Thursday, June 22, 2017

நெருக்கடி நிலை

    1. மூன்றுவிதமான நெருக்கடி நிலை உள்ளது. இந்த மூன்றையும் ஜனாதிபதிதான் பிறப்பிப்பார். பிறப்பிக்குமுன் மத்திய மந்திரிசபை பரிந்துரை  பெறவேண்டும்
      2.    அ) தேசிய நெருக்கடி  ( National Emergency )   –  Art 352
           ஆ) மாநில நெருக்கடி  ( Constitutional Emergency)  Art -356
           இ) நிதி நெருக்கடி    ( Finance Emergency )      Art -360
     3. நிதி நெருக்கடி இதுவரை பிறப்பிக்கப்படவில்லை இது பிறப்பிக்கப்பட்டால் அரசு ஊழியர்சம்பளத்தினைக்
       கூட குறைக்கவும் செய்யலாம்
     4. தேசிய நெருக்கடி வெளிநாட்டுப்படையெடுப்பு மற்றும் Armed rebellion(ஆயுதக்கலவரம்) இருந்தால்  ஜனாதிபதி மத்திய மந்திரிசபையின் பரிந்துரையுடன் பிறப்பிக்கலாம். பிறப்பித்த ஒருமாதத்திற்குள் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்கவேண்டும் ஆறு மாதகாலத்துக்குமட்டும் மேற்கொண்டு அவசியமானால் ஒவ்வொரு  ஆறு மாதத்திற்கும் ஜனாதிபதி ஒப்புதல் தேவை
       இந்த நெருக்கடி அமுலில் இருந்தால் Art 19 ன்கீழான அடிப்படை உரிமை  தானாக இரத்தாகிவிடும் இந்த அடிப்படை உரிமைக்கு வழக்கு தொடரமுடியாதுஅடிப்படை உரிமையை ஜனாதிபதி தற்காலிகமாக
நிறுத்திவைக்கலாம் நீதிமன்றத்துக்கும் செல்லமுடியாது பாராளுமன்றம் மாநிலப்பட்டியலில் கண்டுள்ள இன்ங்களுக்கு சட்டம் இயற்றலாம்
        ஆனால் Art 20 and Art 21 ( Life and Personal Liberty ) ன்கீழ் கண்ட உரிமையை ஜனாதிபதி நிறுத்திவைக்கமுடியாது
       1. A person will be entitled to challenge the validity of his detention during the operation of emergency
        2. Art 21 : Right to live and personal liberty only for citizens as well as non citizens
       இதுவரை 3 முறை தேசிய நெருக்கடி நிலை இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ளது
           1. 1962    இந்திய சீன போரின்போது
           2. 1971    இந்திய பாகிஸ்தான் போரின்போது
           3. 1975    இந்திராகாந்தியால்
     5. மாநில நெருக்கடி நிலை  Art 356
       1.மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியைக்கொண்டுவரலாம்
       2.மாநிலத்தில் அரசியலமைப்பை செயல்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டால் கவர்னர் அறிக்கையின் பேரில்
         அமுல்படுத்தப்படும்
       3. Art 356 ஐ அம்பேத்கர் Dead letter of the constitution  என்று சொன்னார்

No comments:

Post a Comment