Thursday, June 29, 2017

கவஞர்கள், கவிகள் - பெயர்கள்:-

🌴மகாகவி - பாரதியார்.

🌴தேசியக் கவி - பாரதியார்.

🌴விடுதலைக் கவி - பாரதியார்.

🌴புரட்சிக் கவி - பாரதிதாசன்.

🌴புதுமைக் கவி - பாரதிதாசன்.

🌴இயற்கைக் கவிஞர்  - பாரதிதாசன்.

🌴காந்திக் கவிஞர் - இராமலிங்கம் பிள்ளை.

🌴நாமக்கல் கவிஞர் - இராமலிங்கம் பிள்ளை.

🌴உவமைக் கவிஞர் - சுரதா.

🌴குழந்தைக் கவிஞர் - அழவள்ளியப்பா.

🌴பொதுவுடமைக் கவிஞர் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்.

🌴தத்துவக் கவி - திருமூலர்.

🌴சந்தக் கவி - அருணகிரிநாதர்.

🌴சன்மார்க கவி - இராமலிங்க அடிகளார் (வள்ளலார்).

🌴ஆசுக் கவி - காளமேகப் புலவர், வீரக் கவிராயர்.

🌴இயற்கை கவிதையின் தத்துவக் கவி - இரவீந்திரநாத் தாகூர்.


தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் - மரபுக்கவிதை - முடியரசன் :

1. முடியரசன் பிறந்த ஆண்டு - 7.10.1920

2. முடியரசன் பிறந்த ஊர் - பெரியகுளம்

3. முடியரசனின் இயற்பெயர் - துரைராஜ்

4. பறம்பு மலையில் நடந்த விழாவில் குன்றக்குடி அடிகளாரால் முடியரசனுக்கு வழங்கப்பட்ட பட்டம் - கவியரசு

5. முடியரசனின் எந்த நூல் தமிழக அரசின் பரிசு பெற்றது - பூங்கொடி (1966)

6. தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு பெற்ற முடியரசனின் நூல் எது ? - வீரகாவியம்

7. முடியரசன் எழுதிய நூல்கள் - முடியரசன் கவிதைகள், காவியப்பாவை, பூங்கொடி, ஊன்றுகோல், வீரகாவியம்

8. முடியரசன் தூத்துக்குடியில் உள்ள -------- பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். - மீ.சு. உயர்நிலைப்பள்ளி

9. முடியரசனின் பெற்றோர் - சுப்பராயலு - சீதாலக்ஷ்மி

10. முடியரசன் இறந்த ஆண்டு - 3.12.1998

11. பாரதிதாசன் பரம்பரைத் தலைமுறைக் கவிஞருள் மூத்தவர் - முடியரசன்

12. தன்னுடைய மறைவின் பொழுது எச்சடங்குகளும் வேண்டாம் என்று கூறியவர் - முடியரசன்

13. முடியரசன் ---------- கல்லூரியில் படித்தார் - மேலைச்சிவபுரி செந்தமிழ்க் கல்லூரி

14. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் - முடியரசன்

15. பேறிஞர் அண்ணா அவர்கள் முடியரசனுக்கு ---------- என்ற பட்டத்தை 1957 ஆம் ஆண்டு வழங்கி மகிழ்ச்சியுற்றார் - திராவிட நாட்டின் வானம்பாடி

No comments:

Post a Comment