Tuesday, July 4, 2017

சம்பரன்

நவீனகால இந்தியா : சம்பரன்

சம்பரன்

19 – ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சம்பரன் (பீகார்) என்னுமிடத்தில் ஐரோப்பியத் தோட்ட முதலாளிகள் பயிர் செய்பவர்களை, ‘இண்டிகோவை’ 3:20 என்ற விகிதத்தில் பயிரிடும்படி வற்புறுத்தினர்.  ஆனால் இண்டிகோ பயிரிட்டது.
அதிக லாபத்தைத் தராத போது தங்கள் நஷ்டத்தை ஈடுசெய்வதற்காக அதிக வரியை பயிர் செய்பவர்களிடமிருந்து வசூலிக்கத் தொடங்கினர்.
இந்த நேரத்தில் தான் (1917) காந்தி தனது போராட்டத்தை துவக்கி பயிர் செய்பவர்கள் இழந்த தொகையை மீண்டும் கிடைக்கும்படிச் செய்தார்.
அகமதாபாத்தில் (மார்ச் – 1918) மில் முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே ‘பிளேக் போனஸ்’ தொடர்பாகக் கருத்து வேற்றுமை ஏற்பட்டது.
ப்ளேக் நோய் நின்றவுடன் மில் முதலாளிகள் ப்ளேக் போனஸ் கொடுப்பதை நிறுத்திவிட விரும்பினர்.
ஆனால் விலைவாசி ஏற்றத்தால் தொழிலாளிகள் போதுமான தொகை ஈடாகத் தரவேண்டும் என்று வாதிட்டனர்.
காந்தி இதில் தலையிட்டு ஒரு தீர்ப்பாயம் ஏற்படுத்தி நிலையைச் சரிசெய்து கொள்ளும்படி ஆலோசனை கூறினார்.

No comments:

Post a Comment