Sunday, June 25, 2017

குடியரசுத் தலைவர் - ஆளுநர்

Q1. இந்தியா எப்போது குடியரசு நாடானது?
26-1-1950 - வியாழக்கிழமை

Q2. குடியரசுத் தலைவர் பதவி என்றிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டது?
26-1-1950

Q3. 15-8-1947க்கும் 26-1-1950க்கும் இடைப்பட்ட காலத்தில் நம் நாட்டின் தலைவராக இருந்தவர்கள் யார்?

1. 15-8-1947 - ஜூன் 1949 - மவுண்ட்பேட்டன் பிரபு - கவர்னர் ஜெனரல்.
2. ஜூன் 1949 - 26-1-1950 - சி-ராஜகோபாலச்சாரி - முதல் இந்திய மற்றும் ஒரே கவர்னர் ஜெனரல்.

Q4. அரசியல் சட்டத்தில், குறிப்பாக, எந்த விதி குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றி விளக்குகிறது?
விதி 54. மற்ற விதிகள் 51-61 வரை குடியரசுத் தலைவரின் மற்ற விபரங்களை பற்றி விரிவாக விளக்கியுள்ளது.

Q5. ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் குடியரசுத் தலைவர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
ராஷ்டிரபதி - Lord of the Realm.

Q6. ராஷ்டிரபதி என்ற சமஸ்கிருத வார்த்தையை கோர்த்து அளித்தவர் யார்?
T.N. ஸ்ரீகண்டைய்யா - கன்னட எழுத்தாளர் மற்றும் வரைவு இந்திய அரசியல் சட்டக் குழு உறுப்பினர்.

Q7. குடியரசுத் தலைவராக தேவையான தகுதிகள் யாவை?

1. இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
2. 35 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
3. பண வரவு இருக்கக் கூடிய வேறு எந்த பதவியும் வகிக்கக் கூடாது.
4. மன ரீதியாக ஸ்திரமான சுவாதீனம் உள்ளவராய் இருத்தல் வேண்டும்.
துணைக் குடியரசுத் தலைவருக்கும் இந்த விதிகள் பொருந்தும்.

Q8. குடியரசு (Democracy : ஜன நாயகம்) என்றால் என்ன?
மக்களாட்சி, அதாவது மக்களால் மக்களுக்காக மக்களின் பிரதி நிதிகளால், குடியரசுத் தலைவரின் கீழ் நடத்தப்படும் ஆட்சி ஆகவே, மக்களிடம் தான் அதிக அதிகாரம் உள்ளது என்பது கருத்து.

Q9. குடியரசுத் தலைவர் தேர்தலில் பங்கு பெறுபவர்கள் யார்?

1. பாராளுமன்றத்தின் இரு அவை உறுப்பினர்கள்.
2. மாநில அரசு சட்டசபை உறுப்பினர்கள். இவ்வாறாக அடங்கிய வாக்காளர் குழுவின் மூலம், ரகசிய வாக்கெடுப்பின் மூலம், ஒற்றை மாற்று வாக்கு (Single Transferable Vote) முறையின் மூலம் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

Q10. குடியரசுத் தலைவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பவர் யார்?
உச்ச நீதி மன்ற உயர் நீதிபதி - Chief Justice of India (அரசியல் சட்ட விதி எண் - 60)

Q11. குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் என்ன?
5 ஆண்டுகள். (அதற்கு முன்பாக பதவி விலகல், பதவி விலக்கல் மற்றும் மரணம் போன்ற காரணங்களால் குறையலாம்.

Q12. குடியரசுத் தலைவரை எந்த விதிப்படி பதவி நீக்கம் செய்யலாம்?
அரசியல் சட்ட விதி எண் 61ன் கீழ் அரசியல் ஒழுங்கீனம் (Impeachment) என்ற அடிப்படையில்.

Q13. நம் நாட்டின் முதல் குடியரசுத் தலைவர் யார்?
டாக்டர் ராஜேந்திர பிரசாத் - 26-1-1950 - 13-5-1962.

Q14. நம் நாட்டில் நீண்ட கால குடியரசுத் தலைவராக இருந்தவர் யார்?
டாக்டர் ராஜேந்திர பிரசாத் - 26-1-1950 - 13-5-1962 - 12 வருடம், 3 மாதங்கள்.

Q15. நம் நாட்டில் குறைந்த கால குடியரசுத் தலைவராக இருந்தவர் யார்?
Q16. இஸ்லாமிய சமுதாயத்திலிருந்து எத்தனை குடியரசுத் தலைவர்கள் பதவி வகித்துள்ளனர்?
மூன்று.
1. ஜாகிர் உசேன் - 13-5-1967 - 3-5-1969
2. ஃபக்ருதீன் அலி அகமது - 24-8-1974 - 11-2-1977
3. APJ அப்துல் கலாம் - 25-7-2002 - 25-2-2007
Q17. சீக்கிய மதத்தை சார்ந்த எத்தனை பேர் குடியரசுத் தலைவர் பதவி வகித்துள்ளனர்?
1. க்யானி ஜெயில் சிங் - 25-7-1982 - 25-7-1987

Q18. தாழ்த்தப் பட்ட இனத்தை சார்ந்த எத்தனை பேர் குடியரசுத் தலைவராக இருந்துள்ளனர்?
1. K.R. நாராயணன் - ஜூலை 1997 - ஜூலை 2002.

Q19. பதவியிலிருக்கும் போது மறைந்த இரண்டு குடியரசுத் தலைவர்கள் யார்?

1. டாக்டர் ஜாகிர் உசேன் - மறைவு - 3-5-1969
2. ஃபக்ருதீன் அலி அகமது - மறைவு - 11-2-1977

Q20. குறைந்த வயதில் நம் நாட்டு குடியரசுத் தலைவராக பதவியேற்றவர் யார்?
நீலம் சஞ்சீவ ரெட்டி - 64 வயது.

Q21. அதிகமான வயதில் நம் நாட்டு குடியரசுத் தலைவராக பதவியேற்றவர் யார்?

1. R. வெங்கட்ராமன்
2. ப்ரணாப் முகர்ஜி. - இருவருமே தங்களது 77வது வயதில் இப்பதவியை ஏற்றனர்.
Q22. எத்தனை தடவை, எந்த கால கட்டத்தில் தற்காலிக குடியரசுத் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்?

1. வி.வி. கிரி - 3-5-1969 - 20-7-1969 - டாக்டர் ஜாகீர் உசேன் மறைவு.
2. எம். இதயத்துல்லா - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி - 20-7-1969 - 24-8-1969 - குடியரசுத் தலைவர் தேர்தல்.
3. பி.டி. ஜட்டி - 11-2-1977 - 2-5-1977 - ஃபக்ருதீன் அலி அகமது மறைவு
இவர்களில் வி.வி.கிரி மட்டும் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றார்.

Q23. அரசியல் சம்பந்தமில்லாத யார் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்?
APJ அப்துல் கலாம் - விஞ்ஞானி - 2002 - 2007 (இவர் முழுப்பெயர் - அவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்)

No comments:

Post a Comment