பாரதியார் பற்றிய சில தகவல்கள்:-
📝 இவர் பிறந்த ஆண்டு - 11 டிசம்பர் 1882
📝 இவர் பிறந்த ஊர் - எட்டையபுரம் (திருநெல்வேலி மா)
📝 இவர் 1904 சுதேசமித்திரன் பத்திரிக்கையின் துணை ஆசிரியராக பணி ஆற்றினார்.
📝 வந்தே மாதரம் பாடலை தமிழில் மொழி பெயர்த்தார்.
📝 வந்தே மாதரம் பாடலை 'சக்கரவர்த்தினி' மாத இதழில் வெளியிட்டார்.
📝 வ.உ.சி. வங்கிய இரண்டு கப்பல்களை பாரத தேவி பெற்றெடுத்த இரண்டு தவப் புதல்வர்கள் என வர்ணித்தார்.
📝 1907 சூரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார்.
📝 தழிழ்நாட்டுத் தீவிரவாதிகள் பிரதிநிதியாக திகழ்ந்தார்.
📝 1907 இந்தியா என்ற தமிழ் வார பத்திக்கையின் ஆசிரியரானார்.
📝 பாலபாரதம் என்ற ஆங்கில பத்திரிகையை வெளியிட்டார்.
📝 1908 சென்னை மாபெரும் கூட்டத்தை நடத்தி, சுயராஜ்ஜிய நாளை கொண்டாடினார்.
📝 'எங்கள் காங்கிரஸ் யாத்திரை' என்ற நூலை வெளியிட்டார்.
📝 'புதிய கட்சியினரின் கோட்பாடுகள்' என்ற திலகரின் ஆங்கில சொற்பொழிவை தமிழில் மொழி பெயர்ந்தார்.
📝 வ.உ.சி. அழைப்பின் பேரில் நெல்லை கலெக்டரை வாஞ்சிநாதன் சந்தித்ததை 'தேசபக்தனுக்கு ஆங்கிலேயன் சொன்னது' , 'ஆங்கிலேயனுக்கு தேசபக்தன் சொன்னது' என்ற தலைப்பில் பாடல் பாடினார்.
📝 1909 ஆம் ஆண்டு இவரின் படைப்புகளுக்கு தடை விதித்தது.
📝 1918 முதல் உலகப் போரில் முடிவில் இவர் கடலூருக்கு வந்த சமயத்தில் கைது செய்யப்பட்டார்.
📝 1919 சென்னை வந்த காந்தியை சந்தித்து பேசினார்.
📝 11 செப்டம்பர் 1921 இயற்கை எய்தினார்.
No comments:
Post a Comment