Wednesday, July 5, 2017

கணிதம்

மகாலட்சுமி யின் கணித மாதிரி வினாவிடை மற்றும் வழிமுறைகள்
               

கேள்வி;

1.D0 என்பது 19 ,GO என்பது 22 எனில் SHE  என்பதன் மதிப்பு என்ன?


                இப்படி ஒரு கேள்வியைக்கண்டதும் உடனே இங்கி
பிங்கி பாங்கி போடுவதை நிறுத்துங்கள்.பார்க்க கடினாமாக இருக்கும்
பல கேள்விகளின் விடைகள் மிக எளிமையாக இருக்கும்.

இப்பொழுது முந்தைய பதிவில் நாம் மனப்பாடம் செய்த ALPHABETS
வரிசையை நினைவுக்குக்கொண்டு வருவோம்
1             2              3          4              5          6            7           8           9         10       11         12       13

A      B        C     D       E      F      G     H      I      J      K      L     M
Z      Y        X     W       V     U       T     S     Q     R      P      O    N      

26          25          24          23          22         21        20          19          18      17       16          15      14

கூற்று 2;
இப்பொழுது இதில் D என்ற எழுத்தின் மதிப்பானது 4ஐ
குறிக்கின்றது.அதே போல் O என்பதன் மதிப்பை கண்டால் 15.

அதாவது,
D+O(4+15)=DO=19

கூற்று 2;


G என்பதன் மதிப்பு 7.O வின் மதிப்பு 15.
G+O(7+15)=22.
விடை:


மேலே கண்டதைபோல் இப்பொழுது S,H, மற்றும் E ன் மதிப்புகளை
பதிலிட்டால்


S=19


H=8


E=5

மூன்றையும் கூட்ட


S+H+E(19+8+5)=32 எஸ் மகாலட்சுமி டிஎன்பிஎஸ்சி எ எஸ் ஒ பொது அறிவு வினா விடை

No comments:

Post a Comment