Friday, July 21, 2017

புதிய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த்

நம் புதிய ஜனாதிபதி பற்றி தெரிந்து கொள்வோமா ?

பாஜக சார்பில் பாரதத்தின்  ஜனாதிபதியாக  ராம் நாத் கோவிந்த்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேசிய அளவிலான மக்கள் அரங்கில் பெரிதாக அறியப்படாதவர். ஆனால் தலித் மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயங்களுக்காக போராடியவர்.

ராம் நாத் கோவிந்த் அக்டோபர் 1, 1945 அன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் தேஜாத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். கான்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றவர். இவர் சட்டத்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் ஆவர். டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பிலான வழக்கறிஞராக ராம் நாத் கோவிந்த் பணியாற்றியுள்ளார். மேலும் உச்சநீதிமன்றத்தில் சட்ட ஆலோசகராக பணியாற்றியுள்ளார். உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் இவர் 16 வருடங்கள் பணியாற்றியுள்ளார். இவர் இந்தியாவை ஐநா சபையில் பிரதிநித்திருக்கிறார்.

மே 30, 1974 அன்று சவிதா என்பவரை ராம் நாத் கோவிந்த் மணந்தார். இவர்களுக்கு பிரசாந்த் என்ற மகனும், சுவாதி என்ற மகளும் உள்ளனர்.

1997-ம் ஆண்டில் மத்திய அரசின் சில உத்தரவுகள் தாழ்த்தப்பட்ட மக்களையும், பணியாளர்களையும் பாதிக்கக்கூடியதாக இருந்தன. அந்த உத்தரவுகளுக்கு எதிராக தலித் பணியாளர்கள் இயக்கத்துடன் இணைந்து ராம் நாத் கோவிந்த் போராடினார். இந்த போராட்டம் வெற்றியில் முடிந்தது. இந்த போராட்டத்தில்தான் ராம் நாத் கோவிந்த் முதல்முறையாக பிரபலமானார்.

பீகாரின் ஆளுநராக பதவியேற்றபின் அவர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “அரசியலமைப்பின் இரண்டு அடிப்படை உரிமைகள் பற்றி தலித் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். அவை கல்வி பெறுவதற்கான உரிமை மற்றும் வாக்களிப்பதற்கான உரிமை ஆகியன ஆகும். இந்த இரு உரிமைகளாலும் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை மாறும். இந்த இரண்டு உரிமைகளை பயன்படுத்தாமல் போனதால்தான் நாடு முழுவதிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் தத்தளித்து வருகிறனர்.” என அவர் பேசினார்.

ஆகஸ்டு 8, 2015 அன்று ராம் நாத் கோவிந்த் பீகாரின் 36-வது ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் அதை வரவேற்கவில்லை. ஆனால் காலப்போக்கில் மாநில அரசுடனும், முதலமைச்சரிடமும் ராம் நாத் சிங் நல்லுறவை வளர்த்துக்கொண்டார்.

நிதீஷ் குமார் அரசு கொண்டுவந்த தடுப்பு சட்டங்களுக்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. ஆனால் பாஜகவின் எதிர்ப்புகளையும் தாண்டி, ராம் நாத் கோவிந்த் அந்த சட்டங்கள் தொடர்பாக சொந்தமாக முடிவெடுத்து அதற்கு ஒப்புதலும் அளித்தார்.

அதேநேரத்தில், லோக் ஆயுக்தா சட்டதிருத்த மசோதாவை மறு ஆய்வு செய்ய மீண்டும் பீகார் சட்டப்பேரவைக்கே அனுப்பியும் வைத்தார். லோக் ஆயுக்தாவை சரியாக முடிக்க உரிய கால அவகாசம் வேண்டும் என அவர் அரசிடம் கூறினார். அதன்படி அரசும் ஒப்புக்கொண்டு லோக் ஆயுக்தாவை நிறைவேற்றியது.

சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளாதவராக ராம் நாத் கோவிந்த் திகழ்ந்தார். ஆனால் சில விவகாரங்களில் உறுதியாக இருந்தார். லக்னோவில் இருக்கும் பி.ஆர்.அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் நிர்வாக குழு உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார்.

ராம் நாத் கோவிந்த் 1994-ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2006 வரை 12 வருடங்கள் தொடர்ச்சியாக மாநிலங்களவை எம்.பியாக அவர் பொறுப்பு வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினராக தாய்லாந்து, நேபாளம், பாகிஸ்தான், சிங்கப்பூர், ஜெர்மனி, சுவிச்சர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

சில நாடாளுமன்ற குழுக்களின் உறுப்பினராகவும் ராம் நாத் கோவிந்த் இருந்திருக்கிறார். தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினர் நலனுக்கான நாடாளுமன்ற குழு, உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற குழு. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுக்கான நாடாளுமன்ற குழு, சமூக நீதிக்கான நாடாளுமன்ற குழு, சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற குழு ஆகியவற்றில் ராம் நாத் கோவிந்த் பணியாற்றியுள்ளார்.

1998-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை பாஜகவின் தலித் மோர்ச்சாவுக்கு தலைவராக ராம் நாத் சிங் பொறுப்பு வகித்துள்ளார். மேலும் அகில இந்திய கோலி சமாஜின் தலைவராகவும் இவர் பதவி வகித்துள்ளார். இந்த கட்சியின் தேசிய பேச்சாளராகவும் ராம் நாத் பணியாற்றியுள்ளார்.

மக்கள் கல்வி பெற ராம் நாத் சிங் பெரிதும் பணியாற்றியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியபோது உத்தரப்பிரதேசத்திலும், உத்தராகண்டிலும் பள்ளிக்கூடங்கள் கட்ட ராம் நாத் கோவிந்த் உதவி செய்துள்ளார்.

வழக்கறிஞராக பணியாற்றியபோது, டெல்லி இலவச சட்ட உதவி சங்கத்தின் வழிகாட்டலினால், தாழ்த்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட சமுதாய பெண்கள், ஏழைகள் ஆகியோருக்கு ராம் நாத் கோவித் இலவசமாக சட்ட உதவி செய்துள்ளார்.

ஆனால் ரங்கநாத் மிஷ்ரா கமிஷனை ராம் நாத் கோவிந்த் பலமாக எதிர்த்தார். 2009-ம் ஆண்டில், அரசு பணிகளில் இஸ்லாமியர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடும், மற்ற சிறுபான்மை சமுதாயத்தினருக்கு 5 சதவிகித இடஒதுக்கீடும், அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள தலித்களுக்கு தாழ்த்தப்பட்டோர் என்ற அந்தஸ்து வழங்கவும் ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் பரிந்துரை செய்தது. அப்போது பாஜகவின் தேசிய பேச்சாளராக இருந்த ராம் நாத் கோவிந்த், “தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் இணைப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இஸ்லாமும், கிறிஸ்தவமும் இந்தியாவுக்கு அந்நியமானவை. இஸ்லாமியர்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் மதம் மாற்றப்பட்டவர்களின் பிள்ளைகள் கான்வென்ட் பள்ளிகளில் தரமான கல்வி பெறுவது அனைவரும் அறிந்ததே. தாழ்த்தப்பட்டோரின் கல்வி பெறும் நிலை மதம் மாற்றப்பட்ட தலித்கள் மற்றும் இஸ்லாமியர்களின் கல்வி பெறும் நிலையைவிட மிகக்குறைவாகவே உள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் இடஒதுக்கீட்டில், இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் தேர்தலில் வெற்றி பெற்று தாழ்த்தப்பட்டோரின் இடத்தை பிடித்துக்கொள்ளக்கூடும். இதனால் மதமாற்றங்களும் அதிகரித்து இந்திய சமூதாயமே சீர்குலைக்கப்படும்.எனவே ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் அறிக்கையை முழுமையாக நிராகரிக்க வேண்டும்.” என அவர் கூறினார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதால், கே.ஆர். நாராயணனுக்கு பிறகு ஜனாதிபதி பதிவியேற்கும் இரண்டாவது தலித் தலைவர் என்ற பெயர் ராம் நாத் கோவிந்துக்கு கிடைத்திருக்கிறது .

நன்றி:- திரு.கிருபாகரன் முகநூல்



*🔵🔵 விவசாயி முதல் ஜனாதிபதி வரை*

*Follow us on:*
https://twitter.com/SeithiKathir?s=08
 பா.ஜ.,தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்டு நாட்டின் 14 வது ஜனாதிபதியாகும் ராம்நாத்கோவிந்த் விவசாய குடும்பத்தில் பிறந்து சட்டம் பயின்று கவர்னர் வரை பல்வேறு பதவிகளை வகித்தவர்.. இவரது வாழ்க்கை குறிப்பு:

பெயர்: ராம்நாத் கோவிந்த், 71.

பிறந்த தேதி: 1945 அக்., 1.

குடும்ப தொழில் : விவசாயம்

சொந்த ஊர்: தேராபூர், கான்பூர் மாவட்டம், உத்தரபிரதேசம்.

கல்வித் தகுதி : பி.காம்., - எல்.எல்.பி., பட்டம், கான்பூர் பல்கலைக் கழகம்.

திருமணம்: 1974 மே 30

குடும்பம்: மனைவி சவீதா

குழந்தைகள்: மகன் பிரஷாந்த், மகள் ஸ்வாதி.

*சிவில் தேர்வு*

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர். ஆனால் ஐ.ஏ.எஸ்., பணி கிடைக்காததால், சட்டத்துறையில் கவனம் செலுத்தினார்.

*வழக்கறிஞர் பணி*

1971: டில்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு.

1978: சுப்ரீம் கோர்ட்டில், 'அட்வகேட் ஆன் ரெக்கார்டு' பணி.

1979: டில்லி ஐகோர்ட்டில், மத்திய அரசு வழக்கறிஞர்.

1980 - 1993: சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசின் ஸ்டேன்டிங் கவுன்சில்.பார்லிமென்ட் பணி

*பார்லிமெண்ட் பணி*

*1994 : பா.ஜ., சார்பில் உ.பி., யில் இருந்து முதன்முறையாக ராஜ்யசபாவுக்கு தேர்வானர். 2000ம் ஆண்டு 2வது முறையாக ராஜ்யசபா எம்.பி., ஆனார்.

எம்.பி.,யாக இருந்தபோது, உள்துறை, பெட்ரோலியம், சமூக நலம், சட்டம் மற்றும் நீதி, எஸ்.சி., - எஸ்.டி., நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிலைக்குழுக்களில் பணி.

*1998 - 2002 வரை பா.ஜ., தலித் மோர்ச்சா பிரிவு தலைவராக இருந்தார்.

* 2002ல் இந்தியாவின் பிரதிநிதியாக ஐ.நா., சபை பொதுக்கூட்டத்தில் பேசினார். பா.ஜ., செய்தி தொடர்பாளராகவும் இருந்தார்.

* லக்னோவில் உள்ள பி.ஆர்.அம்பேத்கர் சட்ட பல்கலை மற்றும் கோல்கட்டா ஐ.எம்.எம்., கல்லூரி ஆகியவற்றில் உறுப்பினராக பணிபுரிந்துள்ளார்

* 2015 ஆக., 8ல் பீகார் கவர்னராக நியமிக்கப்பட்டார். 2017 ஜூன் 20ல் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதால் கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார்.

*முதல் குடிமகன்*

* 2017 ஜூலை 20: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் மீராகுமாரை தோற்கடித்து, நாட்டின் 14வது ஜனாதிபதி ஆனார். கே.ஆர்.நாராயணனுக்கு பின் தலித் பிரிவை சேர்ந்த 2வது ஜனாதிபதி என்ற பெருமைக்குரியவர். உ.பி.,யில் இருந்து நிறைய பிரதமர்கள் வந்துள்ளனர். முதன்முறையாக அம்மாநிலத்தை சேர்ந்தவர் 'ராஷ்ட்ரபதி பவனில்' நுழைந்துள்ளார்.

No comments:

Post a Comment