Showing posts with label TAMIL. Show all posts
Showing posts with label TAMIL. Show all posts

Sunday, May 20, 2018

*தமிழ்*

🌀 "சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே" பாடியவர் - பொன்முடியார்

*  திருமாலின் பல்வேறு அம்சமாகத் தோன்றிய ஆழ்வார்கள்

*  பாஞ்ச சன்யம் - பொய்கையாழ்வார்

*  கருடாம்சம்    - பெரியாழ்வார்

*  சுதர்சனம் - திருமழிசை

*  களங்கம் -  திருமங்கையாழ்வார்

*  காலமுறைப்படி வரிசைப்படுத்துதல்: பொய்கையாழ்வார், பூத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார்

*  நற்றினண, நல்ல குறுந்தொகை, ஐங்குறு நூறு, ஒத்தபதிற்றுபத்து

*  அம்புலி, சிற்றில் சிறுபறை, சிறுதேர்

*  காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி

*  அரியணையைத் துறந்து வைணவத் தொண்டர் கோலத்தை ஏற்றவர் - குலசேகரர்

*  சுந்தர் பாடிய திருத்தொண்டர் தொகை - தொண்டர் தம் பெருமை கூறும் நூல்

*  பிள்ளைத் தமிழின் இலக்கியம் குறித்து விளக்கம் தரும் நிகண்டு - திவாகர நிகண்டு

*  குலோத்துங்க சோழனின் பிள்ளைத்தமிழ் பாடியவர் - ஒட்டக்கூத்தர்

*  பகழிக்கூத்தர் பாடிய பிள்ளைத்தமிழ் - திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்.

*  திருத்தக்கதேவர் சார்ந்த சமயம் - சமண சமயம்

*  சீவகன் கதையைப் பெருங்காப்பியமாகப் பாடியவர் -  திருத்தக்கதேவர்

*  அறிவு அற்றம் காக்கும் கருவி - முப்பால்

*  செல்வம் சகடக் கால்போல் வரும் - நாலடியார்

*  சிறு மாலை கொல்லுனர் போல வரும் - ஐந்திணை எழுபது

*  காதலி மாட்டுள்ளம் வைப்பார்க்குத் துயிலில்லை - நான்மணிக்கடிகை

*  ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் - இன்னா நாற்பது

*  இளமையை மூப்பு என்றுணர்தல் இனிதே - இனியவை நாற்பது

*  புல் நுனிமேல் நீர் போல் நிலையாமை - நாலடியார்

*  அகம் குன்றி மூக்கில் கரியாருடைத்து - முப்பால்

*  முல்லையும் குறிஞ்சியும் நல்லியல்பு இழந்தால் பாலையாகும்

*  மருந்துப் பெயர் அல்லாத பதினெண் கீழ்க்கணக்கு நூல் - கைந்நிலை

*  தூது இலக்கியத்திற்குரிய யாப்பு - கலிவெண்பா

Friday, April 13, 2018

*புறநானூறு :-*

* புறம்+நான்கு+நூறு = புறநானூறு
* புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்ட நூல் ஆதலால் புறநானூறு எனப் பெயர் பெற்றது.
* புறம் என்பது ஒருவரின் வீரம், கொடை, கல்வி முதலிய சிறப்புகளைக் குறிக்கும்.

திணை = புறத்திணை
பாவகை = ஆசிரியப்பா
பாடல்கள் = 400
புலவர்கள் = 157
அடி எல்லை = 4-40

🌺 அதிக தகவல்களுக்கு  TNPSC - நண்பர்கள்  fb குரூப்பை பாருங்க 🍁

* எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
* இந்நூலிலுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பாடப்பெற்றவை.
* புறநானூற்றில் 11 திணைகளும், 65 துறைகளும் கூறப்பட்டுள்ளன.
* புறநானூற்றில் கூறப்படாத திணை = உழிஞைத் திணை.
* இப்பாடல்கள் பண்டைத் தமிழ் மன்னர்களின் ஆட்சிச், சிற்பம், கொடை, கல்வி முதலியவற்றை விளக்குகிறது.
* இந்நூலின் சில பாடல்களை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
* புறநானூற்றில் மிக அதிக பாடலை பாடியவர் : ஔவையார்
* முதல் 266 பாடல்களுக்கு பழைய உரை உள்ளது.
* 267-400 பாடல்களுக்கு உ.வே.சா உரை உள்ளது.
* நூலினை முதலில் பதிப்பித்தவர் = உ.வே.சா

* வேறுபெயர் : புறம்,புறப்பாட்டு,தமிழ்க்கரூவூலம்,
தமிழர் வரலாற்றுக்களஞ்சியம்.

Saturday, April 7, 2018

தமிழ் இதழ்கள் நடத்திய ஆசிரியர்கள்:-

🌹 தேசபக்தன் - திரு. வி. கா
🌹 குயில் - பாரதிதாசன்
🌹 சதேசிமித்ரன் - ஜி. சுப்பிரமணிய ஐயர்
🌹 பாலபாரதி - வ. வே. சு. ஐயர்
🌹 ஞானபோதினி - சுப்ரமணிய சிவா
🌹 இந்தியா, விஜயா - சுப்பிரமணிய பாரதி
🌹 தமிழ் நாடு - வரதராஜுலு நாயுடு
🌹 மணிக்கொடி - பி. எஸ். ராமையா
🌹 எழுத்து - சி. சு. செல்லப்பா
🌹 குடியரசு, விடுதலை - பெரியார்
🌹 திராவிட நாடு - அண்ணா
🌹 தென்றல் - கண்ணதாசன்
🌹 சாவி - சா. விஸ்வநாதன்
🌹 கல்கி - ரா. கிருஷ்ணமூர்த்தி

Monday, April 2, 2018

*தமிழ்*

1.ஓடும் சுழிசுத்தம் என்ற பாடலை இயற்றியவர்?
காளமேகப் புலவர்
2.ஓடும் சுழிசுத்தம் என்ற பாடலில் வரும் மன்னன்?
திருமலைராயன்
3.காளமேகப் புலவர் பிறந்த இடங்கள் என கூறப்படும் இடங்கள்?
கும்பகோணம்-நந்திக்கிராமம், விழுப்புரம்-எண்ணாயிரம்
4.கார்மேகம் போல் கவிதை பொழிபவர்?
காளமேகப் புலவர்
5.காளமேகப் புலவர் பணிபுரிந்த இடம்?
திருவரங்கம் கோயில்
6.காளமேகப் புலவர் முதலில் பின்பற்றிய சமயம்?
வைணவம்
7.கல்விக்கு எல்லை இல்லை பாடலை இயற்றியவர்?
ஔவையார்
8.கற்றது கைமண்ணளவு பாடலை இயற்றியவர்?
ஔவையார்
9.தனிப்பாடல் திரட்டை இராமநாதபுரம் மன்னர் பொன்னுச்சாமி வேண்டுதலுக்கு இணங்க தொகுத்தவர்?
சந்திரசேகர கவிராச பண்டிதர்
10.கணிதமேதை இராமானுஜம் பிறந்த / இறந்த ஆண்டு?
22-12-1887 – 26-04-920
11.கணிதமேதை இராமானுஜம் பெற்றோர் பெயர்?
சீனிவாசன்-கோமளம்
12.கணிதமேதை இராமானுஜம் எத்தனை ஆண்டுகள் பேசும் திறனற்றவராய் இருந்தார்?
3
13.கணிதமேதை இராமானுஜம் முதலில் படித்த இடம்?
காஞ்சிபுரம் திண்ணைப் பள்ளி
14.1880 ல் பதினைந்து வயதில் இலண்டனில் கணிதமேதையாக இருந்தவர்?
கார்
15.கணிதமேதை இராமானுஜம் சென்னை துறைமுகத்தில் சேர்ந்த பணி?
எழுத்தர்
16.சென்னை துறைமுகத்தின் தலைமை பொறியாளர்?
பிரான்சிஸ் ஃபிரிங்ஸ்
17.கணிதமேதை இராமானுஜம் எழுதிய கட்டுரை?
பெர்னௌலிஸ் எண்கள்
18.சென்னை பல்கலைக்கழகத்திற்கு சொற்பொழிவாற்ற வந்த திரினிட்டி பேராசிரியர்?
ஈ.எச்.நெவில்
19.கணிதமேதை இராமானுஜம் திரினிட்டி கல்லூரியில் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்த ஆண்டு?
1914
20.ரோசர்ஸ் இராமானுஜன் கண்டுபிடிப்புகள் என்னும் நூலை வெளியிட்டவர்?
ஹார்டி
21.கணிதமேதை இராமானுஜம் எப்.ஆர்.எஸ் பட்டம் பெற்ற ஆண்டு?
1918
22.250 பவுண்டு தொகையை ஆறு ஆண்டுகளுக்கு வழங்கிய கல்லூரி?
திரினிட்டி
23.ஹார்டி வந்த காரின் எண்?
1729
24.7 × 13 × 19 ன் பெருக்கு தொகை?
1729
25.இராமானுஜம் இறைவன் தந்த பரிசு என கூறியவர்?
பேராசிரியர் ஈ.டி.பெல்
26.இராமானுஜம் இருபதாம் நூற்றாண்டின் கணிதமேதை -என கூறியவர்?
பேராசிரியர் சூலியன் கக்சுலி
27.1962 டிசம்பர் 22 ல் எத்தனை காசு அஞ்சல் தலை எவ்வளவு நடுவணரசு வெளியிட்டது?
பதினைந்து காசு, 25 லட்சம்
28.கணிதமேதை இராமானுஜம் அறிவியல் நிறுவனம் எங்கு, எப்பொழுது திறக்கப்பட்டது?
சென்னை - 1972
29.கணிதமேதை இராமானுஜம் அனைத்துலக நினைவு குழு அமைக்கப்பட்ட ஆண்டு?
1971
30.சென்னை துறைமுகம் குடிநீர் கப்பலுக்கு இடப்பட்ட பெயர்?
சீனிவாச இராமானுஜம்
31.1984 ல் மார்பளவு வெண்கல சிலை இந்தியாவிற்கு கொண்டு வந்தவர்கள்?
விசுகன்சீன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ரிச்சர்டு, ஆஸ்கே
32.டாடா அடிப்படை ஆராய்ச்சி நிலையம் கணிதமேதை இராமானுஜம் தேற்றங்களை ஒளிப்படம் எடுத்த ஆண்டு?
1957
33.கணிதமேதை இராமானுஜத்தை பிறவிக் கணித மேதை என கூறியவர்?
இந்திராகாந்தி
34.இராமானுஜம் ஒரு ஜாகோபி என கூறியவர்?
லிட்டில்வுல்டு
35.குடிமக்களையும், குலதெய்வத்தையும் ஒரே மாதிரி நேசித்தவர்?
மருதுபாண்டியர்
36.பழஞ்சோற்றுக் குருநாதனேந்தல் எந்த மாவட்டத்தில் உள்ளது?
சிவகங்கை
37.நன்றிப் பரிசு துணைப்பாடத்தை எழுதியவர்?
நீலவன், முத்துக்கதைகள்
38.ஒரு பொருளின் இயக்கத்தை குறிக்கும் சொல்?
வினைச்சொல்
39.செய்யுளுக்கே உரிமை பூண்டு வரும் சொல்?
உரிச்சொல்
40.பிரேம்சந்த் எந்த மொழியில் புகழ்பெற்றவர்?
இந்தி
41.விவேகானந்தர் அமெரிக்காவில் தங்கியிருந்த இடம்?
ஓருர்
42.விவேகானந்தர் சுட்ட முட்டை ஓடுகளின் எண்ணிக்கை?
12
43.தமிழகத்தின் சிறப்பு விலங்கான வரையாடுகள் காணப்படும் இடம்?
உதகை
44.கலைமடந்தை என்பதன் பொருள்?
கலைமகள்
45.பந்தயம் என்பதன் பொருள்?
போட்டி
46.துன்னலர் என்பதன் பொருள்?
பகைவர், அழகிய மலர்
47.பரிவாய் என்பதன் பொருள்?
அன்பாய்
48.ஆடுபரி என்பதன் பொருள்?
ஆடுகின்ற குதிரை
49.சாடும் என்பதன் பொருள்?
தாக்கும்
50.‘பூம்புனல்’ எப்படிப் பிரியும்?
பூ + புனல்✔
பூம் + புனல்
பூப் + புனல்
பூம்பு + நல்
🏎🔥

Sunday, April 1, 2018

*பாரதியார்*

பாரதியார் பற்றிய சில தகவல்கள்:-

📝 இவர் பிறந்த ஆண்டு - 11 டிசம்பர் 1882

📝 இவர் பிறந்த ஊர் - எட்டையபுரம் (திருநெல்வேலி மா)

📝 இவர் 1904 சுதேசமித்திரன் பத்திரிக்கையின் துணை ஆசிரியராக பணி ஆற்றினார்.

📝 வந்தே மாதரம் பாடலை தமிழில் மொழி பெயர்த்தார்.

📝 வந்தே மாதரம் பாடலை 'சக்கரவர்த்தினி' மாத இதழில் வெளியிட்டார்.

📝 வ.உ.சி. வங்கிய இரண்டு கப்பல்களை பாரத தேவி பெற்றெடுத்த இரண்டு தவப் புதல்வர்கள் என வர்ணித்தார்.

📝 1907 சூரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார்.

📝 தழிழ்நாட்டுத் தீவிரவாதிகள் பிரதிநிதியாக திகழ்ந்தார்.

📝 1907 இந்தியா என்ற தமிழ் வார பத்திக்கையின் ஆசிரியரானார்.

📝 பாலபாரதம் என்ற ஆங்கில பத்திரிகையை வெளியிட்டார்.

📝 1908 சென்னை மாபெரும் கூட்டத்தை நடத்தி, சுயராஜ்ஜிய நாளை கொண்டாடினார்.

📝 'எங்கள் காங்கிரஸ் யாத்திரை' என்ற நூலை வெளியிட்டார்.

📝 'புதிய கட்சியினரின் கோட்பாடுகள்' என்ற திலகரின் ஆங்கில சொற்பொழிவை தமிழில் மொழி பெயர்ந்தார்.

📝 வ.உ.சி. அழைப்பின் பேரில் நெல்லை கலெக்டரை வாஞ்சிநாதன் சந்தித்ததை 'தேசபக்தனுக்கு ஆங்கிலேயன் சொன்னது' , 'ஆங்கிலேயனுக்கு தேசபக்தன் சொன்னது' என்ற தலைப்பில் பாடல் பாடினார்.

📝 1909 ஆம் ஆண்டு இவரின் படைப்புகளுக்கு தடை விதித்தது.

📝 1918 முதல் உலகப் போரில் முடிவில் இவர் கடலூருக்கு வந்த சமயத்தில் கைது செய்யப்பட்டார்.

📝 1919 சென்னை வந்த காந்தியை சந்தித்து பேசினார்.

📝 11 செப்டம்பர் 1921 இயற்கை எய்தினார்.

Sunday, March 25, 2018

*ஒலிவேறுபாடு - பொது தமிழ்*

1. அரம் = அராவும் கருவி
2. அறம் = தருமம்
3. அரி = துண்டாக்கு, திருமால்
4. அறி = தெரிந்துக்கொள்
5. அருகு = பக்கம்
6. அறுகு = ஒருவகைப்புல்
7. அரை = பாதி
8. அறை = கூறு
9. இரத்தல் = யாசித்தல்
10. இறத்தல் = சாதல்
11. இரை = தீனி
12. இறை = கடவுள்
13. உரவு = வலிமை
14. உறவு = சொந்தம்
15. உரி = தோலை உரி
16. உறி = பால், தயிர் வைக்கும் கயிற்றுத் தொங்கல்
17. உரை = சொல்,
18. உறை = வாசி, மேல் உறை
19. துரவு = கிணறு
20. துறவு = சந்நியாசம்
21. கருத்து = எண்ணம்
22. கறுத்து = கருமை நிறம்
23. நரை = வெண்மயிர்
24. நறை = தேன்
25. எரி = நெருப்பு
26. ஏறி = வீசுதல்
27. ஏரி = பெரிய நீர்நிலை
28. ஏறி = மேலே ஏறி
29. கரி = அடுப்புக்கரி, யானை
30. கறி = காய்கறி, மிளகு
31. கீரி = ஒரு விலங்கு
32. கீறி = பிளந்து
33. சுனை = ஊற்று
34. சுணை = சிறுமுள்
35. குனி = வளை
36. குணி = ஆலோசனை செய்
37. தின் = சாப்பிடு
38. திண் = உறுதி
39. கன்னி = இளம்பெண்
40. கண்ணி = மாலை
41. பனி = குளிர்ச்சி, பனித்துளி
42. பணி = வேலை, தொண்டு
43. தினை = ஒருவகை தானியம்
44. திணை = குளம், ஒழுக்கம்
45. பனை = ஒருவகை மரம்
46. பனண = மூங்கில்
47. கனம் = பளு
48. கணம் = கூட்டம், நொடிப்பொழுது
49. மன் = அரசன்
50. மண் = பூமி
51. வன்மை = வலிமை
52. வண்மை = கொடுக்கும் குணம்
53. அரன் = சிவன்
54. அரண் = மதில், கோட்டை
55. தின்மை = தீமை
56. திண்மை = வலிமை
57. இனை = வருந்து
58. இணை = சேர், இரட்டை
59. மான் = ஒருவகை விலங்கு
60. மாண் = பெருமை
61. பொருப்பு = மலை
62. பொறுப்பு = கடமை
63. தரி = அணி
64. தறி = வெட்டு, நெசவு
65. பரி = குதிரை
66. பறி = பறித்தல்
67. சூல் = கருப்பம்
68. சூள் = சபதம்
69. சூழ் = நெருங்கு, வளை
70. தால் = நாக்கு
71. தாள் = பாதம், முயற்சி
72. தாழ் = பணி, தாழ்ப்பாள்
73. மூலை = கோணத்தின் ஓரம்
74. மூளை = உறுப்பு
75. மூழை = அகப்பை
76. அலகு = பறவை மூக்கு, அளவைக்கூறு
77. அளகு = பெண் பறவை, காட்டுக்கோழி
78. அழகு = வனப்பு, அணி
79. தலை = சிரம், உடல் உறுப்பு
80. தளை = கட்டு, அடிமைத்தளை
81. தழை = இலை
82. வலி = நோய், வலிமை
83. வளி = காற்று
84. வழி = பாதை
85. வால் = விலங்கின் வால்
86. வாள் = கத்தி, ஒளி
87. வாழ் = வாழ்தல்
88. வலை = மீன்பிடி வலை
89. வளை = பொந்து, வளையல் வளைவு
90. வழை = ஒருவகை மரம்
91. பொலி = விளங்கு
92. பொழி = ஊற்று
93. பொளி = கொத்து
94. அலை = கடல் அலை
95. அளை = வெண்ணை, புற்று
96. அழை = கூப்பிடு
97. இலை = தழை
98. இளை = உடல் மெலிவு
99. இழை = நூல் இழை, அணிகலன்
100. உலை = நீர் உலை, வருந்து
101. உளை = பிடரிமயிர்
102. உழை = உழைத்தல், மான்

Friday, March 23, 2018

*சீவகசிந்தாமணி*

சீவகசிந்தாமணி நூல் பற்றிய யான் அறிந்த சில தகவல்கள்:-
☔ சீவகசிந்தாமணி இயற்றியவர் - திருதக்கதேவர்
☔ விருத்ம்ப்பாவல் இயற்றப்பட்ட  காப்பியம் - சீவகசிந்தாமணி
☔ சீவகசிந்தாமணி வழங்கப்படும் வேறு பெயர்கள் - காமநூல், முக்தி நூல்
☔ சீவகன் பிறந்த இடம் - சுடுகாடு
☔ சீவகனின் தந்தையை கொன்றவன் - கட்டியங்காரன்
☔ சீவகனை எடுத்து வளர்த்தவன் - கந்துகடன் எனும் வாணிகன்
☔ சீவகனின் நண்பன் - பதுமுகன்
☔ சீவகனின் ஆசிரியர் - அச்சணந்தி
☔ சீவகசிந்தாமணி யில் உள்ள மொத்த இலம்பகங்கள் - 13
☔ சீவகன் கல்வி கற்றதை கூறுவது - நாமகள் இலம்பகம்
☔ சீவகன் நாட்டை கைப்பற்றியதை கூறுவது - மணமகள் இலம்பகம்
☔ சீவகன் ஆட்சி செய்ததை கூறுவது - பூமகள் இலம்பகம்
☔ சீவகன் வீடுபேறு அடைவதை பற்றி கூறுவது - முக்தி இலம்பகம்
☔ சீவகன் மனைவிகள் மொத்தம் - 8
☔ சீவகன் யாழ் போட்டியில் வென்றதைக் கூறுவது -  காந்தருவத்தையார் இலம்பகம்
☔ திருத்தக்கதேவர் முதலில் பாடியது -  நரிவிருத்தம்
☔ திருத்தக்கதேவர் தமிழ் கவிஞருள் அரசர் - ஜி.யு.போப்
☔ திருத்தக்க தேவர் தமிழ் கவிஞருள் மன்னர் - வீரமாமுனிவர்
☔ சிந்தாமணியில் ஒர் அகப்பை முகந்து கொண்டேன் - கம்பர்
☔ இது ஒரு வடமொழி தழுவல் நூல்
☔ சீவகன் மணந்த 8 பெண்கள்
1. காந்தருவதத்தை
2. குணமாலை
3. பதுமை
4. கேமசரி
5. கனகமாலை
6. விமலை
7. சுரமஞ்சரி
8. இலக்கனை(மாமன் மகள்)

9. நாமகள்
10. காந்தருவதத்தையர்
11. மண்மகள்
12.பூமகள்
13. முத்தி

Wednesday, March 21, 2018

ஐந்திலக்கணம் பற்றிய தகவல்கள் :-

1. எழுத்து இலக்கணம்
2. சொல் இலக்கணம்
3. பொருள் இலக்கணம்
4. யாப்பு இலக்கணம்
5. அணி இலக்கணம்
1. எழுத்து இலக்கணம்:-
🐓 எழுத்துக்கள் இரண்டு வகை - 2
1. முதல் எழுத்து
2. சார்பெழுத்து
1. முதல் எழுத்து வகைகள் - 2 (1. உயர் எழுத்து, 2. மெய்யெழுத்து)
1. உயர் எழுத்துக்கள் - 12
🐓வகைகள் - 2
குறில் எழுத்துக்கள் - 5 (அ,இ,உ,எ,ஒ)
நெடில் எழுத்துக்கள் - 7 (ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ)
2. மெய்யெழுத்து - 18
🐓 வகைகள் - 3
🐓வல்லினம் - 6 (க,ச,ட,த,ப,ற)
🐓மெல்லினம் - 6 (ங,ஞ,ண,ந,ம,ன)
🐓இடையினம் - 6 (ய,ர,ல,வ,ழ,ள)
2. சார்பெழுத்து வகைகள் - 10
1. உயிர்மெய்
2. ஆய்தம்
3. உயிரளபெடை
4. ஒற்றளபெடை
5. குற்றியலுகரம்
6. குற்றியலிகரம்
7. ஐகாரக்குறுக்கம்
8. ஔகாரகுறுக்கம்
9. மகரக்குறுக்கம்
10. ஆய்தகுறுக்கம்
2.சொல் இலக்கணம்:-
🐿 ஓர் எழுத்து தனித்து நின்றோ, இரண்டு, மூன்று முதலிய எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தந்தால் அது - சொல்
🐿 சொல்லை குறிக்கும் வேறு சொற்கள் - மொழி, பதம், கிளவி
🐿 பதம் வகைகள் - 2 (1. பகாப்பதம், 2. பகுபதம்)
1. பகாபதம்:-
🐿 பகுதி, விகுதி என பிரிக்க இயலாத சொல் - பகாப்பதம்
🐿 பகாபதம் வகைகள் - 4
1. பெயர் பகாப்பதம்
2. வினைப் பகாப்பதம்
3. இடைப் பகாப்பதம்
4. உரிப் பகாப்பதம்
2. பகுபதம்:-
🐿 பகுதி, விகுதி என பிரிக்கப்படும் சொல் - பகுபதம்
🐿 பகுபதம் வகைகள் - 2 (1. பெயர்ப் பகுபதம், 2. வினைப் பகுபதம்)
🐿 பெயர்ப் பகுபதம் வகைகள் - 6
1. பொருள் பெயர்ப் பகுபதம்
2. இடப் பெயர்ப் பகுபதம்
3. காலப் பெயர்ப் பகுபதம்
4. சினைப் பெயர்ப் பகுபதம்
5. பண்புப் பெயர்ப் பகுபதம்
6. தொழிற் பெயர்ப் பகுபதம்
🐿 வினைப் பகுபதம் வகைகள் - 2 (1. தெரிநிலை வினைப் பகுபதம், 2. குறிப்பு வினைப் பகுபதம்)
🐿 பகுபதம் உறுப்புகள் - 6
1. பகுதி
2. விகுதி
3. இடைநிலை
4. சந்தி
5. சாரியை
6. விகாரம்
🐿 இடைநிலை வகைகள் - 2 (1. பெயர் இடைநிலை, 2. வினை இடைநிலை)
🐿 பெயர் பகுபதத்தில் வரும் இடைநிலை - பெயர் இடைநிலை
🐿 வினை இடைநிலை வகைகள் - 3
1. இறந்த கால இடைநிலை
2. நிகழ்கால இடைநிலை
3. எதிர்கால இடைநிலை
3.பொருள் இலக்கணம்:-
📚 பொருள் இலக்கணம் வகைகள் - 2
1. அகப்பொருள்
2. புறப்பொருள்
(1) அகப்பொருள்:-
📚 ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தம்முள் நுகரும் இன்பம் பற்றி கூறுவது - அகப்பொருள்
📚 அகப்பொருள் உள்ள திணைகள் - 5
📚 இதை 'அன்பின் ஐந்திணை' என்றும் கூறுவர்.
📚 இதில் கைக்கிளை, பெருந்திணை சேர்த்து ஏழு எனவும் கூறுவர்
📚 அகத்திணை கூறிய பொருட்கள் - 3
1. முதற் பொருள்
2. கருப்பொருள்
3. உரிப்பொருள்
1. முதற்பொருள்:
📚 முதற்பொருளில் அடங்கி உள்ளவை - நிலமும், பொழுதும்
📚 நிலம் வகைகள் - 5 (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை)
📚 பொழுது வகைகள் - 2 (சிறுபொழுது, பெரும்பொழுது)
2. கருப்பொருள்:-
📚 ஐவை நிலத்திற்கு கூறிய உறுப்பினர்கள் - 14 (தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், உணவு, பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், பண், யாழ், பறை, தொழில்)
3. உரிப்பொருள்:-
📚 குறிஞ்சி - காண்டல் (அல்லது) புணர்தல் நிமித்தமும்
📚 முல்லை - இருத்தலும் இருத்தல் நிமத்தமும்
📚 முருதம் - ஊடலும் ஊடல் நிமுழித்தமும்
📚 நெய்தல் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
📚 பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
(2) புறப்பொருள்:-
📚 புறப்பொருள் திணைகள் - 12
1. வெட்சி - பகைவர் பசுக்கூட்டங்களை கவர்தல்.
2. கரந்தை - பகைவர் கவர்ந்து சென்ற பசுக் கூட்டங்களை மீட்டல்
3. வஞ்சி - பகைவன் நாட்டின் மீது படையெடுத்து செல்லல்.
4. காஞ்சி - பகையெடுத்து வந்த பகைவரை நாட்டில் புகாதவண்ணம் எதிர்சென்று தடுத்தல்.
5. நொச்சி - பகைவர், கோட்டை மதிலை கைப்பற்றாவண்ணம் காத்தல்.
6. உழிஞ்சை - பகைவருடைய கோட்டை மதிலை வளைத்துப் போர் செய்தல்
7. தும்பை - இரு திறந்து வீரரும் போர்களத்தில் எதிரெதிரே நின்று போர் புரிதல்.
8. வாகை - பகைவரை வென்றவர் வெற்றயை கொண்டாடுவர்.
9. பாடாண் - ஆண்மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றை போற்றி பாடுவது.
10. பொதுவியல் - வெட்சி முதல் பாடண்வரை உள்ள புறத்திணைகளின் பொதுவானவற்றையும் அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது.
11. கைக்கிளை - ஒருதலை ஆண், பெண் ஆகிய இருவரில் எவரேனும் ஒருவரிடத்து மட்டும் தோன்றும் அன்பு. இது 2 வகை ( ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று)
12. பெருந்திணை - பொருந்தாக் காமம். இது ஒத்த தலைவனும் தலைவியும் அல்லாதாரிட்த்து உண்டாகும் அன்பு
4. யாப்பிலகணம்:-
📚 யாப்பின் உறுப்புகள் மொத்தம் - 6
1. எழுத்து
2. அசை
3. சீர்
4. தளை
5. அடி
6. தொடை
1. எழுத்து:-
📚 எழுத்து பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரிந்தது தான்
2. அசை:-
📚 எழுத்துக்கள் தனித்தோ இணைந்தோ சீருக்கு உறுப்பாகி நிற்பது - அசை
📚 அசைகள் வகைகள் - 2 (நேரிசை, நிரையசை)
3. சீர்:-
📚 அசைகள் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ, நான்கோ இயைந்து நிற்பது - சீர்
📚 சீர்கள் எண்ணிக்கை - 30
1. மாச்சீர் - 2
2. விளச்சீர் - 2
3. காய்ச்சீர் - 4
4. கனிச்சீர் - 4
5. பூச்சீர் - 8
6. நிழற்சீர் - 8
7. ஓரசைச்சீர் - 2
4. தளை:-
📚 சீர் ஒன்றோடொன்று இயைத்து கட்டுப்பட்டு நிற்பது - தளை
📚 தளை வகைகள் - 4
1. ஆசியத்தளை
2. வெண்டளை
3. கலித்தளை
4. வஞ்சித்தளை
5. அடி:-
📚 அடி வகைகள் - 5
1. குறளடி - இரண்டு சீர்கள்
2. சிந்தடி - மூன்று சீர்கள்
3. அளவடி - நான்கு சீர்கள்
4. நெடிலடி - ஐந்து சீர்கள்
5. கழிநெடிலடி - ஆறு சீர்கள்
6. தொடை:-
📚 தொடை வகைகள் - 5
1. மோனைத் தொடை
2. எதுகைத் தொடை
3. முரண் தொடை
4. இயைபு தொடை
5. அளபெடைத் தொடை
5. அணி இலக்கணம்:-
📚 அணி என்பதன் பொருள் - அழகு
📚 அணிகள் வகைகள் - 2
1. சொல்லணி
2. பொருளணி
📚 சொல்லணி வருபவை - சிலேடை, மடக்கு, யமகம், திரிபு
📚 பொருளணி வருபவை - உவமை, உருவகம்
அணிகள் பின்வருமாறு:-
📚 இல்பொருள் உவமையணி
📚 ஏகதேச உருவக அணி
📚 பிறிது மொழிதல் அணி
📚 வேற்றுமை அணி
📚 வஞ்சிப்புகழ்ச்சி அணி
📚 இரட்டுற மொழிதலணி
📚 சொற்பொருள் பின்வருநிலையணி
📚 தற்குறிப்பேற்ற அணி
📚 நிரல்நிறை அணி

Friday, February 16, 2018

*புலவர் பிறப்பிடங்கள் :-*

அற்புதமான தகவல்கள்
****************************
1) கம்பர் பிறந்த ஊர் – தேரழுந்தூர் (மயிலாடுதுறைக்கு அருகில்)
2) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊர் தேரூர்
3) மருதகாசி பிறந்த ஊர் – மேலக்குடிக்காடு
4) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த ஊர் செங்கப்படுத்தான்காடு
5) கண்ணதாசன் பிறந்த ஊர் சிறுகூடல்பட்டி
6) அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் – பூதூர்
7) குமரகுருபரர் பிறந்த ஊர் – திருவைகுண்டம்
8) மாணிக்கவாசகர் பிறந்த ஊர் திருவாதவூர்
9) கபிலர் பிறந்த ஊர் திருவாதவூர்
10) பாரதிதாசன் பிறந்த ஊர் புதுச்சேரி
11) நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் பிறந்த ஊர் மோகனூர்
12) வாணிதாசன் பிறந்த ஊர் வில்லியனூர்
13) சுரதா பிறந்த ஊர் பழையனூர்
14) சர்.சி.வி.ராமன் பிறந்த ஊர் திருவானைக்காவல்
15) முடியரசன் பிறந்த ஊர் பெரியகுளம் (தேனி மாவட்டம்)
16) பாரதியார் பிறந்த ஊர் எட்டயபுரம்
17) காளமேகப் புலவர் பிறந்த ஊர் நந்தி கிராமம் (அ) எண்ணாயிரம்
18) திரு.வி.க . பிறந்த ஊர் தண்டலம் (துள்ளம்)
19) கியூரி எங்கு பிறந்தார் போலாந்து
20) முத்துராமலிங்க தேவர் பிறந்த ஊர் பசும்பொன்
21) இராமசாமி பிறந்த ஊர் ஈரோடு
22) இராமலிங்க அடிகளார் பிறந்த மாவட்டம் எது கடலூர்
23) இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் மருதூர்
24) எம்.ஜி.ஆர் பிறந்த ஊர் கண்டி (இலங்கை)
25) ந.பிச்சமூர்த்தி பிறந்த ஊர் கும்பகோணம் (தஞ்சை மாவட்டம்)
26) கலைவானர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த ஊர் ஒழுகநேரி
27) நல்லாதணார் பிறந்த ஊர் திருத்து
28) காமராசர் பிறந்த ஊர் விருதுநகர்
29) காந்தி பிறந்த மண் போர்பந்தர்
30) கணிதமேதை இராமானுஜன் பிறந்த ஊர் ஈரோடு
31) வைணவ ஆச்சாரியர் இராமானுஜர் பிறந்த ஊர் திருப்பெரும்புதூர்
32) குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் திருவஞ்சைக்களம்
33) தேவநேய பாவணார் பிறந்த ஊர் சங்கரன்கோவில்
34) சிவப்பிரகாச சுவாமிகள் பிறந்த ஊர் தாழைநகர்
35) பூதத்தாழ்வார் பிறந்த ஊர் (மாமல்லபுரம்)காஞ்சிபுரம்
36) சுந்தரர் பிறந்த ஊர் திருமுனைப்பாடி
37) ஆதிசங்கரர் பிறந்த ஊர் காலடி (கேரளா)
38) குருநானக் பிறந்த ஊர் தாள்வண்டி
39) ராமானந்தர் பிறந்த ஊர் அலகாபாத்
40) தமிழ் தாத்தா உ.வே.சா பிறந்த ஊர் உத்தமதானபுரம்
41) திருவள்ளுவர் பிறந்த ஊர் மயிலாப்பூர்
42) தாராபாரதி பிறந்த ஊர் குவளை
43) அழகிய சொக்கநாத புலவர் பிறந்த ஊர் தச்சனூர்
44) மீனாட்சி சந்தரனார் பிறந்த ஊர் எண்ணெய் கிராமம்
45) தாயுமானவர் பிறந்த ஊர் திருமறைக்காடு (எ) வேதாரண்யம்
46) பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் திருமறைக்காடு (எ) வேதாரண்யம்
47) பூதஞ்சேந்தனார் பிறந்த ஊர் மதுரை
48) க.சச்சிதானந்தன் பிறந்த ஊர் பருத்தித்துறை
49) புகழேந்தி புலவர் பிறந்த ஊர் பொன் விளைந்த களத்தூர் (பெருங்களத்தூர்)
50) அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் இரட்டணை
51) அஞ்சலையம்மாள் பிறந்த ஊர் முதுநகர் (கடலூர்)
52) வீரமாமுனிவர் பிறந்த ஊர் காஸ்திக்கிளியோன் (இத்தாலி)
53) செயங்கொண்டார் பிறந்த ஊர் தீபங்குடி
54) பாஸ்கரதாஸ் பிறந்த ஊர் மதுரை
55) எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை பிறந்த ஊர் கரையிருப்பு
56) பெருஞ்சித்திரனார் பிறந்த ஊர் சமுத்திரம்
57) மீரா பிறந்த ஊர் சிவகங்கை
58) சேக்கிழார் பிறந்த ஊர் குன்றத்தூர்
59) திருநாவுகரசர் பிறந்த ஊர் திருவாமூர்
60) நீ.கந்தசாமி புலவர் பிறந்த ஊர் பள்ளியகரம்
61) சிற்பி பிறந்த ஊர் ஆத்துப் பொள்ளாச்சி
62) நா.காமராசன் பிறந்த ஊர் மீனாட்சிபுரம் (தேனி)
63) சாலை இளந்திரையன் பிறந்த ஊர் சாலை நயினார் பள்ளிவாசல்(நெல்லை)
64) சிவாஜி பிறந்த ஊர் சிவநேர்
65) முத்துசுவாமி தீட்சிதர் பிறந்த ஊர் திருவாரூர்
66) சியாமா சாஸ்திரிகள் பிறந்த தஞ்சாவூர்
67) ஆறுமுக நாவலர் பிறந்த ஊர் யாழ்ப்பாணம் நல்லூர்
68) நம்மாழ்வார் பிறந்த ஊர் ஆழ்வார் திருநகரி
69) வள்ளியம்மை பிறந்த ஊர் ஜோகன்ஸ்பெர்க்
70) உடுமலை நாராயணக்கவி பிறந்த ஊர் பூவிளைவாடி (பூளவாடி) என்னும் பூளைவாடி
71) ஜி.யூ.போப் பிறந்த ஊர் எட்வர்டு தீவு (பிரான்ஸ்)
72) திருப்பூர் குமரன் பிறந்த ஊர் சென்னிமலை
73) அண்ணாமலையார் பிறந்த ஊர் சென்னிகுளம்
74) டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த ஊர் புதுக்கோட்டை
75) ஆனந்தரங்கர் பிறந்த ஊர் பெரம்பூர்
76) நம்பியாண்டர் நம்பி பிறந்த ஊர் திருநாரையூர்
77) தஞ்சை வேதநாயக சாஸ்திரி பிறந்த ஊர் திருநெல்வேலி (தஞ்சையில் படித்தார்)
78) மாயூரம் வேதநாயகம் பிள்ளை குளத்தூர் (திருச்சி)
79) மகாவீரர் பிறந்த ஊர் குன்டகிராமம்
80) புத்தர் பிறந்த ஊர் கபிலவஸ்து (லும்பினி)
81) அம்பேத்கர் பிறந்த ஊர் அம்பவாடே
82) அன்னை தெரசா பிறந்த நாடு அல்பேனியா
83) கவிக்கோ அப்துல் ரகுமான் பிறந்த ஊர் மதுரை
84) திரிகூடராசப்ப கவிராயர் பிறந்த ஊர் மேலகரம் (திருநெல்வேலி)
85) பொய் சொல்லா மாணிக்கம் பிறந்த ஊர் வயிரவன்கோவில்
86) தீரர் சத்தியமூர்த்தி பிறந்த ஊர் திருமயம்
87) சுப்பிரமணிய சிவா பிறந்த ஊர் வத்தலகுண்டு
88) பரிமேலழகர் பிறந்த ஊர் காஞ்சிபுரம்
89) அடியார்க்கு நல்லார் பிறந்த ஊர் நிர (கொங்கு நாடு)
90) அருணகிரிநாதர் பிறந்த ஊர் திருவண்ணாமலை
91) அருணாசல கவிராயர் பிறந்த ஊர்
92) இராமசந்திர கவிராயர் பிறந்த ஊர்
93) பட்டிணத்தார் பிறந்த ஊர்
94) வில்லிபுத்தூரார் பிறந்த ஊர் சனியூர் (திருமுனைப்பாடி நாடு)
95) ஒளவையார் பிறந்த ஊர் உறையூர் (சோழநாடு பாணர்குடி)
96) ஒட்டக்கூத்தர் பிறந்த ஊர் மலரி
97) திருமழிசை ஆழ்வார் பிறந்த ஊர் திருமழிசை
98) பேயாழ்வார் பிறந்த ஊர் மயிலாப்பூர்
99) பொய்கையாழ்வார் பிறந்த ஊர்
100) திருஞான சம்பந்தர் பிறந்த ஊர் சீர்காழி🌹🌹