Monday, April 2, 2018

*இந்திய மாநிலங்களின் பெயர்காரணம்*

1.ஆந்திர பிரதேசம் - தெற்கு பிராந்தியம்.
    சமஸ்கிருதத்தில் "ஆந்த்ரா" என்றால் தெற்கு என்று பொருள்.

2. அருணாச்சல பிரதேசம் - முதல்ஒளி மலைகள் பிராந்தியம்.
      சமஸ்கிருதத்தில் "அருணா" என்றால் "முதல்ஒளி" அல்லது "மூலஒளி" என்று பொருள். இந்தியாவல் முதல் சூர்ய உதயம் இங்கு நடைபெறுவதால் இப்பெயர் ஏற்பட்டது.

3. அஸ்ஸாம் - நிலையற்ற
      சமஸ்கிருதத்தில் "அஸமா" என்றால் "நிலையற்ற" என்று பொருள்.

4. பிகார் - புத்தமடாலயம்
      சமஸ்கிருதத்தில் "விகார்" என்றால் " புத்தர் கோவில்" என்று பொருள். பிராகிருதத்தில் பிகார்.

5. சத்திஸ்கர் - 36 கோட்டைகள்.
     ஹிந்தியில் சத்திஸ் என்றால் 36.

6. கோவா - பசு மந்தை
      சமஸ்கிருதத்தில் "கோ" என்றால் "பசு".

7. குஜராத் - குஜ்ஜார் இன மக்களின் நிலம்.
      7ம் நூற்றாண்டில் குஜ்ஜார் மக்கள் இப்பகுதியை ஆண்டதால் இப்பெயர் ஏற்பட்டது. குஜ்ஜார் அல்லது கூர்ஜர என்றும் அழைக்கப்பட்டது.

8. ஹரியானா - விஷ்ணுபகவான் வந்த இடம்.
      மகாபாரத போர் நடந்த குருேக்ஷத்திரம் உள்ள பகுதி. அங்கு கிருஷ்ணர் வந்ததால் இப்பெயர் ஏற்பட்டது.

9. ஹிமாச்சல் பிரதேசம் - பனிமலை பிராந்தியம்.

10. ஜம்மு & காஸ்மீர் -
      ராஜா ஜம்பு லோசன் ஆண்ட பகுதி ஜம்மு
      காஸ்யப ரிஷி வாழ்ந்த பகுதி என்பதால் காஸ்யப என்று அழைத்தனர். உருதுவில் காஸ்மிர் என்றனர்.

11. ஜார்கண்ட் - வனம் நிறைந்த மலைகள்.
     ஜார் - வனம்
     கண்ட் - மலைகள்

12. கருநாடகா - உயர்நில நாடு

13. கேரளா - சேர்க்கப்பட்ட நாடு.
      பரசுராமர் அம்பு எய்து கடலை வற்றச்செய்து உருவாக்கப்பட்டதால் இப்பெயர் ஏற்பட்டது.

14. மத்ய பிரதேசம் - மத்திய அல்லது நடுவண் பிராந்தியம்.

15. மகாராஷ்ட்ரா - சிறந்த(அ)பெரிய நாடு.

16. மணிப்பூர் - நகை(அ)ஆபரணங்களின் நிலம்.

17. மேகலாயா - மேகங்களின் நிலம்.

18. மிஸோரம் - உயர்நிலத்தில் வாழும் மக்களின் பகுதி.

19. நாகலாந்து - நாகர் இன மக்களின் நிலம்.

20. ஒடிசா(அ)ஒரிசா - ஓட்ர இன மக்களின் நாடு.

21. பஞ்சாப் - ஐந்து நதிகள்

22. ராஜஸ்தான் - ராஜபுத்திர இன மக்களின் இடம்.

23. சிக்கிம் - புதிய அரண்மனை.
      திபெத்திய மொழியில் "சு" என்றால் "புதிய" என்றும் "க்யிம்" என்றால் அரண்மனை.

24. தமிழ்நாடு - தமிழர்களின் நாடு.

25. தெலுங்கானா - தெலுங்கர்களின் இடம்.

26. திரிபுரா - திரிபுர சுந்தரி என்னும் கடவுளின் பெயரால் ஏற்பட்டது.
மற்றும்
மூன்று நாடுகளுடன் தன் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளதால்

27. உத்தர பிரதேசம் - வடக்கு பிராந்தியம்.

28. உத்திரகண்ட் - வடக்கு மலைகள்.

29. மேற்கு வங்கம் - வங்க இன மக்களின் இடம்.

No comments:

Post a Comment