Friday, July 28, 2017

NHIS CLAIM

🔵⚪ *அவசரமான நிலையில் ஒரு அரசு ஊழியர் அரசாணையில் கண்டுள்ள மருத்துவமனையில் தான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில்லை - உயர் நீதிமன்றம் உத்தரவு !!!*


பொதுமக்களுக்கு பயன்படும் முக்கிய தீர்ப்பு :- ஓர் அரசு ஊழியர், அரசின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பட்டியலில் குறிப்பிட்டுள்ள மருத்துவமனை அல்லாத ஒரு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்து கொண்டால், அதற்கான மருத்துவ செலவை காப்பீடு நிறுவனம் வழங்க மறுக்க முடியாது. நிதித் (ஊதியம்) துறையின் சார்பில் ஒரு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்து 2012 ஆம் ஆண்டில் G. O. Ms. No - 243 என்கிற எண்ணில் ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. அந்த
அரசாணையின் படி அரசு துறையில் பணிபுரிந்து வருபவர்களுக்கு ரூபாய் 4,00,000/- வரை மருத்துவ உதவி அளிக்கப்பட்டது. அந்த திட்டத்தை நிறைவேற்ற சென்னையில் உள்ள யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நியமிக்கப்பட்டது. மேற்படி அரசாணையில் எந்தெந்த நோய்களுக்கு, எந்த விதமான சிகிச்சைகளுக்கு எந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம் என்ற விபரங்கள் கூறப்பட்டுள்ளது. மேலும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளின் பெயர்களும் வெளியிடப்பட்டுள்ளது. எனவே அரசு ஊழியர்கள் மேற்கண்ட பட்டியலில் கண்ட மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெற வேண்டும். அப்படி அல்லாமல் வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் மருத்துவ காப்பீட்டு திட்டப்படி மருத்துவ செலவு தொகையை வழங்க முடியாது என காப்பீடு நிறுவனம் கூறுவதை ஏற்க முடியாது. ஆனால் இந்த சங்கதியை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு அரசு ஊழியருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நிலையில், அவருடைய உறவினர்கள் காப்பீடு நிறுவனம் குறிப்பிட்டுள்ள மருத்துவமனையை தேடி அலைந்து கொண்டிருக்க முடியாது. ஓர் அவசரமான நிலையில் ஒரு அரசு ஊழியர் அரசாணையில் கண்டுள்ள மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்றிருக்க வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியாது. ஒரு அரசு ஊழியர் அவருக்கு சிகிச்சை செய்த பொழுதோ அல்லது அவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதோ அவருக்கு ஏற்படும் மன வேதனை குறித்து பல வழக்குகளில் உயர்நீதிமன்றம் விவாதித்துள்ளது. ஏற்கனவே K. Srinivasan Vs State of Tamilnadu and Others (W. P. NO - 13594 & 29192/2013 என்ற வழக்கில் மனுதாரருக்கு ஏற்பட்ட மருத்துவ தொகையை அரசு வட்டியுடன் செலுத்த வேண்டும் என 4.9.2014ம் தேதியில் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு மருத்துவ விதிகளில் (Tamilnadu Medical Attendance Rules) சார்ந்திருப்பவர்களுக்கு மருத்துவ சலுகை அளிப்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த விதிகளின்படி அரசு ஊழியர் மருத்துவ செலவை ஈடு செய்யும் படி அரசாங்கத்திடம் கோரலாம் என Star Health And Alaid Insurance company Ltd Vs Sokkan And Others (2010-2-LW-90) என்ற வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. தமிழ்நாடு மருத்துவ விதிகளில் யார் யாரெல்லாம் அந்த விதிகளின்படி மருத்துவ சலுகை பெறலாம் என கூறப்பட்டுள்ளது. அதில் யார் நல்ல வசதியான நபர் என்பதற்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறா விட்டால் மருத்துவ சலுகை பெற முடியாது என்பது உண்மை தான் என்றாலும் காப்பீட்டு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் அரசு ஊழியருக்கு மருத்துவ செலவை அரசு கொடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. W. P. NO. - 1408/2016, DT - 5.4.2016, ராஜா Vs 1)செயலாளர், ஆதிதிராவிடர் நலத்துறை 2) மாவட்ட ஆட்சியர், பெரம்பலூர் மாவட்டம் 3) நிர்வாக இயக்குநர், ஹெல்த் கேர் சர்வீசஸ் பி. லிட் (2016-3-CTC-394)

இரத்தம் பற்றிய சில தகவல்கள் :-

🍎 இரத்த ஓட்டத்தை கண்டரிந்தவர் - வில்லியம் ஹார்வி

🍎 இரத்த வகைகளைக் கண்பிடித்தவர் - கார்ல்லாண்ட் ஸ்டீனர்

🍎 இரத்த வகைகள் - A, B, AB, O

🍎 இரத்தத்தில் Rh Factor முதன்முதலில் எந்த உயிரியியல் இருந்து கண்டுபிடிக்க பட்டது - Rhesus குரங்கில்

🍎 இரத்தத்தில் Rh காரணி இருந்தால் - பாசிடிவ் (Positive)

🍎 இரத்தத்தில் Rh காரணி இல்லாத வகை - நெகடிவ் (Negative)

🍎 சராசரி எடையுள்ள மனித உடலில் இரத்த அளவு - 5 லிட்டர்

🍎 இரத்தம் சிவப்பாக இருக்க காரணம் - ஹீமோகுளோபின் என்ற நிறமி

🍎 இரத்தத்தில் உள்ள திரவப் பொருள் - பிளாஸ்மா (Plasma)

🍎 இரத்தத்தில் சராசரி குளூகோஸ் அளவு - 100-120mg%

🍎 மனித உடலில் சராசரி இரத்த அழுத்தம் - 120/80mm Hg

🍎 இரத்தத்தில் சக்கரை அளவை கட்டுப்படுத்தும் ஹர்மோன் - இன்சுலின்

🍎 அனைத்து வகையான இரத்தத்தை ஏற்றுக் கொள்ளும் இரத்த வகை - AB

🍎 அனைவருக்கும் இரத்தம் வழங்கும் இரத்த வகை - O

🍎 120 mm Hg என்பது - Systolic Pressure

🍎 80 mm Hg என்பது - Diastolic Pressure

🍎 இரத்த செல்களின் வகைகள் - 3

1. சிவப்பு இரத்த செல்கள்
2. வெள்ளை இரத்த செல்கள்
3. இரத்த தட்டுகள்

1. இரத்த சிவப்பு அணுக்கள்:-

🍓 இரத்த சிவப்பு அணுக்கள் வேறுபெயர் - எரித்ரோசைட்டுகள்

🍓 இரத்த சிவப்பு அணுக்கள் உருவாகும் இடம் - எலும்பு மஜ்ஜை

🍓 இரத்த சிவப்பு அணுக்கள் வடிவம் - இரு பக்கமும் குவித்த தட்டையான வட்ட வடிவம்

🍓 இரத்த சிவப்பு அணுக்கள் சிவப்பாக இருக்க காரணம் - ஹீமோகுளோபின்

🍓 ஆண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை - 5.2 மில்லியன்

🍓 பெண்கள் ஒரு கன மி.மீ அளவில் உள்ள இரத்த சிவப்பு அணுக்கள் எண்ணிக்கை - 4.5 மில்லியன்

🍓 ஆண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் வாழ்நாள் - 120 நாட்கள்

🍓 பெண்கள் இரத்த சிவப்பு அணுக்கள் - 110 நாட்கள்

🍓 இரத்த சிவப்பு அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் - இரத்த சோகை (அனிமியா)

🍓 இரத்த சிவப்பு அணுக்கள் அதிகரித்தால் ஏற்படும் நோய் - பாலிசைதீமியா

2. இரத்த வெள்ளை அணுக்கள்:-

🍉 இரத்த வெள்ளை அணுக்கள் வேறு பெயர் - லியூகோசைட்டுகள்

🍉 இரத்த வெள்ளை அணுக்கள் உருவாகுமிடம் - எலும்பு மஜ்ஜை, நிணநீர் சுரப்பி

🍉 இரத்த வெள்ளை அணுக்கள் வடிவம் - வடிவமற்றது

🍉 இரத்த வெள்ளை அணுக்கள் ஆயுட்காலம் - 2 (அ) 3 வாரம்

🍉 இரத்த வெள்ளை அணுக்கள் குறைந்தால் ஏற்படும் நோய் - லியூகோபினியா

🍉 இரத்த வெள்ளை அணுக்கள் அதிகமானால் ஏற்படும் நோய் - லூகீமியா

🍉 உடலின் போர்வீரர்கள் என்று அழைக்கப்படுவது - இரத்த வெள்ளை அணுக்கள்

🍉 லியூகோசைட்டுகள் வகைகள் - 2

1. துகளுள்ள வெள்ளை அணுக்கள்
2. துகளற்ற வெள்ளை அணுக்கள்

🍉 துகளுள்ள வெள்ளை அணுக்கள் வகைகள் 3

☆ நியூட்ரோஃபில்கள்
☆ இயோசினாஃபில்கள்
☆ பேசோஃபில்கள்

🍉 துகளற்ற வெள்ளை அணுக்கள் வகைகள் - 2

☆ லிம்போசைட்டுகள்
☆ மோனோசைட்டுகள்.

🍉 மனித உடலில் இரத்த வெள்ளை அணுக்கள் எண்ணிக்கை - 8000 - 10,000 வரை

🍍இரத்த வெள்ளை அணுக்கள் விகிதாச்சார எண்ணிக்கை கீழ் வருமாறு:

🍉 நியூட்ரோஃபில்கள் - (60 - 70%)
🍉 இயோசினாஃபில்கள் - (0.5 - 3.0%)
🍉 பேசோஃபில்கள் - 0.1%
🍉 லிம்போசைட்டுகள் - (20 - 30%)
🍉 மோனோசைட்டுகள் - (1 - 4%)

3. இரத்த தட்டுகள் :-

🍈 இரத்த தட்டுகள் வேறு பெயர் - திராம்போசைட்டுகள் (பிளேட்லெட்டுகள்)
🍈 இரத்த தட்டுகள் வாழ்நாள் - 5 - 9 நாட்கள்.
🍈 இரத்த உறைதலில் முக்கிய பங்கு வகிப்பது - இரத்த தட்டுகள்
🍈 இரத்த தட்டுங்கள் எண்ணிக்கை - 2,50,000 - 5,00,000
🍈 இரத்த தட்டுங்கள் எண்ணிக்கை வெகுவாக குறைய காரணமான நோய் - டெங்கு ஜுரம்.

பழைய ஊதியக் குழு விபரம்

மத்திய அரசு:-

1வது ஊதியக்குழு . 1947 முதல் ..
2வது ஊதியக்குழு -1959 முதல் ..




3வது ஊதியக்குழு -1973 முதல் ..
4 வது ஊதியக்குழு -1.1.1986 முதல் ..
5 வது ஊதியக்குழு-  1.1.1996 முதல் ..
6 வது ஊதியக்குழு- 1.1.2006 முதல் ..
7 வது ஊதியக்குழு -1.1.2016 முதல் ..
தமிழக அரசு ஊதியக் குழுவின் ஊதிய மாற்றம் அமலான தேதி:-
1வது ஊதியக்குழு- 1.6.1960 முதல் ...
2வது ஊதியக்குழு -2.10. 1970 முதல் ...
3வது ஊதியக்குழு -1.4.1978 முதல் ...
4வது ஊதியக்குழு- 1.10.1984 முதல் ...
5வது ஊதியக்குழு-  1. 6.1988 முதல் ...
6வது ஊதியக்குழு- 1. 1. 1996 முதல் ...
7வது ஊதியக்குழு - 1. 1. 2006 முதல் ...
8வது ஊதியக்குழு  எப்போது ???

இந்தியாவில் ஆட்சி புரிந்தவர்கள்

இந்தியாவில்  ஆட்சி புரிந்தவர்களும்..ஆண்டும்....
முஹம்மது கோரி முதல் மோடி வரை....
👉
1193  : முஹம்மது கோரி
1206   :குத்புதீன் ஐபக்
 1210   :ஆரம்ஷா
  1211  : அல்தமிஷ்
  1236  : ருக்னுத்தீன் ஷா
   1236  : ரஜியா சுல்தானா
    1240  : மெஹசுத்தீன் பெஹ்ரம்ஷா
     1242  : ஆலாவுத்தீன் மஸூத் ஷா
      1246  : நாஸிருத்தீன் மெஹ்மூத்
      1266  : கியாசுத்தீன் பில்பன்
       1286  : ரங்கிஷ்வர்
        1287  : மஜ்தன்கேகபாத்
         1290  :ஷம்ஷீத்தீன் கேமரஸ்
(கோரி வம்ச ஆட்சி முடிவு "97 வருடம்)

கில்ஜி வம்சம்
1290 :1 ஜலாலுத்தீன் பெரோஸ் கில்ஜி
 1292  :2 அலாவுதீன் கில்ஜி
  1316  :4ஷஹாபுதீன்  உமர் ஷா
   1316  : குதுபுத்தீன் முபாரக் ஷா
    1320  : நாஸிருத்தீன் குஸரு ஷா
 ( கில்ஜி வம்ச ஆட்சி முடிவு 30 வருடம்)

துக்ளக்Thaglakவம்சம்

1320  :கியாசுத்தீன் துக்ளக்(1)
1325  : (2) முஹம்மது பின் துக்ளக்
1351  :(3) பெரோஸ்ஷா துக்ளக்
1388  : (4) கியாசுத்தீன் துக்ளக்
1389  : அபுபக்கர் ஷா
1389  :மூன்றாம் முஹம்மது துக்ளக்
1394  :அலெக்சாண்டர் ஷா(7)
1394  :(8) நாஸிருத்தீன் ஷா
1395  : நுஸ்ரத் ஷா
1399  :(10) நாநாஸிருத்தீன் முஹம்மது ஷா.
1413  :(11)தவுலத் ஷா
(துக்ளக் வமிச ஆட்சி 94வருடம்)
சையித் வம்சம்
1414  :1.கஜர்கான்
1421  :2 . மெஹசுத்தீன் முபாரக் ஷா
1434  : 3.மு3 முஹம்மது ஷா
1445  :4 அலாவுதீன் ஆலம் ஷா
(சையத் வம்சம் 37 வருடம்)

லோதி வம்ச ஆட்சி
1451  : பெஹ்லூல் லோதி
 1489  : அலெக்சாண்டர் லோதி
 1517  : இப்ராஹிம் லோதி
 (லோதி ஆட்சி 75 வருடம்)

முகலியாஆட்சி

1526  : ஜஹிருத்தீன் பாபர்
1530 : ஹிமாயூன்

சூரி வமிச ஆட்சி
1539   : ஷேர்ஷா சூரி
 1545  :அஸ்லம் ஷா சூரி
 1552  :மெஹ்மூத் ஷா சூரி
 1553   :இப்றாஹிம் சூரி
  1554  :பர்வேஸ் ஷா சூரி
 1554 :முபாரக் கான் சூரி
 1555 :அலெக்சாண்டர் சூரி
(16வருடம் சூரி ஆட்சி)

முகலாயர் ஆட்சி
1555  :ஹிமாயூன்
1556  :ஜலாலுத்தீன் அக்பர்
 1605  :ஜஹாங்கீர் சலீம்
  1628  :ஷா ஜஹான்
   1659 : ஒளரங்கசீப்
   1707 :ஷாஹே ஆலம்
   1712  :பஹாத்தூர் ஷா
    1713 :பஹாரோகஷேர்
    1719  :ரேபுதாராஜத், நேகஷ்யார்&மெஹ்மூத் ஷா
  1754  :ஆலம்கீர்
   1759 :ஷாஹேஆலம்
   1806 :அக்பர் ஷா
    1837 :பஹதூர்ஷா ஜபர்
(முகலாயர் ஆட்சி 315 வருடம் )

ஆங்கிலேயர் ஆட்சி

1858 : லார்டு கேங்க்
1862 :லார்டு ஜேம்ஸ்பரோஸ்எல்ஙன்
 1864 : லார்ட் ஜான் லோதேநஷ்
1869 :லார்டு ரிசர்டு
1872 :லார்டு நோடபக்
1876 ; லார்டுஎட்வர்ட்
1880 :லார்ட் ஜார்ஜ் ரிப்பன்
 1884 :லார்டு டப்ரின்
 1894 :  லார்டு ஹேஸ்டிங்
1899 : ஜார்ஜ் கர்னல்
 1905: லார்டு கில்பர்ட்
 1910 :லார்டு சார்லஸ்
  1916 :லார்ட் பிடரிக்
  1921 : லார்ட் ரக்ஸ்
   1926:.லார்ட் எட்வர்ட்
   1931: லார்ட் பெர்மேன்வெலிங்டன்
  1936 :லார்டு ஐ கே
   1943:லார்டு அரக்பேல்
     1947 : லார்டு மவுண்ட்பேட்டன்
( ஆங்கிலேயர்கள் ஆட்சி முடிவு)

🇮🇳சுதந்திர இந்தியாவின் ஆட்சி🇮🇳
1947:ஜவஹர்லால் நேரு
 1964:குல்சாரிலால் நந்தா
 1964:லால் பகதூர் சாஸ்திரி
  1966:குல்சாரிலால் நந்தா
   1966: இந்திராகாந்தி
   1977: மொராஜி தேசாய்
    1979: சரண்சிங்
     1980:இந்திராகாந்தி
1984:ராஜீவ்காந்தி
1989:V P சிங்
1990:சந்திரசேகர்
1991:. PN ராவ்
 1992:A.B.வாஜ்பாய்
1996:  A.Jகொளடா
1997:L.K.குஜ்ரால்
1998:A.B.வாஜ்பாய்
2004 :மன்மோஹன்சிங்
2014:நரேந்திர மோடி



👆1992 ல் வருபவை தவறு 1991 முதல் 1996 வரை நரசிம்மராவ் பிரதமர்

சிறு தவறு உள்ளது திருத்திவும்..

Thursday, July 27, 2017

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்:-

1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.

2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.

3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.

4. நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அதுபோல திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம்.

5. இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் காந்திய கொள்கைகளை பிரதிபலித்தது.

6. மாணவ, மாணவிகளைப் பார்த்ததும் அவர் பூரித்துப் போவார். அவர்கள் அருகில் சென்று பேசாமல் இருக்க மாட்டார்.

7. ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சில மரபுகள் இருந்தன. பதவியேற்ற முதல் நாளே அந்த மரபுகளை உடைத்தவர் அப்துல் கலாம்.

8. ‘‘அக்னிச் சிறகுகள்’’ எனும் நூல் அப்துல் கலாமின் சுய சரிதையாக வெளி வந்துள்ளது.

9. அப்துல் கலாம் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அந்த கவிதைகளின் வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைகளாக உள்ளன.

10. அப்துல் கலாம் தன்னடகத்தின் உச்சமாக திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான மனிதர்களை காண்பது அரிது என்று உலக தலைவர்களே வியந்துள்ளனர்.

11. நான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம் துளி அளவு கூட இருந்ததில்லை. சிறு வயது முதல் வாழ்நாளின் இறுதி வரை அமைதியானவர், அன்பானவர் என்ற பாதையில் இருந்து அவர் விலகாமலே இருந்தார்.

12. ‘‘நான் யார் தெரியுமா’’ என்ற ரீதியில் அவர் ஒரு நாள் கூட செயல்பட்டதில்லை. ஒரு தடவை அவர் வெளிநாடு சென்றிருந்த போது விமான நிலைய அதிகாரிகள் அவர் அணிந்திருந்த கால் ஷூ–வை அகற்றி சோதித்த போது, சிரித்துக் கொண்டே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.

13. எந்த ஒரு இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி பரபரப்பு ஏற்படுவதை அவர் ஒரு போதும் விரும்பமாட்டார். ஜனாதிபதியாக இருந்த போது ஒரு நாள் டெல்லி ஜும்மா மசூதிக்கு தொழ சென்ற அவர் இடம் நெருக்கடி காரணமாக கடைசி வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இறைவனை தொழுதது குறிப்பிடத்தக்கது.

14. எந்த அளவுக்கு அவர் தன்னடக்கம் கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு அவர் தன்னம்பிக்கையிலும் உச்சத்தில் இருந்தார். ‘‘நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’’ என்று அடிக்கடி கூறுவார்.

15. இந்திய அரசியல்வாதிகளிடம் இவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை – ‘‘தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’’

16. உலகத் தலைவர்களில் அப்துல் கலாம் அளவுக்கு இளைய சமுதாயம் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை யாருமே உன்னதமான பதில்களை அளித்ததில்லை.

17. அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படா விட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார்.

18. அப்துல் கலாம் மிகப்பெரிய உறவு, நட்பு வட்டாரத்தைக் கொண்டவர். ஆனால் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் யார் ஒருவருக்கும், எதற்கும் சிபாரிசு செய்ததே இல்லை.

19. ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கூட, அந்த மாத சம்பளத்தை வாங்கி அதில் ஒரு பகுதியை தன் குடும்பத்துக்கு அனுப்புவதை அப்துல் கலாம் வழக்கத்தில் வைத்திருந்தார்.

20. அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இன்றும் நடுத்தர வர்க்க வாசிகளாகவே உள்ளனர். அப்துல் கலாமின் கறை படாத நேர்மைக்கு இது ஒன்றே சிறந்த எடுத்துக்காட்டு.

21. அப்துல் கலாம் எந்த ஒரு காலக்கட்டத்திலும், எந்த ஒரு பதவியையும் எதிர்பார்க்காதவர். ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயர் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு வரை அவர் தன் விரிவுரையாளர் பணியில் சுறுசுறுப்பாக இருந்தார்.

22. அப்துல் கலாம் இளம் வயதில் விமானி ஆக வேண்டும் என்று ஆசைப்பாட்டார். அது கிடைக்காததால் பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப படிப்பைத் தேர்வு செய்தார்.

23. அனைத்து வளங்களும் நிறைந்த இந்தியா 2020–ம் ஆண்டில் உலகின் வளர்ந்த 5 நாடுகளில் ஒன்றாக திகழும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இந்தியர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

24. திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1954–ம் ஆண்டு பி.எஸ்.சி படித்த அப்துல் கலாம் அந்த பட்டத்தை வாங்காமல் விட்டு விட்டார். 48 ஆண்டுகளுக்கு பிறகு அதை கேட்டுப் பெற்றார்.

25. யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரம் என்ற சன்னியாசியிடம் அப்துல் கலாம் ஆங்கிலம் கற்றுக் கொண்டார்.

26. ராமேசுவரம் மாவட்ட கல்விக் கழக பள்ளி அறிவியல் ஆசிரியர் சிதம்பரம் சுப்பிரமணியத்திடம் இருந்துதான் அறிவியல் ஆர்வத்தை கலாம் பெற்றார்.

27. அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு தம்ளர் பால். வேறு எதையும் சாப்பிட மாட்டார்.

28. அப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை உண்டு. எப்போதாவது நேரம் கிடைத்தால் அந்த வீணையை வாசிப்பார்.

29. சிறு வயதில் கிணற்றுக்குள் கலாம் கல்லைத் தூக்கிப் போட்டார். அதில் இருந்து குமிழ், குமிழாக வந்தது. அது ஏன் வருகிறது என்று அப்துல் கலாம் கேட்டார். அவர் கேட்ட முதல் அறிவியல் கேள்வி இது தான்.

30. ராமேஸ்வரத்தில் உள்ள லட்சுமணத் தீர்த்தத்தில் தை மாதம் விழா நடத்தும் போது அப்துல் கலாம் குடும்பத்தினருக்கு ‘‘சந்தனப்பாடி’’ என்று ஒரு மரியாதை கொடுத்தனர். அந்த அளவுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினருக்கும் இந்துக்களுக்கும் நெருக்கம் இருந்தது.

31. அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம் உண்டு. தியாகராஜ கீர்த்தனைகளில் சில கிருதிகளை அவர் தெரிந்து வைத்திருந்தார்.

32. 1950–களில் திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்த போது அசைவம் சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது என்று அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினார். பிறகு அதுவே நிரந்தரமாகிப் போனது.

33. 1998–ம் ஆண்டு மே மாதம் 11–ந் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம்தான்.

34. 1958–ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் அப்துல்கலாம் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.250 வழங்கப்பட்டது.

35. இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டு வந்தவையாகும்.

36. இந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் இவரை ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன.

37. போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டு பிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம் ஸ்டெண்டு’’ என்றே பெயராகும்.

38. தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அப்துல் கலாம் படித்துள்ளார். குறிப்பாக திருக்குறளை கரைத்து குடித்திருந்தார் என்றே சொல்லலாம்.

39. இவர் எழுதிய ‘‘எனது பயணம்’’ என்ற கவிதை நூல் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

40. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவரது பழக்கம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட உழைப்பதற்கு தயங்க மாட்டார்.

41. குடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை போன்ற 5 தீய பழக்கங்களை கைவிட நாம் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி காந்தி சமாதியில் எழுதி வைக்க அப்துல் கலாம் அறிவுறுத்தி அதை அமல்படுத்தினார்.

42. இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க, முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வு பணிகளை அப்துல் கலாம் செய்ய வைத்தார்.

43. அப்துல் கலாம் ஒரு போதும் நன்றி மறக்காதவர். தனது ஆசிரியர்கள், நண்பர்கள், உதவி செய்தவர்கள் என அனைவரையும் அடிக்கடி நினைவுப்படுத்தி பேசுவார்.

44. அப்துல் கலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைக்சுவையை வெளிப்படுத்த தயங்கியதில்லை.

45. இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அப்துல் கலாம் மிகவும் விரும்பினார். ஒரு தடவை மைசூரில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்றார்.

46. பணம், வயது, சாதி, இனம், மதம், மொழி என்பன போன்றவற்றில் கலாம் வேறுபாடு பார்த்ததே இல்லை. இந்த அரிய குணத்தை அவர் தம் தந்தையிடம் இருந்து பழக்கத்தில் பெற்றார்.

47. அப்துல் கலாம் தினமும் திருக்குரான் படிக்கத் தவறியதில்லை. அதில் அவருக்கு பிடித்த வரிகள் எவை தெரியுமா?. ‘‘இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’’ எனும் வரிகளாகும்.

இந்த வரிகள், என்னுடைய எல்லா சோதனை நாட்களிலும் என்னை கரை சேர்த்த வைர வரிகள் என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.

48. சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடைகளில் 1950–களில் அப்துல் கலாம், ‘‘த லைட் பிரம் மெனி லேம்பஸ்’’ என்ற புத்தகத்தை வாங்கினார். கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக அதை அவர் பொக்கிஷமாக வைத்திருந்தார்.

49. அறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவும் பெரிலியம் தாது பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே இதுபற்றி கலாம் ஆய்வு செய்தார். இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்து இருப்பதை கண்டுபிடித்தார்.

இதைத் தொடர்ந்து பெரிலியம் மணல் கலவையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள் பிறகு போட்டி போட்டு இந்தியாவுக்கு பெரிலியம் கொடுத்தன.

50. ஒரு தடவை காந்தி சமாதிக்கு சென்ற அப்துல் கலாம், ‘‘காந்தியின் வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளிடம் பரப்ப நான் சபதம் ஏற்கிறேன் என்று குறிப்பு எழுதினார். அதன்படி ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பிறகும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று பேசிவந்தார்.  அவர் கடைசி மூச்சும், இந்த பணியில்தான் நிறைவுற்றது ,,..!

நடப்பு நிகழ்வுகள் வினாக்கள்

01) தெற்காசிய நாடுகளின் நாடாளுமன்ற  சபாநாயகர்கள் மாநாடு எங்கு நடைபெற்றது ? மாநாட்டின்  கருப்பொருள் என்ன ?

02) தேசிய மகளிர் நாடாளுமன்றம் என்ற கருத்தரங்கம் நடைபெற்ற இடம் எது ?

03) சர்தார் சரோவர் திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு மற்றும் மறுவாழ்வு பணிகள் பற்றி நிர்ணயம் செய்ய, உச்சநீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட நீதிபதிகள் குழுவினர் யார்?

04) பெங்களூருவில் எத்தனையாவது விமான கண்காட்சி  நடைபெற்றது ?

05) சர்வதேச நாணய கண்காட்சி எங்கு நடைபெற்றது ?

06) இந்தியாவில் நடைபெறவுள்ள 18 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து போட்டியின் சின்னம் எது ?

07) இந்தியாவின் முதல் விளையாட்டு இலக்கிய திருவிழா எங்கு நடைபெற்றது ?  அதன் பெயர் என்ன ?

08) துபாய் அரச குடும்பத்தில் இருந்து  பைலட் பயிற்சியை நிறைவு செய்துள்ள பெண் யார் ?

09) இந்தியாவில் அதிகளவில்  குருடாயில் உற்பத்தி செய்யும் முதல் இரு மாநிலங்கள் எவை ?

10) தன்னார்வமாக ஒரு நாள் ஆசிரியராக பணி புரிய, ம.பி. மாநில அரசால் துவக்கப்பட்ட திட்டம் எது ?

11) e - Prison என்ற திட்டம் துவங்கப்பட்ட மாநிலம் எது?

12) பொது விநியோக திட்டத்தில், cashless transactionஐ  அறிமுகம் செய்த முதல் மாநிலம் எது?

13) எந்த மலைவாசஸ்தலத்தில்  முதன் முதலாக சைக்கிள் பாதை அமைக்கப்பட்டுள்ளது ?

14) RAHAT விரிவாக்கம் என்ன ?  எது தொடர்பானது ?

15) முன்பதிவு செய்யப்படாத பயணிகளுக்கான விசேஷ ரயில் சேவை,  அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் (Antyodaya Express) எந்த இரு நகரங்களுக்கு இடையில் முதன்முதலாக இயக்கப்பட்டது ?

16) சர்வதேச அளவில் தற்கொலையில் இந்தியா  எந்த இடத்தில்  உள்ளது ?

17) வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் குடும்பங்களில் நிகழும் மரணத்திற்கான இடுகாடு செலவுக்கு ரூபாய் இரண்டாயிரம் வழங்கப்படும்  என அற்வித்த முதல்வர் யார் ?

18) அரசு பணியாளர்களுக்கு,  லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான பயிற்சி வழங்கப்படும் என அறிவித்துள்ள மாநில அரசு எது ?

19) பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சக்‌ஷர்தா அபியான் திட்டத்தின்  இலக்கு என்ன ?

20) பிப்ரவரி 2017ல்  புவிசார்  குறியீடு பெற்ற  தேக்கு எது ?


 1. Indore, sustainable development
2. Amaravati
3. ?
4. 11th
5. Trivandrum
6. Kheleo
7. Pune (SporTale)
8. Shaikha mozah Al Maktoum
9.Maharastra and Rajasthan
10. Mile banche Madhya Pradesh
11. Jammu and Kashmir
12. Gujarat
13. Darjiling, west Bengal
14. Rajasthan heart attack treatment programme
15. First - Mumbai to Tata Nagar
Second - Ernakulam to Howrah
16. 1st
17. ?
18. Kerala
19. March 2019
20. Kerala nilampur teak



"நீவீழி காக்கும் கை காராளர் கை" என்று கூறியவர்  - கம்பர்

எள்ளல் இளமை அறியாமை மடமை  ஆகிய காரணங்களால்  நகைச்சுவை தோன்றுகிறது என்று கூறியவர் - தொல்காப்பியர்

"நகைச்சுவை இல்லாதவர்க்கு பகல் கூட இருளாக தோன்றும்" என்று கூறியவர்  - திருவள்ளுவர்

"எரிந்திலங்கு சடைமுடி முனிவர் புரிந்து கண்ட பொருள் மொழிந்தன்று" -  ஐயனாரிதனார்
read more http://www.tnpsctamil.info/2017/07/vao-tnpsc-tamil-questions.html

Dr.A.P.J.

Dr.APJ.Abdul Kalam

1931 ஆம் ஆண்டில்

அக்டோபர் மாதம் 15 ஆம் நாளில்

ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாகவும்

இந்தியாவின்

தமிழ்நாடு மாநிலத்தில்

பாம்பன் தீவில்

 இராமநாதபுரம் மாவட்டத்தில்

ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் ஒரூ இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தாலும்

இந்தியாவின் சாதனையாளர்

எங்கள் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்கள் ...

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி

தொழில்நுட்ப வல்லுநர்

மிகப்பெரிய பொறியியளாலர்

இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர்

இந்திய ஏவுகணை நாயகன்

இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை

அனைத்து வயது மாணவர்களுக்கும் மிகச்சிறந்த ஆசிரியர்

அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர்

வருங்கால இளைஞர்களின் எழுச்சி நாயகன்

எதிர் கால கனவு நாயகன்

என்று பல புனைப்பெயர்களுக்கு சொந்தக்காரர்

எங்கள் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்கள் ...

அவரது உழைப்பை பாராட்டி வழ‌ங்கப்பட்ட விருதுகள் பல‌

1981 ‍ம் ஆண்டில் பத்ம பூஷன்

1990 ம் ஆண்டில் பத்ம விபூஷன்

1997 ம் ஆண்டில் பாரத ரத்னா

1997 ம் ஆண்டில் தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது

1998 ம் ஆண்டில் வீர் சவர்கார் விருது

2000 ம் ஆண்டில் ராமானுஜன் விருது

2009 ம் ஆண்டில் சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது

2009 ம் ஆண்டில் ஹூவர் மெடல்

2012 ம் ஆண்டில் சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது

என்று பல விருதுகளுக்கு சொந்தக்காரர்

எங்கள் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்கள் ...

 அவர் தன் குடும்ப ஏழ்மை நிலையை தாண்டிச்சென்று பல கஷ்டங்களை கடந்து வாங்கிய

பட்டங்கள் பல‌

2007ம் ஆண்டில் அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்

2007 ம் ஆண்டில் கிங் சார்லஸ்-II பட்டம்

2008 ம் ஆண்டில் பொறியியல் டாக்டர் பட்டம்

2010 ம் ஆண்டில் பொறியியல் டாக்டர் பட்டம்

2012 ம் ஆண்டில்  சட்டங்களின் டாக்டர்

என்று பல பட்டங்களுக்கு சொந்தக்காரர்

எங்கள் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்கள் ...

 ஏராளமான விருதுகளும் பல பட்டங்களும்  பெற்ற போதும்

இந்திய அரசு மாளிகையில் பல ஆண்டு காலம் வாழ்ந்த போதும்

தன் ஏழ்மை நிலையில் இருந்து கடைசிவரை வாழ்ந்து காட்டியவர்

எங்கள் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்கள் ...

எழுத்துலகினில் அவரின் படைப்புக்கள் பல‌

அக்னி சிறகுகள்

இந்தியா 2020

எழுச்சி தீபங்கள்

அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை

என்று பல நூல்களை எழுதி அவைகளின் மூலமும்

இளைஞர்களின் மனதில் எழுச்சியை தூண்டி விட்டவர்

எங்கள் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்கள் ...

கடைசி வரை பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து நாட்டின் நன்மைக்காக உழைத்தவர்..

தனக்கென்று ஒரு வீடு கூட அமைத்துக்கொள்ளாதவர்..

யாரிடமும் எந்த பொருளும் பரிசாக பெற்றுக்கொள்ளாதவர்..

எந்த சூழ்நிலையில் எங்கு வாழ்ந்தாலும் தன் குணம் மாறாத உன்னதமான மாமனிதர்..

கனவு காணுங்கள் அந்த கனவை நினைவாக்க பாடுபடுங்கள் என்னும் வாக்கியத்தை

இளைஞர்களின் மனதில் வேரூன்ற செய்யும் படி வாழ்ந்து காட்டியவர்..

எங்கள் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்கள் ...

இப்படி உலகிற்க்கு ஒரு தனிமனிதனாக இளைய தலைமுறைக்கு முன் மாதிரியாக வாழ்ந்த எங்கள் அப்துல் கலாம் அய்யா அவர்கள்

ஜூலை 27, 2015 ஆம் நாளில் ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் மேடையில் மாணவர்கள் மத்தியில் மாணவ‌ர்களுக்காக பேசிக்கொண்டிருந்தபோதே அவரை படைத்தவன் அழைத்துக்கொண்டான்.

மாணவ‌ர்களுக்காகவே வாழ்ந்து மாணவ‌ர்களுடனே

தன் உயிர் பிரிந்தார் எங்கள் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்கள் ...

சரித்திர நாயகனே,,
சரித்திரத்தில் முதல் முறையாக ஒரு விண்கலம் பூமிக்கு கீழே ஏவப்பட்டது!!!

பிறப்பது ஒரு ச‌ம்பவமாக  இருக்கலாம்
ஆனால்
இறப்பது ஒரு சரித்திரமாக
இருக்க வேண்டும்...

என்கின்ற தன் வரிகளுக்கு உதாரணமாக தன் வாழ்க்கையை வாழ்ந்து தன் மரணத்தை கூட சரித்திரமாக்கியவர்

எங்கள் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்கள் ...

காந்தியடிகள் எங்களுக்கு தாத்தா என்றால்

நேஹரு எங்களுக்கு மாமா என்றால்

எங்கள் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அய்யா அவர்கள் எங்களுக்கு தந்தை ...

ஐயா, நீங்கள் எங்களை விட்டு சென்று விட்டதாக சொல்கிறார்கள் இல்லை .

மண்ணில் மட்டுமே உங்கள் உருவம் மறையும் எங்களுக்குள் உங்கள் கனவை விதையாக விதைக்கப்பட்டுள்ளீர்கள்.

என் இந்த வரிகள் கலாம் அய்யாவுக்கு சமர்ப்பணம்....
கலாம் பெற்ற விருதுகள்:
1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது
1998 – வீர் சவர்கார் விருது
2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
2012 –  சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது
கலாம் எழுதிய நூல்கள்:
அக்னி சிறகுகள்
இந்தியா 2020
எழுச்சி தீபங்கள்
அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை


Sunday, July 23, 2017

GST official

GST Chairman-Arun jaitley
GSTN Ceo-Prakash kumar
GSTN chairman-Naveen kumar
GSTN executive vice president-Kajal singh
GST Finance ministers panel chairman-Amit mishra
GST Commissioner-Upendra gupta
GST facilitation cell headed by-Sudhansu sekhar das
GST ambassador-Amitabh Bacchhan
GSTN implemented by-Infosys
GST Recommended by-Vijay kelkar

# SHORTCUTS #

பாத்_து_போ_விஜய்_சேலத்துக்கு

இரும்பு எஃகு தொழிற்சாலை

பான்பூர்-1952
துர்க்காபூர்-1962
பொக்காரோ-1972
விஜய்பூர்-1982
சேலம்-1982

#சோழர் ஆத்துல
பணம் சேர
பாண்டியனுக்கு வேம்பாய் கசந்தது.

சோழர் = ஆத்திப்பூ
சேரர் = பனம்பூ
பாண்டியர் = வேம்பூ

#MCC = Melbourne Cricket Club

காங்கிரஸ் மாநாடு

M=Mumbai-1885
C=Culcutta-1886
C=Chennai-1887

#ஏய்_பாண்டி_பாஸ் ஆய்ட்டான்

எய்ஸ்-லா-சபேல் உடன் படிக்கை=முதல் கர்நாடகா போர்

பாண்டிச்சேரி உடன்படிக்கை =2ம் கர்நாடக போர்

பாரீஸ் உடன்படிக்கை=3ம் கர்நாடக போர்

#Sankar Fall in Love
Sankaradass - லவகுசா

Supreme court judge
Code = சலோ_தாத்தா

40=ச=சதாசிவம்
41=லோ=லோத்தா
42=தத்=தத்து
43=தா=தாக்கூர்

#எ ட்டு #யா னை #ஆ று #ஒ ட்டகம் #ஏ த்து

வினா எழுத்துக்கள் =எ.யா.ஆ.ஒ.ஏ

#சாக்பீஸ்_ஆஆ

சாக்ரடீஸ் மாணவர் >பிளேட்டோ

பிளேட்டோ மாணவர் >அரிஸ்டாடில்
அரிஸ்டாடில்>அலக்சாண்டர்

#ஸ்வேதா_பர்ஸ்_ஒயிட்டு

> வெள்ளை ஆடை அணிந்தவர்கள்
> பர்ஸவநாதரின் எளிய கொள்கையை பின்பற்றியவர்கள்
> #ஸ்வேதம்பரர்கள

வங்காள விரிகுடா கடலை எல்லையாக கொண்ட இந்திய மாநிலங்கள். (shortcutd idea)

The states which bordered bay of bengal.
1) Bengal
2) Odisha
3) Andhra Pradesh
4) Tamil nadu

SHORTCUT : BOAT (கடலில் பயணம் BOAT தேவை)

B - Bengal
O - Odisha
A - Andhra Pradesh
T - Tamilnadu

1) பட்டு புழு வளர்ப்பு - செரிகல்சர்
2) தேனீ வளர்ப்பு- எபிகல்சர்
3) மீன் வளர்ப்பு - பிசிகல்சர்

#நினைவில் வைக்க

பட்டுசாரி (Saree)- (செரி)கல்சர்
தேனீ ஆங்கிலத்தில் (bee)- எ(பி)கல்சர்
மீன்(fish)- (பிசி)கல்சர்

௨ள்ளாட்சி துறையின் தந்தை - ரிப்பன் பிரபு

#(ஊதா) கலரு (ரிப்பன்)

MAJOR MICA PRODUCING COUNTRIES IN THE WORLD:
(மைக்கா அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகள்)
BRASIL, RUSSIA, AMERICA, INDIA and NORWAY
CODEWORD: BRAIN
B - BRASIL
R - RUSSIA
A - AMERICA
I - INDIA
N - NORWAY

Frequently asked two mark question in X. (Geog)

இந்தியாவில் மைக்கா உற்பத்தி செய்யும் மாநிலங்கள் யாவை?

*ஆபீராஜா.*

*ஆ*ந்திரபிரதேசம்
*பீ*கார்
*ரா*ஜஸ்தான்
*ஜா*ர்கண்ட்

#மைசூர்_சென்று_மங்களகரமாக_ஶ்ரீரங்கநாதரை வணங்கு.

மைசூர் = மைசூர் போர்
சென்று = சென்னை உடன்படிக்கை
மங்களகரமாக = மங்களூர் உடன்படிக்கை
ஶ்ரீரங்கநாதரை = ஶ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை

முதல் மைசூர் போர் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை = சென்னை உடன்படிக்கை

இரண்டாம் மைசூர் போர் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை = மங்களூர் உடன்படிக்கை

மூன்றாம் மைசூர் போர் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை = ஶ்ஸ்ரீங்கப்பட்டினம் உடன்படிக்கை

மைசூர் சென்று மங்களகரமாக ஶ்ரீரங்கநாதரை வணங்கு.

கபிலர் - கபிலர்-29
சோழத்திணையை - சோழன் நல்லுருத்தினார்-17
மருத நிலத்தில் - மருதூர் இளந்தத்தனார்-35
நட்டு - நல்லாதனார்-33
பெருக்கினார் - பெருங்கடுங்கோ-35

கபிலர் சோழத்திணையை மருத நிலத்தில் நட்டு பெருக்கினார்

#short_cut
தமிழகத்தில் செம்பு(காப்பர்), BAUXITE அதிகம் உற்பத்தி செய்யும் மாவட்டங்கள்:

CODEWORD : MANISA KOIRALA ((மனிஷா கொய்ராலா)
MA - MADURAI, MAMANDUR
NI - NILGRIS
SA - SALEM
KOI - KOVAI

பாரதிதாசன் படைப்பு

ஒரு இருண்ட வீடு அந்த வீட்டுக்குள்ளே ஒரு அழகின் சிரிப்பு கேட்டது உடனே பாண்டியன் பரிசு எடுத்துகிட்டு குடும்ப விளக்கு கொண்டு உள்ளே போனான் அங்கே வீரத்தாய்க்கு எதிர்பாராத முத்தம் கொடுத்து விட்டான் அது அவனுக்கு சஞ்சீவி பர்வதத்தின் சாரலாக இருந்தது ஆனால் அந்த வீரத்தாய் தமிழச்சியின் கத்தி எடுத்துகிட்டு சேரதாண்டவம் ஆடினாள் இந்த விசயம் முதியோர் காதல், இளைஞர் இலக்கியம் தமிழ் இலக்கியத்திற்கு தெரிந்து பிசிராந்தையார், சௌமி முன்னிலையில் குறிஞ்சித்திட்டில் பஞ்சாயத்து நடந்தது. இதுதான் கண்ணகி புரட்சி காப்பியம்.

12ம் நூற்றாண்டு கவிஞர்கள்

CODE #JOB_OK_S

J-ஜெயங்கொண்டார்
O-ஒட்டகூத்தர்
B-புகழேந்தி
O-ஔவையார்
K-கம்பர்
S-சேக்கிழார்

வடமொழி கலப்புடன் அதிகம் பாடிய புலவர்கள்

Code #VAO
V-வில்லிபுத்தூரர்
A-அருணகிரிநாதர்
O-ஒட்டகூத்தர்

2016 ஆம் ஆண்டிற்கான பத்ம விபூசன் விருது பெற்றவர்கள் : (wit SHORTCUT IDEA)

1) Santha (Dr.)
2) Rajnikanth
3) Athrae
4) Avinash Deekshit
5) Ravi Shankar
6) Ramoji Rao
7) Jagmohan Dalmia
8) Dhrubai Ambani
9) Girija Devi
10) Yamini krishnamoorthy

மேற்கண்ட அணைத்து பெயர்களையும் எளிதில் நினைவில் வைத்துகொள்ள " SAROJA DEVI "என்ற சினிமா நடிகையின் பெயரினை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டால் போதுமானது.

SAROJA DEVI என்ற பெயரில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் மேற்கண்ட 10 நபர்களின் பெயர்களை குறிக்கும்.

CODEWORD : "SAROJA DEVI.Y"

S - Santha
A - Athrae, Avinash Deekshit
Ro - Rajnikanth, Ravi Shankar
JA - Jagmohan Dalmia
D - Dhrubai Ambani
DEVI - Girija Devi
Y - Yamini Krishnamoorthy

சமீபத்தில் கண்டறியப்பட்ட 4 தனிமங்கள்

நினைவிற்க்கு
#நீ_மாஸ்க்_போட்டு_டென்னிஸ் விளையாட்னா _#ஒகே

நீ=நிஹோனியம்(113)
மாஸ்க்=மாஸ்கோவியம்(115)
டெனனிஸ்=டென்னிசை
ன்(117)
ஒகே= ஒகநேசன் (118)

தமிழகத்தை கடந்த 20 ஆண்டுகளாக உலுக்கிய புயல்களின் பெயர்கள் (with shortcut ideas)
Important cyclones of tamilnadu for the past 20 years (with shortcut ideas)
SHORTCUT : "சரிகமபதநி"
ச - சல் (ஜல்-2010)
ரி - ரோவன் (2015)
ம - மதி (2014)
ப - பாப் (1991,1992,1993,2000), பானூஸ்(2005)
த - தானே (2011)
நி - நிலம் (2012), நிஷா(2008).

#short_cut
படிங்க நண்பரே!!!:
தமிழ் -2004
சமஸ்கிருதம் -2008
கன்னடம்-2008
தெலுங்கு -2008
மலையாளம் -2013
ஒடியா -2014
[ செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட மொழிகள்
தமிழ்
கன்னடம்
சமஸ்கிருதம்
தெலுங்கு
மலையாளம்
ஒடியா
shortcut;தமிழனை கண்டதும் சம்பந்தமில்லாமல் தெற்கே மலையாளி ஓடினான்...

ஐந்திணை உரிப்பொருள்

புண்ணாக்க இருந்தாலும் ஊரவச்சு இரக்கின பிஸ்தா

விளக்கம்

குறிஞ்சி_ புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

முல்லை_ இருத்தல்

BIO - METRIC

*டிசம்பர் மாதம் முதல் அரசு ஊழியர்களுக்கு விரல் ரேகை பதிவு அமல்*

தமிழக அரசு ஊழியர்களுக்கு விரல் ரேகை வருகைப்பதிவு முறை டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள், அலுவலகத்துக்கு வரும் நேரத்தை கண்காணிக்க விரல் ரேகை பதிவு அமலில் உள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை தலைமைச் செயலகம் உள்ளிட்ட எந்த அரசு அலுவலகங்களிலும் இந்த வருகை பதிவு முறை நடைமுறையில் இல்லை.

அரசு ஊழியர்கள் காலை 9.45 மணி முதல் 10 மணிக்குள் வேலைக்கு வரவேண்டும். மாலை 5.45 மணி வரை பணியாற்ற வேண்டும். இவர்களுக்கு காலையில் 10.10 மணிவரை வேலைக்கு வர சலுகையும் உள்ளது மாதம் 2 நாட்கள் தலா 1 மணி நேரம் ‘பெர்மி‌ஷன்’ கொடுக்கப்படுகிறது. காலம் தாழ்த்தி வந்தால் பெர்மி‌ஷனில் கழித்துக் கொள்ளலாம். அல்லது அரை நாள் தற்செயல் விடுப்பில் சென்றுவிடும்.

ஆசிரியர்களை பொறுத்த வரை காலை 9.20 மணி முதல் 4.10 மணிவரை பணி நேரம் உண்டு. ஆனால் சில ஊழியர்கள் சரியான நேரத்துக்கு வேலைக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

தினசரி நேரம் கடந்து வருபவர்கள் மீது பள்ளி கல்வித்துறை சில நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. ஆனாலும் இன்னும் ‘லெட்ஜரில்’ கையெழுத்திடும் முறைதான் செயல்பாட்டில் உள்ளது.

இப்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வருகை பதிவேடு, ஊதியம் சர்வீஸ் பைல், ஓய்வு விவரம் உள்ளிட்ட சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதற்காக பிரத்யேக மென்பொருள் தயாரிக்கப்பட்டு அனைத்து அரசு அலுவலகங்களிலும் நடைமுறைபடுத்த முதற்கட்ட பணிகள் துவங்கி உள்ளது.

இதை செயல்படுத்தும் ஒருங்கிணைப்பாளராக விப்ரோ நிறுவனம் உள்ளது. டிஜிட்டல் மயம் பற்றி உயர் அதிகாரி கூறியதாவது:-

அரசின் வரவு- செலவு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் ஒரே சமயத்தில் அறிந்து கொள்ள ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தை தமிழக அரசு கொண்டு வருகிறது.

இதில் டிஜிட்டல் கையொப்பம், விரல் ரேகை பதிவு மூலம் வருகைப் பதிவை உறுதி செய்தல் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் கட்டாய மாக்கப்படுகிறது.

இதில் விரல் ரேகை வருகைப்பதிவு டிசம்பர் முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கு அமலாகிறது. தமிழகம் முழுவதும ஒரே சமயத்தில் நடைமுறைபடுத்துவது சற்று சிரமம் ஆனாலும் படிப் படியாக அனைத்து அலுவலகங்களுக்கும் இதை கொண்டு வந்து செயல்படுத்த விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பணிப்பதிவேடு 'டிஜிட்டல்' ஆக்கும் பணி முடிந்தவுடன், புதிய 'இ-பேரோல்'

ஊழியர்களின் பணிப்பதிவேடு 'டிஜிட்டல்' ஆக்கும் பணி முடிந்தவுடன், புதிய 'இ-பேரோல்' செயல்படுத்தப்படும் !!
அரசு ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய நடைமுறைப்படி 'இ-பேரோல்' மென்பொருளில் ஊழியர்களின் ஊதியம், பணப்பலன் பட்டியல் பதிவு செய்யப்பட்டு, கருவூலத்திற்கு சி.டி.,யாகவும், 'பிரின்ட்' படிவமாகவும் அனுப்பப்பட்டு வருகிறது.


 இதில், தாமதம் ஏற்படுவதோடு, காகித பயன்பாடும் அதிகமாக உள்ளது. இதை தவிர்க்கும் வகையில் புதிய 'இ-பேரோல்' மென்பொருள் கொண்டு வரப்பட உள்ளது. இதில் ஊதியம், பணப்பலன் பட்டியல் தயாரித்து 'ஆன்லைன்' மூலமே கருவூலத்திற்கு அனுப்பப்படும்.

இதற்காக வரைவு அலுவலர்கள், இளநிலை உதவியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது மென்பொருளை கம்ப்யூட்டரில் ஏற்றுவதற்காக கருவூலகங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. பெரும்பாலான கம்ப்யூட்டர்கள் பழையதாகவும், 'மெமரி' குறைவானதாகவும் உள்ளன. இதனால் அவற்றில் புதிய மென்பொருளை ஏற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கருவூல அதிகாரி ஒருவர் கூறியதாவது: வரைவு அலுவலர், பட்டியல் தயாரிக்கும் ஊழியர்களுக்கு தனித்தனியாக இரண்டு கம்ப்யூட்டர்கள் வேண்டும். மேலும் புதிய 'இ-பேரோல்' மென்பொருள் இயங்குவதற்கு 4 ஜி.பி., 'ரேம்' வேண்டும். இதனால் பழைய கம்ப்யூட்டர்களை மாற்றிவிட்டு, புதிதாக வாங்க அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஊழியர்களின் பணிப்பதிவேடு 'டிஜிட்டல்' ஆக்கும் பணி முடிந்தவுடன், புதிய 'இ-பேரோல்' செயல்படுத்தப்படும் என்றார்.

First industries to be setup in India

1. first cotton industry -- rishra -- kolkatta -- 1818
2. first iron industry -- port nova -- chennai -- 1830
3. first paper industry -- srirampur -- kolkatta -- 1832
4. first modern cotton textile industry -- mumbai -- 1854
5. first jute textile industry -- rishra - kolkatta -- 1855
6. first ceramic industry -- patraghat -- bihar -- 1860
7. modern paper industry -- ballgang -- kolkatta -- 1870
8. Bengal iron works limited -- kutti -- wbengal -- 1875
9. woolen textile industry -- kanpur -- 1876
10.first sugar industry -- PUSA -- bihar -- 1903
11.first phosphate fertilizer industry -- ranipet-- tamilnadu-- 1906 12.TISCO -- tata steel company -- sakshi -- jamshedpur -- 1907 13.IISCO -- Baranpur -- wbengal -- 1919
14.vishweryyya tron & steel -- badravathi -- karnartaka-- 1923  15.first silk industry -- howrah -- 1932
16.first glass industry -- ferozabad -- uttarpradesh-- 1932
17.first fertilizer industry -- sindri -- bihar -- 1951
18.first shipyard limited -- hindustan shipyard limited -- vizag --
    1952
19.HMT -- hindustan machines & tools -- banglore -- 1953  20.BEL --Bharat electronics limited -- banglore -- 1954 21.synthetic rubber plant -- baralie -- UP --1955
22.BEML -- Banglore -- 1964
23.HAL -- BANGLORE -- 1964
24.BDL -- hyderabad -- 1970
25.MIDANI -- hyderabad -- 1973

Saturday, July 22, 2017

குடியரசுத் தலைவருக்கான புதிய அதிகாரிகள்!

புதிய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ராம் நாத்
கோவிந்தின் அலுவலகத்துக்கான முக்கிய அதிகாரிகளை மத்திய அரசு நேற்று ஜூலை 21 இரவு நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்…

மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சஞ்சய் கோத்தாரி புதிய குடியரசுத் தலைவரின் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மூத்த பத்திரிகையாளர் அசோக் மாலிக், குடியரசுத் தலைவர் மாளிகையின் புதிய ஊடக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய வனத்துறை அதிகாரியான பரத்லால், குடியரசுத் தலைவர் மாளிகையின் புதிய இணை செயலாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

சஞ்சய் கோத்தாரி 1978 ஆம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. ஹரியானாவை சேர்ந்தவர். ஏற்கனவே மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறையின் செயலாளராக பணியாற்றிய சஞ்சய் கோத்தாரி, கடந்த 2016 ஜூன் மாதம் ஓய்வு பெற்றார். ஐந்தே மாதங்களில் அவர் மத்திய பொதுத் துறை தேர்வு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இப்போது பிரதமர் அலுவலகத்தின் கூடுதல் முதன்மை செயலாளராக இருக்கும் டாக்டர் பி.கே.மிஸ்ராவுக்கு சஞ்சய் கோத்தாரி மிகவும் நெருக்கமானவர் என்று டெல்லி அதிகாரிகள் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்நிலையில் குடியரசுத் தலைவரின் செயலாளர் என்ற உயர் பதவிக்கு சஞ்சய் கோத்தாரி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

குடியரசுத் தலைவர் மாளிகையின் இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பரத்லால் குஜராத்தை சேர்ந்த 1988 ஆம் ஆண்டு பேட்ச் ஐ.எஃப்.எஸ். அதிகாரி. வனத்துறையில் பணியாற்றிய இவர், இப்போது குஜராத் அரசின் குடியுரிமை ஆணையராக டெல்லியில் பணியாற்றி வருகிறார்.

குடியரசுத் தலைவரின் புதிய ஊடக செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் அசோக் மாலிக், இருபது வருடங்களாக இந்திய மற்றும் சர்வதேச பத்திரிகைகளில் அரசியல், பொருளாதாரக் கட்டுரைகளை எழுதி வருபவர். நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஶ்ரீ

விருதினை கடந்த வருடம் பெற்றவர்.

25 ஆம் தேதி புதிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவியேற்றதும் குடியரசுத் தலைவர் மாளிகையில் மேற்கண்ட இந்த புதிய அதிகாரிகள் பணிகளைத் தொடங்குவார்கள்.

மயங்கொலிச் சொற்கள் :

📚 தமிழில் உள்ள மயங்கொலிச் சொற்கள் :
ண, ன பொருள் வேறுபாடு
அணல் - தாடி, கழுத்து
அனல் - நெருப்பு
அணி - அழகு
அனி - நெற்பொறி
அணு - நுண்மை
அனு - தாடை, அற்பம்
அணுக்கம் - அண்டை, அண்மை.
அனுக்கம் - வருத்தம், அச்சம்
அணை - படுக்கை, அணைத்துக்
கொள்ளுதல்
அனை - அன்னை, மீன்
அணைய - சேர, அடைய
அனைய - அத்தகைய
அண்மை - அருகில்
அன்மை - தீமை, அல்ல
அங்கண் - அவ்விடம்
அங்கன் - மகன்
அண்ணம் - மேல்வாய்
அன்னம் - சோறு, அன்னப்பறவை
அண்ணன் - தமையன்
அன்னன் - அத்தகையவன்
அவண் - அவ்வாறு
அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன்
ஆணகம் - சுரை
ஆனகம் - துந்துபி
ஆணம் - பற்றுக்கோடு
ஆனம் - தெப்பம், கள்
ஆணி - எழுத்தாணி, இரும்பாணி
ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று
ஆணேறு -ஆண்மகன்
ஆனேறு - காளை, எருது
ஆண் - ஆடவன்
ஆன் - பசு
ஆணை - கட்டளை, ஆட்சி
ஆனை - யானை
இணை - துணை, இரட்டை
இனை - இன்ன, வருத்தம்
இணைத்து - சேர்த்து
இனைத்து - இத்தன்மையது
இவண் - இவ்வாறு
இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு)
ஈணவள் - ஈன்றவள்
ஈனவள் - இழிந்தவள்
உண் - உண்பாயாக
உன் - உன்னுடைய
உண்ணல் - உண்ணுதல்
உன்னல் - நினைத்தல்
உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி
உன்னி - நினைத்து, குதிரை
ஊண் - உணவு
ஊன் - மாமிசம்
எண்ண - நினைக்க
என்ன - போல, வினாச்சொல்
எண்ணல் - எண்ணுதல்
என்னல் - என்று சொல்லுதல்
எண்கு - கரடி
என்கு - என்று சொல்லுதல்
ஏண் - வலிமை
ஏன் - வலிமை, ஒரு வினைச்சொல்
ஏணை - தொட்டில்
ஏனை - மற்றது
ஐவணம் - ஐந்து வண்ணம்
ஐவனம் - மலை நெல்
ஓணம் - ஒரு பண்டிகை
ஓனம் – எழுத்துச்சாரியை
கணகம் - ஒரு படைப்பிரிவு
கனகம் - பொன்
கணப்பு - குளிர்காயும் தீ
கனப்பு - பாரம், அழுத்தம்
கணி - கணித்தல்
கனி - பழம், சுரங்கம், சாரம்
கணம் - கூட்டம்
கனம் -பாரம்
கண்ணன் - கிருஷ்ணன்
கன்னன் - கர்ணன்
கண்ணி - மாலை, கயிறு, தாம்பு
கன்னி - குமரிப்பெண், உமை, ஒரு
ராசி
கணை - அம்பு
கனை - ஒலி, கனைத்தல்
கண் - ஓர் உறுப்பு
கன் - கல், செம்பு, உறுதி
கண்று - அம்பு
கன்று - அற்பம், இளமரம், குட்டி,
கைவளை
கண்ணல் - கருதல்
கன்னல் - கரும்பு, கற்கண்டு
காண் - பார்
கான் - காடு, வனம்
காணம் - பொன், கொள்
கானம் - காடு, வனம், தேர், இசை
காணல் - பார்த்தல்
கானல் - பாலை
கிணி - கைத்தாளம்
கினி - பீடை
கிண்ணம் - வட்டில், கிண்ணி
கின்னம் - கிளை, துன்பம்
குணி - வில், ஊமை
குனி - குனிதல், வளை
குணித்தல் - மதித்தல், எண்ணுதல்
குனித்தல் - வளைதல்
குணிப்பு - அளவு, ஆராய்ச்சி
குனிப்பு - வளைப்பு, ஆடல்
கேணம் - செழிப்பு, மிகுதி
கேனம் - பைத்தியம், பித்து
கேணி - கிணறு
கேனி - பித்துப் பிடித்தவர்
கோண் - கோணல், மாறுபாடு
கோன் - அரசன்
சாணம் - சாணைக்கல், சாணி
சானம் - அம்மி, பெருங்காயம்
சுணை - கூர்மை, கரணை
சுனை - நீரூற்று
சுண்ணம் - வாசனைப்பொடி
சுன்னம் - சுண்ணாம்பு, பூஜ்ஜியம்
சேணம் - மெத்தை
சேனம் - பருந்து
சேணை - அறிவு
சேனை - படை
சோணம் - பொன், சிவப்பு, தீ,
சோணகிரி
சோனம் - மேகம்
சோணை - ஒரு நதி, சேரன் மனைவி
சோனை - மழைச்சாரல், மேகம்
தண் - குளிர்ச்சி
தன் - தன்னுடைய
தணி - தணித்தல்
தனி - தனிமை
தாணி - தான்றிமரம்
தானி - இருப்பிடம், பண்டசாலை,
தாணு - சிவன், தூண், நிலைப்பேறு
தானு - காற்று
திணை - ஒழுக்கம், குலம்
தினை - தானியம், ஒருவகைப்
புன்செய்ப்பயிர்
திண்மை - உறுதி
தின்மை - தீமை
திண் - வலிமை
தின் - உண்
துணி - துணிதல், கந்தை
துனி - அச்சம், ஊடல் நீட்டித்தல்
தெண் - தெளிவு
தென் - தெற்கு, அழகு
நண்பகல் - நடுப்பகல்
நன்பகல் - நல்லபகல்
நணி - அணி (அழகு)
நனி - மிகுதி
நாண் - வெட்கம், கயிறு
நான் - தன்மைப் பெயர்
நாணம் - வெட்கம்
நானம் - புனுகு, கவரிமான்
பணி - வேலை, கட்டளையிடு
பனி - துன்பம், குளிர், சொல், நோய்
பணை - முரசு, உயரம், பரந்த
பனை - ஒருவகை மரம்
பண் - இசை
பன் - அரிவாள், பல
பண்ணை - தோட்டம்
பன்னை - கீரைச்செடி
பண்ணுதல் - செய்தல்
பன்னுதல் - நெருங்குதல்
பண்ணி - செய்து
பன்னி - சீப்பு, பனிநீர், மனை, சணல்
பண்மை - தகுதி
பன்மை - பல
பணித்தல் - கட்டளையிடுதல்
பனித்தல் - துளித்தல், தூறல், விரிந்த
பட்டணம் - நகரம்
பட்டினம் - கடற்கரை நகர்
பாணம் - நீருணவு
பானம் - அம்பு
புணை - தெப்பம்
புனை - இட்டுக்கட்டுதல், கற்பனை
புண் - காயம்
புன் - கீழான
பேணம் - பேணுதல்
பேனம் - நுரை
பேண் - போற்று, உபசரி
பேன் - ஓர் உயிரி
மணம் - வாசனை, திருமணம்
மனம் - உள்ளம், இந்துப்பு
மணை - மரப்பலகை, மணவறை
மனை - இடம், வீடு
மண் - தரை, மண்வகை
மன் - மன்னன், பெருமை
மண்ணை - இளமை, கொடி வகை
மன்னை - தொண்டை, கோபம்
மாணி - அழகு, பிரம்மசாரி
மானி - மானம் உடையவர்
மாண் - மாட்சிமை
மான் - ஒரு விலங்கு
முணை - வெறுப்பு, மிகுதி
முனை - முன்பகுதி, துணிவு,
முதன்மை
வணம் - ஓசை
வனம் - காடு, துளசி
வண்மை - வளப்பம், கொடை
வன்மை - உறுதி, வலிமை
வண்ணம் - நிறம், குணம், அழகு
வன்னம் - எழுத்து, நிறம்
வாணகம் - அக்கினி, பசுமடி
வானகம் - மேலுலகம்
வாணம் - அம்பு, தீ, மத்தாப்பு
வானம் - ஆகாயம், மழை
வாணி - கலைமகள், சரஸ்வதி
வானி - துகிற்கொடி
ல, ழ, ள பொருள் வேறுபாடு
அலகு - பறவையின் மூக்கு, அளவு,
ஆண்பனை
அழகு - வனப்பு
அளகு - சேவல், பெண்கூகை
அலகம் - திப்பிலி
அளகம் - வெள்ளெருக்கு, நீர்
அலகை - கற்றாழை, பேய்
அளகை - அளகாபுரி, பெண்
அழம் - பிணம்
அலம் - கலப்பை
அளம் - உப்பு
அலத்தல் - அலட்டல், அலைதல்
அளத்தல் - அளவிடுதல், மதித்தல்
அலவன் - ஆண்நண்டு
அளவன் - அளப்பவன், உப்பு எடுப்போன்
அழி - அழித்துவிடு
அலி - பேடி, காகம், விருச்சிகராசி
அளி - கருணை, கள், வண்டு
அல்லல் - துன்பம்
அள்ளல் - வாரி எடுத்தல்
அழை - கூப்பிடு
அலை - கடல், நீரலை, அலைதல்
அளை - தயிர், நண்டு, புற்று
அவல் - பள்ளம், உணவுப் பொருள்
அவள் - பெண் (சேய்மைச்சுட்டு)
அல் - இரவு
அள் - அள்ளி எடு, நெருக்கம்
உலவு - நட
உளவு - ஒற்று
உழவு - கலப்பையால் உழுதல்
உழி - இடம், பொழுது
உளி - தச்சுக் கருவிகளுள் ஒன்று
உலு - தானியப் பதர்
உழு - நிலத்தை உழு
உளு - உளுத்துப் போதல்
உலை - கொல்லன் உலை, நீருலை
உழை - பாடுபடு, பக்கம், கலைமான்
உளை - பிடரி மயிர், சேறு, தலை
உழுவை - புலி
உளுவை - மீன்வகை
எல் - கல், மாலை, சூரியன்
எள் - எண்ணெய்வித்து, நிந்தை
எலு - கரடி
எழு - எழுந்திரு, தூண்
ஒலி - சப்தம், நாதம், காற்று
ஒழி - அழி, தவிர், கொல், துற
ஒளி - வெளிச்சம், மறை(த்துவை)
ஒல் - ஒலிக்குறிப்பு
ஒள் - அழகு, உண்மை, அறிவு, ஒளி
கலகம் - போர், அமளி, இரைச்சல்
கழகம் - சங்கம், கூட்டமைப்பு
கழங்கம் - கழங்கு, விளையாட்டுக்
கருவி
களங்கம் - குற்றம், அழுக்கு
கலி - கலியுகம், பாவகை, சனி
கழி - கோல், மிகுதி, உப்பளம்
களி - மகிழ்வு, இன்பம்
கலை - ஆண்மான், சந்திரன், கல்வி
கழை - மூங்கில், கரும்பு,
புனர்பூசம்
களை - அழகு, புல் பூண்டு, அயர்வு
கல் - மலை, பாறை, சிறுகல்
கள் - மது, தேன்
கலம் - கப்பல், பாத்திரம்
களம் - இடம், போர்க்களம், இருள்
காலி - ஒன்றுமில்லாதது,
வெற்றிடம்
காளி - துர்க்கை, மாயை
காழி - சீர்காழி (ஊர்)
காலை - பொழுது,
விடியற்பொழுது
காளை - காளைமாடு, இளைஞன்
காலம் - பொழுது, நேரம்
காளம் - எட்டிமரம், சூலம்
கிலி - அச்சம், பயம்
கிழி - கிழித்துவிடு, முடிப்பு
(பொன்)
கிளி - பறவை, வெட்டுக்கிளி
கிழவி - முதியவள், மூதாட்டி
கிளவி - சொல், மொழி
குலி - மனைவி
குழி - பள்ளம், பாத்தி, பன்னீரடிச்
சதுரம், வயிறு
குளி -நீராடு
குலம் -ஜாதியின் உட்பிரிவு, இனம்,
குடி
குளம் -நீர்நிலை, கண்மாய், ஏரி
குலை - கொத்து, மனம்
தடுமாறுதல்
குழை - குண்டலம், குழைந்துபோதல்
குலவி - மகிழ்ந்திருத்தல்
குழவி - குழந்தை, இளமை, யானைக்
கன்று அம்மிக்கல்
குளவி - ஒரு வண்டு, காட்டுமல்லி
குலிகம் -சிவப்பு, இலுப்பை
குளிகம் -மருந்து, மாத்திரை
குவலை -துளசி, கஞ்சா
குவளை - குவளை மலர், சொம்பு,
ஒரு பேரெண்
கூலம் - தானியம், கடைத்தெரு
கூளம் - குப்பை
கூலி - ஊதியம்
கூளி(யார்) - பேய், காளை, வீரர்,
படைவீரர், வணங்கி நிற்பவர், ஏவலாளர்
கொலு - அரசசபை, திருவோலக்கம்
(தெய்வசபை), உல்லாசமாக
வீற்றிருத்தல்
கொழு - மழு, கலப்பையில் மாட்டும்
பெரிய இரும்பு, கொழு கொழுத்து
இருத்தல்
கொளு - புறப்பொருள்
வெண்பாமாலைத் துறை,
பொருந்துவாய்
கொலை - கொல்லுதல்
கொளை - கோட்பாடு, பயன்,
இசைப்பாட்டு, தாளம்
கொல்லாமை - கொலை செய்யாமை
கொள்ளாமை - ஏற்றுக்கொள்ளாமை,
அடங்காமை
கொல்லி - உயிர்க்கொல்லி, ஒரு
மலை
கொள்ளி - கொள்ளிக்கட்டை
கொல்லை - புழக்கடை, தரிசுநிலம்
கொள்ளை - திருடுதல், மிகுதி
கோலம் - அழகு, அலங்காரம்
கோளம் - உருண்டை, வட்டம்
கோலை - மிளகு
கோழை - வீரமற்றவன், கபம்
கோளை - குவளை, எலி
கோல் - மரக்கொம்பு, அம்பு,
குதிரைச்சம்மட்டி, தண்டு, யாழ்நரம்பு
கோள் - கிரகம்
கோலி - இலந்தை, விளையாடும்
குண்டு
கோழி - உறையூர், விட்டில், பறவை
கோளி - பூவாது காய்க்கும் மரம்,
ஆத்தி, ஆலம்
சலம் - நீர், சிறுநீர், குளிர்
சளம் - பொய், துன்பம், வஞ்சனை
சாலை - பாடசாலை, பொது
மண்டபம், அறக்கூடம்
சாளை - கடல்மீன்
சாழை - குடிசை, குச்சு
சுழித்தல் - சுழலுதல், நீர்ச்சுழல்
சுளித்தல் - முறித்தல், சினத்தல்
சூலை - வயிற்று நோய்
சூளை - செங்கல் சூளை
சூல் - கர்ப்பம்
சூழ் - சூழ்ந்துகொள், சுற்று
சூள் - சபதம்
சேல் - மீன்
சேள் - மேலிடம்
சோலி - ரவிக்கை, காரியம்
சோழி - பலகரை
சோளி - கூடைவகை
தவளை - ஓர் உயிரி
தவலை - பாத்திரம்
தலம் - இடம், பூமி
தழம் - தைலம்
தளம் - மேடை, மாடி வீட்டின்
அடுக்கு
தழை - தாவர உறுப்பு
தலை - மண்டை
தளை - விலங்கு
தாலம் - உலகம், தேன்
தாளம் - இசைக்கருவி, ஜதி
தாலி - மங்கலநாண்
தாழி - கடல், குடம், பரணி
பெரியபாண்டம்
தாளி - தாளித்தல், பனைதால் -
நாக்கு, தாலாட்டு
தாழ் - தாழ்தல், குனிதல்
தாள் - முயற்சி, பாதம், ஆதி, படி,
காகிதம்.
துலக்கம் - ஒளி, தெளிவு
துளக்கம் - அசைவு, வருத்தம், கலக்கம்,
ஒளி
துலம் - கோரை, கனம்
துளம் - மாதுளை, மயிலிறகு
துலி - பெண் ஆமை
துழி - பள்ளம்
துளி - மழைத்துளி, திவலை,
சிறிய அளவு
துலை - ஒப்பு, கனம்
துளை - துவாரம், வாயில்
தூலி - எழுதுகோல், எழுத்தாணி
தூளி - புழுதி, குதிரை
தெழித்தல் - கோபித்தல், முழங்குதல்,
அதட்டுதல், நீக்குதல், ஆரவாரித்தல்
தெளித்தல் - விதைத்தல், சபதம், கூறல்,
விதைத்தல்
தெல் - அஞ்சுதல்
தெள் - தெளிவான
தோலன் - அற்பன்
தோழன் - நண்பன்
தோலி - பிசின், ஒருவகை மீன்
தோழி - பாங்கி, நட்பால்
நெருக்கமானவள்
தோளி - அவுரி (ஒருவகை
குத்துச்செடி), அரக்கு
தோல் - சருமம், வனப்பு, விதையின்
மேல்பகுதி
தோள் - புயம், வீரம்
நலன் - நலம், அழகு, புகழ், இன்பம்,
நன்மை, குணம்,
நளன் - தமயந்தியின் கணவன், ஓர் அரசன்
நலி - நோய்
நளி - குளிர்ச்சி, பெருமை
நலிதல் - நலிந்துபோதல், தோற்றல்
நளிதல் - செறிதல், பரத்தல், ஒத்தல்
நல் - நல்ல
நள் - இரவு, நடு, நள்ளிரவு
நாலம் - பூவின் காம்பு
நாழம் - இழிவுரை, வசவு
நாளம் - பூந்தண்டு, உட்துளை,
ரத்தநாளம்
நாலி - முத்து, கந்தை ஆடை
நாழி - உள்தொளையுள்ள பொருள்,
ஒருபடி, ஏர், அம்பறாத்துணி, நாடா,
பூரட்டாதி
நாளி - கல், நாய்
நாலிகை - மூங்கில், அடுப்புச்சந்து
நாழிகை - வட்டம், கடிகாரம்
நால் - நான்கு
நாழ் - குற்றம், செருக்கு
நாள் - காலம், திதி
நீலம் - ஒரு நிறம், கருங்குவளை,
இருள்
நீளம் - நெடுமை (நீண்ட), தாமதம்
நீல் - நீலம், காற்று
நீள் - நீளம், ஒளி
பலம் - கிழங்கு, வலி, நெற்றி, சக்தி,
சேனை, வன்மை, உறுதி, எடை
பழம் - கனி, முதுமை
பல்லி - சிற்றூர், இடையர் ஊர்,
உழுகருவி, ஓர் உயிரி,
வண்டியுறுப்பு
பள்ளி - இடைச்சேரி, புத்தர்கோயில்,
குறும்பன், மருதநிலத்தூர், படுக்கை,
பள்ளிக்கூடம்
பலி - பலியிடுதல், பலியுயிர்
பழி - குற்றம்
பால் - திரவ உணவு, பகுப்பு, இயல்பு
பாழ் - வீண், வெறுமை
பீழை - துன்பம்
பீளை - கண் அழுக்கு
புலி - காட்டு விலங்கு
புளி - புளியமரம், புளியங்காய்
புலை - புலால், ஊன், கீழ்மை
புழை - துளை, வாயில், நரகம்
புகல் - அடைக்கலம்
புகழ் - பெருமை
புல் - அற்பம், கலவி, புல்பூண்டு
புள் - பறவை
பூலம் - புற்கட்டு
பூளம் - பூவரசு
பூழை - துவாரம், கோபுரவாயில்
பூளை - பூளைச்செடி, இலவம்
பஞ்சு
பாலி - தானியக் குவியல், தூற்றாத
தானியம்
பாழி - கொடுத்தல், ஈதல்
பாளி - வரப்பு, எல்லை
பாலிவு - அழகு, நிறைவு
பாழிவு - பொழிதல், மேன்மை
போலி - பொய், வஞ்சகம், ஒப்பு
போளி - இனிப்புப் பண்டம்
பொலிதல் - செழித்தல், மங்கலமாதல்
பொழிதல் - ஈதல், கொடுத்தல்,
சொரிதல், பெய்தல், நிறைதல்
மலம் - அழுக்கு, பாவம்
மழம் - இளமை, குழந்தை
மலை - குன்று, பொருப்பு,
வெற்பு,சிகரம்
மழை - மழைநீர், குளிர்ச்சி, மேகம்
மலைத்தல் - வியத்தல், தடுமாறுதல்
மழைத்தல் - மழை பெய்திருத்தல்,
குளிர்ந்திருத்தல்
மல்லிகை - மாலை, கழுத்தணி,
வரிசை
மாளிகை - அரண்மனை, கோயில்
மாலை - அந்திப்பொழுது,
பூமாலை
மாழை - மயக்கம், இளமை, அழகு
மாளை - புளியம்பட்டை
மால் - திருமால், மயக்கம், அருகன்,
இந்திரன், பெருமை, மேகம்
மாள் - இறத்தல், சாதல் (இற,சாவு)
முலை - உடலிலுள்ள ஓர் உறுப்பு
முழை - குகை
முளை - முளைத்தல், தறி, ஆப்பு,
அங்குசம், இளமை, தண்டு, மூங்கில்
முழி - விழி (விழித்தல்)
முளி - மரக்கணு, விரல்முளி,
வாட்டம்
மூலி - மூலிகை, மரம், வேருள்ளது
மூழி - அகப்பை, சோறு, நீர்நிலை,
கோணம்
மூலை - இரு கோடுகள் சந்திக்கும்
இடம்
மூளை - மண்டைக்குள் இருக்கும் ஓர்
உறுப்பு(முதன்மைப் பகுதி)
மெல்ல - மென்று தின்பது
மெள்ள - மெதுவாக
மாலி - மொளலி கிரீடம்
மாழி - மேழி, கலப்பை
மாளி - துணிமூட்டை
வலம் - சுற்றுதல், வலப்பக்கம், வெற்றி
வளம் - வளமை, அழகு
வலவன் - திருமால்
வளவன் - சோழன், வேளாளன்
வலன் - ஓர் அரசன், வெற்றி, வல்லவன்
வளன் - செழுமை, வளப்பன்
வழப்பம் - வழக்கம், இயல்பு
வளப்பம் - வளமை, செழிப்பு
வலி - நோய், வலிமை, துன்பம்
வழி - நெறி, பாதை, தடம், உபாயம்
வளி - காற்று
வலை - மீன் முதலியன பிடிக்கும்
ஒரு கருவி
வழை - சுரபுன்னை, புதுமை,
இளமை
வளை - கை வளையல், எலி வளை
வல் - வலிமை, விரைவு, திறமை
வள் - ஒலிக்குறிப்புச் சொல்
வல்லம் - வாழை, ஓர் ஊர்
வள்ளம் - மரக்கலம், படகு, அளவு,
தொன்னை
வல்லி - பூமி, பெண், பிரிதல், படர்
கொடி
வள்ளி - வள்ளியம்மை, ஆபரணம்,
சந்திரன்
வலு - வலிமை, பலம், பற்று
வழு - குற்றம், தவறு, பழிப்புரை,
கேடு
வளு - இளமை, இளைய
வாலி - கிஷ்கிந்தை அரசன்
(இராமாயணம்)
வாழி - வாழ்க (எனவாழ்த்துதல்)
வாளி - அன்பு, வட்ட வாள், வீரன், ஒரு
காதணி
வாலை - இளம்பெண், திராவகம்
வடிக்கும் பாத்திரம், ஒரு சக்தி
வாழை - வாழைமரம்
வாளை - வாளை மீன்
வால் - விலங்குகளின் ஓர் உறுப்பு
வாழ் - வாழ்வாயாக (என்று
வாழ்த்துதல்)
வாள் - போர்வாள், நீண்டகத்தி
விலா - விலா எலும்பு
விழா - திருவிழா, கொண்டாட்டம்
விளா - இளமை, வெண்மை, நிணம்
விழி - கண், கருவிழி
விளி - கூப்பிடு, அழை,
ஏழிசையில் ஒன்று
விலை - மதிப்பு, விலைக்கு விற்றல்
விழை - விரும்பு, ஆசைப்படு
விளை - ஒரு மீன்வகை, விளைவி
(விளைச்சல்)
விலக்கு - விலக்கி விடு, தவிர்
விளக்கு - விளக்கமாகச் சொல், தீபம்
விலங்கு - பூட்டு, கை, கைகளைப்
பிணிக்கும் கருவி, மிருகம்
விளங்கு - திகழ் (திகழ்தல்),
சிற்றரத்தை (மூலிகை வகை)
வெல்லம் - சக்கரைக்கட்டி, கருப்பட்டி
வெள்ளம் - மிதமிஞ்சிய நீர்பெருக்கு
வேலம் - வேலமரம், தோட்டம்
வேழம் - யானை, கரும்பு, மூங்கில்
வேல் - வேலாயுதம்
வேள் - வேளிர் குலத்தவன், மன்மதன்,
ஆசை
வேலை - பணி, கடல்
வேளை - பொழுது, நேரம்,
ஒருவகைக் கீரை
ர, ற பொருள் வேறுபாடு
அர - பாம்பு
அற - தெளிய, முற்றுமாக
அரவு - பாம்பு
அறவு - அறுதல், தொலைதல்
அரம் - ஒரு கருவி
அறம் - தர்மம், நீதி, கற்பு, புண்ணியம்,
கடமை, அறநூல், துறவறம்
அரி - திருமால், அரிசி, அழகு,
அரிதல், பன்றி, வண்டு, கடல், தகடு,
சிவன்
அறி - அறிந்துகொள்
அரிய - கிடைத்தற்கு அரிதான,
கஷ்டமான
அறிய - அறிந்துகொள்ள,
தெரிந்துகொள்ள
அரன் - சிவன்
அறன் - தர்மம், அறக்கடவுள்
அரிவை - பெண் (7 பருவத்துள் ஒன்று.
18 வயதுக்கு மேல் 25 வயதுக் குட்பட்ட
பெண்)
அறிவை - அறிவாய்
அருகு - புல்வகை (அருகம்புல்),
அண்மை
அறுகு - குறைந்து போதல்
அக்கரை - அந்தக் கரை
அக்கறை - ஈடுபாடு
அரை - பாதி, மேகலை, வயிறு, ஒரு
மரம்
அறை - வீட்டின் பகுதி, அடி, பாத்தி,
ஒலி, பாசறை, சொல், குகை,
வஞ்சனை, மாளிகை
அரைதல் - தேய்தல்
அறைதல் - அடித்தல், சொல்லுதல்
அப்புரம் - அந்தப் பக்கம்
அப்புறம் - பிறகு
அர்ப்பணம் - உரித்தாக்குதல்
அற்பணம் - காணிக்கை செலுத்துதல்
அரு - உருவமற்றது
அறு - துண்டித்துவிடு,
அறுத்துவிடு
அருமை - சிறப்பு, அன்பு, இன்மை,
சுலபத்தில் கிடைக்காதது
அறுமை - நிலையின்மை, ஆறு
ஆரு - குடம், நண்டு
ஆறு - ஒரு எண், வழி, சமயம், தன்மை,
நதி, ஒழுக்கம், பக்கம், நிலை
ஆர - நிறைய, அனுபவிக்க
ஆற - சூடு ஆற (குறைய)
ஆரல் - ஒருவகை மீன்
ஆறல் - சூடு குறைதல்
இரத்தல் - யாசித்தல்
இறத்தல் - இறந்துபோதல், சாதல்
இரகு - சூரியன்
இறகு - சிறகு
இரக்கம் - கருணை
இறக்கம் - சரிவு, மரணம்
இரங்கு - கருணைகாட்டு
இறங்கு - கீழிறங்கி வா
இரவம் - இரவு
இறவம் - இறால் மீன்
இரவி - சூரியன், எருக்கு, மலை,
வாணிகத்தொழில்
இறவி - இறத்தல்
இரவு - இரவு நேரம், யாசித்தல்
இறவு - மிகுதி, இறால்மீன், இறுதி,
தேன்கூடு, சாவு, முடிவு, நீக்கம்
இரை -ஒலி, உணவு
இறை - கடவுள், அணு, அரசன், ரேகை,
சந்து, கடமை, தலைமை, விடை,
உயரம், மூலை
இரு - இரண்டு, பெரிய, உட்கார்,
அமர்ந்துகொள்
இறு - ஒடி, கெடு, சொல்லு
இரும்பு - கடிவாளம், கிம்புரி,
ஆயுதம், ஓர் உலோகம்
இறும்பு - வண்டு, சிறுமலை
இருப்பு - கையிருப்பு, இருப்பிடம்,
ஆசனம், நிலை, பொருள், முதல்
இறுப்பு - வடிப்பு
இருத்தல் - அமர்ந்திருத்தல்,
காத்திருத்தல்
இறுத்தல் - வடித்தல், செலுத்தல்,
எறிதல், கடன் கொடுத்தல், பதில்கூறல்,
முடித்தல், முறித்தல்
இருக்கு - மந்திரம், ரிக் வேதம்
இறுக்கு - அழுத்து, இறுக்கிக்கட்டு
இரைத்தல் - ஒலித்தல்,
மூச்சுவாங்குதல்
இறைத்தல் - சிதறுதல், மிகு செலவு
உரவு - அறிவு, ஒலி, மிகுதி, வலி,
ஞானம், விடம்
உறவு - நட்பு, சுற்றம், எறும்பு
உரவோர் - அறிஞர், முனிவர்
உறவோர் - சுற்றத்தார், அடைந்தோர்
உரி - தோல், மரப்பட்டை,
அரைப்படியளவு,
உரிச்சொல்,கொத்துமல்லி
உறி - உறிவெண்ணெய், தூக்கு
உரு - வடிவம், அழகு, உடல், மரக்கலம்,
நிறம், அச்சம், பெருமை, மேன்மை
உறு - மிகுதி
உருக்குதல் - இளக்குதல், மெலியச்
செய்தல்
உறுக்குதல் - சினத்தல், அதட்டுதல்
உரை - புகழ், விளக்கவுரை, நூல்,
பொன்மாற்று, அறிவுரை, சொல்
உறை - இடம், பண்டம், பொருள்,
மருந்து, பாலில் இடும் பிரை, துளி,
மழை, ஆடை, துன்பம், பாம்பின்
விஷப்பை
உரைப்பு - தங்குதல், தோய்தல்
உறைப்பு - காரம், கொடுமை
உரையல் - சொல்லல்
உறையல் - மாறுபாடு, பிணக்கு
உரிய - உரிமையான
உறிய - உறிஞ்ச
ஊரல் - ஊர்தல், கிளிஞ்சல், ஒருவகைப்
பறவை
ஊறல் - தினவு, ஊற்று, சாறு,
வருவாய், ஊறுதல், களிப்பு
ஊரு - அச்சம், தொடை
ஊறு - இடையூறு, துன்பம், காயம்
உறுதல், தீண்டல், குற்றம், புண்,
கொலை
எரி - தீ, கார்த்திகை, பிரபை,
இடபராசி, நெருப்பு, நரகம், வெம்மை,
கந்தகம்
எறி - விடுதல், எறிதல், குறிப்பாகக்
கூறுதல்
ஏர - ஓர் உவமஉருபு
ஏற - மிகுதி, உயர (ஏறுதல்)
ஏரி - நீர்நிலை, குளம்
ஏறி - உயர்ந்த, மேலே ஏறி
ஒரு - ஒன்று, ஒப்பற்ற, ஆடு
ஒறு - தண்டி, அழி, இகழ்
ஒருத்தல் - ஆண் விலங்குகளின்
பொதுப்பெயர்
ஒறுத்தல் - தண்டித்தல், துன்புறுத்தல்,
வருத்துதல், வெறுத்தல், கடிதல்,
இகழ்தல், குறைத்தல்
ஒருவு - நீங்கு
ஒறுவு - வருத்தம், துன்பம்
கரடு - மரக்கணு, மணிக்கட்டு,
முருடு, வளர்ச்சியற்றது
கறடு - தரமற்ற முத்து
கரம் - கிரணம், விஷம், செயல், கை,
கழுதை
கறம் - கொடுமை, வ📚 தமிழில் உள்ள மயங்கொலிச் சொற்கள் :
ண, ன பொருள் வேறுபாடு
அணல் - தாடி, கழுத்து
அனல் - நெருப்பு
அணி - அழகு
அனி - நெற்பொறி
அணு - நுண்மை
அனு - தாடை, அற்பம்
அணுக்கம் - அண்டை, அண்மை.
அனுக்கம் - வருத்தம், அச்சம்
அணை - படுக்கை, அணைத்துக்
கொள்ளுதல்
அனை - அன்னை, மீன்
அணைய - சேர, அடைய
அனைய - அத்தகைய
அண்மை - அருகில்
அன்மை - தீமை, அல்ல
அங்கண் - அவ்விடம்
அங்கன் - மகன்
அண்ணம் - மேல்வாய்
அன்னம் - சோறு, அன்னப்பறவை
அண்ணன் - தமையன்
அன்னன் - அத்தகையவன்
அவண் - அவ்வாறு
அவன் - சேய்மைச் சுட்டு, ஆண்மகன்
ஆணகம் - சுரை
ஆனகம் - துந்துபி
ஆணம் - பற்றுக்கோடு
ஆனம் - தெப்பம், கள்
ஆணி - எழுத்தாணி, இரும்பாணி
ஆனி - தமிழ் மாதங்களுள் ஒன்று
ஆணேறு -ஆண்மகன்
ஆனேறு - காளை, எருது
ஆண் - ஆடவன்
ஆன் - பசு
ஆணை - கட்டளை, ஆட்சி
ஆனை - யானை
இணை - துணை, இரட்டை
இனை - இன்ன, வருத்தம்
இணைத்து - சேர்த்து
இனைத்து - இத்தன்மையது
இவண் - இவ்வாறு
இவன் - ஆடவன், (அண்மைச் சுட்டு)
ஈணவள் - ஈன்றவள்
ஈனவள் - இழிந்தவள்
உண் - உண்பாயாக
உன் - உன்னுடைய
உண்ணல் - உண்ணுதல்
உன்னல் - நினைத்தல்
உண்ணி - உண்பவன், ஒருவகைப் பூச்சி
உன்னி - நினைத்து, குதிரை
ஊண் - உணவு
ஊன் - மாமிசம்
எண்ண - நினைக்க
என்ன - போல, வினாச்சொல்
எண்ணல் - எண்ணுதல்
என்னல் - என்று சொல்லுதல்
எண்கு - கரடி
என்கு - என்று சொல்லுதல்
ஏண் - வலிமை
ஏன் - வலிமை, ஒரு வினைச்சொல்
ஏணை - தொட்டில்
ஏனை - மற்றது
ஐவணம் - ஐந்து வண்ணம்
ஐவனம் - மலை நெல்
ஓணம் - ஒரு பண்டிகை
ஓனம் – எழுத்துச்சாரியை
கணகம் - ஒரு படைப்பிரிவு
கனகம் - பொன்
கணப்பு - குளிர்காயும் தீ
கனப்பு - பாரம், அழுத்தம்
கணி - கணித்தல்
கனி - பழம், சுரங்கம், சாரம்
கணம் - கூட்டம்
கனம் -பாரம்
கண்ணன் - கிருஷ்ணன்
கன்னன் - கர்ணன்
கண்ணி - மாலை, கயிறு, தாம்பு
கன்னி - குமரிப்பெண், உமை, ஒரு
ராசி
கணை - அம்பு
கனை - ஒலி, கனைத்தல்
கண் - ஓர் உறுப்பு
கன் - கல், செம்பு, உறுதி
கண்று - அம்பு
கன்று - அற்பம், இளமரம், குட்டி,
கைவளை
கண்ணல் - கருதல்
கன்னல் - கரும்பு, கற்கண்டு
காண் - பார்
கான் - காடு, வனம்
காணம் - பொன், கொள்
கானம் - காடு, வனம், தேர், இசை
காணல் - பார்த்தல்
கானல் - பாலை
கிணி - கைத்தாளம்
கினி - பீடை
கிண்ணம் - வட்டில், கிண்ணி
கின்னம் - கிளை, துன்பம்
குணி - வில், ஊமை
குனி - குனிதல், வளை
குணித்தல் - மதித்தல், எண்ணுதல்
குனித்தல் - வளைதல்
குணிப்பு - அளவு, ஆராய்ச்சி
குனிப்பு - வளைப்பு, ஆடல்
கேணம் - செழிப்பு, மிகுதி
கேனம் - பைத்தியம், பித்து
கேணி - கிணறு
கேனி - பித்துப் பிடித்தவர்
கோண் - கோணல், மாறுபாடு
கோன் - அரசன்
சாணம் - சாணைக்கல், சாணி
சானம் - அம்மி, பெருங்காயம்
சுணை - கூர்மை, கரணை
சுனை - நீரூற்று
சுண்ணம் - வாசனைப்பொடி
சுன்னம் - சுண்ணாம்பு, பூஜ்ஜியம்
சேணம் - மெத்தை
சேனம் - பருந்து
சேணை - அறிவு
சேனை - படை
சோணம் - பொன், சிவப்பு, தீ,
சோணகிரி
சோனம் - மேகம்
சோணை - ஒரு நதி, சேரன் மனைவி
சோனை - மழைச்சாரல், மேகம்
தண் - குளிர்ச்சி
தன் - தன்னுடைய
தணி - தணித்தல்
தனி - தனிமை
தாணி - தான்றிமரம்
தானி - இருப்பிடம், பண்டசாலை,
தாணு - சிவன், தூண், நிலைப்பேறு
தானு - காற்று
திணை - ஒழுக்கம், குலம்
தினை - தானியம், ஒருவகைப்
புன்செய்ப்பயிர்
திண்மை - உறுதி
தின்மை - தீமை
திண் - வலிமை
தின் - உண்
துணி - துணிதல், கந்தை
துனி - அச்சம், ஊடல் நீட்டித்தல்
தெண் - தெளிவு
தென் - தெற்கு, அழகு
நண்பகல் - நடுப்பகல்
நன்பகல் - நல்லபகல்
நணி - அணி (அழகு)
நனி - மிகுதி
நாண் - வெட்கம், கயிறு
நான் - தன்மைப் பெயர்
நாணம் - வெட்கம்
நானம் - புனுகு, கவரிமான்
பணி - வேலை, கட்டளையிடு
பனி - துன்பம், குளிர், சொல், நோய்
பணை - முரசு, உயரம், பரந்த
பனை - ஒருவகை மரம்
பண் - இசை
பன் - அரிவாள், பல
பண்ணை - தோட்டம்
பன்னை - கீரைச்செடி
பண்ணுதல் - செய்தல்
பன்னுதல் - நெருங்குதல்
பண்ணி - செய்து
பன்னி - சீப்பு, பனிநீர், மனை, சணல்
பண்மை - தகுதி
பன்மை - பல
பணித்தல் - கட்டளையிடுதல்
பனித்தல் - துளித்தல், தூறல், விரிந்த
பட்டணம் - நகரம்
பட்டினம் - கடற்கரை நகர்
பாணம் - நீருணவு
பானம் - அம்பு
புணை - தெப்பம்
புனை - இட்டுக்கட்டுதல், கற்பனை
புண் - காயம்
புன் - கீழான
பேணம் - பேணுதல்
பேனம் - நுரை
பேண் - போற்று, உபசரி
பேன் - ஓர் உயிரி
மணம் - வாசனை, திருமணம்
மனம் - உள்ளம், இந்துப்பு
மணை - மரப்பலகை, மணவறை
மனை - இடம், வீடு
மண் - தரை, மண்வகை
மன் - மன்னன், பெருமை
மண்ணை - இளமை, கொடி வகை
மன்னை - தொண்டை, கோபம்
மாணி - அழகு, பிரம்மசாரி
மானி - மானம் உடையவர்
மாண் - மாட்சிமை
மான் - ஒரு விலங்கு
முணை - வெறுப்பு, மிகுதி
முனை - முன்பகுதி, துணிவு,
முதன்மை
வணம் - ஓசை
வனம் - காடு, துளசி
வண்மை - வளப்பம், கொடை
வன்மை - உறுதி, வலிமை
வண்ணம் - நிறம், குணம், அழகு
வன்னம் - எழுத்து, நிறம்
வாணகம் - அக்கினி, பசுமடி
வானகம் - மேலுலகம்
வாணம் - அம்பு, தீ, மத்தாப்பு
வானம் - ஆகாயம், மழை
வாணி - கலைமகள், சரஸ்வதி
வானி - துகிற்கொடி
ல, ழ, ள பொருள் வேறுபாடு
அலகு - பறவையின் மூக்கு, அளவு,
ஆண்பனை
அழகு - வனப்பு
அளகு - சேவல், பெண்கூகை
அலகம் - திப்பிலி
அளகம் - வெள்ளெருக்கு, நீர்
அலகை - கற்றாழை, பேய்
அளகை - அளகாபுரி, பெண்
அழம் - பிணம்
அலம் - கலப்பை
அளம் - உப்பு
அலத்தல் - அலட்டல், அலைதல்
அளத்தல் - அளவிடுதல், மதித்தல்
அலவன் - ஆண்நண்டு
அளவன் - அளப்பவன், உப்பு எடுப்போன்
அழி - அழித்துவிடு
அலி - பேடி, காகம், விருச்சிகராசி
அளி - கருணை, கள், வண்டு
அல்லல் - துன்பம்
அள்ளல் - வாரி எடுத்தல்
அழை - கூப்பிடு
அலை - கடல், நீரலை, அலைதல்
அளை - தயிர், நண்டு, புற்று
அவல் - பள்ளம், உணவுப் பொருள்
அவள் - பெண் (சேய்மைச்சுட்டு)
அல் - இரவு
அள் - அள்ளி எடு, நெருக்கம்
உலவு - நட
உளவு - ஒற்று
உழவு - கலப்பையால் உழுதல்
உழி - இடம், பொழுது
உளி - தச்சுக் கருவிகளுள் ஒன்று
உலு - தானியப் பதர்
உழு - நிலத்தை உழு
உளு - உளுத்துப் போதல்
உலை - கொல்லன் உலை, நீருலை
உழை - பாடுபடு, பக்கம், கலைமான்
உளை - பிடரி மயிர், சேறு, தலை
உழுவை - புலி
உளுவை - மீன்வகை
எல் - கல், மாலை, சூரியன்
எள் - எண்ணெய்வித்து, நிந்தை
எலு - கரடி
எழு - எழுந்திரு, தூண்
ஒலி - சப்தம், நாதம், காற்று
ஒழி - அழி, தவிர், கொல், துற
ஒளி - வெளிச்சம், மறை(த்துவை)
ஒல் - ஒலிக்குறிப்பு
ஒள் - அழகு, உண்மை, அறிவு, ஒளி
கலகம் - போர், அமளி, இரைச்சல்
கழகம் - சங்கம், கூட்டமைப்பு
கழங்கம் - கழங்கு, விளையாட்டுக்
கருவி
களங்கம் - குற்றம், அழுக்கு
கலி - கலியுகம், பாவகை, சனி
கழி - கோல், மிகுதி, உப்பளம்
களி - மகிழ்வு, இன்பம்
கலை - ஆண்மான், சந்திரன், கல்வி
கழை - மூங்கில், கரும்பு,
புனர்பூசம்
களை - அழகு, புல் பூண்டு, அயர்வு
கல் - மலை, பாறை, சிறுகல்
கள் - மது, தேன்
கலம் - கப்பல், பாத்திரம்
களம் - இடம், போர்க்களம், இருள்
காலி - ஒன்றுமில்லாதது,
வெற்றிடம்
காளி - துர்க்கை, மாயை
காழி - சீர்காழி (ஊர்)
காலை - பொழுது,
விடியற்பொழுது
காளை - காளைமாடு, இளைஞன்
காலம் - பொழுது, நேரம்
காளம் - எட்டிமரம், சூலம்
கிலி - அச்சம், பயம்
கிழி - கிழித்துவிடு, முடிப்பு
(பொன்)
கிளி - பறவை, வெட்டுக்கிளி
கிழவி - முதியவள், மூதாட்டி
கிளவி - சொல், மொழி
குலி - மனைவி
குழி - பள்ளம், பாத்தி, பன்னீரடிச்
சதுரம், வயிறு
குளி -நீராடு
குலம் -ஜாதியின் உட்பிரிவு, இனம்,
குடி
குளம் -நீர்நிலை, கண்மாய், ஏரி
குலை - கொத்து, மனம்
தடுமாறுதல்
குழை - குண்டலம், குழைந்துபோதல்
குலவி - மகிழ்ந்திருத்தல்
குழவி - குழந்தை, இளமை, யானைக்
கன்று அம்மிக்கல்
குளவி - ஒரு வண்டு, காட்டுமல்லி
குலிகம் -சிவப்பு, இலுப்பை
குளிகம் -மருந்து, மாத்திரை
குவலை -துளசி, கஞ்சா
குவளை - குவளை மலர், சொம்பு,
ஒரு பேரெண்
கூலம் - தானியம், கடைத்தெரு
கூளம் - குப்பை
கூலி - ஊதியம்
கூளி(யார்) - பேய், காளை, வீரர்,
படைவீரர், வணங்கி நிற்பவர், ஏவலாளர்
கொலு - அரசசபை, திருவோலக்கம்
(தெய்வசபை), உல்லாசமாக
வீற்றிருத்தல்
கொழு - மழு, கலப்பையில் மாட்டும்
பெரிய இரும்பு, கொழு கொழுத்து
இருத்தல்
கொளு - புறப்பொருள்
வெண்பாமாலைத் துறை,
பொருந்துவாய்
கொலை - கொல்லுதல்
கொளை - கோட்பாடு, பயன்,
இசைப்பாட்டு, தாளம்
கொல்லாமை - கொலை செய்யாமை
கொள்ளாமை - ஏற்றுக்கொள்ளாமை,
அடங்காமை
கொல்லி - உயிர்க்கொல்லி, ஒரு
மலை
கொள்ளி - கொள்ளிக்கட்டை
கொல்லை - புழக்கடை, தரிசுநிலம்
கொள்ளை - திருடுதல், மிகுதி
கோலம் - அழகு, அலங்காரம்
கோளம் - உருண்டை, வட்டம்
கோலை - மிளகு
கோழை - வீரமற்றவன், கபம்
கோளை - குவளை, எலி
கோல் - மரக்கொம்பு, அம்பு,
குதிரைச்சம்மட்டி, தண்டு, யாழ்நரம்பு
கோள் - கிரகம்
கோலி - இலந்தை, விளையாடும்
குண்டு
கோழி - உறையூர், விட்டில், பறவை
கோளி - பூவாது காய்க்கும் மரம்,
ஆத்தி, ஆலம்
சலம் - நீர், சிறுநீர், குளிர்
சளம் - பொய், துன்பம், வஞ்சனை
சாலை - பாடசாலை, பொது
மண்டபம், அறக்கூடம்
சாளை - கடல்மீன்
சாழை - குடிசை, குச்சு
சுழித்தல் - சுழலுதல், நீர்ச்சுழல்
சுளித்தல் - முறித்தல், சினத்தல்
சூலை - வயிற்று நோய்
சூளை - செங்கல் சூளை
சூல் - கர்ப்பம்
சூழ் - சூழ்ந்துகொள், சுற்று
சூள் - சபதம்
சேல் - மீன்
சேள் - மேலிடம்
சோலி - ரவிக்கை, காரியம்
சோழி - பலகரை
சோளி - கூடைவகை
தவளை - ஓர் உயிரி
தவலை - பாத்திரம்
தலம் - இடம், பூமி
தழம் - தைலம்
தளம் - மேடை, மாடி வீட்டின்
அடுக்கு
தழை - தாவர உறுப்பு
தலை - மண்டை
தளை - விலங்கு
தாலம் - உலகம், தேன்
தாளம் - இசைக்கருவி, ஜதி
தாலி - மங்கலநாண்
தாழி - கடல், குடம், பரணி
பெரியபாண்டம்
தாளி - தாளித்தல், பனைதால் -
நாக்கு, தாலாட்டு
தாழ் - தாழ்தல், குனிதல்
தாள் - முயற்சி, பாதம், ஆதி, படி,
காகிதம்.
துலக்கம் - ஒளி, தெளிவு
துளக்கம் - அசைவு, வருத்தம், கலக்கம்,
ஒளி
துலம் - கோரை, கனம்
துளம் - மாதுளை, மயிலிறகு
துலி - பெண் ஆமை
துழி - பள்ளம்
துளி - மழைத்துளி, திவலை,
சிறிய அளவு
துலை - ஒப்பு, கனம்
துளை - துவாரம், வாயில்
தூலி - எழுதுகோல், எழுத்தாணி
தூளி - புழுதி, குதிரை
தெழித்தல் - கோபித்தல், முழங்குதல்,
அதட்டுதல், நீக்குதல், ஆரவாரித்தல்
தெளித்தல் - விதைத்தல், சபதம், கூறல்,
விதைத்தல்
தெல் - அஞ்சுதல்
தெள் - தெளிவான
தோலன் - அற்பன்
தோழன் - நண்பன்
தோலி - பிசின், ஒருவகை மீன்
தோழி - பாங்கி, நட்பால்
நெருக்கமானவள்
தோளி - அவுரி (ஒருவகை
குத்துச்செடி), அரக்கு
தோல் - சருமம், வனப்பு, விதையின்
மேல்பகுதி
தோள் - புயம், வீரம்
நலன் - நலம், அழகு, புகழ், இன்பம்,
நன்மை, குணம்,
நளன் - தமயந்தியின் கணவன், ஓர் அரசன்
நலி - நோய்
நளி - குளிர்ச்சி, பெருமை
நலிதல் - நலிந்துபோதல், தோற்றல்
நளிதல் - செறிதல், பரத்தல், ஒத்தல்
நல் - நல்ல
நள் - இரவு, நடு, நள்ளிரவு
நாலம் - பூவின் காம்பு
நாழம் - இழிவுரை, வசவு
நாளம் - பூந்தண்டு, உட்துளை,
ரத்தநாளம்
நாலி - முத்து, கந்தை ஆடை
நாழி - உள்தொளையுள்ள பொருள்,
ஒருபடி, ஏர், அம்பறாத்துணி, நாடா,
பூரட்டாதி
நாளி - கல், நாய்
நாலிகை - மூங்கில், அடுப்புச்சந்து
நாழிகை - வட்டம், கடிகாரம்
நால் - நான்கு
நாழ் - குற்றம், செருக்கு
நாள் - காலம், திதி
நீலம் - ஒரு நிறம், கருங்குவளை,
இருள்
நீளம் - நெடுமை (நீண்ட), தாமதம்
நீல் - நீலம், காற்று
நீள் - நீளம், ஒளி
பலம் - கிழங்கு, வலி, நெற்றி, சக்தி,
சேனை, வன்மை, உறுதி, எடை
பழம் - கனி, முதுமை
பல்லி - சிற்றூர், இடையர் ஊர்,
உழுகருவி, ஓர் உயிரி,
வண்டியுறுப்பு
பள்ளி - இடைச்சேரி, புத்தர்கோயில்,
குறும்பன், மருதநிலத்தூர், படுக்கை,
பள்ளிக்கூடம்
பலி - பலியிடுதல், பலியுயிர்
பழி - குற்றம்
பால் - திரவ உணவு, பகுப்பு, இயல்பு
பாழ் - வீண், வெறுமை
பீழை - துன்பம்
பீளை - கண் அழுக்கு
புலி - காட்டு விலங்கு
புளி - புளியமரம், புளியங்காய்
புலை - புலால், ஊன், கீழ்மை
புழை - துளை, வாயில், நரகம்
புகல் - அடைக்கலம்
புகழ் - பெருமை
புல் - அற்பம், கலவி, புல்பூண்டு
புள் - பறவை
பூலம் - புற்கட்டு
பூளம் - பூவரசு
பூழை - துவாரம், கோபுரவாயில்
பூளை - பூளைச்செடி, இலவம்
பஞ்சு
பாலி - தானியக் குவியல், தூற்றாத
தானியம்
பாழி - கொடுத்தல், ஈதல்
பாளி - வரப்பு, எல்லை
பாலிவு - அழகு, நிறைவு
பாழிவு - பொழிதல், மேன்மை
போலி - பொய், வஞ்சகம், ஒப்பு
போளி - இனிப்புப் பண்டம்
பொலிதல் - செழித்தல், மங்கலமாதல்
பொழிதல் - ஈதல், கொடுத்தல்,
சொரிதல், பெய்தல், நிறைதல்
மலம் - அழுக்கு, பாவம்
மழம் - இளமை, குழந்தை
மலை - குன்று, பொருப்பு,
வெற்பு,சிகரம்
மழை - மழைநீர், குளிர்ச்சி, மேகம்
மலைத்தல் - வியத்தல், தடுமாறுதல்
மழைத்தல் - மழை பெய்திருத்தல்,
குளிர்ந்திருத்தல்
மல்லிகை - மாலை, கழுத்தணி,
வரிசை
மாளிகை - அரண்மனை, கோயில்
மாலை - அந்திப்பொழுது,
பூமாலை
மாழை - மயக்கம், இளமை, அழகு
மாளை - புளியம்பட்டை
மால் - திருமால், மயக்கம், அருகன்,
இந்திரன், பெருமை, மேகம்
மாள் - இறத்தல், சாதல் (இற,சாவு)
முலை - உடலிலுள்ள ஓர் உறுப்பு
முழை - குகை
முளை - முளைத்தல், தறி, ஆப்பு,
அங்குசம், இளமை, தண்டு, மூங்கில்
முழி - விழி (விழித்தல்)
முளி - மரக்கணு, விரல்முளி,
வாட்டம்
மூலி - மூலிகை, மரம், வேருள்ளது
மூழி - அகப்பை, சோறு, நீர்நிலை,
கோணம்
மூலை - இரு கோடுகள் சந்திக்கும்
இடம்
மூளை - மண்டைக்குள் இருக்கும் ஓர்
உறுப்பு(முதன்மைப் பகுதி)
மெல்ல - மென்று தின்பது
மெள்ள - மெதுவாக
மாலி - மொளலி கிரீடம்
மாழி - மேழி, கலப்பை
மாளி - துணிமூட்டை
வலம் - சுற்றுதல், வலப்பக்கம், வெற்றி
வளம் - வளமை, அழகு
வலவன் - திருமால்
வளவன் - சோழன், வேளாளன்
வலன் - ஓர் அரசன், வெற்றி, வல்லவன்
வளன் - செழுமை, வளப்பன்
வழப்பம் - வழக்கம், இயல்பு
வளப்பம் - வளமை, செழிப்பு
வலி - நோய், வலிமை, துன்பம்
வழி - நெறி, பாதை, தடம், உபாயம்
வளி - காற்று
வலை - மீன் முதலியன பிடிக்கும்
ஒரு கருவி
வழை - சுரபுன்னை, புதுமை,
இளமை
வளை - கை வளையல், எலி வளை
வல் - வலிமை, விரைவு, திறமை
வள் - ஒலிக்குறிப்புச் சொல்
வல்லம் - வாழை, ஓர் ஊர்
வள்ளம் - மரக்கலம், படகு, அளவு,
தொன்னை
வல்லி - பூமி, பெண், பிரிதல், படர்
கொடி
வள்ளி - வள்ளியம்மை, ஆபரணம்,
சந்திரன்
வலு - வலிமை, பலம், பற்று
வழு - குற்றம், தவறு, பழிப்புரை,
கேடு
வளு - இளமை, இளைய
வாலி - கிஷ்கிந்தை அரசன்
(இராமாயணம்)
வாழி - வாழ்க (எனவாழ்த்துதல்)
வாளி - அன்பு, வட்ட வாள், வீரன், ஒரு
காதணி
வாலை - இளம்பெண், திராவகம்
வடிக்கும் பாத்திரம், ஒரு சக்தி
வாழை - வாழைமரம்
வாளை - வாளை மீன்
வால் - விலங்குகளின் ஓர் உறுப்பு
வாழ் - வாழ்வாயாக (என்று
வாழ்த்துதல்)
வாள் - போர்வாள், நீண்டகத்தி
விலா - விலா எலும்பு
விழா - திருவிழா, கொண்டாட்டம்
விளா - இளமை, வெண்மை, நிணம்
விழி - கண், கருவிழி
விளி - கூப்பிடு, அழை,
ஏழிசையில் ஒன்று
விலை - மதிப்பு, விலைக்கு விற்றல்
விழை - விரும்பு, ஆசைப்படு
விளை - ஒரு மீன்வகை, விளைவி
(விளைச்சல்)
விலக்கு - விலக்கி விடு, தவிர்
விளக்கு - விளக்கமாகச் சொல், தீபம்
விலங்கு - பூட்டு, கை, கைகளைப்
பிணிக்கும் கருவி, மிருகம்
விளங்கு - திகழ் (திகழ்தல்),
சிற்றரத்தை (மூலிகை வகை)
வெல்லம் - சக்கரைக்கட்டி, கருப்பட்டி
வெள்ளம் - மிதமிஞ்சிய நீர்பெருக்கு
வேலம் - வேலமரம், தோட்டம்
வேழம் - யானை, கரும்பு, மூங்கில்
வேல் - வேலாயுதம்
வேள் - வேளிர் குலத்தவன், மன்மதன்,
ஆசை
வேலை - பணி, கடல்
வேளை - பொழுது, நேரம்,
ஒருவகைக் கீரை
ர, ற பொருள் வேறுபாடு
அர - பாம்பு
அற - தெளிய, முற்றுமாக
அரவு - பாம்பு
அறவு - அறுதல், தொலைதல்
அரம் - ஒரு கருவி
அறம் - தர்மம், நீதி, கற்பு, புண்ணியம்,
கடமை, அறநூல், துறவறம்
அரி - திருமால், அரிசி, அழகு,
அரிதல், பன்றி, வண்டு, கடல், தகடு,
சிவன்
அறி - அறிந்துகொள்
அரிய - கிடைத்தற்கு அரிதான,
கஷ்டமான
அறிய - அறிந்துகொள்ள,
தெரிந்துகொள்ள
அரன் - சிவன்
அறன் - தர்மம், அறக்கடவுள்
அரிவை - பெண் (7 பருவத்துள் ஒன்று.
18 வயதுக்கு மேல் 25 வயதுக் குட்பட்ட
பெண்)
அறிவை - அறிவாய்
அருகு - புல்வகை (அருகம்புல்),
அண்மை
அறுகு - குறைந்து போதல்
அக்கரை - அந்தக் கரை
அக்கறை - ஈடுபாடு
அரை - பாதி, மேகலை, வயிறு, ஒரு
மரம்
அறை - வீட்டின் பகுதி, அடி, பாத்தி,
ஒலி, பாசறை, சொல், குகை,
வஞ்சனை, மாளிகை
அரைதல் - தேய்தல்
அறைதல் - அடித்தல், சொல்லுதல்
அப்புரம் - அந்தப் பக்கம்
அப்புறம் - பிறகு
அர்ப்பணம் - உரித்தாக்குதல்
அற்பணம் - காணிக்கை செலுத்துதல்
அரு - உருவமற்றது
அறு - துண்டித்துவிடு,
அறுத்துவிடு
அருமை - சிறப்பு, அன்பு, இன்மை,
சுலபத்தில் கிடைக்காதது
அறுமை - நிலையின்மை, ஆறு
ஆரு - குடம், நண்டு
ஆறு - ஒரு எண், வழி, சமயம், தன்மை,
நதி, ஒழுக்கம், பக்கம், நிலை
ஆர - நிறைய, அனுபவிக்க
ஆற - சூடு ஆற (குறைய)
ஆரல் - ஒருவகை மீன்
ஆறல் - சூடு குறைதல்
இரத்தல் - யாசித்தல்
இறத்தல் - இறந்துபோதல், சாதல்
இரகு - சூரியன்
இறகு - சிறகு
இரக்கம் - கருணை
இறக்கம் - சரிவு, மரணம்
இரங்கு - கருணைகாட்டு
இறங்கு - கீழிறங்கி வா
இரவம் - இரவு
இறவம் - இறால் மீன்
இரவி - சூரியன், எருக்கு, மலை,
வாணிகத்தொழில்
இறவி - இறத்தல்
இரவு - இரவு நேரம், யாசித்தல்
இறவு - மிகுதி, இறால்மீன், இறுதி,
தேன்கூடு, சாவு, முடிவு, நீக்கம்
இரை -ஒலி, உணவு
இறை - கடவுள், அணு, அரசன், ரேகை,
சந்து, கடமை, தலைமை, விடை,
உயரம், மூலை
இரு - இரண்டு, பெரிய, உட்கார்,
அமர்ந்துகொள்
இறு - ஒடி, கெடு, சொல்லு
இரும்பு - கடிவாளம், கிம்புரி,
ஆயுதம், ஓர் உலோகம்
இறும்பு - வண்டு, சிறுமலை
இருப்பு - கையிருப்பு, இருப்பிடம்,
ஆசனம், நிலை, பொருள், முதல்
இறுப்பு - வடிப்பு
இருத்தல் - அமர்ந்திருத்தல்,
காத்திருத்தல்
இறுத்தல் - வடித்தல், செலுத்தல்,
எறிதல், கடன் கொடுத்தல், பதில்கூறல்,
முடித்தல், முறித்தல்
இருக்கு - மந்திரம், ரிக் வேதம்
இறுக்கு - அழுத்து, இறுக்கிக்கட்டு
இரைத்தல் - ஒலித்தல்,
மூச்சுவாங்குதல்
இறைத்தல் - சிதறுதல், மிகு செலவு
உரவு - அறிவு, ஒலி, மிகுதி, வலி,
ஞானம், விடம்
உறவு - நட்பு, சுற்றம், எறும்பு
உரவோர் - அறிஞர், முனிவர்
உறவோர் - சுற்றத்தார், அடைந்தோர்
உரி - தோல், மரப்பட்டை,
அரைப்படியளவு,
உரிச்சொல்,கொத்துமல்லி
உறி - உறிவெண்ணெய், தூக்கு
உரு - வடிவம், அழகு, உடல், மரக்கலம்,
நிறம், அச்சம், பெருமை, மேன்மை
உறு - மிகுதி
உருக்குதல் - இளக்குதல், மெலியச்
செய்தல்
உறுக்குதல் - சினத்தல், அதட்டுதல்
உரை - புகழ், விளக்கவுரை, நூல்,
பொன்மாற்று, அறிவுரை, சொல்
உறை - இடம், பண்டம், பொருள்,
மருந்து, பாலில் இடும் பிரை, துளி,
மழை, ஆடை, துன்பம், பாம்பின்
விஷப்பை
உரைப்பு - தங்குதல், தோய்தல்
உறைப்பு - காரம், கொடுமை
உரையல் - சொல்லல்
உறையல் - மாறுபாடு, பிணக்கு
உரிய - உரிமையான
உறிய - உறிஞ்ச
ஊரல் - ஊர்தல், கிளிஞ்சல், ஒருவகைப்
பறவை
ஊறல் - தினவு, ஊற்று, சாறு,
வருவாய், ஊறுதல், களிப்பு
ஊரு - அச்சம், தொடை
ஊறு - இடையூறு, துன்பம், காயம்
உறுதல், தீண்டல், குற்றம், புண்,
கொலை
எரி - தீ, கார்த்திகை, பிரபை,
இடபராசி, நெருப்பு, நரகம், வெம்மை,
கந்தகம்
எறி - விடுதல், எறிதல், குறிப்பாகக்
கூறுதல்
ஏர - ஓர் உவமஉருபு
ஏற - மிகுதி, உயர (ஏறுதல்)
ஏரி - நீர்நிலை, குளம்
ஏறி - உயர்ந்த, மேலே ஏறி
ஒரு - ஒன்று, ஒப்பற்ற, ஆடு
ஒறு - தண்டி, அழி, இகழ்
ஒருத்தல் - ஆண் விலங்குகளின்
பொதுப்பெயர்
ஒறுத்தல் - தண்டித்தல், துன்புறுத்தல்,
வருத்துதல், வெறுத்தல், கடிதல்,
இகழ்தல், குறைத்தல்
ஒருவு - நீங்கு
ஒறுவு - வருத்தம், துன்பம்
கரடு - மரக்கணு, மணிக்கட்டு,
முருடு, வளர்ச்சியற்றது
கறடு - தரமற்ற முத்து
கரம் - கிரணம், விஷம், செயல், கை,
கழுதை
கறம் - கொடுமை, வன்செய்கை
சிகரம் -
மலை உச்சி💐ன்செய்கை
சிகரம் -
மலை உச்சி💐

புதிய 'இ-பேரோல்'

அரசு அலுவலகங்களில் புதிய 'இ-பேரோலுக்கு' சிக்கல்

அரசு ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம்
வழங்கப்பட்டு வருகிறது. தற்போதைய நடைமுறைப்படி 'இ-பேரோல்' மென்பொருளில் ஊழியர்களின் ஊதியம், பணப்பலன் பட்டியல் பதிவு செய்யப்பட்டு, கருவூலத்திற்கு சி.டி.,யாகவும், 'பிரின்ட்' படிவமாகவும் அனுப்பப்பட்டு வருகிறது.
இதில், தாமதம் ஏற்படுவதோடு, காகித பயன்பாடும் அதிகமாக உள்ளது. இதை தவிர்க்கும் வகையில் புதிய 'இ-பேரோல்' மென்பொருள் கொண்டு வரப்பட உள்ளது. இதில் ஊதியம், பணப்பலன் பட்டியல் தயாரித்து 'ஆன்லைன்' மூலமே கருவூலத்திற்கு அனுப்பப்படும்.
இதற்காக வரைவு அலுவலர்கள், இளநிலை உதவியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது மென்பொருளை கம்ப்யூட்டரில் ஏற்றுவதற்காக கருவூலகங்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. பெரும்பாலான கம்ப்யூட்டர்கள் பழையதாகவும், 'மெமரி' குறைவானதாகவும் உள்ளன. இதனால் அவற்றில் புதிய மென்பொருளை ஏற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கருவூல அதிகாரி ஒருவர் கூறியதாவது: வரைவு அலுவலர், பட்டியல் தயாரிக்கும் ஊழியர்களுக்கு தனித்தனியாக இரண்டு கம்ப்யூட்டர்கள் வேண்டும். மேலும் புதிய 'இ-பேரோல்' மென்பொருள் இயங்குவதற்கு 4 ஜி.பி., 'ரேம்' வேண்டும். இதனால் பழைய கம்ப்யூட்டர்களை மாற்றிவிட்டு, புதிதாக வாங்க அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஊழியர்களின் பணிப்பதிவேடு 'டிஜிட்டல்' ஆக்கும் பணி முடிந்தவுடன், புதிய 'இ-பேரோல்' செயல்படுத்தப்படும் என்றார்.

நடப்பு நிகழ்வுகள்

நடப்பு நிகழ்வுகள் வினாக்கள் - விடைகள்
=====================================
.
01) சர்வதேச விண்கல் தினம் ?

விடை -- ஜூன் 30

02) ஐ.நா.சபையின் அகதிகளுக்கான ஆணையர் யார் ?

விடை. -- பிலிப்போ கிராண்டி

03) 2017 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஐ.நா. வெளியிட்ட தபால் தலை மதிப்பு எவ்வளவு?

விடை. --  1.15 டாலர்

04) சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் தங்க மட்டை விருது பெற்றவர் யார்?

விடை -- ஷிகர் தவான்

05) UDAY மின் திட்டத்தில் தமிழகம் இணைந்த நாள்?

விடை -- ஜனவரி 09 / 2017

06) கிரண் தோஷி எழுதிய எந்த புத்தகம் ஹிந்து பரிசு 2016 பெற்றது?

விடை -- Jinnah Often Came to Our House

07) 2017ம் ஆண்டு அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு நடவடிக்கை பெயர் என்ன?

விடை --  ஆபரேஷன் சிவா   ......  ( இந்த விடை சரியா என்பதில் சந்தேகம் உள்ளது. விடை தவறாக இருப்பின்  சரியான விடையை பதிவு செய்யுங்கள் )

08) 2017 குடியரசு தின விழா பாதுகாப்பு நடவடிக்கை பெயர் என்ன?

விடை --  Operation Lovly Noses

09) GSTயில்  எத்தனை வரி விகிதங்கள் உள்ளன?

விடை  -- மொத்தம் 8 வகை

1 -- 0 %
2 - 0.25 %
3 - 3 %
4 - 5 %
5 - 12 %
6 - 18 %
7 - 28 %
8 - above 28 %

( இந்த  விடை சரியா என்பதையும்  சரிபார்த்துக்கொள்ளுங்கள் )

10) ஆசிய ரக்பி செவன் கோப்பை போட்டியில், இந்திய பெண்கள் அணி பெற்ற இடம் எது ?

விடை  -- வெள்ளி பதக்கம்

11) பாரிஸ் உலக விளையாட்டு ரக்பி செவன் போட்டியில் 18 வயதுக்குட்பட்ட இந்திய பெண்கள் அணி பெற்ற இடம் எது ?

விடை  -- 5வது இடம்

12) மே 2017ல் மரணமடைந்த மத்திய அமைச்சர் யார் ? அவர் வகித்து வந்த துறை எது ? அவரது மரணத்திற்குப்பின் அந்த துறை யாருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது?

விடை  --  1) அனில் மாதவ் தவே , 2) சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை , 3) ஹர்சவர்தன்

13) ஆஸ்திரேலியா நாடாளுமன்ற வளாகத்தினுள் அமர்ந்து தனது 2 மாத குழந்தைக்கு தாய்ப்பாலூட்டிய செனட்டர் யார்?

 விடை  --   லாரிஸ்சா வாட்டர்ஸ். ( Green party )

Friday, July 21, 2017

புதிய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த்

நம் புதிய ஜனாதிபதி பற்றி தெரிந்து கொள்வோமா ?

பாஜக சார்பில் பாரதத்தின்  ஜனாதிபதியாக  ராம் நாத் கோவிந்த்
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தேசிய அளவிலான மக்கள் அரங்கில் பெரிதாக அறியப்படாதவர். ஆனால் தலித் மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயங்களுக்காக போராடியவர்.

ராம் நாத் கோவிந்த் அக்டோபர் 1, 1945 அன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் தேஜாத்தில் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். கான்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றவர். இவர் சட்டத்துறையில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் ஆவர். டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பிலான வழக்கறிஞராக ராம் நாத் கோவிந்த் பணியாற்றியுள்ளார். மேலும் உச்சநீதிமன்றத்தில் சட்ட ஆலோசகராக பணியாற்றியுள்ளார். உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் இவர் 16 வருடங்கள் பணியாற்றியுள்ளார். இவர் இந்தியாவை ஐநா சபையில் பிரதிநித்திருக்கிறார்.

மே 30, 1974 அன்று சவிதா என்பவரை ராம் நாத் கோவிந்த் மணந்தார். இவர்களுக்கு பிரசாந்த் என்ற மகனும், சுவாதி என்ற மகளும் உள்ளனர்.

1997-ம் ஆண்டில் மத்திய அரசின் சில உத்தரவுகள் தாழ்த்தப்பட்ட மக்களையும், பணியாளர்களையும் பாதிக்கக்கூடியதாக இருந்தன. அந்த உத்தரவுகளுக்கு எதிராக தலித் பணியாளர்கள் இயக்கத்துடன் இணைந்து ராம் நாத் கோவிந்த் போராடினார். இந்த போராட்டம் வெற்றியில் முடிந்தது. இந்த போராட்டத்தில்தான் ராம் நாத் கோவிந்த் முதல்முறையாக பிரபலமானார்.

பீகாரின் ஆளுநராக பதவியேற்றபின் அவர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “அரசியலமைப்பின் இரண்டு அடிப்படை உரிமைகள் பற்றி தலித் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். அவை கல்வி பெறுவதற்கான உரிமை மற்றும் வாக்களிப்பதற்கான உரிமை ஆகியன ஆகும். இந்த இரு உரிமைகளாலும் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை மாறும். இந்த இரண்டு உரிமைகளை பயன்படுத்தாமல் போனதால்தான் நாடு முழுவதிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் தத்தளித்து வருகிறனர்.” என அவர் பேசினார்.

ஆகஸ்டு 8, 2015 அன்று ராம் நாத் கோவிந்த் பீகாரின் 36-வது ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அம்மாநில முதலமைச்சர் நிதீஷ் குமார் அதை வரவேற்கவில்லை. ஆனால் காலப்போக்கில் மாநில அரசுடனும், முதலமைச்சரிடமும் ராம் நாத் சிங் நல்லுறவை வளர்த்துக்கொண்டார்.

நிதீஷ் குமார் அரசு கொண்டுவந்த தடுப்பு சட்டங்களுக்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. ஆனால் பாஜகவின் எதிர்ப்புகளையும் தாண்டி, ராம் நாத் கோவிந்த் அந்த சட்டங்கள் தொடர்பாக சொந்தமாக முடிவெடுத்து அதற்கு ஒப்புதலும் அளித்தார்.

அதேநேரத்தில், லோக் ஆயுக்தா சட்டதிருத்த மசோதாவை மறு ஆய்வு செய்ய மீண்டும் பீகார் சட்டப்பேரவைக்கே அனுப்பியும் வைத்தார். லோக் ஆயுக்தாவை சரியாக முடிக்க உரிய கால அவகாசம் வேண்டும் என அவர் அரசிடம் கூறினார். அதன்படி அரசும் ஒப்புக்கொண்டு லோக் ஆயுக்தாவை நிறைவேற்றியது.

சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளாதவராக ராம் நாத் கோவிந்த் திகழ்ந்தார். ஆனால் சில விவகாரங்களில் உறுதியாக இருந்தார். லக்னோவில் இருக்கும் பி.ஆர்.அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் நிர்வாக குழு உறுப்பினராகவும் பணிபுரிந்துள்ளார்.

ராம் நாத் கோவிந்த் 1994-ம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2006 வரை 12 வருடங்கள் தொடர்ச்சியாக மாநிலங்களவை எம்.பியாக அவர் பொறுப்பு வகித்தார். நாடாளுமன்ற உறுப்பினராக தாய்லாந்து, நேபாளம், பாகிஸ்தான், சிங்கப்பூர், ஜெர்மனி, சுவிச்சர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.

சில நாடாளுமன்ற குழுக்களின் உறுப்பினராகவும் ராம் நாத் கோவிந்த் இருந்திருக்கிறார். தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் பழங்குடியினர் நலனுக்கான நாடாளுமன்ற குழு, உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற குழு. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுக்கான நாடாளுமன்ற குழு, சமூக நீதிக்கான நாடாளுமன்ற குழு, சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற குழு ஆகியவற்றில் ராம் நாத் கோவிந்த் பணியாற்றியுள்ளார்.

1998-ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை பாஜகவின் தலித் மோர்ச்சாவுக்கு தலைவராக ராம் நாத் சிங் பொறுப்பு வகித்துள்ளார். மேலும் அகில இந்திய கோலி சமாஜின் தலைவராகவும் இவர் பதவி வகித்துள்ளார். இந்த கட்சியின் தேசிய பேச்சாளராகவும் ராம் நாத் பணியாற்றியுள்ளார்.

மக்கள் கல்வி பெற ராம் நாத் சிங் பெரிதும் பணியாற்றியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியபோது உத்தரப்பிரதேசத்திலும், உத்தராகண்டிலும் பள்ளிக்கூடங்கள் கட்ட ராம் நாத் கோவிந்த் உதவி செய்துள்ளார்.

வழக்கறிஞராக பணியாற்றியபோது, டெல்லி இலவச சட்ட உதவி சங்கத்தின் வழிகாட்டலினால், தாழ்த்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட சமுதாய பெண்கள், ஏழைகள் ஆகியோருக்கு ராம் நாத் கோவித் இலவசமாக சட்ட உதவி செய்துள்ளார்.

ஆனால் ரங்கநாத் மிஷ்ரா கமிஷனை ராம் நாத் கோவிந்த் பலமாக எதிர்த்தார். 2009-ம் ஆண்டில், அரசு பணிகளில் இஸ்லாமியர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடும், மற்ற சிறுபான்மை சமுதாயத்தினருக்கு 5 சதவிகித இடஒதுக்கீடும், அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள தலித்களுக்கு தாழ்த்தப்பட்டோர் என்ற அந்தஸ்து வழங்கவும் ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் பரிந்துரை செய்தது. அப்போது பாஜகவின் தேசிய பேச்சாளராக இருந்த ராம் நாத் கோவிந்த், “தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் இணைப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. இஸ்லாமும், கிறிஸ்தவமும் இந்தியாவுக்கு அந்நியமானவை. இஸ்லாமியர்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் மதம் மாற்றப்பட்டவர்களின் பிள்ளைகள் கான்வென்ட் பள்ளிகளில் தரமான கல்வி பெறுவது அனைவரும் அறிந்ததே. தாழ்த்தப்பட்டோரின் கல்வி பெறும் நிலை மதம் மாற்றப்பட்ட தலித்கள் மற்றும் இஸ்லாமியர்களின் கல்வி பெறும் நிலையைவிட மிகக்குறைவாகவே உள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் இடஒதுக்கீட்டில், இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் தேர்தலில் வெற்றி பெற்று தாழ்த்தப்பட்டோரின் இடத்தை பிடித்துக்கொள்ளக்கூடும். இதனால் மதமாற்றங்களும் அதிகரித்து இந்திய சமூதாயமே சீர்குலைக்கப்படும்.எனவே ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் அறிக்கையை முழுமையாக நிராகரிக்க வேண்டும்.” என அவர் கூறினார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதால், கே.ஆர். நாராயணனுக்கு பிறகு ஜனாதிபதி பதிவியேற்கும் இரண்டாவது தலித் தலைவர் என்ற பெயர் ராம் நாத் கோவிந்துக்கு கிடைத்திருக்கிறது .

நன்றி:- திரு.கிருபாகரன் முகநூல்



*🔵🔵 விவசாயி முதல் ஜனாதிபதி வரை*

*Follow us on:*
https://twitter.com/SeithiKathir?s=08
 பா.ஜ.,தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்டு நாட்டின் 14 வது ஜனாதிபதியாகும் ராம்நாத்கோவிந்த் விவசாய குடும்பத்தில் பிறந்து சட்டம் பயின்று கவர்னர் வரை பல்வேறு பதவிகளை வகித்தவர்.. இவரது வாழ்க்கை குறிப்பு:

பெயர்: ராம்நாத் கோவிந்த், 71.

பிறந்த தேதி: 1945 அக்., 1.

குடும்ப தொழில் : விவசாயம்

சொந்த ஊர்: தேராபூர், கான்பூர் மாவட்டம், உத்தரபிரதேசம்.

கல்வித் தகுதி : பி.காம்., - எல்.எல்.பி., பட்டம், கான்பூர் பல்கலைக் கழகம்.

திருமணம்: 1974 மே 30

குடும்பம்: மனைவி சவீதா

குழந்தைகள்: மகன் பிரஷாந்த், மகள் ஸ்வாதி.

*சிவில் தேர்வு*

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றவர். ஆனால் ஐ.ஏ.எஸ்., பணி கிடைக்காததால், சட்டத்துறையில் கவனம் செலுத்தினார்.

*வழக்கறிஞர் பணி*

1971: டில்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு.

1978: சுப்ரீம் கோர்ட்டில், 'அட்வகேட் ஆன் ரெக்கார்டு' பணி.

1979: டில்லி ஐகோர்ட்டில், மத்திய அரசு வழக்கறிஞர்.

1980 - 1993: சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசின் ஸ்டேன்டிங் கவுன்சில்.பார்லிமென்ட் பணி

*பார்லிமெண்ட் பணி*

*1994 : பா.ஜ., சார்பில் உ.பி., யில் இருந்து முதன்முறையாக ராஜ்யசபாவுக்கு தேர்வானர். 2000ம் ஆண்டு 2வது முறையாக ராஜ்யசபா எம்.பி., ஆனார்.

எம்.பி.,யாக இருந்தபோது, உள்துறை, பெட்ரோலியம், சமூக நலம், சட்டம் மற்றும் நீதி, எஸ்.சி., - எஸ்.டி., நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிலைக்குழுக்களில் பணி.

*1998 - 2002 வரை பா.ஜ., தலித் மோர்ச்சா பிரிவு தலைவராக இருந்தார்.

* 2002ல் இந்தியாவின் பிரதிநிதியாக ஐ.நா., சபை பொதுக்கூட்டத்தில் பேசினார். பா.ஜ., செய்தி தொடர்பாளராகவும் இருந்தார்.

* லக்னோவில் உள்ள பி.ஆர்.அம்பேத்கர் சட்ட பல்கலை மற்றும் கோல்கட்டா ஐ.எம்.எம்., கல்லூரி ஆகியவற்றில் உறுப்பினராக பணிபுரிந்துள்ளார்

* 2015 ஆக., 8ல் பீகார் கவர்னராக நியமிக்கப்பட்டார். 2017 ஜூன் 20ல் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டதால் கவர்னர் பதவியை ராஜினாமா செய்தார்.

*முதல் குடிமகன்*

* 2017 ஜூலை 20: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் மீராகுமாரை தோற்கடித்து, நாட்டின் 14வது ஜனாதிபதி ஆனார். கே.ஆர்.நாராயணனுக்கு பின் தலித் பிரிவை சேர்ந்த 2வது ஜனாதிபதி என்ற பெருமைக்குரியவர். உ.பி.,யில் இருந்து நிறைய பிரதமர்கள் வந்துள்ளனர். முதன்முறையாக அம்மாநிலத்தை சேர்ந்தவர் 'ராஷ்ட்ரபதி பவனில்' நுழைந்துள்ளார்.

Tuesday, July 18, 2017

*மயங்கொலி பிழை*

*மயங்கொலி பிழை* (சற்று கடினமானது மட்டும்)

அலகு   -    பறவையின் முக்கு
அளகு  -   பெண் மயில்

கலை   -     அழகு
களை    -   பயிர்க்களை

உரவு    -  வலிமை
உறவு   -   சுற்றம்

குரங்கு  -  வானரம்
குறங்கு  -  தொடை.

கணை  -  அம்பு
கனை  -  குதிரை கனைப்பது

முன்னாள்  -  முந்தைய நாள்
முந்நாள்  -  மூன்று நாள்

வரலாறு

பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு - 1757

இரண்டாம் மைசூர்போரை முடிவுக்கு கொண்டு வந்த உடன்படிக்கை - மங்களுர்

வங்காளத்தில் இரட்டையாட்சியை அறிமுகப்படுத்தியவர் - இராபர்ட் கிளைவ்

ஹைதர் அலி  மறைந்த ஆண்டு - 1782

பிட் இந்தியச் சட்டத்தின் ஆண்டு - 1784

காரன்வாலிஸ்பிரபு அறிமுகப்படுத்தியது - நிலையான நிலவரித்திட்டம்

காரன்வாலிஸ் பிரபுவை தொடர்ந்து ஆளுநராகப் பதவியேற்றவர் - சர்ஜான் ஷோர்

பிட் இந்திய திருத்தச் சட்டத்தின் ஆண்டு - 1786

நான்காம் மைசூர்போர் நடைபெற்ற ஆண்டு - 1799

இந்தியா பிரிட்டிஷாருடன் செய்து கொண்ட துணைப்படை உடன்படிக்கையின் பெயர் - சுர்ஜி அர்ஜூன்கான்

வங்கப்புலி என தன்னைக் கூறிக்கொண்ட தலைமை ஆளுநர் - வெல்லெஸ்லிபிரபு

கூர்க்கர்போரில் வெற்றி பெற்றமைக்காக ஹேஸ்டிங்ஸ் பிரபுவிற்கு வழங்கப்பட்ட பட்டம் - மார்குயிஸ்

வங்காள மொழியில் வெளியிடப்பட்ட முதல் வார இதழ் - சமாச்சார் தர்பான்

ஹேஸ்டிங்ஸ் பிரபு நேபாளத்தின் மீது போர்தொடுத்த ஆண்டு - 1814

1768-ல் வமைமிக்க கூர்க்க நாடாக எழுச்சிபெற்றது - நேப்பாளம்

கூர்க்க போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை - சஹேளலி

மூன்றாம் பானிப்பட் போரின் ஆண்டு - 1761

தக்கர்களை ஒடுக்கிய மேஜர் - கர்னல் சீமன்

இந்தியாவில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக ஏற்கப்பட்ட ஆண்டு - 1835

சதி வழக்கம் இவரது காலத்தில் ஒழிக்கப்பட்டது - வில்லியம் பெண்டிங்

வேலூர் சிப்பாய் கலகம் தோன்றிய ஆண்டு - 1806

ராணுவத்துறையில் வில்லியம் பெண்டிங் பிரபுவினால் ரத்து செய்யப்பட்ட முறை -இரட்டைபடி

டல்ஹௌசி பிரபு பஞ்சாபை இணைத்துக்கொண்ட ஆண்டு - 1849

எந்த மாகாண ஆட்சிக்கு லாரன்ஸ் சகோதரர்கள் பணியாற்றினார்கள் - பஞ்சாப்

பம்பாய் – தானாவை இணைத்த முதல் ரயில் பாதை அமைக்கப்பட்ட ஆண்டு - 1853

தந்தித்துறையின் முதல் கண்காணிப்பாளர் - ஓஷாகன்னசே

நவீன அஞ்சல் முறையை தொடங்கிய வைத்தவர் - டல்ஹவுசி

மஸ்லீன் துணிக்கு பெயர் பெற்ற நகரம் - டாக்கா

மகல்வரி முறையின் கீழ் நிலவரித்திட்டத்தின் அலகு - கிராமம்

ஜோனாதன் டங்கன் வடமொழிக் கல்லூரியை நிறுவிய இடம் - பனாரஸ்

விதவைகள் மறுமணச் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - 1855

1846-ல்திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது - 10

சாரதா சட்டத்தின்படி பெண்களுக்கான திருமண வயது - 14

ஹிடாகாரிணி சபையை அமைத்தவர் - அம்பேத்கார்

மெக்காலேவின் குறிப்பு வெளியிடப்பட்ட ஆண்டு - 1835

நெல்கட்டும் செவல் பகுதியை கைப்பற்றியவர் - கர்னல் கேம்ப்பெல்.

கலெக்டர் ஜாக்சனை கட்டபொம்மன் சந்தித்த இடம் - இராமனாதபுரம்

வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை பெயர் - ஜெகவீர பாண்டியன்

கட்டபொம்மன்
தூக்கிடப்பட்ட இடம் - கயத்தாறு

பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்த தளபதி - மேஜர் பானர்மேன்

வேலூர் கலகத்திற்கான காரணம் - புதிய ஆயுதங்கள், சீருடைகள் அறிமுகம்

வேலூர் கோட்டையின் இராணுவத் தளபதி - கர்னல் பான்கோர்ட்

கோட்டைக்கு வெளியே இருந்து கொண்டு இராணிப்பேட்டைக்கு சென்று உதவியை நாடியவர் - மேஜர் கூட்ஸ்

1857-ம் ஆண்டு கலகத்தை முதல் இந்திய விடுதலைப்போர் என்று கருதியவர் - வீர சவார்க்கர்

1857-ம் ஆண்டு கலகத்திற்கு உடனடிக்காரணம் - கொழுப்பு தடவபட்ட துப்பாக்கி தோட்டாக்கள்

பாரக் பூரில் கொழுப்புத் தடவிய துப்பாக்கி தோட்டாக்களை பயன்படுத்த மறுத்த சிப்பாய் - மங்கள் பாண்டே

பேரரசியின் அறிக்கையை கானிங் பிரபு வாசித்த தர்பார் - அலகாபாத்

இராணுவத்தை சீரமைப்பதற்கு கர்சன் பிரபுவினால் நியமிக்கப்பட்ட படைத்தளபதி -கிச்சனர் பிரபு

இந்தியாவின் முதல் வைஸ்ராய் - கானிங்பிரபு

நாட்டுமொழி செய்தித்தாள் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு - 1878

முதலாவது பஞ்ச நிவாரணக் குழுயேற்றவர் - சர்ரிச்சர்டு ஸ்ட்ரோச்சி

இந்தியப் பல்கலைக்கழகங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு - 1904

பிரம்ம சமாஜம் நிறுவப்பட்ட ஆண்டு - 1828

அலகார் இயக்கத்தை தொடங்கியவர் - சர்சையது அகமதுகான்

இராஜாராம் மோகன்ராய் தொடங்கிய வங்காளப்பத்திரிக்கை - சம்வாத்கௌமுகி

சுவாமி தயானந்த சரஸ்வதி எழுதிய நூல் - சத்யார்த்த பிரகாஷ்

சத்ய சோதக் சமாஜத்தை நிறுவியவர் - ஜோதிபா கோவிந்தா பூலே

தெற்கு ஆசியாவின் சாக்ரடிஸ் எனப் பாராட்டப்பெற்றவர் - பெரியார்

இந்திய தேசிய காங்கிரசை தோற்றுவித்தவர் - ஏ.ஓ.ஹயூம்

மிதவாதிகளின் தலைவர் - கோகலே

தீவிரவாதிகளின் தலைவர் - திலகர்

பிரிட்டிஷ் பொதுமக்கள் சபையில் உறுப்பினரான முதல் இந்தியர் - தாதாபாய் நௌரோஜி

முஸ்லிம்லீக் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1906

சூரத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் பிளவுபட்ட ஆண்டு - 1907

அன்னிபெசன்ட் அம்மையார்
தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கிய இடம் - சென்னை – அடையாறு

பாரத் மாதா சங்கத்தைத் தோற்றுவித்தவர் - நீலகண்ட பிரம்மச்சாரி

கேடா சத்யா கிரகத்தை காந்தி யாருக்காகத் தொடங்கினார் - குடியானவர்கள்

சௌரி சௌரா நிகழ்ச்சி நடைபெற்ற ஆண்டு - 1922

ரௌலட்சட்டத்தின் ஆண்டு - 1919