Tuesday, July 4, 2017

பிரிட்டீஷ் இந்தியாவில் பொருளாதாரக் கொள்கை

நவீனகால இந்தியா : பிரிட்டீஷ் இந்தியாவில் பொருளாதாரக் கொள்கை

1757 – 1813 (வாணிபக் காலம்)

கிழக்கிந்தியக் கம்பெனி, தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு, வங்காளத்தில் வணிகத்தைத் தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.  வணிகர்களுக்குதனது விருப்பப்படி நிபந்தனைகளை விதித்தது.
பொருள்களின் விலையை அளவுக்கு மீறி உயர்த்தி வியாபாரிகள் கொள்ளை லாபம்சம்பாதித்தனர்.
இது எப்படி இருந்ததென்றால், பிரிட்டிஷ் வியாபாரிகளின் துப்பாக்கிக் குழல்களில் இருந்துசெல்வம் கொட்டுவதைப் போன்று இருந்தது.
வங்காளத்தில் கிடைத்த வருவாய் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்வதற்குத் தேவையானநிதியாகப் பயன்பட்டது.
1813 – 1858 (இயந்திரத் தொழிலின் காலம்)

பிரிட்டிஷ் பொருட்களை விற்கும் சந்தையாக இந்தியா கருதப்பட்டது.  இதனால்இந்தியர்கள் சுரண்டப்பட்டனர்.
1813 ஆம் ஆண்டுச் சட்டப்படி ஒருவழி வாணிபம் நடைமுறைக்கு வந்தது.
அதனால் இந்தியச் சந்தையில் விலை குறைந்த எந்திரத்தில் உருவான பொருட்கள்இறக்குமதி செய்யப்பட்டு மலைபோல் குவிந்தன.
இந்தியர்கள் தங்கள் உள்நாட்டுச் சந்தையையும், வெளிநாட்டு ஏற்றுமதியையும் இழந்தனர்.
இந்தியர்கள் மூலப்பொருட்களை அனுப்பி எந்திரங்கள் மூலம் உற்பத்திப் பொருட்களாகஆங்கிலேயர்கள் மாற்றி அனுப்பும்போது இறக்குமதி செய்து கொள்ள வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டனர்.
சந்தையில் வியாபாரம் செய்ய முடியாத அளவுக்கு இந்தியப் பொருட்களுக்கு அதிக வரிவசூலிக்கப்பட்டது.

No comments:

Post a Comment