"இந்திய ராணுவ தினம் ஜனவரி-15"
1949ல் இதே நாளில் முதல் தளபதியாக ஜெனரல் கரியப்பா பொறுபபேற்றதன் அடிப்படையில் ராணுவ தினம் அனுசரிக்கப்படுக்கிறது..
லட்சக்கணக்கான வீரர்களை கொண்ட ராணுவத்தில் மிக உயர்ந்த அந்தஸ்தான பீல்டு மார்ஷலை எட்டியவர் கரியப்பா.1965 பாகிஸ்தான் போரின் போது விமானப்ப டையில் இவர் மகன் பணியாற்றினார்.
துரதிஷ்டவசமாக எதிரிகளிடம் பிடிபட்டுவிட்டார். பாக். தளபதி அயூப்கான் உடனே கரியப்பாவை தொடர்பு கொண்டு நல்ல முறையில் வைத்திருந்து விடுதலை செய்வதாக சொன்னபோது. அதெல்லாம் தேவையில்லை. மற்ற போர் கைதிகளைப் போலவே அவனை நடத்துங்கள். நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்ட அவன் உயிரை பற்றி கவலையில்லை என்று சொன்னவர் கரியப்பா.
பீல்டு மார்ஷல் அந்தஸ்த்தை பிடித்த மற்ற ஒரேயொரு தளபதி, சேம் மானக்சா..1971 போரில் பாகிஸ்தானை சரணடைய வைத்த ஹீரோ
இரண்டு ஜாம்பவான்களுக்கும் தமிழகத்திற்கும் ஒரு அருமையான தொடர்பு உண்டு. கரியப்பாவுக்கு கல்வி போதித்தது, சென்னை லயோலா கல்லூரி..
மானக்சாவின் கடைசி விருப்ப வாழ்விடமாய் அமைந்தது உதகை அருகே உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி. 94 வயது வரை அங்கேயே வாழ்ந்து காலமானவர் மானக்சா..
இப்படிப்பட்ட தகவல்களை படிக்கும்போது, எப்பேர்பட்ட மனிதர்களெல்லாம் வாழ்ந்துவிட்டு போயிக்கிறார்கள் என்று ஆதங்கமே மேலோங்குகிறது.
நன்றி :- தகவல். அன்பிற்கினிய நண்பர்கள்.
வீர வணக்கத்துடன்
No comments:
Post a Comment