Showing posts with label Economics. Show all posts
Showing posts with label Economics. Show all posts

Tuesday, April 10, 2018

*புரட்சி*

#பசுமைப் புரட்சி, #வெண்மைப் புரட்சி தெரியும், #அதென்ன #பிங்க் புரட்சி, #நீலப் புரட்சி, #கோல்டன் புரட்சி?

இங்கே #புரட்சி எனும் சொல் குறிப்பது அந்தந்த துறைகளில் நிகழ்ந்த அபிரிமிதமான வளர்ச்சிகளைத்தான். .

🎆.  #வெண்மை புரட்சி-  பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களின் உற்பத்தியில் நிகழ்ந்த வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்.

🎆#பசுமை புரட்சி - விவசாயத்துறையில் உற்பத்தி சார்ந்து பெருகிய அபிரிமிதமான வளர்ச்சி.

🎆 #நீலப்புரட்சி - மீன் உற்பத்தி மற்றும் வியாபாரம் சார்ந்து நிகழ்த்தப்பட்ட முன்னேற்றங்கள்.

🎆 #பிரவுன் புரட்சி - தோல் மற்றும் கோகோ தொழில்துறை சார்ந்து நிகழ்ந்த புரட்சி.

🎆#கரும் புரட்சி - பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை சார்ந்து நிகழ்ந்த புரட்சி.

🎆#கோல்டன் புரட்சி - தேனீ வளர்ப்பு, பழ உற்பத்தி, மற்றும் தோட்டக் கலைத்துறையின் அனைத்து மட்டங்களிலும் நிகழ்ந்த உற்பத்தி மற்றும் வளர்ச்சி சார்ந்த புரட்சி.

🎆#பிங்க் புரட்சி - வெங்காய சாகுபடி மற்றும் இரால் உற்பத்தியில் நிகழ்ந்த புரட்சி.

🎆#வெள்ளிப் புரட்சி - முட்டை உற்பத்தி மற்றும் அதன் வியாபார வாய்ப்புகளில் நிகழ்ந்த முன்னேற்றம்.

🎆#சிவப்புப் புரட்சி - மாமிசம் மற்றும் தக்காளி உற்பத்தியில் தோன்றிய அபிரிமிதமான முன்னேற்றம்.

🎆#கிரே புரட்சி - உரம் மற்றும் உரப்பொருட்களின் உற்பத்தி சார்ந்து நிகழ்ந்த புரட்சி.

🎆#ரவுண்டு புரட்சி - உருளைக்கிழங்கு சாகுபடி மற்றும் அதற்கான விற்பனை வாய்ப்புகள் சார்ந்து நிகழ்ந்த புரட்சி.

🎆#மஞ்சள் புரட்சி -எண்ணெய்வித்துகளின் உற்பத்தி மற்றும் அபிரிமிதமான வளர்ச்சி சார்ந்து நிகழ்ந்த புரட்சி.

🎆#கோல்டன் ஃபைபர் புரட்சி - சணல் உற்பத்தியில் நிகழ்ந்த திடீர் முன்னேற்றம்.

🎆#சில்வர் ஃபைபர் புரட்சி - பருத்தி சாகுபடி மற்றும் பருத்தி சார்ந்த தொழில்துறைகளின் முன்னேற்றத்தில் நிகழ்ந்த புரட்சி.

Monday, April 9, 2018

*இந்திய பொருளாதாரம் (Indian Economy)*

கண்டேல்வால், உஷா தொரட் கமிட்டிகள் எதற்காக அமைக்கப்பட்டன? - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை

இந்திய பொருளாதாரம் (Indian Economy)

வங்கிகளின் முறைகளை மூன்றாக பிரிக்கலாம்.

1. கோர் பேங்கிங் (Core Banking)- கிளைகள் அடங்கிய குழுவாக வங்கி சேவைகளை NEFT (National Electronic Fund Transfer ) மற்றும் Real Time Gross Settlement (RTGS ) மூலம் வழங்குவது

2. ரீடெயில் பேங்கிங் ( Retail Banking ) - நேரடியாக நுகர்வோர் மற்றும் பயணாளிகளுடன் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது

3. நேரோ பேங்கிங் (Narrow Banking ) - கடன்கள் அல்லாமல் இருப்பில் உள்ள பணம் (liquid ) மற்றும் அரசு பத்திரங்கள் (Bonds) ஆகியவற்றை மட்டுமே கையாள்வது. வங்கிகளைப் பொறுத்தவரையிலும் சில முக்கிய துறைச்சொற்களை தெரிந்து கொள்வது அவசியம்.

Bank Rate (பேங்க் ரேட்): மத்திய வங்கி ( ரிசர்வ் வங்கி ) கடன் மற்றும் பிற நிதிகளுக்கு மற்ற வங்கிகளிடம் நிர்ணயிக்கும் வட்டி விகிதம்

Cash Reserve Ratio (கேஷ் ரிசர்வ் விகிதம்): வாடிக்கையாளர்களின் வைப்பு பணத்தில் வணிக வங்கிகள் கையிருப்பு பணமாக (liquid)வோ அல்லது வைப்பாகவோ மத்திய வங்கியுடன் ( ரிசர்வ் வங்கி) வைத்திருக்கவேண்டிய விகிதம்.

Statutory Liquidity Ratio (ஸ்டாட்டூடரி லிக்குவிடிடி விகிதம்): வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் முன்னர் வணிக வங்கிகள் பணமாக, தங்க இருப்புகளாக, அரசு பத்திரங்களாக வைத்திருக்க வேண்டிய விகிதம்

Repo Rate: மத்திய வங்கி (ரிசர்வ் வங்கி) வணிக வங்கிகளுக்கு பத்திரங்களின் அடிப்படையில் வழங்கும் பணத்துக்கான விகிதம்.

Reverse Repo Rate: மத்திய வங்கி (ரிசர்வ் வங்கி ) வணிக வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதற்கான விகிதம்.

உதாரண கேள்வி: 

Statement 1 ரெப்போ ரேட் அதிகரித்தால் பணப் புழக்கம் குறைகிறது.

Statement 2 ரெப்போ ரேட்  குறைந்ததால் பணப் புழக்கம் அதிகரிக்கிறது.

இவற்றில் எது சரி

1 only

2 only

Both are correct ( பதில் )

Both are wrong

விளக்கம் :  ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டை அதிகரித்தால் வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு செலுத்த வேண்டிய வட்டி விகிதம் அதிகரிக்கிறது. அதிகப் பணத்தை ரிசர்வ் வங்கிக்கு செலுத்த வேண்டியதால், வாடிக்கையாளர்களுக்கு கடன்களாக வழங்கப்படும் பணத்தின் அளவு குறைகிறது. பண புழக்கமும் குறைகிறது. இதே லாஜிக்கை ரெப்போ ரேட் குறையும் போது பயன்படுத்தினால், பணப்புழக்கம் ஏன் உயர்கிறது என்பதையும் நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம்.

இப்படி வங்கிகளின் பல்வேறு செயல்பாடுகளையும் அதற்காக பயன்படுத்தப்படும் சொற்களையும் தெரிந்துகொண்ட பின் ரிசர்வ் வங்கி, அதன் தோற்றம், சிறப்பம்சங்கள், முக்கிய சட்டங்கள், அடுத்ததாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் பட்டியல், அவைகளின் முக்கிய அம்சங்கள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதேபோல், வங்கிகளை மேம்படுத்த மற்றும் சீர்திருத்தங்கள் கொண்டு வர அமைக்கப்பட்ட கமிட்டிகள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். அவற்றில் சில முக்கிய கமிட்டிகளின் பட்டியல் இதோ

நரசிம்மன் கமிட்டி

தாமோதரன் கமிட்டி

கண்டேல்வால் கமிட்டி

பிமல் ஜலான் கமிட்டி

உஷா தொரட் கமிட்டி

எம்.வி. நாயர் கமிட்டி

தீபக் மொகந்தி கமிட்டி

அடுத்ததாக, சில முக்கிய நிதி நிறுவனங்களைப் பற்றியும் தெரிந்து கொள்வோம். இன்டஸ்ட்ரியல் டெவெலப்மென்ட் பேங்க் ஆஃப் இந்தியா ( IDBI), ஸ்மால் இன்டஸ்ட்ரீஸ் டெவலப்மென்ட் பேங்க் ஆஃப் இந்தியா, யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா, நேஷனல் ஹவுசிங் பேங்க், முத்ரா ( MUDRA) பேங்க் உள்ளிட்ட நிறுவனங்களையும் வங்கிசார் திட்டங்களையும் தெரிந்து கொள்ளுங்கள.

உதாரண கேள்வி: 

Statement 1 : உஷா தோரட் கமிட்டி வங்கிசாரா நிதி நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்டது (Non Banking Financial Institutions)

Statement 2 : MUDRA வங்கிகள் ஸ்மால் இன்டஸ்ட்ரீஸ் டெவலப்மென்ட் பேங்க் ஆஃப் இந்தியாவின் உப நிறுவனம்

1 is correct

2 is correct

Both are correct ( பதில்)

Both are wrong

அடுத்ததாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது பண சந்தை ( money market ), மூலதன சந்தை (capital market), நிதிசார் இடை நிறுவனங்கள் ( Financial Intermediaries), பங்குச் சந்தை ( Stock market ), காப்பீடுகள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றைப் பற்றி. இவை சார்ந்த முக்கியச் சட்டங்கள், விதிகள், இவற்றின் சிறப்பம்சங்களைக் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். உதாரணம் : காப்பீட்டு விதிகள் 2015, IRDAI ( இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி அன்ட் டெவெலப்மென்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா), SEBI( செக்கியூரிட்டிடீஸ் அன்ட் எக்ஸ்சேஞ்ச் போர்ட் ஆஃப் இந்தியா) சட்டம் 2014 போன்றவை.

Wednesday, January 24, 2018

இந்திய ஐந்தாண்டு திட்டத்தின் பற்றிய சில தகவல்கள்:-

🍕 முதல் ஐந்தாண்டு திட்டம்1951 - 1956) ஹரார்டு டோமா மாதிரி திட்டம்
● முன்னுரிமை வேளாண்மை வளர்ச்சி (நீர்மின் திட்டம், நீர்ப்பாசன வசதிகளை பெருக்குதல்)
● திட்டம் வெற்றியடைந்தது சமுதாய முன்னேற்ற திட்டம், குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டம் 1952ல் தொடங்கப்பட்டது.

🍔 இரண்டாம் ஐந்தாண்டு திட்டம்: (1956 - 1961) மஹலனோபிஸ் மாதிரி
● முன்னுரிமை, அடிப்படை மற்றும் கனரக தொழில்கள் வளர்ச்சி.
● பிலாய், துர்காபூர், ரூர்கேலா இரும்பு எஃகு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன.
● பெரம்பூர் இரயில் பெட்டித் தொழிற்சாலை உருவாக்கப்பட்டது

🍣   மூன்றாம் ஐந்தாண்டு திட்டம்: (1961 - 1966)
● முன்னுரிமை பெரும் இயந்திரங்களை நம் நாட்டிலேயே உருவாக்குதல்.
● வேளாண்மையில் சுய தேவையைப் பூர்த்தி செய்தல்.
● பாகிஸ்தான், சீனாவுடன் போர் மற்றும் பருவக்காற்று பொய்த்ததால் வறட்சி காரணமாக தோல்வி அடைந்து.
● தானியங்களை பாதுகாப்போம் என்ற திட்டம் தொடங்கப் பட்டது - 1965.
● பசுமை புரட்சி அறிமுகம் செய்யப்பட்டது (1965)

🍲  மூன்று ஓராண்டு திட்டங்கள் (1966 - 69)
● 1966 ரூபாயின் மதிப்பு குறைக்கப்பட்டதால் ஏற்றுமதி அதிகரித்து, இறக்குமதி குறைந்தது
● விலைவாசி குறைந்தது

🍜 நான்காம் ஐந்தாண்டு திட்டம்: (1969 - 1974)
● தற்சார்பு அடைதல், ஏற்றுமதி அதிகரித்தல்
● நீதியுடன் கூடிய வளர்ச்சி
● விஜய நகரம், சேலம், விசாகப்பட்டினம் இரும்பு எஃகு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டது.

🍧 ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்: (1974 - 1979)
● வறுமையை ஒழித்தல்
● ஓராண்டு முன்னதாகவே 1978ல் ஜனதா அரசால் நிறுத்தப்பட்டது.
● 20 அம்சத் திட்டம் (1975) அறிமுகப்படுத்தப்பட்டது
● தேசிய குறைந்தபட்சத் தேவை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது
● உருளல் திட்டம் (1978 - 80) Rolling Plan
● TRYSEM - 1979 தேசிய கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டது

🍩 ஆறாம் ஐந்தாண்டு திட்டம்: (1980 - 1985)
● ஏழ்மையை போக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
● தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
● ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம் (1980)

🍦 ஏழாம் ஐந்தாண்டு திட்டம்: (1985 - 1990)
● வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துதல்
● ஜவஹர் ரோஜ்கார் யோஜனா (1989)
● வேலைக்கு உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது
● ஓராண்டு திட்டங்கள் (1990 - 1992)

🍰 எட்டாம் ஐந்தாண்டு திட்டம்: (1992 - 1997)
● நோக்கம்:
1. மனித வள முன்னேற்றம்
2. மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துதல்
● மொத்த உள்நாட்டு உற்பத்தி, இலக்கை விட மிஞ்சியது
● தாராளமயமாக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை செயல்படுத்தப்பட்டது.

🍞 ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம்: (1997 - 2002)
● சமுதாய நீதி மற்றும் சமத்துவத்துடன் ஆன வளர்ச்சி.
● மக்கள் பங்கு பெறும் அமைப்புகளை (மகளிர் சுய உதவிக் குழு, கூட்டுறவுச் சங்கங்கள்) முன்னேறச் செய்தல்

🍫  பத்தாவது ஐந்தாண்டு திட்டம்: (2002 - 2007)
● எட்டு சதவீதம் வளர்ச்சியை எட்டுதல்
● ஓராண்டுக்கு 10 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்
● அனைவருக்கும் கல்வி அளித்தல்.
● புதுப்பிக்கப்பட்ட 20 அம்ச திட்டம் தொடங்கப்பட்டது.

🍤 பதினோறாவது ஐந்தாண்டு திட்டம்: (2007 - 2012)
● வேளாண்மை வளர்ச்சி விகிதத்தை 4% ஆக உயர்த்துதல்
● 70 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்குதல்
● குழந்தை இறப்பு விகிதம் 1/1000 மாக குறைத்தல்
● காடுகள் சதவீதம் 5% ஆக உயர்த்ததுல்
● அனைவருக்கும் சுத்தமான குடிநீர் அளித்தல்