Thursday, April 5, 2018

*வட இந்திய அரசுகள் - இராசபுத்திரர்கள்*

*LOTUS ACADEMY*

*Tnpsc group II online coaching starts from 16-04-2018*

*Coaching fees only Rs.500*

*Contact Number: 9787910544 (whatsapp)*

*வட இந்திய அரசுகள் - இராசபுத்திரர்கள்*

1. வரலாற்றினை எளிய முறையில் புரிந்து கொள்வதற்காக வரலாற்றாளர்கள் வரலாற்றை காலத்தின் அடிப்படையில் எவ்வாறு பிரித்துள்ளார்கள்?
பண்டைய காலம், இடைக்காலம், நவீன காலம்
2. கி.பி.8ம் நூற்றாண்டு முதல் கி.பி.18ம் நூற்றாண்டு வரையிலான காலம்?
இடைக்காலம்
3. கி.பி.8ம் நூற்றாண்டு முதல் கி.பி.13ம் நூற்றாண்டு வரையிலான காலம்?
முந்தைய இடைக்காலம்
4. கி.பி.13ம் நூற்றாண்டு முதல் கி.பி.18ம் நூற்றாண்டு வரையிலான காலம்?
பிந்தைய இடைக்காலம்
5. இராசபுத்திரர்களின் காலம்?
கி.பி.647 - கி.பி.1200
6. பண்டைய கால வரலாறு யாருடைய ஆட்சியுடன் முடிவடைகிறது?
ஹர்சர் மற்றும் 2ம் புலிகேசி
7. ஹர்சர் இறப்பு முதல் கி.பி.12ம் நூற்றாண்டு வரை வட இந்தியாவின் வரலாற்றை நிர்ணயித்த வம்சத்தினர்?
இராசபுத்திரர்கள்
8. பண்டைய சத்திரியக் குடும்பங்களைச் சார்ந்தவர்கள்?
இராசபுத்திரர்கள்
9. எத்தனை வகையான இராசபுத்திரர்கள் வட இந்தியாவில் ஆட்சி செய்தனர்?
36 வகை இராசபுத்திரர்கள்
10. வெளிநாட்டு மரபினைச் சார்ந்தவர்கள்?
இராசபுத்திரர்கள்
11. வட இந்தியாவில் ஆட்சி செய்த இராசபுத்திரர்களில் வலிமை பெற்றவர்கள்?
1. பிரதிகாரர்கள்,
2. பாலர்கள்,
3. சௌகான்கள்,
4. தோமர்கள்,
5. ரத்தோர்கள்,
6. சிகோதியர்கள் அல்லது குகிலர்கள்,
7. சந்தேலர்கள்,
8. பரமாரர்கள்,
9. சேனர்கள்,
10. சோலங்கிகள்
12. இராமன் (சூரிய குலம்) அல்லது கிருஷ்ணன் (சந்திர குலம்) அல்லது புனித வேள்வித் தீயிலிருந்து (அக்கினிக் குலம்) தோன்றிய தலைவனின் வழித்தோன்றல்கள் யார்?
இராசபுத்திரர்கள்
13. அவந்தியை ஆட்சி செய்த இராசபுத்திரர்கள்?
பிரதிகாரர்கள்
14. கூர்ஜர மரபினர் யார்?
பிரதிகாரர்கள்
15. வங்காளத்தை ஆட்சி செய்த இராசபுத்திரர்கள்?
பாலர்கள் மற்றும் சேனர்கள்
16. ஆஜ்மீர், டெல்லியை ஆட்சி செய்த இராசபுத்திரர்கள்?
சௌகான்கள்
17. டெல்லியை ஆட்சி செய்த இராசபுத்திரர்கள்?
தோமர்கள்
18. கனோஜை பகுதியை ஆட்சி செய்த இராசபுத்திரர்கள்?
ரத்தோர்கள்
19. மேவார் பகுதியை ஆட்சி செய்த இராசபுத்திரர்கள்?
சிகோதியர்கள் அல்லது குகிலர்கள்
20. பந்தல்கண்டை ஆட்சி செய்த இராசபுத்திரர்கள்?
சந்தேலர்கள்
21. மாளவத்தை ஆட்சி செய்த இராசபுத்திரர்கள்?
பரமாரர்கள்
22. குஜராத்தை ஆட்சி செய்த இராசபுத்திரர்கள்?
சோலங்கிகள்
23. இராசபுத்திரர்கள் எல்லைப்புறப் பாதுகாப்பினை வலிமைப்படுத்த தவறியதால் எதற்கு வழிவகுத்தது?
முஸ்லீம்கள் படையெடுப்பிற்கு
24. பிரதிகாரர்களின் காலம்?
கி.பி.8ம் – 11ம் நூற்றாண்டு
25. பிரதிகாரர்கள் இந்தியாவில் எந்த பகுதியை ஆட்சி செய்தார்கள்?
வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகள்
26. பிரதிகார மரபைத் தோற்றுவித்தவர்?
முதலாம் நாகப்பட்டர்
27. முதலாம் நாகப்பட்டரின் காலம்?
கி.பி.725 – 740
28. சிந்து பகுதியிலிருந்து போர்தொடுத்து வந்த அரேபியர்களை வென்றவர்?
முதலாம் நாகப்பட்டர்
29. பிரதிகாரர்களின் கடைசி மன்னன்?
இராஜ்யபாலா
30. இராஜ்யபாலாவின் ஆட்சியின் பரப்பு எதுவரை மட்டுமே இருந்தது?
கனோஜ் வரை
31. யாருடைய படையெடுப்பிற்குப் பின் பிரதிகாரர்கள் வீழ்ச்சியடைந்தார்கள்?
முகமது கஜினி
32. முகமது கஜினி இராஜ்யபாலா மீது போர்தொடுத்த ஆண்டு?
கி.பி.1018
33. பாலர்கள் இந்தியாவில் எந்த பகுதிகளை ஆட்சி செய்தனர்?
வடக்கு மற்றும் கிழக்கு
34. பாலர் மரபைத் தொடங்கியவர்?
கோபாலர்
35. பிரதிகாரர்களின் வீழ்ச்சிக்குப் பின் சுதந்திர அரசுகளாக செயல்படத் தொடங்கியவர்கள்?
1. பாலர்கள்,
2. தோமர்கள்,
3. சௌகான்கள்,
4. ரத்தோர்கள்
5. சந்தேலர்கள்
6. குகிலர்கள்
7. பரமாரர்கள்
36. பாலர்களின் ஆட்சி காலம்?
கி.பி.8 - கி.பி.12ம் நூற்றாண்டு
37. கி.பி.750 – 760 வரையிலான காலத்தில் எந்த குழப்பமான சூழல் நிலவிய இடம்?
வங்காளம்
38. பாலர் இனத்தலைவர்கள் ஒன்றுகூடி யாரை வங்காளம் மற்றும் பீகார் முழுமைக்கும் மன்னராகத் தேர்ந்தெடுத்தனர்?
கோபாலர்
39. கோபாலரின் ஆட்சி காலம்?
கி.பி.765 – 769
40. கோபாலர் தனது ஆட்சி எல்லையை எதுவரை விரிவுபடுத்தினார்?
மகதம்
41. கோபாலருக்குப் பின் மகதத்தில் ஆட்சியமைத்தவர்?
தருமபாலர் (கோபாலரின் மகன்)
42. தருமபாலர் பௌத்த மதத்தில் பற்று கொண்டதனால் __________ கட்டினார்
பௌத்த மடங்களைக் கட்டினார்
43. தருமபாலரின் ஆட்சி காலம்?
கி.பி.769 – 815
44. புகழ்மிக்க விக்ரமசீலா பல்கலைக் கழகத்தை நிறுவியவர்?
தருமபாலர்
45. பிரதிகாரர்களை வென்றதோடு கனோஜ், வங்காளம், பீகார் ஆகிய இடங்களைக் கைப்பற்றி வட இந்தியா முழுவதும் வென்ற பாலர் இன மன்னர்?
தருமபாலர்
46. நாளந்தா பல்கலைக்கழகத்தைப் புதுப்பித்தவர்?
தருமபாலர்
47. தருமபாலருக்குப் பின் பாலர்களின் அரசர்?
தேவபாலர் (தருமபாலரின் மகன்)
48. தேவபாலரின் ஆட்சி காலம்?
கி.பி.815 – 855
49. போர்களின் மூலம் புதிய பகுதிகளை வென்றதோடு அஸ்ஸாம், ஒடிசா ஆகியவற்றையும் வென்ற பாலர் மரபின் மன்னன்?
தேவபாலர்
50. பாலர் மரபில் யாருடைய வழித் தோன்றல்கள் வலிமையற்றவர்களாக இருந்தனர்?
தேவபாலர்
51. பாலர் மரபில், __________ ஆட்சியேற்றதைத் தொடர்ந்து நாடு மீண்டும் வலிமைபெறத் தொடங்கியது?
மகிபாலர்
52. பாலர் மரபின் கடைசி மன்னர்?
கோவிந்தபாலர்
53. __________  நூற்றாண்டின் மத்தியில் பாலர் மரபு வீழ்ச்சியடைந்தது
கி.பி.12ம் நூற்றாண்டு
54. கனோஜ், கங்கை சமவெளிப் பகுதியை கைப்பற்ற எத்தனை அரசுகளுக்கிடையே போராட்டம் ஏற்பட்டது?
3 அரசுகள்
1. இந்தியாவின் மத்தியப் பகுதியை ஆட்சி செய்த பிரதிக்காரர்கள்
2. வங்காளத்தை ஆட்சி செய்த பாலர்கள்
3. தக்காணத்தை ஆட்சி செய்த இராஷ்டிரகூடர்கள்
55. துருக்கியர்களின் இந்திய வெற்றிக்கு மறைமுகக் காரணம்?
200 ஆண்டுகளாக ஏற்பட்ட கனோஜ், கங்கை சமவெளி கைப்பற்றும் போராட்டத்தின் காரணமாக பிரதிகாரர்கள், பாலர்கள், இராஷ்டிரகூடர்களை வலிமை இழக்கச் செய்தது
56. கி.பி.736ம் ஆண்டு டெல்லி நகரை நிறுவியவர்கள்?
தோமர்கள்
57. கி.பி.1043ல் தானேஷ்வரம், ஹான்சி, நாகர்கோட் ஆகிய இடங்களை வென்றவர்?
மகிபாலதோமர்
58. கி.பி.12ம் நூற்றாண்டில் டெல்லியைக் கைப்பற்றியவர்கள்?
சௌகான்கள்
59. கி.பி.12ம் நூற்றாண்டில் டெல்லியை ஆண்ட சௌகான்களுக்கு திறை செலுத்தியவர்?
தோமர்கள்
60. கி.பி.11ம் நூற்றாண்டில் ஆஜ்மீரை சுதந்திர அரசாக அறிவித்தவர்கள்?
சௌகான்கள்
61. கி.பி.12ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சௌகான்கள் உஜ்ஜையினியை யாரிடமிருந்து வென்றனர்?
மாளவப் பகுதியை ஆண்ட பரமாரர்களிடமிருந்து
62. கி.பி.12ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சௌகான்கள் டெல்லியை யாரிடமிருந்து வென்றனர்?
தோமர்கள்
63. சௌகான்களின் மிக முக்கியமான மன்னர்?
பிருத்திவிராஜ் சௌகான்
64. கன்னோஜ் பகுதியை ஆட்சி செய்த ரத்தோர்களின் காலம்?
கி.பி.1090 – கி.பி. 1194
65. பிரதிகாரர்களின் வீழ்ச்சிக்குப் பின் கன்னோஜ் பகுதியைக் கைப்பற்றியவர்கள்?
ரத்தோர்கள்
66. ரத்தோர்களில் புகழுடன் ஆட்சி செய்த கடைசி அரசர்?
ஜெயச்சந்திரன்
67. சந்தவார் போர் நடைபெற்ற ஆண்டு?
கி.பி.1194
68. சந்தவார் போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது?
ஜெயச்சந்திரன் மற்றும் முகமது கோரி
69. சந்தவார் போரின் முடிவு?
ஜெயச்சந்திரன் முகமது கோரியால் கொல்லப்பட்டார்
70. பிரதிகாரர்களின் ஆட்சியில் இருந்த பந்தல்கண்ட் பகுதியை எந்த நூற்றாண்டில் தனியரசாக சந்தேலர்கள் அமைத்தனர்?
கி.பி.9ம் நூற்றாண்டு
71. மகோபாவைத் தலைநகராக நிறுவிய மன்னன்?
சந்தேலர்களின் மன்னன் யாசோவர்மன்
72. சந்தேலர்களின் கடைசி மன்னன்?
பாரமால்
73. கலிஞ்சார் கோட்டை யாரிடைய முக்கியக் கோட்டையாகும்?
சந்தேலர்கள்
74. கி.பி.1203ம் ஆண்டு குத்புதீன் ஐபக் யாரைத் தோற்கடித்தார்?
சந்தேலர்களின் மன்னன் பாரமால்
75. கஜூராஹோவில் பல அழகிய கோவில்களைக் கட்டியவர்கள்?
சந்தேலர்கள்
76. கந்தர்வ மகாதேவர் ஆலயம் காணப்படும் இடம்?
கஜூராஹோ
77. சந்தேலர்கள் கஜூராஹோவில் கட்டிய ஆலயங்களில் மிகவும் புகழ்பெற்றது?
கந்தர்வ மகாதேவர் ஆலயம்
78. கந்தர்வ மகாதேவர் ஆலயம் கட்டிமுடிக்கப்பட்ட ஆண்டு?
கி.பி.1050
79. சித்தூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள்?
சிசோதியர்கள்
80. சிசோதிய மரபினைத் தொடங்கியவர்?
பாபாரவால்
81. பாபாரவால் வழி வந்தவர்?
இராணாரத்தன்சிங்
82. இராணாரத்தன்சிங்கை அலாவுதீன்கில்ஜி போரிட்டு தோற்கடித்த ஆண்டு?
கி.பி.1307
83. கி.பி.1307ல் இராணாரத்தன்சிங் தோல்வியடைந்ததால் ஜவ்ஹர் முறைப்படி தீயில் விழுந்து இறந்தவர்?
இராணாரத்தன்சிங்கின் மனைவி இராணி பத்மினி
84. ராணாசங்கா, மகாராணா பிரதாப் ஆகியோர் யாரை எதிர்த்து வலிமையுடன் போர் புரிந்தார்கள்?
முகலாயர்களை எதிர்த்து
85. பரமாரர்கள் தம்மைச் சுதந்திர அரசாக அறிவித்த நூற்றாண்டு?
கி.பி.10ம் நூற்றாண்டு
86. பரமாரர்களின் தலைநகராக விளங்கியது?
தாரா
87. பரமாரர்களின் மன்னன் இராஜாபோஜ் ஆட்சி காலம்?
கி.பி.1018 - 1069
88. பரமாரர் மரபின் புகழ்மிக்க மன்னன்?
இராஜாபோஜ்
89. போபால் நகரின் அருகில் அழகிய ஏரியை அமைத்தவர்?
இராஜாபோஜ்
90. இராஜாபோஜ் போபால் நகரில் அமைத்த ஏரியின் பரப்பளவு?
250 சதுர மைல்
91. தாராவில் சமஸ்கிருத கல்லூரி ஒன்றை நிறுவியவர்?
பரமாரர்களின் மன்னன் இராஜாபோஜ்
92. பரமாரர்களின் ஆட்சி யாருடைய படையெடுப்பால் வீழ்ச்சியடைந்தது?
அலாவிதீன் கில்ஜி
93. யாருடைய காலத்தில் ஜவ்ஹர் மற்றும் உடன்கட்டை ஏறுதல் முறை வழக்கிலிருந்தன?
இராசபுத்திரர்கள் காலத்தில்
94. யாருடைய காலத்தில் குழந்தை திருமணமும் பலதாரமணமும் நடைமுறையில் இருந்தது?
இராசபுத்திரர்கள் காலத்தில்
95. பக்தி இயக்கம் யாருடைய காலத்தில் மலரத் தொடங்கியது?
இராசபுத்திரர்கள் காலத்தில்

96. இராசபுத்திரர்களின் அரசு எந்த முறையை அடிப்படையாகக் கொண்டு இருந்தது?
நிலமான்ய முறை
97. நாட்டினைப் பல ஜாகிர்களாகப் பிரித்தவர்கள்?
இராசபுத்திரர்கள் காலத்தில்
98. ஜாகிர்களின் தலைவர்?
ஜாகிர்தார்கள்
99. இராசபுத்திரர்களின் ஆட்சியில் மக்களிடம் வரி வசூலித்து உரிய பங்கை மன்னனிடம் செலுத்தியவர்கள்?
ஜாகிர்தார்கள்
100. இராசபுத்திரர்கள் ஆட்சியில் யார் படையை தனியே பராமரித்ததோடு மன்னருக்குத் தேவைப்படும் சமயத்தில் படை உதவியும் செய்தனர்?
ஜாகிர்தார்கள்
101. இராசபுத்திரர்கள், மொழி, இலக்கியம் கலை மற்றும் கட்டிடக்கலை ஆகிய துறைகளின் __________ பெரும் பாடுபட்டார்கள்
வளர்ச்சிக்கு
102. இராசபுத்திரர்களின் ஆட்சியில் சிறப்பாக வளர்ச்சி அடைந்த வட்டார மொழிகள்?
மராத்தி, குஜராத்தி, வங்காளம்
103. வட்டார மொழி வளர்ச்சிக்கு வழிகோலியவர்கள்?
பக்தி இயக்கத்தினர் மற்றும் நாட்டுப்புற பாடல்கள் பாடிய கலைஞர்கள்
104. கல்ஹணர் எழுதிய நூல்?
இராஜதரங்கிணி
105. ஜெயதேவர் எழுதிய நூல்?
கீதகோவிந்தம்
106. சோமதேவர் எழுதிய நூல்?
கதாசரித சாகரம்
107. பிருத்திவிராஜ் சௌகானின் அவைப் புலவர்?
சந்த்பரிதை
108. பிருத்திவிராஜ் சௌகானின் படையெடுப்புகளைப் பற்றி விளக்கும் நூல்?
பிருத்திவிராஜ்ரசோ
109. பிரித்திவிராஜ்ரசோ என்னும் நூலை எழுதியவர்?
சந்த்பரிதை
110. சித்தாந்த சிரோன்மணியானது எவ்வகை நூல்?
வானவியல் நூல்
111. வானவியல் நூலான சித்தாந்தசிரோன்மணியை எழுதியவர்?
பாஸ்கராச்சாரியா
112. மகேந்திரபாலர் மற்றும் மகிபாலரின் அவைப் புலவராக விளங்கியவர்?
இராஜசேகரன்
113. இராஜசேகரனின் சிறந்த படைப்புகள்?
கற்பூரமஞ்சரி, பால இராமாயணம்
114. வண்ணச்சுவர் ஓவியங்களும் நுண் ஓவியங்களும் பிரபலமடைந்த காலம்?
இராசபுத்திரர்களின் காலம்
115. இராசபுத்திரர்களின் கோவில் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள்?
கஜூராஹோ நகரின் ஆலயங்கள், லிங்கராஜா கோவில், சூரியக்கோவில், தில்வாரா கோவில், ஜெய்ப்பூர், உதய்பூர் நகர அரண்மனைகள், சித்தூர், மாண்டு, ஜோத்பூர், குவாலியர் ஆகிய இடங்களில் அமைந்துள்ள கோட்டைகள்
116. புவனேஸ்வரத்தில் அமைந்துள்ள கோவில்?
லிங்கராஜா கோவில்
117. கோனார்க்கில் உள்ள கோவில்?
சூரியக்கோவில்
118. அபுமலையில் கட்டப்பட்டுள்ள கோவில்?
தில்வாரா கோவில்
119. இந்தியா மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் சுற்றுலா மையமாக விளங்கும் கோவில்?
கஜூராஹோ கோவில்
120. இராசபுத்திரர்களின் ஆட்சிக்கு முடிவுகட்டி இந்தியாவில் ஆட்சியை அமைத்தவர்கள்?
துருக்கியர்கள்
121. கைம்பெண்கள் கணவனின் சிதையில் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் முறை?
சதி அல்லது உடன்கட்டை ஏறுதல்
122. எதிரிகளிடம் சிறைபட்டு களங்கம் ஏற்படுவதைத் தவிர்க்க பெண்கள் குழுவாக தற்கொலை செய்து கொள்ளுதல்?
ஜவ்ஹர்
123. கீத கோவிந்தம் என்பது?
ஆவிடையனின் பாடல்
124. இராஜதரங்கிணி என்பது?
அரசர்களின் ஆறு
125. கதா சரித சாகரம் என்பது?
கதைகளின் பெருங்கடல்
126. சந்தேலர்கள் கஜூராஹோ கோவிலை எந்த நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டினார்கள்?
கி.பி.10 – 12ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில்
127. பந்தல்கண்ட் பகுதியைச் சுற்றி எத்தனைக் கோவில்கள் காணப்பட்டன?
30 கோவில்கள்
128. பந்தேல்கண்ட் பகுதியிலுள்ள கோவில்களில் __________ மற்றும் __________ சிற்ப வேலைப்பாடுகள் மிக சிறப்புடையவைகளாகும்
உட்புற, வெளிப்புற

*தக்காண அரசுகள்*

129. இந்தியாவின் தெற்குப் பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தக்காணம் அல்லது தட்சணபதம்
130. வட இந்தியாவிலிருந்து தென் இந்தியாவைப் பிரிப்பவை?
விந்திய சாத்பூரா மலைகள், நர்மதை, தபதி நதிகள், அடர்ந்த காடுகள்
131. இடைக்காலத்தில் தக்காணத்தில் ஆட்சியை ஏற்படுத்தியவர்கள்?
சாளுக்கியர்களும் இராஷ்டிரகூடர்களும்
132. சாளுக்கியர்களின் வீழ்ச்சிக்கு முன் திறை செலுத்தி அதன்பின் சுதந்திர அரசை நிறுவியவர்கள்?
ஹொய்சாளர்கள், காகத்தியர்கள், யாதவர்கள்
133. இடைக்காலத்தில் டெல்லி சுல்தானியர்களின் எந்த மரபினர் தென்னிந்தியாவில் மேலாண்மையை விரிவாக்கினர்?
கில்ஜி மற்றும் துக்ளக் மரபினர்
134. தக்காணத்தை ஆண்ட அரசுகளில் முக்கியமான ஆட்சியாளராக விளங்கியவர்கள்?
சாளுக்கியர்கள்
135. தக்காணத்தை ஆட்சி செய்த சாளுக்கியர்களை எவ்வாறு பிரிக்கின்றனர்?
1. முற்கால மேலைச் சாளுக்கியர்
2. பிற்கால மேலைச் சாளுக்கியர்
3. கீழைச் சாளுக்கியர்
136. முற்கால மேலைச் சாளுக்கியரின் காலம்?
கி.பி.6 - 8ம் நூற்றாண்டு
137. பிற்கால மேலைச் சாளுக்கியரின் காலம்?
கி.பி.10 - 12ம் நூற்றாண்டு
138. கீழைச் சாளுக்கியரின் காலம்?
கி.பி.7 - 12ம் நூற்றாண்டு
139. முற்கால மேலைச் சாளுக்கியர்கள் எந்த பகுதியில் தனது அரசாட்சியை ஏற்படுத்தினர்?
இன்றைய கர்நாடக மாநிலம்
140. முற்கால மேலைச் சாளுக்கியர்களின் தலைநகரம்?
பிஜப்பூர் மாவட்டத்திலுள்ள வாதாபி
141. தற்போது வாதாபி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
பதாமி
142. யாருடைய காலத்தில் சாளுக்கிய மரபு மெல்ல வளரத் தலைப்பட்டது?
ஜெயசிம்மன், இராமராயா
143. வாதாபி சாளுக்கிய மரபிற்கு அடித்தளமிட்டவர்?
1ம் புலிகேசி
144. 2ம் புலிகேசி, பல்லவ மன்னன் 1ம் மகேந்திரவர்மனை வென்று பின்னர் காவிரியைக் கடந்து யாருடைய நட்பினை ஏற்படுத்திக்கொண்டார்?
சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் நட்பினை
145. 1ம் புலிகேசியில் காலம்?
கி.பி.543 - 566
146. சாளுக்கிய மன்னர்களில் மிகவும் சிறந்தவராக விளங்கியவர்?
2ம் புலிகேசி
147. 2ம் புலிகேசியில் காலம்?
கி.பி.610 - 642
148. கங்கர், மாளவர்கள், கூர்ஜரர்கள் ஆகியோரை வென்றவர்?
2ம் புலிகேசி
149. 2ம் புலிகேசி, ஹர்ஷரின் படையெடுப்பை எதிர்த்து நின்று வெற்ற அடைந்த ஆண்டு?
கி.பி.637
150. 2ம் புலிகேசி தொடர்ந்து யாருடன் போரிட்டுக் கொண்டிருந்தார்?
தெற்குப் பகுதியை ஆண்ட பல்லவர்களிடம்
151. பல்லவ மன்னன் 1ம் மகேந்திரவர்மனைக் கொன்றவர் யார்?
2ம் புலிகேசி
152. 1ம் மகேந்திரவர்மனின் மகன் யார்?
நரசிம்மவர்மன்
153. சாளுக்கிய மன்னன் 2ம் புலிகேசியைக் கொன்றவர் யார்?
பல்லவ மன்னன் 1ம் நரசிம்மவர்மன்
154. சாளுக்கிய மரபின் குறிப்பிடத்தக்க மன்னர்கள் யார்?
1ம் விக்கிரமாதித்யன், விஜயாதித்தன், 2ம் விக்கிரமாதித்யன்
155. சாளுக்கிய மன்னர்களான 1ம் விக்கிரமாதித்யன், விஜயாதித்தன், 2ம் விக்கிரமாதித்யன் காலங்களில் யாருடன் தொடர்ந்து போராட்டங்கள் நடந்தன?
பல்லவர்கள்
156. இராஷ்டிரகூட மரபைத் தோற்றுவித்த மன்னன் யார்?
தந்திதுர்கர்
157. இராஷ்டிரகூட மன்னன் தந்திதுர்கர் யாரைத் தோற்கடித்து வாதாபியைக் கைப்பற்றினார்?
சாளுக்கிய மன்னன் 2ம் கீர்த்திவர்மன்
158. சாளுக்கிய மன்னன் 2ம் கீர்த்திவர்மன் தோல்வியைத் தொடர்ந்து எத்தனை ஆண்டுகள் சாளுக்கிய மரபு புகழ்நிலை அடையாமல் மங்கிய நிலையில் இருந்தது?
2 நூற்றாண்டுகள்
159. கல்யாணியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள் யார்?
பிற்கால மேலைச் சாளுக்கியர்கள்
160. கி.பி.10ம் நூற்றாண்டின் __________ பகுதியில் மேலைச் சாளுக்கியர்கள் ஆட்சியை அமைத்தனர்
இறுதி
161. பிற்கால மேலைச் சாளுக்கிய மரபைத் தொடங்கிய அரசர்?
2ம் தைலப்பா
162. 2ம் தைலப்பாவின் ஆட்சிக் காலம்?
கி.பி.973 - 997
163. மேலைச்சாளுக்கிய மரபின் சிறந்த மன்னர்கள் யார்?
2ம் சோமேஸ்வரன், 2ம் ஜெயசிம்மன், 6ம் விக்கிரமாதித்யன்
164. பிற்கால மேலைச் சாளுக்கிய மரபின் கடைசி மன்னன் யார்?
4ம் சோமேஸ்வரன்
165. வெங்கியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்கள் யார்?
கீழைச் சாளுக்கியர்கள்
166. 2ம் புலிகேசியின் சகோதரன் யார்?
விஷ்ணுவர்த்தன்
167. கீழைச்சாளுக்கிய மரபைத் தொடங்கிய மன்னன் யார்?
விஷ்ணுவர்த்தன்
168. பல தலைமுறைகளாக மேலைச்சாளுக்கியர்களிடமிருந்து தனித்து ஆட்சி செய்தவர்கள்?
கீழைச்சாளுக்கியர்கள்
169. கீழைச்சாளுக்கியர்கள் எந்த மரபுடன் திருமண உறவுகளைக் கொண்டிருந்தனர்?
சோழ மரபு
170. கீழைச்சாளுக்கிய மரபு மற்றும் சோழ மரபுடன் தோன்றிய வாரிசு யார்?
1ம் குலோத்துங்க சோழன்
171. முதலாம் குலோத்துங்க சோழனின் காலம்?
கி.பி.1071 - 1122
172. கீழைச்சாளுக்கிய நாட்டினை சோழப் பேரரசுடன் இணைத்து ஆட்சி செய்த சோழ மன்னன் யார்?
1ம் குலோத்துங்கன்
173. சாளுக்கிய மன்னர்கள் ___________ மதத்தைப் போற்றி, __________ சமயத்தை ஆதரித்தனர்
இந்து மதத்தை, சமண சமயத்தை
174. 2ம் புலிகேசியின் அவைப் புலவராக விளங்கியவர்?
இரவிகீர்த்தி
175. இரவிகீர்த்தி எந்த கல்வெட்டைப் படைத்தார்?
ஐஹோலே கல்வெட்டு
176. இரவிகீர்த்தி எந்த சமயத்தைச் சேர்ந்தவர்?
சமண சமயம்
177. சாளுக்கியர்கள் __________ கலையைப் பெரிதும் ஆதரித்தனர்
கட்டடக்கலையை
178. 70க்கும் மேற்பட்ட கோவில்களை ஐஹோலேயில் கட்டியவர்கள்?
சாளுக்கியர்கள்
179. பட்டாடக்கல்லில் காணப்படும் __________ மேற்பட்ட கோவில்கள் சாளுக்கிய மன்னர்களால் கட்டப்பட்டவையாகும்
10க்கும் மேற்பட்ட
180. இந்தியக் கோவில்களின் தொட்டில் எனச் சிறப்பிக்கப்படும் கோவில்?
ஐஹோலே
181. பட்டாடக்கல்லில் உள்ள விருபாக்ஷர் ஆலயத்தைக் கட்டியவர்கள்?
சாளுக்கியர்கள்
182. பாதாமி குகைக் கோவில்களைக் கட்டியவர்கள்?
சாளுக்கியர்கள்
183. காஞ்சி கைலாசநாதர் கோவிலைப் போன்று கட்டப்பட்ட கோவில் எது?
பட்டாடக்கல்லில் உள்ள விருபாக்ஷர் ஆலயம்
184. சாளுக்கியர்களின் காலத்தில் __________ இலக்கியங்கள் வளர்ச்சி அடைந்தன
தெலுங்கு
185. பண்டைய கிரேக்க, ரோமானியக் காலத்திலேயே புகழ்பெற்ற வரலாற்றுத் தலம் எது?
பட்டாடக்கல்
186. 2ம் விக்கிரமாதித்தனின் மனைவியின் பெயர்?
இராணி லோகமகாதேவி
187. இராணி லோகமகாதேவியால் கட்டப்பட்ட கோவில்?
பட்டாடக்கல்லில் உள்ள விருபாக்ஷர் ஆலயம்
188. விருபாக்ஷர் கோவிலில் __________ அல்லது __________ அறைக்கு முன்னால் தூண்களாலான மண்டபம் ஒன்று பொதுமக்கள் கூடுகைக்காக உருவாக்கப்பட்டது
புரோகிதர், அந்தராலா
189. இராஷ்டிரகூடர்களின் ஆட்சிக்காலம் ___________ வரலாற்றின் சிறப்புக்குரிய காலமாகும்
தக்காண வரலாற்றின்
190. வட இந்தியாவில் இருந்த __________ வழி வந்தோரே இராஷ்டிரகூடர்கள் ஆவார்
இரத்தோர்கள்
191. இராஷ்டிரகூடர்களின் ஆட்சிக்காலம்?
கி.பி.753 - 975
192. இராஷ்டிரகூடர்களின் தாய்மொழி?
கன்னடம்
193. இராஷ்டிரகூட மரபினர் யாரிடம் அதிகாரிகளாகப் பணியாற்றியவர்கள்?
முற்கால மேலைச்சாளுக்கியர்களிடம்
194. இராஷ்டிரகூடர் என்னும் சொல்லின் பொருள்?
நாட்டின் சிறிய பகுதியினை ஆளுகை செய்யும் உரிமை பெற்றவர்கள்
195. இராஷ்டிரகூடர்களின் தலைநகரம்?
மால்கெட்
196. கி.பி.756ல் தந்திதுர்கர் மரணத்திற்கு பிறகு இராஷ்டிரகூடத்தின் மன்னர் யார்?
1ம் கிருஷ்ணர்
197. இராஷ்டிரகூட அரசு புகழின் உச்சத்தை அடைந்தது யாருடைய ஆட்சி காலத்தில்?
துருவன்
198. தக்கோலம் போரில் சோழர்களை வென்று, தஞ்சாவூரைக் கைப்பற்றி இராமேஷ்வரம் வரை வந்த மன்னன் யார்?
இராஷ்டிரகூட மன்னன் 3ம் கிருஷ்ணன்
199. இராஷ்டிரகூடர்களின் கடைசி மன்னன் யார்?
2ம் கார்கி
200. ஒரே பாறையில் குடையப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய கோவில் எது?
கைலாசநாதர் கோவில் - எல்லோரா
201. மும்பைக்கு அருகிலுள்ள __________ கோவிலை இராஷ்டிரகூடர்கள் கட்டி முடித்தனர்
எலிஃபண்டா
202. கவிராசமார்க்கம் என்னும் இலக்கியத்தைப் படைத்தவர்?
இராஷ்டிரகூட மன்னன் அமோகவர்ஷன்
203. துவாரசமுத்திரம் என்னும் பகுதியிலிருந்து ஆட்சி செய்தவர்கள்?
ஹொய்சாளர்கள்
204. மைசூர் அரசு அமைவதற்கு வழிவகுத்து தந்தவர்கள்?
ஹொய்சாளர்கள்
205. வாரங்கல் பகுதியை ஆட்சி செய்தவர்கள்?
காகத்தியர்கள்
206. சாளுக்கியர்களிடமிருந்து கிருஷ்ணா – கோதாவரி இடையேயான பகுதியை வென்றவர்?
2ம் புரோலா
207. சோழர்களிடமிருந்து காஞ்சிபுரம் பகுதியை வென்ற காகத்திய மன்னன் யார்?
கணபதி
208. கி.பி.1309ம் ஆண்டு 2ம் பிரதாபருத்ரன் காலத்தில் வாரங்கல் மீது படையெடுத்தவர் யார்?
மாலிக்கபூர்
209. கி.பி.1327ல் வாரங்கலைக் கைப்பற்றியவர்?
முகமதுபின் துக்ளக்
210. காகத்தியர்களின் கடைசி மன்னன்?
வினயகதேவன்
211. கொள்ளூரில் கிருஷ்ணா நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட உலகப்புகழ் வாய்ந்த கோகினூர் வைரம் யாருடையது?
காகத்தியர்களுடையது
212. நாசிக் முதல் தெளலதாபாத் வரையில் அமைந்திருந்த செவுனா பகுதியை ஆண்டதால் யாதவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
செவுனர்கள்
213. யாதவ மரபின் கடைசி சுதந்திர மன்னன் யார்?
இராமச்சந்திரதேவா
214. மும்பையை அடுத்து சிறு தீவில் அமைந்துள்ள குகைகளை எலிபெண்டா குகைகள் எனப் பெயரிட்டவர்கள்?
போர்ச்சுக்கீசியர்கள்

*தென்னிந்திய அரசுகள்*

215. கி.பி.300 – 600ம் ஆண்டு வரை தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள்?
களப்பிரர்கள்
216. தொண்டை மண்டலத்தைத் தாயகமாகக் கொண்டவர்கள்?
பல்லவர்கள்
217. பல்லவ பேரரசின் தலைநகரம்?
காஞ்சிபுரம்
218. பிற்காலப் பல்லவப் பேரரசைத் தோற்றுவித்தவர்?
சிம்ம விஷ்ணு
219. பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணுக்கு பிறகு தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்தவர்?
1ம் மகேந்திரவர்மன்
220. பல்லவ மன்னன் 1ம் மகேந்திரவர்மனை சமணத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாற்றியவர்?
திருநாவுக்கரசர்
221. சீனப்பயணி யுவான்சுவாங் காஞ்சிக்கு வரும்போது தொண்டை மண்டலத்தின் மன்னன் யார்?
1ம் நரசிம்மவர்மன்
222. வாதாவி கொண்டான் எனப் புகழப்படும் மன்னன் யார்?
1ம் நரசிம்மவர்மன்
223. இராஜசிம்மன் என அழைக்கப்படும் மன்னன் யார்?
2ம் நரசிம்மவர்மன்
224. காஞ்சிபுரத்தில் கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர் யார்?
2ம் நரசிம்மவர்மன்
225. தண்டி அலங்காரம் என்னும் இலக்கண நூலை எழுதியவர்?
தண்டி
226. சாளுக்கிய மன்னன் 2ம் விக்கிரமாதித்தனால் தோற்கடிக்கப்பட்ட பல்லவ மன்னன் யார்?
2ம் பரமேஸ்வரவர்மன்
227. பல்லவ பேரரசின் கடைசி மன்னன்?
அபராஜிதன்
228. சங்கீரணஜாதி எனப் புகழப்படும் மன்னன் யார்?
1ம் மகேந்திரவர்மன்
229. கி.பி.9ம் நூற்றாண்டின் இடையில் அதிகாரத்திற்கு வந்த சோழர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
பிற்காலச் சோழர்கள் அல்லது பேரரசு சோழர்கள்
230. மதுரை கொண்டான் எனப் புகழப்பட்ட சோழ மன்னன் யார்?
1ம் பராந்தகன்
231. சோழ மன்னன் 1ம் இராஜராஜன் காலத்தில் வரிவிதிப்புக்கான கணக்கெடுப்புப் பணியை மேற்கொண்டவர்?
சேனாதிபதி குரவன்

232. சோழ மரபில் ஆட்சி செய்த மன்னர்களில் மிகச் சிறந்த ஆட்சியாளர்?
1ம் இராஜராஜன்
233. யாருடைய ஆட்சி காலத்தில் தேவாரம் தொகுக்கப்பட்டது?
1ம் இராஜராஜன்
234. தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் கட்டப்பட்ட ஆண்டு?
கி.பி.1010
235. கங்கை கொண்ட சோழபுரம் என்னும் நகரை நிறுவியவர்?
1ம் இராஜேந்திரன்
236. சுங்கம் தவிர்த்த சோழன் எனப் புகழப்படுபவர்?
1ம் குலோத்துங்கன்
237. களப்பிரர்களை வென்று பாண்டியர்களின் ஆட்சியை மலரச் செய்தவர்?
கடுங்கோன்
238. சோணாடு வழங்கியருளிய சுந்தரபாண்டியன் என்று புகழப்பட்டவர்?
1ம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்
239. உலகப் பாரம்பரிய தினம்?
ஏப்ரல் 18
240. வேளாண் தொழில் செய்வோர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
பூமி புத்திரர்கள்
241. அதிவீரராம பாண்டியன் எழுதிய நூலின் பெயர்?
நைடதம்
242. பாண்டியர்கள் __________ க்கும் மேற்பட்ட குடைவரைக் கோவில்களை உருவாக்கியுள்ளனர்
50

No comments:

Post a Comment