Tuesday, July 4, 2017

குல்சாரிலால் நந்தா

🏁 விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய குடியரசின் முன்னாள் பிரதமருமான குல்சாரிலால் நந்தா 1898ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி பஞ்சாப் மாகாணத்திலுள்ள சியால்கோட் என்னுமிடத்தில் பிறந்தார்.

🏁 இவர் இரண்டு முறை தலா 13 நாட்கள் இந்தியாவின் இடைக்கால பிரதமராக இருந்துள்ளார். 1964ல் ஜவகர்லால் நேரு இறந்தபொழுது முதல் முறையும் 1966-ல் லால் பகதூர் சாஸ்திரி இறந்தபொழுது இரண்டாவது முறையும் இடைக்கால பிரதமராக பதவி வகித்தார்.

🏁 இவர் காந்தியின் கொள்கைகளை கடைபிடிக்கும் காந்தியவாதி ஆவார். இந்திய அரசு இவருக்கு 1997ல் பாரத ரத்னா விருது கொடுத்து கௌரவித்தது.

🏁 இந்திய அரசியல்வாதியும் தொழிலாளர் சிக்கலில் நிபுணத்துவம் பெற்ற பொருளாதார அறிஞருமான இவர் தனது 99வது வயதில் (1998) மறைந்தார்.

No comments:

Post a Comment