Tuesday, July 4, 2017

ஸ்வாமி தயானந்த சரஸ்வதி

நவீனகால இந்தியா : ஸ்வாமி தயானந்த சரஸ்வதி

ஸ்வாமி தயானந்த சரஸ்வதி (அல்லது மூலசங்கர்) 1824 ல் குஜராத்தில் பிறந்தார்.  மதுராவில் ஸ்வாமி விரஜானந்தாவிடம் கல்வி பயின்றார்.  ஆர்ண சமாஜின் முதல் நிறுவனத்தை 1875 – ல் பம்பாயில் தொடங்கினார்.
அவர் முதல் புதிய தேசிய வாதியாக கருதப்பட்டார்.
இந்தியாவை மதம், சமுதாயம், நாடு என்ற வகையில் ஒற்றுமைப்படுத்துவதே அவரது நோக்கமாக இருந்தது.  வேதம் இந்தியாவின் காலத்தால் அசைக்க முடியாத பழைய கற்பாறை என்று எண்ணினார்.  அதுவே இந்து மதத்தின் உண்மையான விதை என்றும் “வேதத்துக்குத் திரும்புங்கள்” என்றும் அவர் பிரச்சாரம் செய்தார்.
உருவ வழிபாட்டை அவர் கண்டித்தார்.  “ஒன்றே தெய்வம்” என்ற கருத்தை போதித்தார்.
தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு ஆகியவற்றைப் பரப்பினார்.  விதவை மறுமணம் சமுதாயத்தில் பெண்களுக்குச் சமஉரிமை ஆகியவற்றை வலியுறுத்தினார்.  பொருளற்ற பல சடங்குகளை எதிர்த்தார்.  மதத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் பாடுபட்டார்.
தங்களைப் பாதுகாத்துக் கொள்வதைவிட திரும்பப் போராட வேண்டும் என்ற உணர்வை முதன் முதலில் இந்துக்களுக்கு ஊட்டியவர் தயானந்தர்.  இந்து மதத்தை அழிப்பவர்களிலிருந்து காப்பாற்றி இந்துக்களின் நம்பிக்கைகளை வளர்த்தார்.

No comments:

Post a Comment