Showing posts with label General. Show all posts
Showing posts with label General. Show all posts

Monday, September 14, 2026

AI-சாட்போட்டிடம் ஒருபோதும் பகிரக்கூடாத 5 முக்கியமான விஷயங்கள்! / Don't Share the 5 points with AI - CHATGPT

AI-சாட்போட்டிடம்  ஒருபோதும் பகிரக்கூடாத 5 முக்கியமான விஷயங்கள்!


ChatGPT, Claude, Gemini போன்ற AI கருவிகள் நம் வேலைகளை எளிதாக்கும் அற்புதமான உதவியாளர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பலரும் மறந்துவிடும் ஒரு கசப்பான உண்மை: AI என்பது உங்கள் பெர்சனல் டைரி அல்ல; அது உலகளாவிய சர்வர்களில் இயங்கும் ஒரு மெஷின்!

நீங்கள் உள்ளிடும் பிராம்ப்ட்கள் பல நிறுவனங்களின் சர்வர்களில் சேமிக்கப்பட்டு, எதிர்கால AI மாடல்களுக்குப் பயிற்சியளிக்க (Model Training) பயன்படுத்தப்படலாம் அல்லது தரவு கசிவு (Data Breach) ஏற்படும்போது பொதுவெளியில் அம்பலமாகலாம்.

AI-யிடம் ஒருபோதும் பகிரக்கூடாத 5 முக்கியமான விஷயங்கள் & மாற்று வழிகள்: 👇

🟢 1. 𝐏𝐀𝐒𝐒𝐖𝐎𝐑𝐃𝐒, 𝐀𝐏𝐈 𝐊𝐄𝐘𝐒 & 𝐋𝐎𝐆𝐈𝐍 𝐂𝐑𝐄𝐃𝐄𝐍𝐓𝐈𝐀𝐋𝐒 (கடவுச்சொற்கள் & லாகின் விவரங்கள்)
➜ The Danger: "இந்த கோடில் என் API Key சரியாக உள்ளதா?" என்றோ, "என் பாஸ்வேர்டை மாற்றி ஸ்ட்ராங் ஆக்கிக் கொடு" என்றோ அசல் கீகளை உள்ளிடுவது.

➜ The Fix:

➜ கோட் எழுதும்போது எப்போதும் போலி மதிப்புகளைப் பயன்படுத்துங்கள் (எ.கா: API_KEY="YOUR_KEY_HERE").

➜ கடவுச்சொற்களை உருவாக்க Bitwarden போன்ற பாஸ்வேர்ட் மேனேஜர்களின் இன்-பில்ட் ஜெனரேட்டர்களை மட்டுமே பயன்படுத்துங்கள். 🔑🚫

🔵 2. 𝐁𝐀𝐍𝐊𝐈𝐍𝐆 & 𝐅𝐈𝐍𝐀𝐍𝐂𝐈𝐀𝐋 𝐒𝐓𝐀𝐓𝐄𝐌𝐄𝐍𝐓𝐒 (வங்கி & பணப் பரிவர்த்தனை தகவல்கள்)
➜ The Danger: "என் வங்கி ஸ்டேட்மெண்ட்டைப் படித்து பட்ஜெட் போடு" என்று கிரெடிட் கார்டு எண்கள், CVV, அல்லது கணக்கு எண்களை அப்லோட் செய்வது.

➜ The Fix:

➜ எக்செல் அல்லது CSV ஃபைல்களை அப்லோட் செய்வதற்கு முன், உங்கள் பெயர், கணக்கு எண், வங்கி கிளை விவரங்களை நீக்கிவிட்டு (Anonymize), வெறும் எண்களை மட்டும் அப்லோட் செய்யுங்கள். 💳📊

🟡 3. 𝐆𝐎𝐕𝐄𝐑𝐍𝐌𝐄𝐍𝐓 𝐈𝐃𝐬 & 𝐏𝐄𝐑𝐒𝐎𝐍𝐀𝐋 𝐈𝐃𝐄𝐍𝐓𝐈𝐅𝐈𝐄𝐑𝐒 (ஆதார், பான் & பாஸ்போர்ட்)
➜ The Danger: ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட் எண்கள், அல்லது வீட்டு முகவரியை இட்டு ரெஸ்யூம் அல்லது கவர் லெட்டர் எழுதச் சொல்வது.

➜ The Fix:

➜ ரெஸ்யூம் எழுதும்போது உங்கள் அசல் போன் நம்பர், முகவரிக்கு பதிலாக [Phone Number], [City, State] என்று பிளேஸ்ஹோல்டர்களைப் பயன்படுத்துங்கள்; அவுட்புட் வந்த பிறகு நீங்களே மேனுவலாக டைப் செய்யுங்கள். 🪪📝

🟣 4. 𝐂𝐎𝐍𝐅𝐈𝐃𝐄𝐍𝐓𝐈𝐀𝐋 𝐂𝐎𝐌𝐏𝐀𝐍𝐘 / 𝐂𝐋𝐈𝐄𝐍𝐓 𝐃𝐀𝐓𝐀 (அலுவலக & வாடிக்கையாளர் ரகசியங்கள்)
➜ The Danger: நிறுவனத்தின் வெளியிடப்படாத தயாரிப்பு உத்திகள், வாடிக்கையாளர்களின் பெயர்கள், அல்லது காப்புரிமை பெறாத வணிக ஐடியாக்களை முழுமையாக AI-ல் கொட்டுவது (சாம்சங் நிறுவன ஊழியர்கள் செய்த பெரும் தவறு இது!).

➜ The Fix:

➜ நிறுவனத்தின் பெயரை மாற்றிப் பொதுவான பெயராகவும் (எ.கா: "Company X"), க்ளையன்ட் விபரங்களை நீக்கியும் மட்டுமே வியூகங்களைக் கேளுங்கள். 🏢🤫

🔴 5. 𝐃𝐄𝐄𝐏 𝐏𝐄𝐑𝐒𝐎𝐍𝐀𝐋 / 𝐌𝐄𝐃𝐈𝐂𝐀𝐋 𝐑𝐄𝐂𝐎𝐑𝐃𝐒 (மருத்துவ & அந்தரங்கப் பிரச்சனைகள்)
➜ The Danger: உங்கள் அசல் பெயர் மற்றும் விபரங்களுடன் கூடிய மருத்துவ ரிப்போர்ட்டுகள் அல்லது மனரீதியான ரகசியங்களை உள்ளிடுவது.

➜ The Fix:

➜ அறிகுறி மற்றும் பொதுவான சந்தேகங்களை மட்டும் கேளுங்கள்; உங்கள் அடையாளத்தை AI-க்குக் காட்டாதீர்கள். 🩺🧬

💡 The Golden Privacy Rule:
➜ "நீங்கள் ஒரு தகவலை ஒரு வழிப்போக்கரிடம் அல்லது தெருவோர விளம்பரப் பலகையில் தைரியமாக எழுத மாட்டீர்கள் என்றால்... அதை ஒருபோதும் எந்த AI சாட்பாக்ஸிலும் டைப் செய்யாதீர்கள்!" 🌟👑

📌 தங்கள் அந்தரங்க டேட்டாவைத் தெரியாமல் AI-யிடம் பகிர்ந்துகொண்டிருக்கும் உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களுக்கு உடனே Save & Share செய்யுங்கள்!

Friday, September 19, 2025

மனிதன் பூஜியத்தில் பிறந்து, பூஜியத்தில் மரணிக்கின்றான்

மனிதன் பூஜியத்தில் பிறந்து, பூஜியத்தில் மரணிக்கின்றான்





_*மனிதன் பூஜியத்தில் பிறந்து, பூஜியத்தில் மரணிக்கின்றான். பூஜியத்திற்கு முன்னாடி நம்பர் இருந்தால் கடவுள் தந்த பரிசு, பூஜியத்திற்கு பின்னாடி நம்பர் இருந்தால் அது கடவுள் கொடுக்கும் சோதனை அதற்கு மதிப்பு கிடையாது.*_

_நம் வாழ்க்கையில் கண்கள் காட்டிக் கொடுத்த உண்மைகளை விட, நம் காதுகள் கேட்ட பொய்களே அதிகம்._

_*மனமே பதற்றப்படாதே மெல்ல, மெல்லத் தான் எல்லாம் நடக்கும், பொறுமை அனைத்திற்கும் பதில் தரும் அதற்கு கால தாமதமாகலாம் ஆனால் ஒரு போதும் தோற்றுப்போகாது.*_ 

_எனவே இருப்பதை வைத்து திருப்தி அடைவது இல்லாததை இனி கடவுள்_ _கொடுப்பாராக என_ _நம்பிக்கையோடு கடந்து சென்று_
_வாழ்க்கையை_ _சுகமாக்கி_ _கொள்ளுங்கள்._

_*A rare Skill Can help you pay more bills than usual*_

Wednesday, August 20, 2025

50 Government Services by Whatsapp / *வாட்ஸ் அப் வழியாக அரசு சேவைகள்*

*❇️செய்தி கதம்பம்*❇️
*வாட்ஸ் அப் வழியாக அரசு சேவைகள்* 





முதல் கட்டமாக 50 அரசு சேவைகளை வழங்க தகவல் தொழில்நுட்ப துறை திட்டம்

இதற்காக மெட்டா  நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

50 சேவைகளின் விவரம்
⬇️⬇️⬇️






முதல் கட்டமாக 50 சேவைகள் 


Wednesday, November 15, 2023

கந்த சஷ்டி கவசம் / Kantha Sasti Kavasam

கந்த சஷ்டி கவசம் 
நம்மை காக்கும் தெய்வமான முருக பெருமானை நோக்கி பால தேவராயன சுவாமிகள் பாடியது தான் “ கந்த சஷ்டி கவசம் ”.





இந்த கந்த சஷ்டி கவசம் பாடினால் மனதில் இருக்கும் பயம் அகலும், எதிரிகள் விலகுவர், வெற்றியை தேடித் தரும். இந்த பாடலை தினமும் பாடலாம். சஷ்டி விரதம் தினங்களில் பாடுவது மேலும் விசேஷமானது. சூலமங்கலம் சகோதரிகளான ராஜலட்சுமி, ஜெயலட்சுமி ஆகியோர் இந்த பாடலைப் பாடியுள்ளனர். கந்த சஷ்டி கவசம் என்றாலே அவர்களின் குரலும் சேர்ந்தே நம் மனதில் வந்து போகும்...

கந்த சஷ்டி கவசம்

காப்பு

துதிப்போர்க்கு வல்வினை போம்; துன்பம்போம்; நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்தோங்கும்
நிஷ்டையுங் கைகூடும், நிமலரருள் கந்தர்
சஷ்டி கவசம் தனை.

அமர ரிடர்தீர அமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி.

கந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்

சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட

மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வரவர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக

இந்திரன் முதலா எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக!
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக!
சரவண பவனார் சடுதியில் வருக 

ரஹண பவச ர ர ர ர ர ர ர
ரிஹண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி
விநபவ சரஹண வீரா நமோநம
நிபவ சரஹண நிறநிற நிறென
வசர வணப வருக வருக
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்

பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக

ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும்
உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்
கிலியுஞ் சௌவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும்
சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
குண்டலி யாம்சிவ குகன் தினம் வருக!

ஆறு முகமும் அணிமுடி ஆறும்
நீறிடு நெற்றியில் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும்
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்

ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்

முப்புரி நூலும் முத்தணி மார்பும்
செப்பழ குடைய திருவயி றுந்தியும்
துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
நவரத்தினம் பதித்த நற்சீ ராவும்
இருதொடை யழகும் இணைமுழந் தாளும்
திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண
ரரரர ரரரர ரரரர ரரர
ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேள் முந்து

என்றனை யாளும் ஏரகச் செல்வ
மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும்
லாலா லாலா லாலா வேசமும்

லீலா லீலா லீலா வினோ தனென்று
உன் திருவடியை உறுதியென் றெண்ணும்
எந்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க

அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விழி செவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகளி ரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க

கன்னமி ரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க
மார்பை ரத்ன வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க
வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க
நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வடிவேல் காக்க
பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க
கைகளி ரண்டும் கருணைவேல் காக்க
முன்கையி ரண்டும் முரண்வேல் காக்க
பின்கையி ரண்டும் பின்னவள் இருக்க
நாவில் சரஸ்வதி நற்றுணை யாக
நாபிக் கமலம் நல்வேல் காக்க

முப்பால் நாடியை முனைவேல் காக்க
எப்பொழு தும்எனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க
வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க
தாக்க தாக்க தடையறக் தாக்க

பார்க்க பார்க்க பாவம் பொடிபட
பில்லி சூனியம் பெரும்பகை அகல
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
அல்லற் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட
இரிசு காட்டேரி இத்துன்ப சேனையும்
எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும்

கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டாளர் களும்
என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

ஆனை யடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
நகமும் மயிரும் நீள்முடி மண்டையும்
பாவைக ளுடனே பலகல சத்துடன்

மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
ஒட்டியச் செருக்கும் ஒட்டிய பாவையும்
காசும் பணமும் காவுடன் சோறும்
ஓதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

வாய்விட் டலறி மதிகெட் டோட
படியினில் முட்ட பாசக் கயிற்றால்
கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு
கட்டி உருட்டு கைகால் முறிய
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதில் செதிலாக
சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு

குத்து குத்து கூர்வடி வேலால்
பற்று பற்று பகலவன் தணலெரி
தணலெரி தணலெரி தணலது வாக
விடு விடு வேலை வெகுண்டது வோடப்
புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோட
தேளும் பாம்பும் செய்யான் பூரான்
கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம்

ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க
ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம்
சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
பற்குத் தரணை பருஅரை யாப்பும்

எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்

நில்லா தோட நீஎனக் கருள்வாய்
ஈரேழு உலகமும் எனக் குறவாக
ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும்
உன்னைத் துதிக்க உன் திரு நாமம்
சரவண பவனே சைலொளி பவனே
திரிபுர பவனே திகழொளி பவனே

பரிபுர பவனே பவமொளி பவனே
அரிதிரு மருகா அமரா வதியைக்
காத்துத் தேவர்கள் கடும்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
இடும்பனை யழித்த இனியவேல் முருகா
தனிகா சலனே சங்கரன் புதல்வா
கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா

பழநிப் பதிவாழ் பாலகு மாரா
ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா
சமரா புரிவாழ் சண்முகத் தரசே

காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்நா இருக்க யானுனைப் பாட
எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப்
பாடினேன் ஆடினேன் பரவச மாக

ஆடினேன் நாடினென் ஆவினன் பூதியை
நேச முடன்யான் நெற்றியில் அணிய
பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னரு ளாக
அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும்
மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க
வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க

வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன்
வாழ்க வாழ்க வாரணத் துவசம்
வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்

பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக்
காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி

நேசமுடன் ஒரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டிக் கவசம் இதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஓதியே ஜெபித்து உகந்துநீ றணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் செயலாது அருளுவர்
மாற்றவ ரல்லாம் வந்து வணங்குவர்

நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும்

நவமதனெனவும் நல்லெழில் பெறுவர்
எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வார்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும்
விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்

சர்வ சத்ரு சங்கா ரத்தடி
அறிந்தென துள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
வீரலட் சுமிக்கு விருந்துண வாகச்
சூரபத் மாவைத் துணித்தகை யதனால்
இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த
குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி!
எனைத்தடுத் தாட்கொள என்றன துள்ளம்
மேவிய வடிவுறும் வேலவா போற்றி!

தேவர்கள் சேனா பதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்விய தேகா போற்றி!

இடும்பா யுதனே இடும்பா போற்றி!
கடம்பா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேலே போற்றி!
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
மயில்நட மிடுவோய் மலரடி சரணம்!

சரணம் சரணம் சரவண பவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!
சரணம் சரணம் சண்முகா சரணம்!

Thursday, March 9, 2023

முதல்வர் காப்பீடு திட்ட கார்டு / CM NHIS Card

*பிரதமர் காப்பீட்டு திட்ட கார்டு அப்ளை பண்ணி வாங்குங்க*.. 




அருகில் இருக்கும் GH க்கு முதலில் போங்க..

காப்பீடு திட்ட கார்டு கேட்டு வாங்கணும் . 
ஒரு அப்ளிகேஷன் தருவாங்க. வாங்கி நிரப்பி 
அதை தங்கள் பகுதி VAO கிட்ட போய் கொடுத்து பரிந்துரை எழுதி வாங்கிக்கோங்க...

 (குடும்பத்துல இருக்கிற எல்லோரோட ஆதார் மற்றும் ரேசன் கார்டு ஒரிஜினல் மற்றும் நகல் எடுத்து யாரேனும் ஒருவர் செல்லவும்.) 

பின் VAO எழுதி சீல் போட்டுத் தரும் அப்ளிகேஷன் ஐ எடுத்து கொண்டு கலெக்டர் அலுவலகம் செல்லவும்..

அங்கே முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அறை என்று ஒன்று இருக்கும் அதை கேட்டு அங்கு செல்லுங்கள்... 
ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் கார்டு அப்ளை செய்து இலவசமாக கொடுத்து விடுவார்கள்.
செலவு ஏதும் கிடையதுங்கோ...

இந்த பிரதமர் காப்பீட்டு திட்டத்தில் வருடத்திற்கு ரூபாய்.5 லட்சம் ( மாநில அரசு1 லட்சம் , மத்தியரசு 4லட்சம் )வரை இலவச சிகிச்சைகள் எடுத்து கொள்ளலாம்.

 அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் சில அரசு தேர்வு செய்துள்ள தனியார் மருத்துவ மனைகளிலும் ( காப்பீடு திட்டம் அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனை ).CT மற்றும் MRI போன்ற ஸ்கேன்ஸ் 6 மாத இடைவெளியில் இலவசமாக எடுக்கலாம்.

இதுல ENT சர்ஜ்சரிஸ் , 
கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், Including Aasthuma, Dengue, Hearing Aid, Free CT Scan, Free MRI Scan எல்லாமே கவர் ஆகும்..

எதிர்பாராமல் திடீரென ஏற்படும் தேவைப்படும் நேரத்தில் அங்கும் இங்கும் அலைவதைத் தவிர்த்து 
இப்பவே அலைந்து 
காப்பீடு அட்டை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

நன்றி : பகிர்வு தகவல்

Monday, December 27, 2021

*கக்கன்*

🦉பி.கக்கன் நினைவு நாள்:😢
*************************!
உலக வரலாறிலேயே உயர்திரு கக்கன் போன்ற நேர்மை நாணயத்திற்க்கு உதாரணமான அமைச்சரை பார்ப்பது கடினம். தமிழக வரலாற்றில் கக்கன் அவர்கள் ஒரு வைரகல்.

மதுரை மேலூர் வட்டத்தில் தும்பைப்பட்டி என்ற சிற்றூரில் பூசாரி கக்கன் என்ற தோட்டிக்கு மகனாகப் பிறந்து, வறுமையில் உழன்று, பெரும்பாடு களுக்கிடையே பள்ளி இறுதிவகுப்பு வரை படித்து முடித்துப் பொதுவாழ்வில் ஈடுபட்ட மாமனிதர் அவர்.

மதுரை வைத்தியநாத ஐயர் கக்கனை வளர்ப்பு மகனாக அரவணைத்துக் கொண்டார். மாசுமருவற்ற தோழர் ஜீவாவின் தலைமையில் தான் கக்கனின் திருமணம் நடந்தது. இரவு நேர பள்ளிகளுக்குச் சென்று சேவை செய்துள்ளார். பள்ளிக்குழந்தைகளுக்கு உணவளிக்க தனது மனைவியின் தாலியை அடகு வைத்து பணம் தந்து உதவி உள்ளார்.

காந்தி 1934-ல் மதுரை வந்தபோது அவருக்குத் தொண்டாற்றும் வாய்ப்பு கக்கனுக்கு வந்து சேர்ந்தது. காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்ற கக்கன் 1942 ஆகஸ்ட் புரட்சியின் போது மேலூர் காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டார். அவர் மனைவி முன்னிலையில் 5 நாட்கள் கசையடி கொடுத்து சக தோழர்களை காட்டிக் கொடுக்கச் சொன்ன போது கடைசி வரை அடி வாங்கினாரே தவிர, காட்டிக் கொடுக்கவில்லை. சுயநினைவு இழந்தவரை குதிரை வண்டியில் பாதம் வைக்கும் இடத்தில் கிடத்தி, தலையும் கால்களும் தொங்கிய நிலையில் இழுத்துச் சென்றனர்.

இந்திய சுதந்திரத்திற்க்கு பின் தமிழ்நாடு கங்கிரஸின் தலைவராகப் பணியாற்றிய தாழ்த்தப்பட்ட இனம் என்று அதிகார வர்கத்தால் பிரிக்கபட்ட மனித இனதின் முதல் மனிதர் கக்கன். அந்த புனிதர் வகித்த பதவியை தான் இன்று பல பணம் திண்ணும் பிணங்கள் வகிக்கிறது.

தமிழகத்தில் 10 ஆண்டுகள் தொடர்ந்து அமைச்சராக இருந்த கக்கன் பொதுப்பணி, உள்துறை, விவசாயம், உணவு, மதுவிலக்கு, அரசின நலம், அறநிலையத்துறை போன்ற பல்வேறு இலாக்காக்களை நிர்வாகித்தார்.

கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. மதுரை வேளாண்மைக் கல்லூரியைக் கொண்டு வந்தார்.

விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது, தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தது, தாழ்த்தப் பட்டோருக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்துச் செயல்படுத்தியது, காவல்துறையில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்தியது, லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது என ஏராளமான அரசு பணிகள் உயர் திரு கக்கன் அவர்களேயே ஆரம்பிக்கபட்டது.

அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்த போதும் அவரது துணைவியார் ஆசிரியைப் பணி செய்தே குடும்பத்தைக் கவனித்தார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்திலும் அவரது தந்தையார், தான் செய்து வந்த வருவாய்த்துறை ஊர்ப்புற உதவியாளர் பணியைச் செய்தே வாழ்க்கை நடத்தினார்.

அமைச்சராக இருந்த போது மதுரை வந்த போது அரசு விடுதியில் வேறு நபர் இரவில் தங்கி இருக்கிறார். அவரை வெளியேற்றலாமா? என்கிறார்கள். வேண்டாம் எனத் தடுத்து விடுகிறார். தனியார் விடுதியில் அறை எடுக்கலாமா? என்கிறார்கள். வேண்டாம் என்று சொல்லி விட்டு, ரயில்வே காலனியில் தனது உறவினரின் சிறிய வீட்டில் போய் தங்குகிறார்.

பத்தாண்டுகள் மிக முக்கியத் துறைகளின் அமைச்சராக இருந்த கக்கன் 1967 - தேர்தலில் தோற்ற பின்பு சொந்தக் கூரை கூட இல்லாத பரம ஏழையாகப் பேருந்தில் நின்றபடி பயணித்தார்.

கக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த போதும், தன் மனைவி சொர்ணம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகத் தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார். வலிமை மிக்க, அமைச்சராக அவர் வலம் வந்தபோது தன் மகள் கஸ்தூரிபாயை மாநகராட்சிப் பள்ளியில் தான் படிக்கச் செய்தார். தன் தம்பி விஸ்வநாதனுக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் லயோலா கல்லூரிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனையை ஒதுக்கீடு செய்து அரசாணையை அளித்த செய்தியறிந்த கக்கன், அந்த ஆணையை வாங்கிக் கிழித்தெறிந்தார்.

விடுதலைப் போராட்டத் தியாகத்துக்காக அவருக்குத் தனியாமங்கலம் என்ற கிராமத்தில் தரப்பட்ட நிலத்தை, வினோபாவின் நிலக்கொடை இயக்கத்தில் ஒப்படைத்தார். முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர் கோட்டக்கல் சித்த மருத்துவமனையில் சேர்க்கப்படார். மருத்துவமனையில் பணம் செலுத்த முடியாத நிலையில் நோய் தீராமலே அங்கிருந்து விடை பெற்றார்.

மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனைப் போய்ப் பார்த்தவர் அதிர்ந்து போனார். உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு, முக்கால் நிர்வாண நிலையில் இருந்த கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர். சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, ‘ வேண்டாம் என்று மறுத்து விட்டார். ‘உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், ‘நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி என்று கைகூப்பினார்

கக்கன். கடைசிக் காலத்தில், வறுமையில் வாடியது கண்டு,.பழ நெடுமாறன், மதுரையில் நிதி திரட்டி வந்த நிதியை நிலையான வைப்புத் தொகையில் போட்டு வட்டியில் வாழ்க்கை நடத்துங்கள் என்று யோசனை சொல்கிறார்கள். மறுத்து விட்டு முன்பு தேர்தலின் போது நாவினிப்பட்டி மைனர் தந்த பணம் 11,000 திருப்பித் கொடுக்கிறார். அவர் நான் கேட்கவில்லை, கடனாக தரவில்லை என மறுத்து போதும் அந்த பணத்தை திருப்பித் தந்து விடுகிறார்.

டிவிஎஸ் நிறுவனத்தில் தங்கியதற்காக ரூ.1,800 கட்டுகிறார். அவர்கள் கேட்கவில்லையே ஏன் ? செலுத்த வேண்டும் என்கின்றனர். நான் என்றாவது திருப்பித் தருவேன் என்ற நம்பிக்கையில் தான் அவர்கள் கேட்கவில்லை என கூறி பணத்தை திருப்பி கொடுத்தார் . இப்படிப்பட்ட ஒரு அமைச்சரை உலகின் எந்த நாட்டிலும் பார்க்க முடியாது.

இறுதிவரை ஏழ்மையிலேயே வாடிய கக்கன் நோய்வாய்ப்பட்ட போது, உயர் ரக சிகிச்சைகள் எடுத்துக்கொள்ள வசதியின்றி சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். நினைவிழந்த நிலையில் இரு மாதங்கள் இருந்த அவர், 1981 டிசம்பர் 23-ஆம் நாள் உலக வாழ்வை நீத்தார். எளிமையின் வடிவமாக நேர்மையின் விளக்கமாக நம்மிடையே வாழ்ந்து மறைந்த கக்கன் உடல் கண்ணம்மாபேட்டையில் டிசம்பர் 24, 1981 அன்று எரியூட்டப்பட்டது

Sunday, December 26, 2021

*ரேஷன் கார்டுகளில் ( RATION CARD) உள்ள சில குறியீடுகள்*

*ரேஷன் கார்டுகளில் ( RATION CARD) உள்ள சில குறியீடுகளுக்கு 
எல்லாம் என்ன பொருள்?


 #PHH

 - முன்னுரிமை உள்ளவர்கள்: உங்கள் ரேஷன் கார்டில் PHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் அரிசி உட்பட அனைத்துப் பொருட்களை வாங்க முடியும். 

 #phh_aay

 ரேஷன் கார்டில் PHH - AAY என்று குறிப்பிட்டு இருந்தால் 35 கிலோ அரிசி உட்பட அனைத்துப் பொருட்களையும் பெறலாம். 

 #NPHH

 - முன்னுரிமை இல்லாதவர்கள்: உங்கள் ரேஷன் கார்டில்
NPHH  என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் அரிசி உட்பட அனைத்துப் பொருட்களை வாங்க முடியும். 

 #NPHH_S

 ரேஷன் கார்டில் NPHH-S எனக் குறிப்பிட்டு இருந்தால் அரிசியை தவிர சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை மட்டும் வாங்கலாம். 

 #NPHH_NC

 ரேஷன் கார்டில் இந்தக் குறியீடு இருந்தால் எந்த ஒரு பொருளும் கிடைக்காது. ஒரு அடையாள அல்லது முகவரிச் சான்றாக மட்டுமே பயன்படுத்த முடியும்......

#பகிர்வு_பதிவு

*தோழர் இரா. நல்லகண்ணு*

தோழர் இரா. நல்லகண்ணு 

திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 26 திசம்பர், 1925 ஆம் ஆண்டு பிறந்தார். 


இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர் நல்லகண்ணு. ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தின்போது கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார். 1943-ல் கம்யூனிஸ்ட் இயக்கம் அவரை அணைத்துக்கொண்டது. 

எடுத்த எடுப்பிலேயே விவசாயிகள் போராட்டத்தில் இறங்கிவிட்டார்.1949, டிசம்பர் 20 அன்று தோழர் ஒருவரின் வீட்டில் தலைமறைவாகப் பதுங்கியிருந்த நல்லகண்ணுவைக் கைதுசெய்தது போலீஸ். அவரது மீசையைப் பொசுக்கியும் முடிகளைப் பிய்த்தும் போலீஸார் நடத்திய சித்திரவதையே நல்லகண்ணு மீசையைத் துறக்கக் காரணமானது.

ஒடுக்கப்பட்ட மக்களின் உற்ற தோழர் நல்லகண்ணு. நான்குநேரி வானமாமலை கோயிலுக்குள் ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்துச்செல்லும் போராட்டம், வீடுகளுக்கு நிலை வைத்துக்கொள்ளும் உரிமையை நிலைநாட்டும் போராட்டம், செருப்பணிந்து பொது வீதிகளில் நடக்கும் போராட்டம் என்று நல்லகண்ணு நடத்திய போராட்டங்களின் வரலாறு நீளமானது. 1999 தென் மாவட்ட கலவரங்களின்போது, ஒரு சாதிக்காரர் கொல்லப்பட்டால், சம்பந்தமே இல்லாமல் எதிர் சாதியில் ஒருவர் கொல்லப்படுவது என்று தொடர் கொலைகள் விழுந்தன. நல்லகண்ணுவின் மாமனாரும் சாதி ஒழிப்புப் போராளியுமான அன்னச்சாமியும் அப்படி வெட்டிக்கொல்லப்பட்டார். நல்லகண்ணு உணர்ச்சிவசப்பட்டிருந்தால் கலவரம் மேலும் பெரிதாகியிருக்கும். ‘உள்ளூர்க்காரர்கள் செய்திருக்கவே மாட்டார்கள்’ என்று உறுதியாக நின்றார். மாமனார் மரணத்துக்கு அரசு கொடுத்த இழப்பீட்டையும் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இரு சமூக குழந்தைகளின் கல்வி உதவிக்கே கொடுத்துவிட்டார்.

சுற்றுச்சூழலில் மிகுந்த அக்கறை கொண்டவர். குற்றாலம் அருவிக்கு அருகில் ‘ரேஸ் கோர்ஸ்’ அமைக்கும் முயற்சி நடத்ததை, 1985-ல் ‘தாமரை’யில் கட்டுரை எழுதியே தடுத்து நிறுத்தினார். 2010-ல் தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க அவரே உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆஜராகி வாதாடித் தடை வாங்கினார்.

மூன்று தேர்தல்களில் போட்டியிட்டு, மூன்றிலுமே தோற்கடிக்கப்பட்டார். 1967 மற்றும் 1977 சட்ட மன்றத் தேர்தல்களில் அம்பாசமுத்திரத்திலும், 1999 கோவை மக்களவைத் தேர்தலில் 

இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணையவேண்டும் அதுதான் இந்தியாவிற்கு
தேவை"  என்ற சிந்தனைக்கொண்ட "தோழர்" நல்லக்கண்ணு பிறந்த தினம் இன்று. புதியதாக வந்த அரசியல்வாதிகளுக்கு ஆதரவு அளித்த நாம், இன்றுவரை நல்லக்கண்ணுவிற்கு கொடுக்காமல் இருப்பது அரசியல் பற்றிய அறிவு குறைவாக இருப்பதையே வெளிக்காட்டுகிறது.

`ஒருவேளை தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்திருந்தால், நல்லகண்ணு  முதலமைச்சராக இருந்திருப்பார். அது ஒரு பொற்காலமாக இருந்திருக்கும்.”



“இன்னைக்கி இந்த சுத்துவட்டாரமே சாப்பிடுதுன்னு சொன்னா... அது அவராலதான்.” 

“எங்க ஊரையே காப்பாத்துன கடவுள்னுதான் அவரைச் சொல்லணும்.”

“

Sunday, January 28, 2018

*ந.க.எண். ,மூ.மு.எண். என்றால் என்ன?*

தமிழக அரசு அலுவலகங்களில் கடிதங்களில் பயன்படுத்தப்படும் ந.க.எண். / ஓ.மு.எண். / மூ.மு.எண். / நி.மு.எண். / ப.மு.எண். / தொ.மு.எண். / ப.வெ.எண். / நே.மு.க.எண். தொடர்பான தகவல்களை அறிய...⬇⬇⬇⬇⬇⬇⬇

*எலுமிச்சை*

பால. ரமேஷ்.

தினம் ஒரு தகவல்.

🎾எலுமிச்சை - இதை தேவக்கனி,
இராஜக்கனி என்றும் கூறுவார்கள்.
எல்லா பழங்களையும் எலி கடித்து
விடும் ஆனால் எலுமிச்சையை
மட்டும் எலி தொடவே தொடாது.

🎾எலி
மிச்சம் வைத்ததாதல்தானோ என்னவோ
இந்தப் பழத்திற்கு எலிமிச்சை என்று
பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது.

🎾எலுமிச்சை
புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப்
பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத்
தாவரம். இது சிட்ரஸ் லிமன்
(Citrus
limon) என்னும் அறிவியல் பெயர்
கொண்டது.

🎾எலுமிச்சம் பழச் சாற்றில் 5% அளவுக்கு
சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது
புளிப்புச் சுவை.

🎾இதன் pH
அளவு 2 முதல் 3 வரை இருக்கும்.
இதனால் இதைப் பள்ளிகளில் கற்பித்தல்
சோதனைகளில் மலிவான அமிலமாகப்
பயன்படுத்துகிறார்கள்.

🎾இதன்
தனித்துவமான சுவை காரணமாக
இதனை அடிப்படியாகக் கொண்டு பல
வகையான பானங்களும், இனிப்பு
வகைகளும் தயாரிக்கப் பட்டு ஆக்கப்பட்டு
வருகின்றன.

🎾100 கிராம் எலுமிச்சை பழத்தில் உள்ள
சத்துக்கள்
நீர்ச்சத்து - 50 கிராம்
கொழுப்பு - 1.0 கிராம்
புரதம் - 1.4 கிராம்
மாவுப்பொருள் - 11.0 கிராம்
தாதுப்பொருள் - 0.8 கிராம்
நார்ச்சத்து - 1.2 கிராம்
சுண்ணாம்புச் சத்து - 0.80 மி.கி.
பாஸ்பரஸ் - 0.20 மி.கி.
இரும்புச் சத்து - 0.4 மி.கி.
கரோட்டின் - 12.மி.கி.
தையாமின் - 0.2 மி.கி.
நியாசின் - 0.1 மி.கி.
வைட்டமின் ஏ - 1.8 மி.கி.
வைட்டமின் பி - 1.5 மி.கி.
வைட்டமின் சி - 63.0 மி.கி
      இதிலுள்ள அதிகமான வைட்டமின் 'சி' சத்தும்,
ரிபோஃப்ளோவினும்
புண்களை ஆற்ற வல்லது. எலுமிச்சை
சாறுடன் நீர் கலந்து சிட்டிகை உப்பு
போட்டு தொண்டையில் படுமாறு
பலமுறை கொப்பளிக்க தொண்டைப்
புண், வாய்ப்புண் ஆறும்.

🎾எலுமிச்சைச் சாறுடன் நீர் கலந்து
அடிக்கடி வாய் கொப்பளித்தால் வாய்
துர் நாற்றம் மறையும்.

🎾வாந்தியா?
எலுமிச்சைச் சாறுடன், இஞ்சிச் சாறு,
சிறிதளவு தேன் சேர்த்து,
வெதுவெதுப்பான நீரில் கலந்து
சாப்பிட விரைவில் குணம் தெரியும்.

🎾எலுமிச்சைச் சாறுடன் வெந்நீர்
கலந்து குடிக்கும் போது
நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம்
குறையும். ஜீரணசக்கியும்
அதிகரிக்கும்.

🎾கல்லீரலைப் பலப்படுத்த சிறந்த டானிக் எலுமிச்சை.

🎾பித்தநீர் சரியான அனவில் சுரக்க
வழிசெய்கிறது. பித்தப்பையில்
ஏற்படும் கற்களைக் கரைக்க
உதவுகிறது.

🎾சருமப் புண்களுககு
ஆன்டிசெப்டிக்காகப் பயன்படுகிறது.
எலுமிச்சைச் சாற்றை முகத்தில்
தடவிவர, முகத்திலுள்ள
கரும்புள்ளிகள் மற்றும் சுருக்கங்கள்
மறைகின்றன.

🎾பாலேட்டுடன்
எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில்
தடவினால் சரும நிறம் பளிச்சிடும்.

🎾தினமும் காலையில் வெறும்
வயிற்றில் இளஞ்சூடான நீரில்
எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன்
தேனூடன் பருகி வர உடல் எடை
குறையும்.

🎾பொட்டாசியம் அதிகமான அளவில்
இருப்பதால் இதயக் குறைபாடுகளை
நீக்க உதவுகிறது.

🎾உயர் இரத்த அழுத்தம்,
தலைச்சுற்றல், வயிற்றுப் பிரட்டல்
போன்ற உபாதைகள் நீங்கும்.

🎾இரவு நேரத்தில் வெதுவெதுப்பான
நீரில், எலுமிச்சைச் சாறுடன் தேன்
கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும்.
உடல் மட்டுமின்றி, மனமும் அமைதி
அடையும்.

🎾மனஅழுத்தம், ஸ்ட்ரெஸ்,
நீங்கும்.
உடலிலிருந்து நச்சுப்
பொருள்களையும்,
பாக்டிரியாக்களையும் வெளியேற்றி
மூட்டுவலிக்கு நிவாரணம்
அளிக்கிறது.

🎾இரத்த சுத்தகரிப்பாக உதவுகிறது.

🎾காலரா, மலேரியா போன்ற
காய்ச்சலின் போது
விஷக்கிருமிகளின் தாக்கத்தை நீக்கப்
பெரிதும் உதவுகிறது.

🎾சில துளிகள் எலுமிச்சைச் சாறை
நீர் கலக்காமல் அப்படியே விட்டுக்
கொண்டால் நாக்கின் சுவை
அரும்புகள் தூண்டப்பட்டு, சுவை
தெரியும்.

🎾தலையில் பொடுகுத் தொல்லை
நீங்க, எலுமிச்சைச் சாறினை தடவி
சிறிது நேரம் ஊறியபின் குளித்தால்,
பொடுகுத் தொல்லை நீங்கும்.

🎾சிறிய
பழம் பயன்கள் அதிகம்
இதனைப்பயன்படுத்தி நோயற்ற
வாழ்க்கை வாழ்வோம்.

🎾இயற்கை அழகு, புத்துணர்ச்சி,
உற்சாகம் இவையனைத்தையும் தரும்.

🎾தேள்கொட்டினால்,
அந்த இடத்தில்
எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி
இரண்டு துண்டையும் தேய்க்க விஷம்
இறங்கும்.

🎾தலைவலிக்கு
கடுங்காபியில் எலுமிச்சையின்
சாற்றை கலந்து கொடுத்தால் உடனே
குணமாகும்.

🎾நீர் சுருக்கு, பித்தநோய், வெட்டை
சூடு, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு
எலுமிச்சம் பழச்சாற்றுடன் சர்க்கரை
அல்லது உப்பு சேர்த்து கலந்து
குடித்து வந்தால், தகுந்த நிவாரணம்
பெறலாம்.

🎾மயக்கம், வாந்தி, வாய் குமட்டல்,
நீர்வேட்கை, வெறி, கண் நோய், காது
வலி போன்றவற்றை குணப்படுத்தும்
தன்மை எலுமிச்சம் பழத்திற்கு உண்டு.

🎾கழிச்சலுக்காக மருந்துகள்
உட்கொண்டு, அதனால் அடங்காத
கழிச்சலும், வாந்தியும் ஏற்பட்டால்,
சீரகத்தை தேன் விட்டு பொன்னிறமாக
வறுத்து, அதனுடன் எலுமிச்சம்
பழச்சாற்றையும் சேர்த்து நீர் விட்டு
காய்ச்சி, உட்கொள்ள கொடுத்தால்
உடனே வாந்தியும், கழிச்சலும்.

🎾எலுமிச்சை பழச்சாற்றை தலையில்
தேய்த்து தலை முழுகி வர பித்தம்,
வெறி, உடல் சூடு அடங்கும்.

🎾அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால்
எலுமிச்சை சாற்றில் கரிய போளத்தை
(கரிய போளம் என்பது கற்றாழையின்
உலர்ந்த பால். இது நாட்டு மருந்து
கடைகளில் கிடைக்கும்) சேர்த்து
காய்ச்சி அடிபட்ட இடத்தில் பூசிவர
ரத்தக்கட்டு கரையும்.

🎾நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை
பழத்தில் துளையிட்டு விரலை
அதனுள் சொருகி வைக்க வலி
குறையும்.

🎾எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து
குடிக்க வறட்டு இருமல் தீரும்.
இதனுடன் மோர் கலந்து குடிக்க ரத்த
அழுத்தம் குறையும்.
சிலருக்கு பாதத்தில் எரிச்சல் ஏற்படும்.
அப்படிப்பட்டவர்கள்,
மருதாணியை
அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில்
கலந்து பாதத்தில் தடவி வந்தால்
எரிச்சல் குணமாகும்.

🎾சிறிதளவு எலுமிச்சை இலைகளை
அரைத்து சாறு பிழிந்து, அதனுடன்
சிறிது உப்பு சேர்த்து நீரில் கலந்து
குடித்தால் வாந்தி நிற்கும்.

🎾எலுமிச்சம்பழத்தின் விதைகளை நீரில்
போட்டு காய்ச்சி,
அதில் இருந்து
எழும் ஆவியை முகத்தில் படும்படி
பிடிக்க நீர்பினிசம் தீரும்.

🎾சீமையகத்தி எனப்படும் வண்டு கொல்லி
இலையை அரைத்து எலுமிச்சம்
பழச்சாற்றில் கலந்து மேலே பூசி வர
படர்தாமரை குணமாகும்.

🎾சீரகத்தை எலுமிச்சம் பழச்சாற்றில் 2 நாள் ஊற வைத்து, பின் அந்த சாற்றுடன்
வெயிலில் காய வைக்கவும். நன்றாக
காய்ந்ததும் மீண்டும் எலுமிச்சம்
பழச்சாற்றில் ஓர் இரவு ஊற வைத்து
மீண்டும் வெயிலில் காய வைக்கவும்.
நன்றாக உலர்ந்தபின் அதை எடுத்து
பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு
தேன் அல்லது தண்ணீரில் கலந்து
மூன்று வேளை சாப்பிட்டுவர
அஜீரணம், பித்தம் தணியும். ரத்த அழுத்தம்
சீராகும்.

🎾ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில்
எலுமிச்சம் பழம் மிக முக்கிய
பங்காற்றுகிறது. மேலும் கெட்ட
ரத்தத்தை தூய்மைப்படுத்து வதற்கு
எலுமிச்சம் பழத்தை விட மேலான
ஒன்று கிடையாது.

🎾முக்கிய
வைட்டமின் சத்தான வைட்டமின் சி,
எலுமிச்சம் பழத்தில் நிறைய
இருக்கிறது.
எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக்
அமிலம் கிருமிகளை அழிக்கும்
தன்மை கொண்டது. அதனால் தொற்று
நோய் கிருமிகளின் தாக்குதலில்
இருந்து உடலை கண் போல
பாதுகாக்கிறது.

🎾எலுமிச்சம் பழ ரசத்தை சாப்பிட்டால்
மண்ணீரல் வீக்கம் பிரச்சினையில்
இருந்து விடுபடலாம்.

🎾எலுமிச்சம் பழத்தின் சாற்றை தேனில்
கலந்து சாப்பிடுவது ஒரு சத்து மிக்க
டானிக் ஆகும்.
உடலுக்கு வேண்டிய
உயிரூட்டத்தையும், ஒளியையும்
எலுமிச்சம் பழத்தின் மூலம் மனிதர்கள்
பெற இயலும்.

🎾இத்தனை நன்மை செய்யக்கூடிய
எலுமிச்சம் பழத்துக்கு மலத்தை
கட்டக்கூடிய குணமும் உண்டு.
ஆனாலும் தேன் சேர்த்து உண்டு
வந்தால் மலக்கட்டு நீங்கி விடும்.

🎾உடல்
பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை
அன்பர்கள், நீரிழிவு வியாதியால்
அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு
எலுமிச்சைச்சாறு அருந்தலாம்.

🎾வயிற்றுவலி, வயிற்று உப்புசம்,
நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை
சரியாக்கும் ஒப்பற்ற சாறு. உயர்ந்த
கிருமி நாசினி. பொட்டாசியமும்
இதில் உள்ளது.
உயர் இரத்த அன்பர்கள் எலுமிச்சையால்
நலம் பெறலாம்.

🎾சிறுநீர் அடைப்பு
விலகும். உடல் நச்சுக்களை
வெளியேற்றும். உடலின் தற்காப்பு
சக்தி எலுமிச்சையால் பெருகும்.
கடல் உப்பினால் உப்பிய உடம்பு
எலுமிச்சைச் சாறால் கட்டழகு மேனி
பெறும்.

🎾கனிகளில் மதியூக மந்திரி
குணத்தை உடையது எலுமிச்சை.

🎾எலுமிச்சைச் சாறை அப்படியே
பயன்படுத்தக் கூடாது. நீருடன் அல்லது
தேன் போன்றவற்றுடன் பயன் படுத்த வேண்டும்.

🎾எலுமிச்சை, வெங்காயம்
போன்றவைகளை வெட்டியதும்
பயன்படுத்தி விட வேண்டும்.

🎾இவ்வளவு பயன் தரும் தேவகனி (எலுமிச்சை) வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றால் அது மிகையல்ல.

Thursday, January 11, 2018

TNPSC ஊழல்





துணை கலெக்டர் பதவியை பிடிக்க…தமிழ்நாடு தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகளுக்கு 9 லட்ச ரூபாய் பணமும் 10 பவுன் நகையும் லஞ்சம் கொடுத்ததாக ராம்குமார் என்பவரை அதிரடியாக கைது செய்திருப்பது தமிழகத்தையே அதிரவைத்திருக்கிறது.

துணை  கலெக்டர்,  போலீஸ்  டி.எஸ்.பி.,  உள்ளிட்ட  74 பணியிடங்களுக்கான  டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வில் நடந்த மோசடியை அம்பலப்படுத்தினோம். செக்ஷன் ஆபீசர் சிவசங்கரனைத் தொடர்ந்து புரோக்கர் குமரேசன்,  அசிஸ்டென்ட் செக்ஷன் ஆபீசர் பெருமாள், மெயின் தேர்வில் 9 லட்ச ரூபாய் பணம், 10 பவுன் நகை லஞ்சம் கொடுத்த ராம்குமார் உள்ளிட்டவர்களையும் அதிரடியாக கைது செய்துள்ளது டி.சி. மல்லிகா தலைமையிலான மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ். இதனைத்தொடர்ந்து, 2016-ல் தேர்ச்சி பெற்ற 74 தேர்வர்களையும் எதிர் மனுதாரராக சேர்த்து குறுக்குவிசாரணை செய்யவேண்டும் என்று நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன்  சூமோட்டோ வழக்காக எடுத்து அதிரடி உத்தரவிட, ஒட்டுமொத்த தமிழக அதிகாரிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை பற்றவைத்துக்கொண்டிருக்கிறது.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் மோசடி நடந்திருப்பதாக திருநங்கை ஸ்வப்னா கார்த்திக் தொடர்ந்த வழக்கில் அதன் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், உள்துறைச் செயலாளர், வருவாய்த்துறைச் செயலாளர், பத்திரப்பதிவுத்துறைச் செயலாளர் ஆகியோரையும் எதிர் மனுதாரராக்கி உத்தரவிட்டிருந்தார் நீதிபதி. இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஷோபனா இதுவரை பதில் அளிக்கவில்லை. இதில், மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயமே டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சிபெற்ற 74 பேரில் 64 பேர், ‘"கோச்சிங் சென்டர் மோசடி! –டி.என்.பி.எஸ்.சி தகிடுதத்தம்!'’ என்கிற தலைப்பில் 2017 டிசம்பர் 03-05 தலைப்பில் நக்கீரனில் வெளியான கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த  அப்பல்லோ ஸ்டடி சென்டரில் படித்தவர்கள் என்பதுதான் காவல்துறையின் சந்தேகத்தை அதிகப்படுத்தியது.

இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு காக்கிகளிடம் விசாரித்தபோது, ""டி.என்.பி.எஸ்.சி. குறித்து நக்கீரனில் வெளியான கட்டுரையை விசாரணை அதிகாரிகளான நாங்களும் படித்தோம். அதில், அப்பல்லோ ஸ்டடி சென்டரின்  இயக்குநர் சாம் இராஜேஸ்வரன் சில விளக்கங்களை கொடுத்துள்ளார். அதைவைத்தே, அவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்திருக்கிறோம். உதாரணத்துக்கு, 31 யூனிட் இருக்கிறது. எந்த கேள்வியாக இருந்தாலும் அதற்குள்தான் வரும் என்கிறார் சாம். ஆனால், நடப்பு நிகழ்வுகளுக்கான 20 சதவீத கேள்விகள் 31  யூனிட்டில் வராது. மேலும், எத்தனையோ பிரதமர்கள் இருக்க பாகிஸ்தான் பிரதமரை தகுதி நீக்கம் செய்தது ஏன்? என்று கேட்டது எப்படி? எத்தனையோ திட்டங்கள் இருக்க சௌபாக்யா திட்டம் என்றால் என்ன? என்று கேட்டது எப்படி? போன்ற கேள்விகள் அப்பல்லோ ஸ்டடி சென்டரின் மாதிரி தேர்வில் 2016 அக்டோபர் 5-ந் தேதி கேட்கப்பட்டிருக்கின்றன. அதே கேள்விகள், 15-ந் தேதி நடந்த  டி.என்.பி.எஸ்.சி.  குரூப்-1  மெயின் தேர்வில் கேட்கப்பட்டது எப்படி?

2017 அக்டோபர்- 13, 14, 15-ந் தேதிகளில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 மெயின் தேர்வு நெருங்கும் நேரத்தில் 5, 6, 7-ந் தேதிகளிலேயே வினாக்களுடன் விடைகளும் கொடுத்தது எப்படி? பல கோணங்களில் விசாரித்தோம். திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன.  டி.என்.பி.எஸ்.சி. கேள்வித்தாள்களை கல்லூரிப் பேராசிரியர்கள்தான் தயாரிக்கிறார்கள். அந்தக் குழுவில் மிக முக்கியமானவர் சென்னை மாநிலக்கல்லூரி வேதியியல் பேராசிரியர் ஜெய்சங்கர்.  இவர், கடந்த 10 வருடங்களாக அப்பல்லோ கோச்சிங் சென்டரில் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பவராகவும் உள்ளார். இவர்மூலமும்  வினாத்தாள் முன்கூட்டியே லீக் அவுட் ஆகிறதா என்கிற கோணத்தில் விசாரிக்க இருக்கிறோம். மேலும், சில கல்லூரிப் பேராசிரியர்களை விசாரிப்போம்.

2007-ஆம் ஆண்டிலிருந்து 2017-ஆம் ஆண்டு வரை மூன்றுமுறை பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் முதன்மைத் தேர்வுகளில் முதல் மற்றும் இரண்டாம் தாளில்  10 ஆண்டுகளாக கேட்கப்படும் கேள்விகளை மட்டுமே கேட்டுவிட்டு மெயின் தேர்வில் மட்டும் டி.என்.பி.எஸ்.சி. கேட்கும் நடப்பு நிகழ்வுகளுக்கான கேள்விகளை அப்படியே கேட்க முடிந்தது எப்படி? சாம் இராஜேஸ்வரனின் அப்பல்லோ ஸ்டடி சென்டரில் பணம் கட்டி படித்து பாஸ் பண்ணிய 64 பேரும் சைதை துரைசாமியின் மனிதநேயம் அகடமியில் படித்ததுபோல் ஊடகங்களில் தவறாக விளம்பரம் கொடுப்பது ஏன்? அதை, கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?

தற்போது, 2017 குரூப்-1 தேர்வில் இரண்டாவது இடம் பிடித்தவர் மணிராஜ். பொதுவாக, டாப் ரேங்கர்ஸ் அனைவரும் தன்னுடைய ஸ்டடி சென்டரில்தான் பாஸ் பண்ணிவிட்டு போகவேண்டும் என்று நினைப்பார் சாம். ஆனால், மணிராஜ் அப்பல்லோவில் படிக்கவில்லை. ஆனால், எப்படி இரண்டாவது ரேங் வாங்கினார் என்று விசாரித்தபோது அப்பல்லோ கோச்சிங் சென்டரில் படித்து தற்போது 7-வது ரேங்க் எடுத்த  சதீஷ்குமாரும் இவரும் நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது. அதாவது, டி.என்.பி.எஸ்.சி.யில் கேட்கப்போகும் முக்கியமான கேள்விகளை அப்பல்லோவில் படிக்கும் சதீஷ்குமார் தனது நண்பர் மணிராஜுக்கும் கொடுத்திருப்பாரோ என்கிற சந்தேகம் வலுத்திருக்கிறது.

மேலும், சதீஷ்குமார் 2015-லேயே  தேர்ச்சி பெற்று டி.எஸ்.பி. ட்ரெயினிங்கில் இருக்கிறார். ஆனால், அவரது லட்சியமே துணை கலெக்டர் ஆவதுதான். அதனால்தான், 2016-ல் நடந்த தேர்வில் மீண்டும் எழுதி துணை கலெக்டர் பதவியை பிடிக்கும் அளவுக்கு தரவரிசை பட்டியலில் இடம்பெற்றிருந்தார். ஆனால், தற்போது 74 பேரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்ததால் எதுக்கு வம்பு? டி.எஸ்.பியாகவே தொடரலாம் என ட்ரெயினிங் போய்விட்டார் சதீஷ்குமார்.  தேர்ச்சி பெற்ற 74 பேரின் விடைத்தாள்கள் அனைத்துமே தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. கமலா மாணிக்கத்தின்  விடைத்தாளைப்போலவே எத்தனை விடைத்தாள்கள் வெளியில் எடுத்து மோசடியாக விடைகள் எழுதப்பட்டன என்பதை ஆராய்ந்துகொண்டிருக்கிறோம். அதற்குப்பிறகு, சாம் இராஜேஸ்வரனை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துவிட்டால் டி.என்.பி.எஸ்.சி.யின் ஊழல் உறுப்பினர்கள் விசாரிக்கப்பட்டு உண்மைகள் வெளிவரும்''’என்கிறார்கள் அதிரடியாக.


லஞ்சம் கொடுத்து பதவியை பிடிக்கும் அதிகாரிகள்தான் அரசியல்வாதிகளுக்கு ஊழல் செய்யக் கற்றுக் கொடுத்து எந்த ஆட்சி மாறினாலும் மாறாமல் கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்குவதைவிட ஆபத்தானது அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது. ஊழல் தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழல் துணை கலெக்டர்கள் தற்போது, கோடிகளை கொட்டிக்கொடுத்து நியமன ஐ.ஏ.எஸ். ஆவதற்கான ரேஸிலும் இருக்கிறார்கள். இதற்கென்று தனியாக விசாரணைக் கமிஷன் வைத்தால்தான் பல்வேறு உண்மைகள் வெளிவரும்.