Friday, June 30, 2017

தீபகற்ப இந்திய ஆறுகள்

இந்திய ஆறுகள்
தீபகற்ப இந்திய ஆறுகள்

இவை பெரும்பாலும் மேற்கு மலைத்தொடரில் உற்பத்தியாகிக்  கிழக்கு நோக்கிப் பாய்ந்து வங்கக் கடலை அடைகின்றன.

மேற்கு மலைத்தொடரில் மழை பெய்யும்பொழுது  மட்டுமே இவற்றில் நீர் வளம் இருக்கும். இவை புறதீபகற்ப நதிகளைப் போல ஜீவா நதிகள் அல்ல.

கோதாவரி:

1450 கி.மீ  நீளம்.

மகாராஸ்டிரா மாநிலம் நாசிக் அருகே திரியம்பகத்தில் தோன்றி ஆந்திராவில் பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது.

இந்திராவதி, வைன்கங்கா, மஞ்சித நதி முக்கிய துணை நதிகள்.

கிருஷ்ணா:

1290 கி.மீ நீளம்.

மகாராஸ்டிரா மாநிலம்  மேற்குத்தொடர்ச்சி மலையின் மகாபலேஸ்வரில் தோன்றி ஆந்திரா வழி பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது.

துணையாறு  :துங்கபத்திரா

நர்மதை:

1290 கி.மீ நீளம்.

மைகான் மலைத்தொடரில் அமர்கண்ட் சிகரத்தில் தோன்றி விந்திய சாத்பூரா மலைகளுக்கு இடையே ஓடி அரபிக் கடலில் கலக்கிறது.

மகாநதி:

890 கி.மீ நீளம்.

அமர்காண்டக் சிகரத்தின் தெற்கில் சிகாவயில் தோன்றி மத்தியப்பிரதேசம், ஒரிசா வழி பாய்ந்து கட்டாக் அருகே கடலில் கலக்கிறது.

காவிரி:

760 கி.மீ நீளம்.

குடகில் பிறந்து கர்நாடகம், தமிழ்நாடு வழிப்பாய்ந்து காவிரிப்பூம்பட்டினம் அருகே கடலில் கலக்கிறது.

துணையாறுகள்: பவானி, நொய்யல், அமராவதி, கபினி

தபதி:

720 கி.மீ நீளம்.

மத்தியப்பிரதேசம் பேதுல் பகுதியில் தோன்றி அரபிக்கடலில் கலக்கிறது.

தாமோதர்:

530 கி.மீ நீளம்.

சோட்டாநாக்பூர் டாரு சிகரத்தில் தோன்றி ஹூக்ளியில் கலக்கிறது.

தீபகற்ப இந்தியாவில் மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கும் நதிகள் நர்மதை, தபதி ஆகும்.

மேற்கு மலைத்தொடரில்  மேற்குச்சரிவில் இறங்கி அரபிக்கடலில் கலக்கும் சிற்றாறுகள் பல உள்ளன. மாண்டவி, ஜாவேரி நதிகள் கோவா பகுதியில் அரபிக்கடலில் கலக்கின்றன.

புற தீபகற்ப இந்திய ஆறுகள்:

இமயமலையில் தோன்றி பாய்கின்றன. இவை வற்றாத ஜீவ நதிகள்.

சிந்து:

3000 கி.மீ நீளம்.

பெரும்பாலும் பாகிஸ்தானில் பாய்கிறது.

திபெத்தில் தோன்றி அரபிக்கடலில் கலக்கிறது.

இதன்  துணையாறு சட்லெஜ் மட்டுமே  இந்தியாவில் பாய்கிறது.

இதன் குறுக்கே பக்ரா-நங்கல் அணை கட்டப்பட்டுள்ளது.

சட்லெஜ் 1440கி.மீ நீளம். கைலாச மலையில் தொடங்குகிறது.

பிரம்மபுத்திரா:

2900 கி.மீ நீளம்.

கைலாச மலை, மானசரோவரில் தோன்றி, தெற்குத்திபெத்தில் 1250 கி.மீ ஓடி இமய மலையின் வடக்கிழக்கு பகுதியான அஸ்ஸாம் மலைக் குன்றுகள் வழியாக பாய்ந்து பங்களாதேஷில் புகுந்து கங்கையின் கிளை  நதிகளில்   இணைந்து வங்கக்கடலில் கலக்கிறது.

இதில் வெள்ளப்பெருக்கு அதிகம் ஏற்பட்டு அஸ்ஸாம், பீஹார் பகுதிகள் பாதிப்படைகின்றன.

கங்கை:

2510 கி.மீ நீளம்.

இமயமலையில் கங்கோத்ரி அருகே உருவாகி கோமுக்கியில் உற்பத்தியாகி ஹரித்துவாரில் தரையிறங்கி உத்திரப்பிரதேசம், பீஹார், வங்காள மாநிலம் வழியே பாய்ந்து வங்காள விரிகுடாக் கடலை அடைகிறது.

கிழக்கு நோக்கி பாய்ந்து தெற்கு நோக்கித் திரும்பி இரு கிளையாகி ஒன்று வங்க தேசத்திற்கும் மற்றது ஹூக்ளி எனும் பெயரில் மேற்கு வங்கத்திலும் கடலில் சேர்கிறது.

முக்கிய துணையாறுகள்: யமுனை, சோன், கோமதி, கர்கா, சாரதா, கண்டக், கோசி

கங்கைக்கு இணையாக 600 கி.மீ ஓடும் யமுனை  அலகாபாத்தில் அதனுடன் கலக்கிறது.     என்றும் அன்புடன் மகாலட்சுமி டிஎன்பிஎஸ்சி எ எஸ் ஒ

No comments:

Post a Comment