Thursday, June 8, 2017

கம்பராமாயணம்

கம்பராமாயணம் - கந்தபுராணம்
1. இராமன் ( நாயகன் ) - வேலன் ( நாயகன் )
2. வீரஅனுமன் ( இராம தூதன் ) - வீரபாகுதேவர் ( வேலன் தூதன் )
3. இராவணன் ( அரக்கர்கோன் ) - சூரபத்மன் ( அசுரர்கோன் )
4. சூர்ப்பனகை ( இலக்குவனால் மூக்கறுபட்டவள் ) - அசமுகி ( மாகாளனால் கையறுபட்டவள் )
5. இலக்குவன் ( சீதையின் காவலுக்கு நின்றவன் ) - மாகாளன் ( இந்திரானியின் காவலுக்கு நின்றவன் )
6. சீதை ( இராவணனால் சிறை பட்டவள் - கற்புக்கரசி ) - சயந்தன் ( சூரனால் சிறை பட்டவன் )
7. இலங்காபுரி ( இராவணன் வசிப்பிடம் ) - வீரமகேந்திரபுரி ( சூரன் வசிப்பிடம் )
8. மண்டோதரி ( இராவணன் மனைவி - கற்புக்கரசி ) - பதுமகோமளை ( சூரன் மனைவி - கற்புக்கரசி )
9. இந்திரஜித் ( இராவணனின் மூத்த மகன் ) - பானுகோபன் ( சூரனின் மூத்த மகன் )

அடுத்ததாக கம்பநாடாருக்கும் கச்சியப்பருக்கும் உள்ள ஒற்றுமைகள் யாதெனப் பார்ப்போம் பின்னர் அவ்வாறே காட்சிகளில் உள்ள ஒற்றுமைகள் யாதெனப் பார்ப்போம்.

கம்பநாடார் ( கம்ப நாட்டாழ்வார் ) :

வடமொழியில் மகரிஷி வால்மீகி இயற்றிய இராமாயணத்தையே தமிழில் கம்பர் இயற்றினார்.
( ஸ்ரீ ராமனின் சரிதம் வால்மீகி மற்றும் கம்பரைப் போலவே இன்னும் சிலரால் வேறு சில மொழிகளில் இயற்றப்பட்டுள்ளது. ரங்கநாதர் - தெலுங்கு, மாதவ் கண்டளி - அஸ்ஸாமி, துளசி தாசர் - இந்தி, பலராம்தாஸ் - ஒரியா, நரஹரிகவி - கன்னடம், துஞ்சத்து எழுத்தச்சன் - மலையாளம், பிரேமாநந்தர் - குஜராத்தி, ஸ்ரீதரா - மராத்தி மற்றும் கிர்த்திவாஸ் - வங்காளம். )
இவர் சோழநாட்டில் திருவழுந்தூரில் உச்சவர் குடியில் தோன்றினர் என்பர். இவர் தந்தை ஆதித்தன் என்பர். இவர் திருவள்ளுவர் மற்றும் ஔவை முதலியவருடன் பிறந்தவர் என்பர். இவர் சிறு வயதில் காளிகோவில் கம்பத்தின் கீழ் கிடந்ததால் கம்பர் எனவும், இவரது ஆசிரியரின் கம்பங்கொல்லையை காவல் காத்தமையால் கம்பர் என அழைக்கப்பட்டார் என்பர். 

No comments:

Post a Comment