Tuesday, July 4, 2017

கிலாபத் மற்றும் ஒத்துழையாமை இயக்கம்

நவீனகால இந்தியா : கிலாபத் மற்றும் ஒத்துழையாமை இயக்கம்

கிலாபத் மற்றும் ஒத்துழையாமை இயக்கம்

கிலாபத் பிரச்சனைக்கும் இந்திய அரசியலுக்கு நேரடித் தொடர்பு இல்லாத போதும், கிலாபத் தலைவர்கள் (அலிசகோதரர்கள், மௌலானா ஆசாத், ஹக்கிம் அஜ்மல்கான் மற்றும் ஹஸ்ரத் மொஹானி) இந்துக்களின் ஆதரவைச் சேர்த்துக் கொள்வதில் ஆர்வமுடையவர்களாக இருந்தனர்.
காந்தி இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, இந்து – முஸ்லீம் ஒற்றுமையுடன் பிரிட்டிஷை எதிர்த்துப் போராட எண்ணினார்.
துருக்கி உடன்பாட்டின் அம்சங்கள் மிகவும் கடுமையாக இருந்தன.
இதனை அரசு வெளியிட்டதும், ஹன்ட்டர் கமிட்டியின் பஞ்சாப் பிரச்சனைகளைப் பற்றிய அறிக்கையை வெளியிட்டதும், இந்தியர்களைக் கோபம் அடையச் செய்தது.  இவ்வாறு அரசியல் சூழ்நிலை, கிலாபத் பிரச்சனையோடு ஒரு கோணத்தில் இணைந்து போனது.
தொடக்கத்தில் கிலாபத் தலைவர்கள் தங்கள் செயல்பாடுகளைப் பொதுக்கூட்டங்கள் மனுக்கள் அளிப்பது கிலாபத்துக்கு ஆதரவாகத் தூது அனுப்புவது ஆகியவைகளில் நிறுத்திக் கொண்டனர்.
பின்னாளில் தீவிரவாத அணுகுமுறை வெளிப்பட்டது.  இதில் பிரிட்டிஷ் அரசோடு எல்லா வழிகளிலும் ஒத்து உழைக்காமல் தீவிரமாகப் போராடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
மைய  கிலாபத்  கமிட்டி  அலகாபாத்தில்   கூடியது.  இந்தக் கூட்டத்தில் பல கிலாபத் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.  இந்தக் கூட்டத்தில் அரசோடு ஒத்துழையாமை பற்றிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

No comments:

Post a Comment