========================
- நடைபெறும் இடம்- கோல்ட் கோஸ்ட், ஆஸ்திரேலியா
- பதிப்பு- 21வது
- இலச்சினை(Mascot)- "Borobi"
- Motto- "Share the dream"
- தொடக்க விழாவில் இந்திய கொடிய ஏந்தி சென்றவர்(Flag bearer)- பி.வி.சிந்து (Badminton)
- நிறைவு விழாவில் இந்திய கொடியை ஏந்தி சென்றவர்- "மேரி கோம்"(Mary Kom)
சிறப்புகள்
- கலந்து கொள்ளும் இந்திய வீரர்களில் இளம் வயது வீரர்- Anish Bhanwala(15), Shooting
- கலந்து கொள்ளும் இந்திய வீரர்களில் மூத்த வீரர்- Farman Basha(44), பாரா பளு தூக்குதல்
- முதல் பதக்கம்- குரு ராஜா (பளுதூக்குதல்)
- முதல் தங்கம்- மீராபாய் சானு (பளுத்தூக்குதல்)
- காமன்வெல்த் போட்டிகள் மற்றும் ஆசிய போட்டிகள் இரண்டிலும் தங்கம் வெல்லும் ஒரே ஆடவர் குத்துச்சண்டை வீரர் என்ற பெருமையை "விகாஷ் கிருஷ்ணன்" (Vikas Krishnan) பெற்றுள்ளார்
- காமன்லெல்த் கேம்ஸ் போட்டி வரலாற்றில் ஈட்டி எறிதல் போட்டிகளில் தங்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை "நீரஜ் சோப்ரா"(Neeraj Chopra) பெற்றுள்ளார்
- காமன்வெல்த் கேம்ஸ் வரலாற்றில் ஆடவர் 400m ஓட்டப்பந்தயத்தின் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை "முகமது அனாஸ்" (Mohammed Anas) பெற்றுள்ளார்
- - காமன்வெல்த் கேம்ஸ் வரலாற்றில் 400m ஓட்டப்பந்தயத்தின் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும் முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை "ஹீமா தாஸ்"(Hima Das) பெற்றுள்ளார்
- 2018 காமன்வெல்த் போட்டிகொளில், இந்தியாவிற்காக இளம் வயதில் தங்க பதக்கம் வாங்கிய வீரர் என்ற பெருமையை, 15 வயது துப்பாக்கி சுடுதல் வீரர் "அனிஷ் பன்வாலா"(Ansih Bhanwala) பெற்றுள்ளார்
- காமன்வெல்த் கேம்ஸ் வரலாற்றில் மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டிகளின் தனிநபர் பிரிவில் தங்கம் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை "மணிக்கா பத்ரா"(Manika Batra) பெற்றுள்ளார்
- காமன்வெல்த் கேம்ஸ் வரலாற்றில் முதல் முறையாக இந்திய பாட்மின்டன் கலப்பு அணி(Mixed Team Badminton) மலேசியாவை வீழ்த்தி தங்கம் வென்றுள்ளது
- காமன்வெல்த் கேம்ஸ் வரலாற்றில் முதல் முறையாக, இந்திய மகளிர் அணி 'டேபிள் டென்னிஸ்' (Table Tennis) போட்டிகளில் தங்கம் வென்றுள்ளது
- 2018 காமன்வெல்த் போட்டிகளில் para powerlifting பிரிவில் பதக்கம் பெறும் ஒரே இந்தியர் என்ற பெருமையை "சச்சின் சௌத்ரி" பெற்றுள்ளார்
- 26 தங்கம், 20 வெள்ளி மற்றும் 20 வெண்கலம் உட்பட மொத்தம் 66 பதக்கங்களுடன் இந்தியா மொத்த பதக்கப் பட்டியலில் 3ம் இடம் பிடித்துள்ளது
- ஆஸ்திரேலியா 197 பதக்கங்களுடன் முதலிடத்திலும், இங்கிலாந்து 136 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது
Sunday, April 15, 2018
*Commonwealth Games 2018*
Sunday, April 8, 2018
#நியூட்ரினோ#
"India-based Neutrino Observatory (INO) Project"
========================
தேனியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக ஆய்வுக் குழு பரிந்துரைத்துள்ளது.
"நியூட்ரினோ திட்ட வரலாறு"
=======================
- தமிழகத்தில் தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் நியூட்ரினோவை ஆராய்ச்சி செய்வதற்கான ஆய்வகம் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் கடந்த 2011 ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது.
- இந்த ஆய்வகத்தால் மேற்குத் தொடர்ச்சி மலையில் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் என்பதால், ஆய்வகம் அமைக்கக் கூடாது என்று பசுமை தீர்ப்பாயம் அனுமதி மறுத்தது
- நியூட்ரினோ திட்டத்திற்கான புதிய அனுமதி கோரி Tata Institute of Fundamental Research நிறுவனம் கடந்த ஜனவரி 5-ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக ஆய்வுக் குழுவிடம் விண்ணப்பித்திருந்தது. அப்போது, பல்வேறு ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு மதிப்பீட்டுக் குழு கூறியது.
- இந்நிலையில், தேனியில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அமைச்சக ஆய்வுக் குழு பரிந்துரைத்துள்ளது
நியூட்ரினோ என்றால் என்ன?
==========================
- சூரியனில் நான்கு ஹைட்ரஜன் புரோட்டான்கள் சேர்ந்து ஹீலியம் என்ற வேறு பொருளாக மாறுகிறது. இதுவே அணுச் சேர்க்கை. இதன் பலனாகத்தான் பூமிக்கு ஒளியும் வெப்பமும் கிடைக்கின்றன.
- சூரியனிலிருந்து கோடிக்கோடிக் கணக்கான நியூட்ரினோக்கள் பூமிக்கு வருகின்றன. நாம் அதை உணர்வதில்லை. இந்தக் காரணத்தால்தான், 1,300 மீட்டர் அதாவது சுமார் 5,200 அடி ஆழத்தில் ஆய்வகம் அமைக்கப்படுகிறது.
- இந்த ஆழத்தில்தான் வளி மண்டலத்தில் உருவான நியூட்ரினோவிலிருந்து அது வேறுபட்டிருக்கும்.
நியூட்ரினோக்களின் வகைகள்
======================
- நியூட்ரினோக்கள் பிரபஞ்சம் உருவான நாளிலிருந்தே உருவானவை. நியூட்ரினோக்கள் 3 ரகங்கள்.
- அவற்றின் நிறையை வைத்து இவை வகைப்படுத்தப்படுகின்றன. சூரியனில் உற்பத்தியாவதை சோலார் நியூட்ரினோக்கள் என்கின்றனர். ஆனால், அவை எலெக்ட்ரான் நியூட்ரினோக்களே.
- இவை அல்லாமல் மியூவான் நியூட்ரினோ, டாவ் நியூட்ரினோக்களும் உள்ளன.
"நியூட்ரினோக்களின் பயன்கள்"
=======================
நம்முடைய அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு நியூட்ரினோக்கள் 3 காரணங்களுக்காக அவசியம்.
- முதலாவது, அவை அபரிமிதமாகக் கிடைக்கின்றன.
- இரண்டாவது, அவற்றுக்கு எலக்ட்ரான் எடையில் பத்தாயிரத்தில் ஒரு பங்கு அளவுக்கு எடை இருக்கலாம் என்று ரஷ்யாவில் நடந்த பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. எனவே, அவை கோள்கள், நட்சத்திரங்கள், பாறைகள், மனித உடல்கள் என்று - எதன் மீதும் மோதாமல் - எதை வேண்டுமானாலும் துளைத்துக்கொண்டு செல்ல முடியும்.
- மூன்றாவதாக, அவற்றுக்குள்ளே பல தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றைக் கண்டுபிடிக்க முடிந்தால் வான சாஸ்திரம், விண் இயற்பியல், தகவல் தொடர்பு, மருத்துவத்தில் உள்ளுறுப்புகளைப் படம்பிடித்தல் (Medical Imaging) என்று பல துறைகளுக்குப் பயன்படும். பிரபஞ்சம் பற்றி அறியவும் சூரியனைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் நியூட்ரினோ ஆய்வுகள் உதவும்.
Friday, April 6, 2018
*நடப்பு நிகழ்வுகள் 80 வினாக்கள் & விடைகள்*
01) கன்னியாகுமரியில் சமூக சேவகி மேதா பட்கர் துவக்கிய பிரச்சார யாத்திரையின் பெயர் என்ன ?
விடை -- NashaMukt Bharat Yatra (Addiction free India)
.
02) ஐ. நா. பருவநிலை மாற்றம் விருது - 2016 பெற்றுள்ள இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனம் எது ?
விடை – Swayam Shikshan Prayog
.
03) சர்வதேச சிறுவர்கள் உரிமை பற்றி ஐ.நா.வில் இரண்டு முறை உரையாற்றிய இந்திய சிறுமி யார்?
விடை – Anoyara Khatun ( மேற்கு வங்காளம் )
.
04 ) பெண் எழுத்தாளர்களை ஊக்குவிக்க நேசனல் புக் டிரஸ்ட் துவக்கிய திட்டம் என்ன ?
விடை – Mahila Lekhak Protahan Yojana
.
05) தேசிய புலனாய்வு கூட்டமைப்பின் ( NATGRID ) தலைமை செயல் அதிகாரி யார் ?
விடை – அசோக் பட்நாயக்
.
06) இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் யார் ?
விடை – குருபிரசாத் மொஹாபத்ரா
.
07) 2016ம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக MERRIAM WEBSTER அகராதி தேர்வு செய்த வார்த்தை எது ?
விடை – SURREAL
.
08) 2016ம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக OXFORD அகராதி தேர்வு செய்த வார்த்தை எது ?
விடை – POST TRUTH
.
09) OXFORD அகராதியில் சேர்க்கப்பட்ட " அய்யோ , அய்ய " என்ற இரு வார்த்தைகள் எந்த மொழியின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது ?
விடை – சீனாவின் மாண்டரின் மொழி
.
10) தமிழக அரசின் சார்பில், தகவல் தொழில் நுட்ப தினம் எந்த தேதியில் கடைபிடிக்கப்படுகிறது?
விடை – டிசம்பர் 22 [ கணித மேதை ராம்மனுஜன் பிறந்த தினம் ]
.
11) சமீபத்திய ஒப்பந்தத்தின்படி நேபாளத்திற்கு எத்தனை மெகாவாட் மின்சாரம் வழங்க இந்தியா ஒத்துக்கொண்டுள்ளது ?
விடை – 80 மெகா வாட்
.
12) டிசம்பர் 2016 நிலவரப்படி e டூரிஸ்ட் விசா எத்தனை நாட்டின் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது ?
விடை – 161 நாடுகள்
.
13) ரொக்கமில்லா பண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க, டீசல் மற்றும் பெட்ரோல் விற்பனையில் வழங்கப்படும் தள்ளுபடி எவ்வளவு ?
விடை – 0.75 %
.
14) 45வது அகில இந்திய காவல் அறிவியல் மாநாடு எங்கு நடைபெற்றது ?
விடை – கோவளம், திருவனந்தபுரம்
.
15) SIMCON - 2016 எதனோடு தொடர்புடையது ?
விடை – மாநில தகவல் தொழிநுட்ப துறை அமைச்சர்கள் மாநாடு – [ 28TH STATE INFORMATION MINISTERS CONFERENCE ] நடைபெற்ற இடம் – டெல்லி
மாநாட்டின் கருப்பொருள் – Reform, Perform & Transform – A New Dimension of Communication
.
16) HIV நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பாதுகாக்க , ஓடிஸா மாநில அரசால் துவக்கப்பட்ட திட்டம் என்ன ?
விடை – BIJU SISHU SURAKSHYA YOJANA
.
17) தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் இடம் என்ன ? [ GLOBAL TERRORISM INDEX 2016 ]
விடை – 7 வது இடம் .... [ முதலிடம் – இராக் ]
.
18) நவம்பர் 08 / 2016ல் உயர் மதிப்புடைய நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்படத்தின் பின், பல்வேறு கடன்களின் தவணைகளை செலுத்த ரிசர்வ் வங்கி வழங்கிய சலுகை காலம் எவ்வளவு ?
விடை – 90 நாட்கள்
.
19 ) ஆசியா, பசுபிக் பொருளாதார கூட்டமைப்பின் சார்பில், கடைபிடிக்கப்பட்ட பொருளாதார தலைவர்கள் வாரம் எது?
விடை – நவம்பர் 14 முதல் 20 / 2016 வரை
.
20) சீனாவின் ONE BELT, ONE ROAD திட்டத்தில் இணைந்த முதல் பால்டிக் கடல் நாடு எது ?
விடை – லாட்வியா
.
21) இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு இரண்டாம் ஆண்டாக டெல்லி செங்கோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார திருவிழாவின் பெயர் என்ன ?
விடை – BHARAT PARV
.
22) ஜனவரி 2017ல் இந்தியாவில் இருந்து கோழி இறக்குமதிக்கு தடைவிதித்த இரு நாடுகள் எவை ?
விடை – ஹாங்காங் & UAE
.
23) திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுப்பதற்காக, வீட்டில் கழிப்பறை இருந்தால் மட்டுமே நியாய விலை கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்த மாவட்ட ஆட்சியர் யார்?
விடை – SHEOPUR DISTRICT COLLECTOR - M.P.
.
24) அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் முதல் ட்ரில்லியனராக இருப்பார் என OXFOM INTERNATIONAL யாரை சுட்டிக்காட்டியுள்ளது.?
விடை – பில் கேட்ஸ்
.
25) ரப்பர் உற்பத்தியாளர்களின், உற்பத்தி திறனை அதிகரிக்கவும், உற்பத்தி செலவை குறைக்கவும் மத்திய வர்த்தக அமைச்சகம் ஏற்படுத்தியுள்ள அமைப்பு எது ?
விடை – RUBBER SOIL INFORMATION SYSTEM (RuBSIS)
.
26) மொரிஷியஸ் நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளவர் யார் ?
விடை – PRAVIND KUMAR JUGNATH
.
27) உணவு விநியோக துறையில் கால்பதித்துள்ள உபெர் [Uber] நிறுவனம் வெளியிட்டுள்ள செயலி எது ?
விடை – UberEATS
.
28) நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம் 2003 ஐ { FISCAL RESPONSIBILITY AND BUDGET MANANGEMENT [ FRBM] ACT } மறுசீராய்வு செய்ய அமைக்கப்பட்ட N.K. சிங் கமிட்டி வழங்கிய பரிந்துரை என்ன ?
விடை – நிதி பற்றாக்குறை 3% க்குள் இருக்க வேண்டும் என்பதை 3 முதல் 3.5% வரை இருக்கலாம் என பரிந்துரை வழங்கியுள்ளது.
.
29) சமுதாய வானொலிகளில் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு நிமிடங்கள் வர்த்தக விளம்பரங்கள் ஒளிபரப்பி கொள்ள மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது?
விடை – 7 நிமிடங்கள்
.
30) நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், கொல்கத்தாவில் இருந்து தப்பிச்சென்ற நிகழ்வின் 76வது ஆண்டை முன்னிட்டு, அவர் தப்பி செல்ல பயன்படுத்திய கார் மறு சீரமைப்பு செய்து ஜனாதிபதி முன்னிலையில்
வெளிவிடப்பட்டது. அந்த காரின் பெயர் என்ன ?
விடை – Audi Wanderer W24 [ ஜெர்மனி தயாரிப்பு ]
31) TROPHICAL PARASITOLOGY CONFERENCE எங்கு நடைபெற்றது?
விடை – இந்திய வெப்பமண்டல ஒட்டுண்ணியியல் கழகத்தின் 10வது தேசிய மாநாடு நடைபெற்ற இடம் – புதுச்சேரி
.
32) இந்தியாவின் முதல் ஊரக ஸ்கேட்டிங் பூங்கா எங்கு துவங்கப்பட்டுள்ளது?
விடை – JANWAAR ( BUNDELKHAND ) மத்திய பிரதேசம்
.
33) இந்தியாவின் முதல் ரொக்க பரிவர்தனை இல்லாத கிராமமான அகோதராவை தத்து எடுத்த வங்கி எது ?
விடை – ICICI வங்கி
.
34) தீவிரவாதி பர்ஹான் வாணி சுட்டு கொல்லப்பட்ட பின், காஷ்மீர் சிறுவர்களுக்கு இலவச பயிற்சி மற்றும் கூடுதல் கல்வி சார்ந்த பயிற்சிகள் வழங்க, ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையின் பெயர் என்ன ?
விடை – OPERATION SCHOOL CHALO ( இது தொடர்பாக ராணுவத்தினர் பயன்படுத்திய முழக்கம் - I don’t need money and fame, I need books and school )
.
35) STATE OF THE STATE CONCLAVE 2016 எங்கு நடைபெற்றது ?
விடை – புதுடெல்லி
.
36) 5வது சர்வதேச சுற்றுலா அங்காடி எங்கு நடைபெற்றது ?
விடை – இம்பால் ( மணிப்பூர்) [5TH INTERNATIONAL TOURISM MART]
.
37) மேற்கு வங்கத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் பெயர் என்ன ?
விடை – SABUJSATHI
.
38) குழந்தைகள் உரிமைகளுக்கு எதிரான புகார்களை பதிவு செய்ய மகாராஷ்டிரா மாநில அரசு வெளியிட்டுள்ள செயலி [ APP ] என்ன ?
விடை – CHIRAG App [ CHILD HELPLINE FOR INFORMATION ON THEIR RIGHTS AND TO ADDRESS THEIR GRIEVANCES ]
.
39) சில்லறை நோட்டு தட்டுப்பாடு ஏற்பட்ட பொழுது ஆதாருடன் இணைந்த கூப்பன்களை வெளியிட்ட மாநில அரசு எது ?
விடை – தெலுங்கானா [ IDFC வங்கியுடன் இணைந்து ]
.
40) தெலுங்கானா மாநில கைத்தறி துணிகள் தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார் ?
விடை – நடிகை சமந்தா
.
41) சமீபத்தில் NASA அனுப்பிய , அடுத்த தலைமுறை வானிலை செயற்கைக்கோள் எது ?
விடை – GOES – R
.
42) சமீபத்தில் ஜப்பான் அனுப்பிய, இணை வட்டப்பாதையில் சுற்றக்கூடிய, அடுத்த தலைமுறை வானிலை ஆராய்ச்சி செயற்கைக்கோள் [NEXT GENERATION GEOSTATIONARY METEOROLOGICAL SATELITE] எது ?
விடை – HIMAWARI – 9 ( HIMAWARI MEANS SUNFLOWER )
.
43) Hubble தொலைநோக்கிக்கு மாற்றாக , அதனைவிட 100 மடங்கு செயல் திறன் மிக்க தொலைநோக்கியை NASA உருவாக்கியுள்ளது . அதன் பெயர் என்ன ?
விடை – JAMES WEBB TELESCOPE
.
44) மலேசியா அரசின் டத்தோ விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்தவர் யார் ?
விடை – ராமநாதபுரம் மாவட்டம், தினைக்குளத்தை பூர்வீகமாகச் கொண்ட முகம்மது யூசுப்.
இவர் சிறந்த குடிமகன், மனிதநேயம் மற்றும் வர்த்தகம் ஆகிய 3 பிரிவுகளில் மலேசிய அரசின் உயரிய டத்தோ விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
.
45 ) தமிழக சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
விடை – சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி M.L.A.
.
46) அவசர ஊர்தி படகு சேவை எங்கு துவங்கப்பட்டுள்ளது?
விடை – AMBULANCE BOAT SERVICE மும்பை
.
47) இந்தியா - சீனா எல்லையான டெம்சோக் செக்டார் பகுதியில், எந்த திட்டத்தின்கீழ் கிராமங்களில் பாசன கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றன ?
விடை – மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்
.
48) லோசர் திருவிழா தொடர்பான மாநிலம் எது?
விடை – ஜம்மு & காஷ்மீர்
.
49) 2017ல் நடைபெறுகின்ற ஐந்து மாநில தேர்தல்களில் வாக்களிப்பதின் அவசியத்தை உணர்த்த தேர்தல் ஆணையம், எந்த சமூக வலைத்தளத்துடன் இணைந்து பிரச்சாரம் மேற்கொண்டது ?
விடை – முகநூல் ( FACEBOOK )
.
50) சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத விமான நிலையம் [ECO FRIEND AIRPORT ] என்ற சிறப்பை பெற்றுள்ள விமான நிலையங்கள் எது ?
விடை – சண்டிகர் & வதோரா
.
51) கும்பகோணத்தில் உள்ள குளங்கள் மற்றும் நீர்நிலைகளின் தற்போதைய நிலை பற்றி ஆராய உயர்நீதிமன்றம் அமைத்த விசாரணை அதிகாரி யார் ?
விடை – ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சோலைமலை
.
52) ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது குறித்து ஆராய ஏற்படுத்தப்பட்ட விசாரணை ஆணையத்தின் தலைவர் யார் ?
விடை – ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்வரன்
.
53) இந்தியாவின் முதல் மகிழ்ச்சி ரயில் சந்திப்பு நிலையம் [ HAPPINES JUNCTION ] எது ?
விடை – சோன்பூர் [ Sonepur ] பீகார்
.
54) சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை அமுல் செய்த இந்தியாவின் அண்டை நாடு எது ?
விடை – ஸ்ரீலங்கா
55) உலகின் மிகச்சிறந்த சட்டங்கள் பட்டியலில் இந்தியாவின் தகவல் அறியும் உரிமை சட்டம் எந்த இடம் பெற்றுள்ளது ?
விடை – நான்காவது இடம்
.
56) சமீபத்தில் தலாய்லாமாவிற்கு கவுரவ குடியுரிமை வழங்கிய நகரம் எது ?
விடை – மிலன் ( இத்தாலி )
.
57) சமீபத்தில் உலகின் மிகப்பெரிய டைனோசர் காலடி தடம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ?
விடை – கோபி பாலைவனம்
.
58) இந்தியாவின் முதல் வடிவமைப்பு யாத்திரை ( FIRST DESIGN YATRA ) எங்கு துவங்கப்பட்டது ?
விடை – கோழிக்கோடு
.
59) பன்றிகளில் உள்ள நாடாப்புழுக்களை அழிக்க இந்திய நிறுவனம் கண்டு பிடித்துள்ள தடுப்பு மருந்தின் பெயர் என்ன ?
விடை – CYSVAX – CYSTICERCOSSIS VACCINE ( Indian Immunologicals Ltd (IIL) Hyderabad )
.
60) 2016 சின்ஹன் டொன்கே ஓபன் கோல்ப் போட்டியில் பட்டம் வென்றவர் யார் ?
விடை – ககன்ஜித் புல்லர்
61) FIFA சார்பில் 17வயதுக்கு உட்படோர்க்கான ஆண்கள் கால்பந்து போட்டி - 2017 எங்கு நடைபெறவுள்ளது ?
விடை – இந்தியா
.
62) FIFA சார்பில் 17வயதுக்கு உட்படோர்க்கான பெண்கள் கால்பந்து போட்டி – 2016 எங்கு நடைபெற்றது ?
விடை – ஜோர்டான் -- ( சாம்பியன் = வடகொரியா )
.
63) FIFA சார்பில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டி 2018ல் எங்கு நடைபெறவுள்ளது?
விடை – ரஷ்யா
.
64) பிரான்சில் நடைபெற்ற ரயில்வே துப்பாக்கி சுடுதல் போட்டியில் பட்டம் வென்ற அணி எது ?
விடை – இந்திய ரயில்வே
.
65) HOOGEVEEN செஸ் போட்டியில் பட்டம் வென்றவர் யார் ?
விடை – அபிஜித் குப்தா
.
66) பிலிப்பைன்ஸ்ல் நடைபெற்ற ஆசிய ஆணழகன் போட்டியில் பட்டம் வென்றவர் யார் ?
விடை – பாலகிருஷ்ணன்
.
67) ஐரோப்பாவின் மனித உரிமைகள் விருதான ஷக்ரோவ் விருது பெற்றவர்கள் யார் ?
விடை – நாடியா முராட் மற்றும் லமியா ஹாஜி பஷர் [ Nadia Murad & Lamiya Aji Bashar]
.
68) MISSION MADUMEHA எதனோடு தொடர்புடையது?
விடை – ஆயுர்வேதத்தின் மூலம் நீரிழிவு நோய் வராமல் தடுப்பது மற்றும் காப்பது.
.
69) " நம்பிக்கை கடன் " என்ற திட்டத்தை துவக்கிய வங்கி எது ?
விடை – ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
.
70) இந்தியாவின் மிகப்பெரிய STARTUP INCUBETOR எங்கு துவக்கப்பட்டுள்ளது?
விடை – ஹுப்பள்ளி ( ஹூப்ளி ) கர்நாடகா
.
71) இந்திய ராணுவத்தின் புதிய தளம் ரூ.1500 கோடி செலவில் எங்கு அமைக்கப்படவுள்ளது ?
விடை – Morena மாவட்டம், மத்திய பிரதேசம்.
.
72) முதன்முறையாக வாக்களித்த புதிய பெண் வாக்களர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் வழங்கப்பட்ட பரிசு என்ன? ஆண் வாக்களர்களுக்கு வழங்கப்பட்ட பரிசு என்ன? எந்த மாநில தேர்தலில் இவை வழங்கப்பட்டது?
விடை – பெண்களுக்கு – பிங்க் நிற டெடி பியர் பொம்மை == ஆண்களுக்கு -- பேனா == கோவா மாநில சட்டப்பேரவை தேர்தல்
.
73) மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு எதுவாக சிறப்பான பயிற்சி மையம் அமைக்க , மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் எங்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது?
விடை – குஜராத்
.
74) ஹஜ் புனித யாத்திரை செல்வோருக்கான மானியங்களை மறு சீரமைப்பு செய்வதற்கு அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார் ?
விடை – அப்சல் அமானுல்லா
.
75) டாக்டர் H.R. நாகேந்திரா கமிட்டி எதனோடு தொடர்புடையது?
விடை – யோகா மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது பற்றி ஆராய.
.
76) அமிதாப் சௌத்ரி கமிட்டி எதனோடு தொடர்புடையது ?
விடை – தற்போதைய சூழலில் ஆயுள் காப்பீடு நிறுவனங்களின் சந்தையை ஆராய்தல் மற்றும் வாடிக்கையாளர்களின் நலன்களை பாதுகாப்பது பற்றி ஆராய்தல்.
.
77) Computer Society of India & Nihilent Technologies இணைந்து வழங்கிய e Governance Award பெற்ற மாநிலங்கள் எவை ?
விடை – தெலுங்கானா & ராஜஸ்தான்
.
78) எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு அருகே கடலில் விபத்து ஏற்படுத்திய இரண்டு சரக்கு கப்பல்களின் பெயர் என்ன?
விடை – பி.டபிள்யூ. மேப்பிள் ( ஈரான் ) & எம்.டி.டான் காஞ்சிபுரம்
.
79) National Confederation of Human Rights Organizations (NCHRO) வழங்கும் முகுந்தன் C. மேனன் விருது பெற்றவர் யார் ?
விடை – டாக்டர்.சுரேஷ் கைர்னார்
.
80) 20வது தேசிய மின் ஆளுமை மாநாடு எங்கு நடைபெற்றது? அம்மாநாட்டின் கருப்பொருள் என்ன?
விடை – விசாகப்பட்டினம் ., கருப்பொருள் - Digital Transformation
Monday, April 2, 2018
*நடப்பு செய்திகள் வினா - விடை*
01) துணை ஜனாதிபதியின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார்?
விடை -- I.V. சுப்பாராவ்
02) Facebook புதிதாக அறிமுகம் செய்துள்ள வீடியோ தளம் பெயர் என்ன ?
விடை -- Watch
03) போயிங் 777, உலகின் மிக இளவயது பெண் கமாண்டர் யார் ?
விடை --- Anny divya , 30 வயது, விஜயவாடா
04) சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற முதல் ஜூனியர் உலக பாரா தடகள போட்டியில், ஈட்டி எறிதலில் பதக்கம் வென்ற இந்திய வீரர் யார் ?
விடை -- ரினு ஹூடா
05) டெல்லி மாநகரத்தின் வாகன நிறுத்த கொள்கையை வரையறை செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார் ?
விடை --- ஓம் பிரகாஷ் அகர்வால்
06) ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் அதிக பதக்கம் வென்றுள்ள தடகள விளையாட்டு வீரர் / வீராங்கனை யார் ?
விடை -- Allyson Felix (AmerIca ) 16 பதக்கங்கள்
07) ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் அதிக தங்க பதக்கம் வென்றுள்ள தடகள விளையாட்டு வீரர் / வீராங்கனை யார் ?
விடை -- உசேன் போல்ட் ( ஜமைக்கா )
08) 91 வயதாகும் இங்கிலாந்து ராணி, எந்த வயதில் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார் ?
விடை -- 95 வயது
09) வர்த்தகர்களுக்கு GST சாப்ட்வேரை இலவசமாக வழங்கிய மாநில அரசு எது?
விடை --- மேற்கு வங்காளம்
10) ஜார்ஜியாவில் நடைபெறும் செஸ் உலக கோப்பை போட்டியில் கலந்து கொண்டுள்ள இந்திய வீரர்கள் எத்தனை பேர் ?
விடை -- 7
11) சமீபத்தில் ஆக்சிஸ் வங்கி, கடன் அட்டை ( கிரெடிட் கார்ட் ) வர்த்தகத்தை உயர்த்த மேற்கொண்ட பிரச்சாரத்தின் பெயர் என்ன ? அதன் பிரச்சாரகர் யார் ?
விடை --- Experience Axis , Deepika Padikone
12) பாஸ்போர்ட்டில் பாலினம் பற்றிய குறிப்பில் பொதுவானதாக X என்று மட்டுமே இனி குறிப்பிடப்படும் என அறிவித்துள்ள நாடு எது ?
விடை -- கனடா
13) சமீபத்தில் சீனா Djibouti என்ற ஆப்ரிக்க நாட்டில் தனது ராணுவ படைத்தளத்தை அமைந்துள்ளது. அந்த நாட்டில் படைத்தளத்தை அமைத்துள்ள மற்ற நாடுகள் எவை ?
விடை -- அமெரிக்கா , ஜப்பான் , பிரான்ஸ்
14) தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைமை குரு குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு சி.பி.ஐ. நீதிமன்றம் வழங்கியுள்ள தண்டனை காலம் எவ்வளவு ?
விடை -- 20 ஆண்டுகள்
15) உலகின் அரிய வகை மீன் இனம் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இந்திய மீன் எது?
விடை -- Rayichapalu ( இது விசாகப்பட்டினம் பகுதிகளில் உள்ளன )
16) 2017 சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் பாடி வெளியிட்ட பாடல் தொகுப்பின் பெயர் என்ன?
விடை --- I am an Indian
17) ஆகஸ்டில் கிர்கிஷ்தானில் நடைபெற்ற பேரிடர் முன்னெச்சரிக்கை தொடர்பான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் இந்தியா சார்பில் கலந்து கொண்டவர் யார்?
விடை --- உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
18) சமீபத்தில் cryptocurrency வெளியிடவுள்ளதாக அறிவித்த நாடு எது? அதன் பெயர் என்ன?
விடை -- எஸ்டோனியா. ., Estcoin
Popular Posts
-
*சான்றிதழ்களை பெறுவதற்கான வரைமுறைகள்!* *♨️ சான்றிதழ்கள் 10th, 12th, Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ...
-
வணக்கம், ** TNPSC கொடுத்துள்ள உத்தேச விடையில் உள்ள தவறான விடைகளுக்கு எப்படி மெயில் அனுப்ப வேண்டும்? என்று ஒரு வினாவிற்கு மட்டும் தயாரித்து...
-
ஆசிரியர்களின் நலன் சார்ந்து இதுவரரை வந்துள்ள அரசாணைகளின் தொகுப்பு மற்றும் விளக்கம் G.O's REALTED TO TEACHERS & THEIR EXPLAINATION ...