பதவிகாலம்
🏛 விதி 93 - லோக்சபா சபாநாயகர் (ம) துணை சபாநாயகர்
🏛 விதி 94 - லோக்சபா சபாநாயகர் (ம) துணை சபாநாயகர் பதவி நீக்கம்
🏛 விதி 98 - பாராளுமன்றம் தலைமைச் செயலகம்
🏛 விதி 99 - பாராளுமன்றம் M.P. க்களின் பதவிக்காலம்
🏛 விதி 100 - பாராளுமன்ற வாக்கெடுப்பு, குறைவெண்
🏛 விதி 101 - பாராளுமன்ற M.P. க்களுன் பதவி காலியிடமாறுதல்
🏛 விதி 102 - பாராளுமன்ற M.P. க்களுன் தகுதியிழப்பு
🏛  விதி 108 - பாராளுமன்ற ஈரவைகளின் கூட்டுக்கூட்டம்
🏛 விதி 110 - பணமசோதா
🏛 விதி 111 - குடியரசு தலைவர் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தல்
🏛 விதி 112 - பட்ஜெட்
🏛 விதி 117 - நிதி மசோதா
🏛 விதி 120 - பாராளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் மொழி
🏛 விதி 122 - பாராளுமன்ற விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடாது
🏛 விதி 123 - குடியரசுத்தலைவர் அவசரச் சட்டமிற்றும் அதிகாரம்

🍄குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவர் பற்றி கூறும் விதிகள்:-
🏛 விதி 52 - குடியரசு தலைவர் பதவி
🏛 விதி 53 - குடியரசு தலைவரின் நிர்வாக அதிகாரம்
🏛 விதி 54 - குடியரசு தலைவர் தேர்தல்
🏛 விதி 55 - குடியரசு தலைவர் தேர்தல் நடத்தும் முறை
🏛 விதி 56 - குடியரசு தலைவர் பதவிக்காலம்
🏛 விதி 57 - குடியரசு தலைவர் மறுநியமணம்
🏛 விதி 58 - குடியரசு தலைவர் தகுதிகள்
🏛 விதி 60 - குடியரசு தலைவர் பதிவியேற்றம் போது உறுதிமொழி
🏛 விதி 61 - குடியரசு தலைவர் பதவி நீக்கம்
🏛 விதி 62 - குடியரசு தலைவர் பதவி காலியிடமாகும் போது தேர்தல் நடத்தப்பட வேண்டிய கால அவகாசம்
🏛 விதி 63 - துணை குடியரசு தலைவர் பதவி
🏛 விதி 64 - துணை குடியரசு தலைவர் ராஜ்யசபா பதவி வழித்தலைவர் பற்றி
🏛 விதி 65 - குடியரசு தலைவர் இல்லாத போது அவர் பொறுப்புகளை துணை குடியரசு தலைவர் கவனிப்பார்
🏛 விதி 66 - துணை குடியரசு தலைவர் தேர்தல்
🏛 விதி 67 - துணை குடியரசு தலைவர் பதவிக்காலம்
🏛 விதி 69 - துணை குடியரசு தலைவர் பதவிப் பிரமாணம்
🏛 விதி 67b - துணை குடியரசு தலைவர் பதவி நீக்கம்
🏛 விதி 72 - குடியரசு தலைவர் மரண தண்டனை மற்றும் பிற தண்டனைகளை மன்னிக்கும் அதிகாரம்

🍄அரசு நெறிமுறை கொள்கைகள்:-
🏛 அரசு நெறிமுறை அமைந்துள்ள பகுதி - IV
🏛 அரசு நெறிமுறைகள் அமைந்துள்ள விதி 36 - 51
🏛 அரசு நெறிமுறைகளில் உள்ள கொள்கைகள் - 3
1. காந்திய கொள்கை
2. சோசலிச கொள்கை
3. மேற்கத்திய சித்தாந்த கொள்கை
🏛 காந்திய கொள்கை விதி - 40, 43, 45, 46, 47, 48
🏛 சோசிலிச கொள்கை விதி - 38, 39, 39(A), 39(b),  39(d), 39(e), 41, 42, 43(A), 45
🏛 மேற்கத்திய சித்தாந்த கொள்கை விதி - 44, 45, 49, 50, 51
🏛 விதி 38 - வருமான ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல்
🏛 விதி 39 (A) - ஒரே வேலைக்கு சம்மான கூலி ஆண், பெண் என்ற வேறுபாடின்றி தரவேண்டும்
🏛 விதி 40 - கிராம பஞ்சாயத்து அமைக்க வழிவகுக்கிறது
🏛 விதி 41 - வேலை செய்வதற்கு கல்வி பெறுவதற்கு உரிமை முதமையில் நோயுற்ற நிலையில் அரசு உதவி செய்ய வேண்டுமென கூறுகிறது
🏛 விதி 42 - தொழிலாளர் பணிசெய்ய சூழல் நன்றாக இருக்க வேண்டும்.
🏛 விதி 43 - அரசு கிராம கைவினை தொழில்களை ஊக்குவிக்க வேண்டும்
🏛 விதி 44 - நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டுகிறது
🏛 விதி 45 - 14 வயது நிரம்பிய அனைத்து குழந்தைகளுக்கு இலவசமாக கட்டாய கல்வி அளித்தல்
🏛 விதி 46 - ஆதி திராவிடர், பழங்குடியினர் ஆகியோர் கல்வி நலன் மற்றும் பொருளாதார உதவியை மேம்படுத்தல்
🏛 விதி 47 - பொது ஆரோக்யத்தை மேம்படுத்துதல், ஊட்டச்சத்து அளவை உயர்த்தி வாழ்க்கை தரத்தை மேம்படுத்தல்
🏛 விதி 48 - பசுவதையைத் தடுத்தல்
🏛 விதி 49 - தேசிய நினைவுச் சின்னங்கள் பாதுகாத்தல்
🏛 விதி 50 - நிர்வாகத்தில் இருந்து நீதித்துறையை பிரித்தல்
🏛 விதி 51 - உலக அமைதியில் நாட்டம்

🍄 மாநில ஆளுநர்கள் பற்றிய கூறும் விதிகள் :-
🏛 மாநில ஆளுநர் பற்றி கூறும் விதி 152 முதல் 161 வரை
🏛 விதி 152 - மாநிலம் என்பதை வரையறை
🏛 விதி 153 - மாநில ஆளுநர் பதவி
🏛 விதி 154 - மாநில நிர்வாக அதிகாரங்கள் ஆளுநரிடம் இருக்கும்
🏛 விதி 155 - மாநில ஆளுநர் நியமனம்
🏛 விதி 156 - ஆளுநரின் பதவிக்காலம்
🏛 விதி 157 - ஆளுநரின் தகுதிகள்
🏛 விதி 159 - ஆளுநரின் பதவிக்காலம்
🏛 விதி 161 - ஆளுநர் தண்டனை மன்னிக்கும் அதிகாரம், ஆனால் மரண தண்டனையை மன்னிக்க முடியாது.

Tuesday, January 9, 2018

🔰உச்சநீதிமன்றம் :

* உச்சநீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு- 26 ஜனவரி 1950

* உச்சநீதிமன்றத்தின் அதிகார எல்லை - இந்தியா

* உச்சநீதிமன்றத்தின் அமைவிடம் - புதுதில்லி

* உச்சநீதிமன்றத்துக்கான அதிகாரமளிப்பு - இந்திய அரசியலமைப்பு

* உச்சநீதிமன்ற தீர்ப்புகளுக்கான மேல்மூறையீடு - இந்தியக் குடியரசுத் தலைவர்(தூக்கு தண்டனை உள்பட தண்டனையை நீக்க மட்டும்.

* உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமன முறை - நிர்வாக தேர்வு (கோட்பாடுகளுக்கு உட்பட்டது)

* உச்சநீதிமன்றத்தின் குறிக்கோளுரை - அறம் உள்ளவிடத்து வெற்றி உள்ளது.

* தற்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி -
தீபக் மிஸ்ரா

** உச்சநீதிமன்ற நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தகுதிகள்:

* இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.

* தொடர்ந்து 5 ஆண்டுகள் ஒரு உயர்நீதிமன்றத்திலே அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உயர்நீதிமன்றங்களிலோ நீதிபதியாகப் பணியாற்றி இருத்தல் வேண்டும்.

* தொடர்ந்து 10 ஆண்டுகள் ஒரு உயர்நீதிமன்றத்திலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட உயர் நீதிமன்றங்களிலோ வழக்கறிஞராகப் பணியாற்றி இருத்தல் வேண்டும்.

* குடியரசுத் தலைவரின் கருத்தின்படி ஒரு சிறந்த நீதித்துறை அறிஞராக இருத்தல் வேண்டும்.

* உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு குறைந்தபட்ச வயது வரம்போ, குறிப்பிட்ட கால வரம்போ வரையறுக்கப்படவில்லை.

* உச்சநீதிமன்ற மீதிபதி தமது பதவியை தமது 65 வயது நிறைவுற்றாலோ, அல்லது குடியரசுத் தலைவருக்கு பதவி விலகல் கடிதம் அளிப்பதன் மூலமாகவோ, அல்லது பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் உள்ள மொத்த உறுப்பினர்களில் வந்திருந்து வாக்களித்தவர்களின் மூன்றில் இரு பங்கு ஆதரவினால் நிறைவேற்றப்பட்ட தீர்மான்த்தின் அடிப்படையிலோ பதவி நீக்கம் பெறலாம் அல்லது இழக்கலாம்.

* உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காலியானாலோ, அல்லது அவர் பணியாற்ற இயலாத சூழ்நிலை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக வேறு ஒருவரை பணியமர்த்த அதிகாரம் பெற்றுள்ளார்.

* குடியரசுத் தலைவரின் முன் அனுமதி பெற்று, தற்காலிகமாக ஒய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியை, உச்சநீதிமன்ற நீதிபதியாக பணிபுரிய அழைக்கவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதிகாரம் பெற்றுள்ளார்.

* அது போன்று போதிய நீதிபதிகள் இல்லாத சூழ்நிலையில், உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்ற ஒருவரை, உச்சநீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியைக தற்காலிகமாகப் பணியாற்றவும் வழி செய்யப்பட்டுள்ளது.

* உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை குற்ற விசாரணை நடைமுறைப்படுத்த குடியரசுத் தலைவருக்கு அளிக்கத்தக்க, லோக்சபையாக இருப்பின் 100 உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்டு, சபாநாயகரால் ஒப்பளிக்கப்பட்ட தீர்மானமோ, அல்லது இராஜ்ய சபையாக இருப்பின் 50 உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்டு, தலைவரால் ஒப்பளிக்கப்பட்ட தீர்மானமோ நிறைவேற்றப்பட வேண்டும்.

* அத்தீர்மானம் மீன்று நபர்கள் கொண்ட ஒரு குழுவினால் (உச்சநீதிமன்ற நீதிபதிகள் இருவர் மற்றும் ஒரு நீதித்துறை வல்லுநர்) விசாரிக்கப்படும்.

* அக்குழு, குற்றாவிசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நீதிபதியின் திறமையின்மை அல்லது தவறான நடத்தையை கண்டறிந்து உண்மையெனக் கண்டால் சபைக்குப் பரிந்துரைத்து அறிக்கை அளிப்பர்.

* அதன்பின்பு அத் தீர்மானம் குழுவின் அறிக்கையுடன், டபையில் புகுத்தப்படும்.

அத்தீர்மானம் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும், மொத்த உறுப்பினர்களில் வந்திருந்து வாக்களிப்போரில் மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு பெற்று நிறைவேற்றப்பட்டால், பின்னர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு வைக்கப்படும்.

* இதன் பிறகு குடியரசுத் தலைவரின் சம்மந்தப்பட்ட நீதிபதியின் பதவி நீக்கத்தை அறிவிப்பார்.

* 1991 - 93ல் ஆர்.இராமசாமி என்ற நீதிபதியின் மீது குற்றவிசாரணை கொண்டு வரப்பட்டு, குழு தனது அறிக்கையில் குற்றத்தை உறுத்ப்படுத்தியது.

* எனினும், அப்போதைய லோக்சபையில் காங்கிரஸ் கட்சி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளமால் புறக்கணித்ததால், போதிய பெரும்பான்மையின்றி, குற்றவிசாரணைத் தீர்மானம் தோல்வியைத் தழுவியது.

* உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தனித்தியங்கு தன்மை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தன்னிச்சையாக செயல்படுவதற்கென சில செயல்பாடுகளை அரசியலமைப்பு செயல்படுத்துகிறது. அவை:

* உச்சநீதிமன்றத்தின் பிற நீதிபதிகளை நியமிக்கும்போது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை ஆலோசித்தே குடியரசுத் தலைவர் செயல்பட வேண்டும்.

* ஒருமுறை நீதிபதியாக நியமிக்கப்பட்டுவிட்டால், அவர் திறமையின்மை, தவறான நடத்தை ஆகிய காரணங்களுக்காக மட்டும் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தனித்தனியே மூன்றில் இரு பங்கு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலமாக மட்டுமே, குடியரசுத் தலைவரால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

* உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்த பின்னர், தமது ஒய்வுக்காலத்திற்குப் பிறகு இந்தியாவின் எந்த நீதிமன்றத்திலும் வழக்கறிஞராகப் பணியாற்ற அரசியலமைப்பு தடை விதிக்கிறது. எனினும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியால் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்படுவதை இந்த விதி தடை செய்யாது.

* உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் மற்றும் இதர படிகள் அனைத்தும் இந்திய தொகுப்பு நிதியத்தின் செலவினங்களிலிருந்து அளிக்கப்படுவதால், பாராளுமன்றத்தின் வாக்கெடுப்பு தேவையில்லை.

* மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சம்பளம் மற்றும் இதர படிகள் அனைத்தும், நிதி நெருக்கடி நிலை தவிர பிற சமயங்களில் குறைக்கப்பட இயலாது.

* உச்சநீதிமன்ற நீதிபதியின் நடத்தை மற்றும் செயல்பாடுகளை பாராளுமன்றத்தின், குற்ற விசாரணை தீர்மானம் கொண்வரும் நேரம் தவிர பிற சமயங்களில் விமர்சிக்க இயலாது.

Thursday, January 4, 2018

இந்திய அரசியலமைப்புச் சட்டம்

22 பகுதிகள்

பகுதி 1 (ஷரத்து 1-4) இந்திய யூனியன் பற்றியது. அதாவது மாநில அமைப்பு. மாநில எல்லை வரையறை போன்றவை.

பகுதி 2 (ஷரத்து 5-11) இந்திய குடியுரிமை பற்றியது.

பகுதி 3 (ஷரத்து 12-35) அடிப்படை உரிமைகள்/ அது மறுக்கப்படும் போது அதற்கான தீர்வுகள்.

பகுதி 4 (ஷரத்து 36-51) அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள்.

பகுதி 5 (ஷரத்து 51 A) அடிப்படை கடமைகள்.

பகுதி 6 (ஷரத்து 52- 151) மத்திய அரசமைப்பு அதாவது குடியரசு தலைவர், து. குடியரசு தலைவர், அமைச்சரவை, பாராளுமன்றம் அதன் அமைப்பு. உச்சநீதி மன்றம் அதன் அமைபு.

பகுதி 6 (ஷரத்து 152-237) மாநில அரசமைப்பு, கவர்னர், மாநில அமைச்சரவை. மாநில சட்டமன்றம் / சட்ட மேலவை அதன் அமைப்பு உயர் நீதி மன்றம் அதன் அமைப்பு.

பகுதி 7 (ஷரத்து 238) அரசமைப்பு சட்டம் முதல் ஷெட்யூலில் உள்ள மாநிலங்கள் பற்றியது- இந்தப் பிரிவு இப்போது நீக்கப் பட்டுள்ளது.

பகுதி 8 (ஷரத்து 239 -242) மத்திய யூனியன் பிரதேசம் குறித்து.

பகுதி 9 (ஷரத்து 243) உள்ளாட்சி நிர்வாகம் இந்த ஷரத்தில் இருக்கும் உட் பிரிவுகள் ஏராளம்.

பகுதி 10 ஷரத்து 244 THE SCHEDULED AND TRIBAL AREAS.

பகுதி 11 (ஷரத்து 245-263) மத்திய மாநில அரசு உறவு, மாநிலங்ளுக்கிடையேயான உறவு.

பகுதி 12 (ஷரத்து 264-300) அரசின் நிதி குறித்த ஷரத்துக்ள் நிதி / நிதியினைக் கையாளும் நெறிகள்.

பகுதி 12 (ஷரத்து 301- 307) இந்திய நாட்டில் வணிகம் செய்யும் நடமுறைக்கான ஷரத்துகள்.

பகுதி 13 (ஷரத்து 308-323) அரசுப் பணி.

பகுதி 14 (ஷரத்து 324ஏ மற்றும் 323 பி) மத்திய தீர்ப்பாயங்கள்.

பகுதி 15 (ஷரத்து 324-329) தேர்தல்கள், தேர்தல் கமிஷன்.

பகுதி 16 (ஷரத்து 330-342) ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/ ஆங்கிலோ இந்தியர் ஆகியோர் குறித்து.

பகுதி 17 (ஷரத்து 343-351) மொழி(சினிமா இல்ல) தேசிய மொழி, வட்டார மொழி, நீதி மன்றங்களில் மொழி.

பகுதி 18 (ஷரத்து 352-360) அவசர நிலைக்கானது(எமெர்ஜென்சி)

பகுதி 19 (ஷரத்து 361-367) இதர ( இதில் குடியரசு தலைவர், கவர்னர் இந்தப் பதவிக்கான சட்ட சிறப்பு பாதுகாப்பு மற்றும் சில)

பகுதி 20 (ஷரத்து 368) இந்திய் அரசமைப்புச் சட்டம் திருத்தம் அதற்கான நடைமுறை.

பகுதி 21 (ஷரத்து 369-392) TEMPORARY, TRANSITIONAL AND SPECIAL PROVISIONS அதாவது சில நேரத்தில் மாநில அரசின் நிர்வாகப் பொறுப்பிலும் அதே நேரம் மத்திய அரசும் அந்தப் பொருளில் சட்டமியற்ற வழி செய்யும் concurrent list குறித்த நெறிகள்.

பகுதி 22 (ஷரத்து 392-395) SHORT TITLE, COMMENCEMENT, AUTHORITATIVE TEXT IN HINDI AND REPEALS

உள்ளாட்சி அமைப்பு முறை

உள்ளாட்சி அமைப்பு முறையை இந்தியாவில் அறிமுகப்படுத்திய ஆங்கிலேய ஆட்சியாளர் - ரிப்பன் பிரபு.

•  ஊராட்சி மன்றத்தின் மூலம் நிறைவேற்றப்படும் பணிகள்: தெருவிளக்குகள் அமைத்தல், ஊர்ச்சாலைகள் அமைத்தல், கிணறு தோண்டுதல், கழிவு நீர்க்கால்வாய் அமைத்தல், சிறிய
பாலங்கள் கட்டுதல், வீட்டுமனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குதல், கிராம நூலகங்களைப் பராமரித்தல், தொகுப்பு வீடுகள் கட்டுதல், இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு மைதானங்களை நிறுவுதல், பராமரித்தல் ஆகியன.

•    ஊராட்சி ஒன்றியத்தில் எத்தனை மக்களுக்கு ஒரு பிரதிநிதி நியமிக்கப்படுகிறார் - ஐந்தாயிரம் மக்கள் தொகை.

•    ஊர் மன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு நான்கு முறை கூடுகின்றன.

•    ஊர் மன்றக் கூட்டங்கள் நடைபெறும் பொதுவான நாட்கள்: ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2.


•   ஊராட்சி ஒன்றியங்கள் செய்யும் பணிகள்: ஊராட்சி ஒன்றியச் சாலைகளைப் பராமரித்தல், குடிநீர் வழங்குதல், ஊரக மருத்துவமனைகளை ஏற்படுத்துதல், தொடக்கப் பள்ளிக் கட்டடங்களைப் பழுதுபார்த்தல், தாய் - சேய் நல விடுதிகளை நடத்துதல், பொதுச் சந்தைகளை ஏற்படுத்துதல், கால்நடை மருந்தகங்களை ஏற்படுத்துதல், வேளாண்மைக் கருவிகள், உரங்கள் போன்றவற்றை வழங்கல், சமூகக் காடுகளை வளர்த்தல்.

• மாவட்ட ஊராட்சியின் கடமைகள்: மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களின் வளர்ச்சித் திட்டங்கள், மாவட்டச் சாலைகளின் மேம்பாடு குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குதல், வளர்ச்சித் திட்டங்களைக் கண்காணித்தல்.

•   பத்தாயிரம் மக்கள் தொகைக்கு மேலுள்ள ஊராட்சிகள் - பேரூராட்சிகள் எனப்படும்.

•   ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையுள்ள பேரூர்கள் நகராட்சி எனப்படும்.

•    பல லட்சம் மக்கள் தொகையும், பல்வேறு அலுவலகங்களும் அமைந்துள்ள பகுதி - மாநகராட்சிகள்.

மனித உரிமைகள்

1..மனித உரிமைகளை 17 ம் நூற்றாண்டில் எவ்வாறு கூறுவார்கள்?
இயற்கை உரிமைகள்

2..பிரெஞ்சு மனித உரிமைகள் பிரகடனம் அறிவிக்கப்பட்ட ஆண்டு?
1789

3..ஐ.நா சபை மனித உரிமைகள் பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட ஆண்டு?
10.12.1948.

4..மனித உரிமைகள் நலச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
1993

5..தேசிய மனித உரிமைகள் ஆணையம் தொடங்க்கப்பட்ட ஆண்டு?விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த நாள்?
02.10.1993...01.03.1994

6..தமிழக மனித உரிமைகள் ஆணையம் தொடங்கப்பட்ட நாள்?
17.04.1997

7..ஐ. நா மனித உரிமை பிரகடனத்தில் உள்ள விதிகளின் எண்ணிக்கை?
30

8..தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைமையகம் எங்கு உள்ளது?
டெல்லி

9..தமிழக மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைமையகம் எங்குள்ளது?
சென்னை

10..தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை?
1 தலைவர் ,4 உறுப்பினர்

11..தமிழக மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை?
1 தலைவர்,2 உறுப்பினர்கள்

12..தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்களின் பதவிக்காலம்?
5 ஆண்டு அல்லது 70 வயது

13..மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர்களின் பதவிக்காலம்?
5 ஆண்டு அல்லது 70 வயது

14.தேசிய மனித ஆணைய உறுப்பினர்களை நியமிப்பவர்?
குடியரசுத்தலைவர்

15..மாநில மனித ஆணைய உறுப்பினர்களை நியமிப்பவர்?
ஆளுநர்

15..தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்களை பதவி நீக்கும் அதிகாரம் படைத்தவர் யார்?
குடியரசுத்தலைவர்

16..மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்களை பதவி நீக்கும் அதிகாரம் படைத்தவர் யார்?
ஆளுநர்

17..மனித உரிமைகள் சட்டம் (1993) திருத்தப்பட்ட ஆண்டு?
2006

18..விசாரணை முடிந்த பின்னர் மனித உரிமைகள் ஆணையம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிக்கையை அனுப்பும் காலம்?
1 மாதம்

19..சிறார்கள் மீதான மனித உரிமைகள் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு?
1989

20..பெண்களுக்கு எதிரான வன்முறையை நீக்கும் பிரகடனம் வெளியிடப்பட்ட ஆண்டு?
1993

21..இனப்படுகொலையை தடுத்தல்,தண்டித்தல் ஒப்பந்தம் வெளியிடப்பட்ட ஆண்டு?
1948

22..உரிமைகள் என்பது சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு அரசால் நடைமுறைப்படுத்தவது என்று கூறியவர்?
போசான்கி

23..மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படும் நாள்?
டிசம்பர் 10

24..ஐ.ந சபை மனித உரிமைகளை பாதுகாக்க இரு ஒப்பந்தங்களை உருவா
க்கிய ஆண்டு?
1966

25..மனித உரிமை ஆணையத்திற்கு விசாரணை பண்ணும் உரிமை உண்டா?
உண்டு

Wednesday, January 3, 2018

இந்திய பாராளுமன்றம் 100 தகவல்கள்

1. இந்திய பாராளுமன்றம் - மக்களவை, மாநிலங்களவையைக் கொண்டிருக்கிறது

2. குடியுரிமை குறித்த சட்டங்களை இயற்ற அதிகாரம் பெற்றுள்ள அமைப்பு - பாராளுமன்றம்

3. புதிய மாநிலங்களை உருவாக்கவும், அதன் எல்லைகளை மாற்றவும் அதிகாரம் பெற்ற அமைப்பு - பாராளுமன்றம்

4. இந்திய பாராளுமன்றத்தின் மேலவையின் தலைவர் - சமநிலை முரண்படும்போது மட்டும் வாக்களிப்பதில் உரிமை பெறுகிறார்

5. நம்பிக்கையில்லா தீர்மானம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட குறைந்த பட்சம் - 50 உறுப்பினர்களின் ஆதரவு தேவை

6. மக்களவையின் தலைவர் - அவையில் வாக்குகள் சமமாக இருக்கும் போது வாக்களிக்க உரிமை பெற்றிருக்கிறார்.

7. இந்திய குடிமகனுக்கு அரசியலமைப்பு பரிகாரம் காணும் உரிமை 32 விதியின் கீழ் வழங்கப்பட்டுள்ளது.

8. பாராளுமன்ற உறுப்பினர்களின் தகுதி பற்றிக் குறிப்பிடும் ஷரத்து - ஷரத்து 102

9. இந்திய அரசியலமைப்பின் தந்தை - டாக்டர் அம்பேத்கார்

10. அரசிலமைப்பு தீர்வு உரிமைகள் என்பது - அடிப்படை உரிமை

11. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு என்று குறிப்பிடுவது - முகவுரை

12. இந்திய அரசாங்க முறையானது - பாராளுமன்ற ஆட்சி முறை

13. மூன்று அதிகாரப் பட்டியல்களிலும் குறிப்பிடப்படாத எஞ்சிய அதிகார யார் வசமுள்ளது - பாராளுமன்றம்

14. பாராளுமன்றத்தி்ன் மிகப்பழமையான நிதிக்குழு - பொதுக் கணக்குக் குழு

15. பாராளுமன்றத்தில் உள்ள இணைப்பு நிலைக் குழுக்களின் எண்ணிக்கை - 24

16. பாராளுமன்றத்தில் உள்ள நிலைப்புக் குழுக்களின் எண்ணிக்கை - 45

17. பாராளுமன்றத்தில் உள்ள தனித்த நிலைக் குழுக்களின் எண்ணிக்கை - 21

18. பாராளுமன்ற கூட்டத்தொடர்களில் மிகக் குறுகிய கூட்டத்தொடர் - குளிர்கால கூட்டத்தொடர்

19. பாராளுமன்ற கூட்டத்தொடர்களில் மிக நீண்ட கூட்டத்தொடர் - பட்ஜெட் கூட்டத்தொடர்

20. பாராளுமன்றத்தின் இரு கூட்டங்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகபட்சம் - 6 மாதங்கள்

21. பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்திற்கு சபாநாயகர் வராத சூழ்நிலையில் தலைவராக பணியாற்றுபவர் - துணை சபாநாயகர்

22. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - இந்திராகாந்தி

23. லோக் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்

24. அனைத்து இந்தியப் பணிகளையும் உருவாக்கும் அதிகாரம் பெற்ற பாராளுமன்ற சபை - இராஜ்யசபை

25. மாநில பட்டியலில் பாராளுமன்றம் சட்டமியற்ற விரும்பினால் அதற்கு தீர்மானம் நிறைவேற்ற அதிகாரம் பெற்ற பாராளுமன்ற சபை - இராஜ்யசபை

26. பாராளுமன்றத்தின் இரு சபைக் கூட்டுக் கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர் - சபாநாயகர்

27. பாராளுமன்றம் குறைந்தபட்சம் ஆண்டுக்கு எத்தனை முறையாவது கூட்டப்பட வேண்டும் - 2 முறை

28. எந்த நீதிமன்றத்திலும் ஆஜராகவும், பாராளுமன்றத்தில் கலந்து கொள்ளவும் உரிமை பெற்றவர் - இந்திய அட்டர்னி ஜெனரல்

29. பாராளுமன்றத்தில் இடம் பெறும் நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை - 14

30. மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கான இடங்கள் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன - மக்கள் தொகை அடிப்படையில்

31. நாட்டின் உண்மையான நிர்வாகம் உள்ள இடம் - மத்திய அமைச்சரவை

32. காபினெட்டின் தலைவர் - பிரதமர்

33. மத்திய அமைச்சரவையின் தலைவர் - பிரதமர்

34. காபினெட் என்பது - மத்திய அமைச்சரவையின் உள்ளங்கம்

35. மக்களவை அல்லது மாநிலங்களவையில் உறுப்பினராக இல்லாத ஒருவர் அமைச்சராக எத்தனை காலம் வரை நீடிக்க இயலும் - 6 மாதங்கள் வரை

36. அமைச்சரவை எத்தனை தரப் பாகுபாடு உடையது - மூன்று

37. அமைச்சரவை என்பது எதற்கு கூட்டுப்பொறுப்பு வாய்ந்ததாக உள்ளது - லோக்சபைக்கு

38. ஒரு லோக் சபை உறுப்பினர் தன் இராஜிநாமாக் கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும் - சபாநாயகர்.

39. நம்பிக்கையில்லாத் தீர்மானம் எந்த சபையில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் - லோக்சபை

40. மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற சபை - லோக்சபை(மக்களவை)

41. லோக்சபையின் தலைவரைத் தேர்ந்தெடுப்பவர் - லோக் சபை உறுப்பினர்கள்

42. தொடர்ந்து எத்தனை நாட்கள் வருகை தரவில்லையெனில் ஒரு உறுப்பினர் பதவி காலியானதாக அறிவிக்கப்படும் - 60 நாட்கள் (முன்னறிவிப்பின்றி)

43. பண மசோதா என்று வரையறை செய்பவர் - சபாநாயகர்

44. பண மசோதா எந்த அவையில் மட்டுமே புகுத்தப்படும் - லோக்சபை

45. பண மசோதாவைப் பொறுத்தவரை இராஜ்யசபைக்கான கால வரம்பு - 14 நாட்கள்

46. லோக்சபையின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்

47. லோக்சபையின் பதவிக்காலம் எந்த சமயத்தின்போது நீட்டிக்கப்படலாம் - தேசிய அவசரகால நெருக்கடி நிலையின்போது

48. லோக்சபைக்கான நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை - 2 (ஆங்கிலோ இந்தியர்கள்)

49. தற்போது லோக்சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 545 (530+13+2)

50. 545 என்ற எண்ணிக்கை எந்த ஆண்டு வரை நடைமுறையில் இருக்கும் - 2025

51. லோக்சபை உறுப்பினராவதற்குரிய குறைந்தபட்ச வயது வரம்பு - 25

52. லோக்சபை உறுப்பினராவதற்குரிய அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

53. இராஜ்யசபை உறுப்பினராவதற்குரிய குறைந்தபட்ச வயது வரம்பு - 30

54. இராஜ்யசபையின் தலைவரைத் தேர்ந்தெடுப்பவர்கள் - லோக்சபை மற்றும் இராஜ்யசபை உறுப்பினர்கள்

55. இராஜ்யசபையில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள இரு யூனியன் பிரதேசங்கள் - தில்லி மற்றும் பாண்டிச்சேரி

56. இராஜ்யசபையின் பதவிக்காலம் - நிரந்தரமானது

57. இராஜ்யசபை உறுப்பினர்களின் பதவிக்காலம் - 6 ஆண்டுகள்

58. தற்போது நடைமுறையில் உள்ள இரைஜ்யசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை - 245 (233+12)

59. மாநில சட்டப்பேரவை கொண்ட இரு யூனியன் பிரதேசங்கள் - தில்லி மற்றும் பாண்டிச்சேரி

60. ஒரு மசோதாவுக்கு உள்ள சுற்றுகளின் எண்ணிக்கை - 3

61. ஒரு மசோதாவுக்கு உள்ள நிலைகளின் எண்ணிக்கை - 3

62. இருசபைக் கூட்டுக் கூட்டத்திற்கு வழி செய்யும் ஷரத்து - ஷரத்து 108

63. பண மசோதா குறித்து குறிப்பிடும் ஷரத்து - ஷரத்து 110

64. பட்ஜெட் என்பது - பண மசோதா

65. மதிப்பீட்டுக் குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை - 30

66. மதிப்பீட்டுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களும் லோக்சபையை சார்ந்தவர்கள்.

67. மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் - 1 ஆண்டு

68. பொதுக் கணக்குக் குழுவின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை - 22 உறுப்பினர்கள்

69. பொதுக் கணக்குக் குழுவில் உள்ள லோக்சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை - 15

70. பொதுக் கணக்கு குழுவில் உள்ள இராஜ்யசபை உறுப்பினர்களின் எண்ணிக்கை - 7

71. இரட்டைச் சகோதரர்கள் என்று கருதப்படும் இரு குழுக்கள் - பொதுக் கணக்குக் குழு மற்றும் மதிப்பீட்டுக் குழு

72. அரசின் பொதுச் செலவுகளை ஆராயும் குழு - மதிப்பீட்டுக் குழு

73. மரபின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவரே குழுவின் தலைவராக பணியாற்றும் குழு - பொதுக் கணக்கு குழு

74. நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர தேவையான குறைந்தபட்ச உறுப்பினர்கள் - 50

75. இந்தியத் தணிக்கை அலுவலரின் அறிக்கையை ஆய்வு செய்யும் குழு - பொதுக் கணக்குக் குழு

76. பொதுவாக கேள்வி நேரம் என்பது - காலை 11 முதல் 12 வரை

77. பூஜ்ய நேரம் என்பது - 12 முதல் 1 மணி வரை

78. சபையின் முதல் ஒரு மணி நேரமே - கேள்வி நேரம்

79. நம்பிக்கைத் தீர்மானம் எந்த சபையில் அறிமுகப்படுத்தப்படும் - லோக்சபை

80. லோக்சபையின் தலைவரா செயல்படுபவர் - சபாநாயகர்

81. லோக்சபை கூட்டங்களை வழிநடத்திச் செல்பவர் - சபாநாயகர்

82. லோக்சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற நபர் - பிரதமர்

83. மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கான இடங்கள் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன - மக்கள் தொகை அடிப்படையில்

84. லோக்சபையின் முதல் சபாநாயகர் - ஜி.வி.மாவலங்கார்

85. ஆளுநர் பதவி முறை எந்த அம்சத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது - 1935ம் ஆண்டுச் சட்டம்

86. 1995ல் நியமிக்கப்பட்ட மாநில மறுசீரமைப்புக் குழுவின் தலைவர் - ஃபாசல் அலி

87. நியமன உறுப்பினர்களுக்கு இல்லாத ஒரே உரிமை - வாக்குரிமை (பாராளுமன்ற செயல்பாடுகளில் வாக்களிக்க இயலாது)

88. காமன்வெல்த் குடியுரிமையில் இந்தியா இடம் பெற்றுள்ளது.

89. அடிப்படைக் கடமைகளைக் கொண்டுள்ள மற்றொரு நாடு - ஜப்பான்
90. 6 வயது முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு கல்வி அளிப்பது பெற்றோரின் கடமை என்பது - 11வது அடிப்படை கடமை

91. ஒரு மாநிலத்தில் அரசியலமைப்பு இயந்திரம் செயல்படாத நிலையில் ஆட்சியைக் கலைக்க வழி செய்யும் அரசியலமைப்பு பிரிவு - ஷரத்து 356

92. இந்தியாவின் முதல் மற்றும் தலைமை சட்ட அதிகாரியாக விளங்குபவர் - இந்திய அட்டர்னி ஜெனரல்

93. இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை அலுவலரின் ஒய்வுக்கால வயது - 65 (அல்லது 6 ஆண்டுகள்)

94. இந்திய தொகுப்பு நிதியின் பாதுகாவலன் - இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறை அலுவலர்

95. இந்திய பொதுப்பணத்தின் பாதுகாவலன் - இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறை அலுவலர்

96. மைய அரசில் முதலாவது கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கியவர் - மொரார்ஜி தேசாய்

97. இந்திய அரசியல் அதிகாரத்தின் பிரதான மூலம் - மக்கள்

98. இந்தியக் கூட்டாட்சி ஏறத்தாழ எந்த நாட்டின் கூட்டாட்சியை ஒத்தி்ருக்கிறது - கனடா

99. கூட்டாட்சி அரசியலமைப்பின் மிக முக்கிய அம்சம் - அதிகார பங்கீடு

100. இந்தியாவில் நடைமுறையில் உள்ள குடியுரிமை - ஒற்றைக் குடியுரிமை. Good