Tuesday, July 4, 2017

நிலவருவாய்த் திட்டங்கள்

நவீனகால இந்தியா : நிலவருவாய்த் திட்டங்கள்

நிரந்தர நில வருவாய்த் திட்டம் (Permanent Settlement or Zamindhari System)

இது, வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா, காசி மாவட்டங்கள் மற்றும் சென்னை மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களில் காரன்வாலிஸ் பிரபுவால் 1793 ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜான்ஷோர் இதைத் திட்டமிட்டார். இதன் மூலம் ஜமீன்தார்கள் நில உரிமையாளர்கள் ஆவார்கள்.
வசூலித்த வருவாயில் அவர்கள் 1/11 பங்கைத் தங்களுக்கு வைத்துக் கொண்டு மீதி 10/11 பங்கு வருவாயை நிலைத்த பங்காக பிரிட்டிஷ்க்குச் செலுத்திவிட வேண்டும்.
விவசாயிகளிடம் இருந்து வசூலிக்கும் தொகையை நிர்ணயிப்பதில்  ஜமீன்தார்களுக்கு முழு உரிமை உண்டு.
தங்கள் நில உரிமை உறுதிப்பட்டு விட்டதால், ஜமீன்தார்கள் நகரங்களில் இருந்து கொண்டு விவசாயிகளைச் சுரண்டி வாழ்ந்தனர்.

No comments:

Post a Comment