Saturday, July 8, 2017

அடுத்த ஜி-20 மாநாடு

*♨அர்ஜென்டினாவில் அடுத்த ஜி-20 மாநாடு♨*

♻🌺♻ஹம்பர்க்: 2018-ம் ஆண்டு ஜி-20 நாடுகளின் தலைவர்கள் மாநாடு அர்ஜென்டினாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டுக்கான ஜி-20 மாநாடு ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் நடந்துமுடிந்துள்ளது.

♻🌺♻இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஜி-20 மாநாடு அர்ஜென்டினாவிலும் , 2019-ம் ஆண்டு ஜி-20 மாநாடு ஜப்பானிலும், 2020-ம் ஆண்டு ஜி-20 மாநாடு சவுதி அரேபியாவிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

*♨வெளிநாட்டு பிரதமர்களுடன் மோடி சந்திப்பு♨*

♻🌺♻ஹம்பர்க்: இங்கிலாந்து, இத்தாலி, ஜப்பான் மற்றும் நார்வே பிரதமர்களுடன் பிரதமர் மோடி இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் ஜி.20 மாநாடு நடந்து வருகிறது. இம்மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு நாட்டு தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

♻🌺♻இன்று இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, இத்தாலி பிரதமர் ஜென்டிலோனி, நார்வே பிரதமர் எர்னா சால்பர்க், தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் மற்றும் வியாட்நாம் பிரதமர் ஆகியோரை சந்தித்தார். இந்த சந்திப்பில் இந்தியாவுடனான நட்புறவு, எதிர்கால திட்டங்கள் மற்றும் உலகளாவிய பொருளாதார சூழல் ஆகியன குறித்து விவாதித்தார்.

♻🌺♻இத்தாலி மற்றும் நார்வேயுடன் வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு முதலீடு குறித்து விவாதிக்கப்பட்டது.இங்கிலாந்து பிரதமருடன் மல்லையாவை நாடு கடத்துவது குறித்தும் மோடி ஆலோசனை நடத்தினார்.அப்போது, மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் விவகாரத்தில், இங்கிலாந்து உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.




இங்கிலாந்து பிரதமர் தெரசா மே,

இத்தாலி பிரதமர் ஜென்டிலோனி,

நார்வே பிரதமர் எர்னா சால்பர்க்,

தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன்

மற்றும்

வியாட்நாம் பிரதமர்

ஜி-20 மாநாடு
2017 - ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில்
            நடந்துமுடிந்துள்ளது.
2018 - அர்ஜென்டினாவிலும் ,
2019 - ஜப்பானிலும்,
2020 - சவுதி அரேபியாவிலும் நடத்த                       முடிவு செய்யப்பட்டுள்ளது.

1 comment: