Monday, June 26, 2017

Tnpsc Gr IIA

நாம் இன்னும் ஒரு 45 நாளில் குரூப் 2ஏ தேர்வை எழுத உள்ளோம்.இந்த 45 நாட்கள் நாம் சரியாக பயன்படுத்தினால் நமது இலக்கை அடைந்து விடலாம்
முதலில் 100 மதிப்பெண் கொண்ட தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும்
1.குறிப்பாக தமிழில் இலக்கியம் மற்றும் நூல் நூலாசிரியர் பகுதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
இந்த இரண்டு பகுதியில் இருந்து 55 - 60 கேள்விகள் இடம் பெறும்
2.இலக்கணம் பகுதியில் நாம் எதிர் கொள்ள இருப்பது 40-45 கேள்விகள் மட்டுமே இந்த பகுதியில் அனைவராலும் 35 - 40 சரியாக பதில் அளிப்பார்கள் ஆனால் இவர்களால் இலக்கியம் மற்றும் நூலாசிரியர் பகுதியில் மதிப்பெண் குறையும் இதனை நாம் சரியாக பயன்படுத்தி விட்டால் நம்மால் நம்மால் 98 - 100 மதிப்பெண் எளிதாக பெற முடியும்
பொது அறிவு
நான் முதலில் கூறியதை போன்று
1.இந்திய அரசியலமைப்பு
2.வரலாறு
3.பொருளாதாரம்
இந்த 3 பகுதியில் 30 -35 கேள்விகள் இடம் பெறும் நாம் இதனை நன்றாக மதிப்பெண் பெற்றால் போதும்
4.புவியியல் - 7 - 8
இதில் நாம் சூரிய குடும்பம்,புவி அமைப்பு,மக்கள் தொகை 29 மாநில சிறப்புகள் படித்தால் 5 கேள்விகள் எளிதாக மதிப்பெண் பெறலாம்
பொது அறிவியல்
உயிரியல் - 8 - 9 கேள்வி
இயற்பியல் - 4- 5
வேதியியல் - 3-4
அறிவியல் தொழில் நுட்பம் - 4 - 5 கேள்விகள்
தகவல் தொடர்பு - 2 கேள்விகள்
நடப்பு நிகழ்வுகள் பொறுத்தவரை 15 - 18 கேள்விகள் இடம் பெறும் நடப்பு நிகழ்வு பொறுத்தவரை நாம் அனைத்தையும் படிப்பதை தவிர்த்து பாடத்திட்டத்தில் குறிப்பிட்டதை மட்டும் படித்தால் போதும்
இதில் நீங்கள் 75 மதிப்பெண்களுக்கு 65-70 மதிப்பெண் பெற வேண்டும்
கணிதம் 25 கேள்விகளில் குறைந்த பட்சம் 20 கேள்விகள். பதில் அளித்தால் கூட உங்கள் மதிப்பெண் அதிகரிக்கும்
உதாரணமாக
தமிழ் - 95
பொது அறிவு - 65
கணிதம் - 20
மொத்த மதிப்பெண் 180
இதை எடுத்து விட்டால் நாம் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறோம்
நம்மாலும் முடியும் என்று படித்தால் முடியும்
முடியாது. என படித்தால் முடியாது
வாழ்த்துக்கள்....

No comments:

Post a Comment