Monday, June 26, 2017

தமிழ் 100/100

டிஎன்பிஎஸ்சி தேர்வில் மொழிபாடத்தில் இலக்கணத்தை வென்று நூறு மதிப்பெண் பெறுவது அறிவோம்

Career India தமிழ்

கனவு வாரியமான டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான டிப்ஸ் படிக்கவும் டிஎன்பிஸ்சி தேர்வு எழுதுவோர்க்கான எளியவழியில் மொழிப்பகுதியில் நூறு மதிபெண்கள் பெறும் வாய்ப்பினை கற்றுத்தருகிறேன் அவ்வழிமுறைகளை பயன்படுத்துங்கள் போதுமானது ஆகும் . எந்தவொரு தேர்வுக்கும் திட்டமிடல் அவசியம் அத்துடன் அத்திட்டத்தில் செயல்படுத்த சந்திக்க நேரிடும் இடையூறுகள் அவற்றை சரிசெய்யும் வழிமுறைகள் அறிந்து திட்டமிடுங்கள் நீங்கள் வெற்றி பெறுவது உறுதி.
டிஎன்பிஎஸ்சி தேர்வாளர்களே கனவு வாரியமான டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் உங்களுக்கு முந்தயை பதிவில் மொழிதேர்வு குறித்து அதில் தாங்கள் காட்டவேண்டிய முனைப்பு குறித்து தெரிவித்தேன் .
டிஎன்பிஎஸ்சி தேர்வாளர்கள் மொழியறிவை ஆறுமுதல் 10 ஆம் வகுப்புவரையுள்ள உங்களது சமச்சீர் புத்தகங்களை வரிவிடாமல் படிக்க வேண்டும் . படித்தபாடங்களை திரும்ப திரும்ப படிக்க வேண்டும் . அத்துடன் அவற்றை சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள் . கடந்த வருட தேர்வுத்தாள்களை எடுத்து அவற்றை பரிசோதித்துப் பாருங்கள் . பரிசோதனையா!!!,, யோசிக்க ஒன்றுமில்லை டெஸ்ட் ,செல்ஃப் டெஸ்ட் செய்து பாருங்கள் அதனையே பரிசோதனை என்றேன்.
இலக்கணம் :
தமிழ் இலக்கணத்தை சாதரணமாக எடுத்துகொள்ள கூடாது . தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும் மற்றும் சார்பு எழுத்துகள், ஒற்று பிழை, இலக்கண குறிப்பு, பிரித்து எழுதுக , சந்திப் பிழை , வாக்கியத்தில் அமைத்து எழுதுக , ஒருவாக்கியம் எந்த வகை சார்ந்தது என்ற கேள்விகள் முக்கியமானது . நான் குறிப்பிட்ட அந்தந்த இலக்கண பிரிவில் நாம் கைதேர்ந்தவர்களாக இருப்போம். ஆதலால் இதனை திருப்பி பார்பதில் நாம் அவ்வளவு ஆர்வம் காட்ட மாட்டோம் ஆனால் நாம் இந்த பக்கங்களை அதிகம் திருப்பி படிக்க வேண்டும் . அத்துடன் சுயதேர்வு எழுத வேண்டும் மேலும் கடந்த வருட தேர்வுத்தாள்களிலுள்ள இலக்கண கேள்விகளை தனியாக எழுதி படித்துப்பாருங்கள் . தேர்வறையில் கில்லியாக செயல்படுவீர்கள் . தமிழ் இலக்கணத்தில் விதிமுறைகள் அறிந்தோமானால் போதுமானது . கண்ணை மூடி கேள்விக்கு விடையளிக்கலாம் . நீங்க பயிற்சி புத்தகங்கள் எதுவும் வாங்க வேண்டாம் . தமிழ் இலக்கணத்திற்கு ஒரு புத்தகம் போதுமானது ஆகும் . திருப்தி இல்லையென்றால் இரண்டு எழுத்தாளர்கள் புத்தகங்கள் வாங்குங்கள் அல்லது 11, 12ஆம் வகுப்பு இலக்கணத்தை படியுங்கள் , படித்தால் போததாது திரும்ப திரும்ப படிக்க வேண்டும் . மறக்காமல் சுயதேர்வு வைத்து சுயமதிப்பீடு வையுங்கள் போதுமானது ஆகும் .நீங்கள் இலக்கணத்தைப் பொருத்தவரையில் எத்தனை இலக்கண புத்தகங்கள் வாங்கினாலும் ஒன்றுபோல்தான் இருக்கும் .
இலக்கியம் செய்யுள் நூல்கள் :
இலக்கியம் இலக்கியம் சார்ந்த தகவல்கல் அடிப்படை த் தகவலகள் தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் செய்யுள் நூல்களான திருக்குறள்கள் அனைத்தும் குறைந்த பட்சம் பாடபுத்தகத்தில் உள்ள குறள்கள் தெரிந்து கொள்ளவும் . ஏனெனில் இலக்கணம் சார்ந்த சீர், வெண்பா, போன்ற கேள்விகள் திருக்குற்ளை வைத்து கேட்கப்படும் . திருக்குறளை படிக்கும்போது திருக்குறள் சார்ந்த இலக்கண கேள்விகளை மனதில் வைத்து படியுங்கள் சர்வ நிச்சயமாக நீங்கள் 100க்கு 100 வாங்குவீர்கள் அதில் எந்த சந்தேகங்களும் தேவையில்லை . அடுத்து வரும் பதிவில் அடுத்தடுத்த விளக்கங்களுடன் சந்திக்கிறேன் . படித்தவுடன் கருத்துகள் ஏதேனும் இருந்தால் தெரிவியுங்கள் .
பலதோல்விகள் சந்தித்தேன் வெற்றி கிடைக்கும்பொழுது ஒவ்வொரு தோல்வியும் வெற்றி என அறிந்து கொண்டேன் .
இது சார்ந்த தகவல்கள்:டிஎன்பிஎஸ்சி தேர்வு நெருங்கிவிட்டது ,கனவு வாரியமான போட்டி தேர்வை எதிர்கொள்ள வழிமுறைகள்
டிஎன்பிஎஸ்சி கனவுவாரியத்தில் நுழைய யுக்திகளுடன் மொழியறிவில் நூறு மதிபெண்கள்

No comments:

Post a Comment