Saturday, January 13, 2018

நடப்பு நிகழ்வுகள் 80 வினாக்கள் & விடைகள்



01) கன்னியாகுமரியில் சமூக சேவகி மேதா பட்கர் துவக்கிய பிரச்சார யாத்திரையின் பெயர் என்ன ?

விடை -- NashaMukt Bharat Yatra  (Addiction free India)
.
02) ஐ. நா. பருவநிலை மாற்றம் விருது - 2016 பெற்றுள்ள இந்திய தன்னார்வ தொண்டு நிறுவனம் எது ?

விடை – Swayam Shikshan Prayog
.
03) சர்வதேச சிறுவர்கள் உரிமை பற்றி ஐ.நா.வில் இரண்டு முறை உரையாற்றிய இந்திய சிறுமி யார்?

விடை – Anoyara Khatun ( மேற்கு வங்காளம் )
.
04 ) பெண் எழுத்தாளர்களை ஊக்குவிக்க நேசனல் புக் டிரஸ்ட் துவக்கிய திட்டம் என்ன ?

விடை – Mahila Lekhak Protahan Yojana
.
05) தேசிய புலனாய்வு கூட்டமைப்பின் ( NATGRID ) தலைமை செயல் அதிகாரி யார் ?

விடை – அசோக் பட்நாயக்
.
06) இந்திய விமான நிலைய ஆணையத்தின் தலைவர் யார் ?

விடை – குருபிரசாத் மொஹாபத்ரா
.
07) 2016ம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக MERRIAM WEBSTER அகராதி தேர்வு செய்த வார்த்தை எது ?

விடை – SURREAL
.
08) 2016ம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக OXFORD அகராதி தேர்வு செய்த வார்த்தை எது ?

விடை – POST TRUTH
.
09) OXFORD அகராதியில் சேர்க்கப்பட்ட " அய்யோ , அய்ய " என்ற இரு வார்த்தைகள் எந்த மொழியின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது ?

விடை – சீனாவின் மாண்டரின் மொழி
.
10) தமிழக அரசின் சார்பில், தகவல் தொழில் நுட்ப தினம் எந்த தேதியில் கடைபிடிக்கப்படுகிறது?

விடை – டிசம்பர் 22 [ கணித மேதை ராம்மனுஜன் பிறந்த தினம் ]
.
11) சமீபத்திய ஒப்பந்தத்தின்படி நேபாளத்திற்கு எத்தனை மெகாவாட் மின்சாரம் வழங்க இந்தியா ஒத்துக்கொண்டுள்ளது ?

விடை – 80 மெகா வாட்
.
12) டிசம்பர் 2016 நிலவரப்படி e டூரிஸ்ட் விசா எத்தனை நாட்டின் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது ?

விடை – 161 நாடுகள்
.
13) ரொக்கமில்லா பண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க, டீசல் மற்றும் பெட்ரோல் விற்பனையில் வழங்கப்படும் தள்ளுபடி எவ்வளவு ?

விடை – 0.75 %
.
14) 45வது அகில இந்திய காவல் அறிவியல் மாநாடு எங்கு நடைபெற்றது ?

விடை –  கோவளம், திருவனந்தபுரம்
.
15) SIMCON - 2016 எதனோடு தொடர்புடையது ?

விடை – மாநில தகவல் தொழிநுட்ப துறை அமைச்சர்கள் மாநாடு – [ 28TH STATE INFORMATION MINISTERS CONFERENCE ] நடைபெற்ற இடம் – டெல்லி
மாநாட்டின் கருப்பொருள்  – Reform, Perform & Transform – A New Dimension of Communication
.
16) HIV நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பாதுகாக்க , ஓடிஸா மாநில அரசால் துவக்கப்பட்ட திட்டம் என்ன ?

விடை – BIJU SISHU SURAKSHYA YOJANA
.
17) தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் இடம் என்ன ? [ GLOBAL TERRORISM INDEX 2016 ]

விடை – 7 வது இடம்  .... [ முதலிடம் – இராக் ]
.
18) நவம்பர் 08 / 2016ல் உயர் மதிப்புடைய நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்படத்தின் பின், பல்வேறு கடன்களின் தவணைகளை செலுத்த ரிசர்வ் வங்கி வழங்கிய சலுகை காலம் எவ்வளவு ?

விடை – 90 நாட்கள்
.
19 ) ஆசியா, பசுபிக் பொருளாதார கூட்டமைப்பின் சார்பில், கடைபிடிக்கப்பட்ட பொருளாதார தலைவர்கள் வாரம் எது?

விடை –  நவம்பர் 14 முதல் 20 / 2016 வரை
.
20) சீனாவின் ONE BELT, ONE ROAD திட்டத்தில் இணைந்த முதல் பால்டிக் கடல் நாடு எது ?

விடை –  லாட்வியா
.
21) இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் குடியரசு தின விழாவை முன்னிட்டு இரண்டாம் ஆண்டாக டெல்லி செங்கோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார திருவிழாவின் பெயர் என்ன ?

விடை –  BHARAT PARV
.
22) ஜனவரி 2017ல் இந்தியாவில் இருந்து கோழி இறக்குமதிக்கு தடைவிதித்த இரு நாடுகள் எவை ?

விடை –  ஹாங்காங் & UAE
.
23) திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுப்பதற்காக, வீட்டில் கழிப்பறை இருந்தால் மட்டுமே நியாய விலை கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்த மாவட்ட ஆட்சியர் யார்?

விடை –   SHEOPUR DISTRICT COLLECTOR  - M.P.
.
24) அடுத்த 25 ஆண்டுகளில் உலகின் முதல் ட்ரில்லியனராக இருப்பார் என OXFOM INTERNATIONAL யாரை சுட்டிக்காட்டியுள்ளது.?

விடை –  பில் கேட்ஸ்
.
25) ரப்பர் உற்பத்தியாளர்களின், உற்பத்தி திறனை அதிகரிக்கவும், உற்பத்தி செலவை குறைக்கவும் மத்திய வர்த்தக அமைச்சகம் ஏற்படுத்தியுள்ள அமைப்பு எது ?

விடை –  RUBBER SOIL INFORMATION SYSTEM (RuBSIS)
.
26) மொரிஷியஸ் நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளவர் யார் ?

விடை –  PRAVIND KUMAR  JUGNATH
.
27) உணவு விநியோக துறையில் கால்பதித்துள்ள உபெர் [Uber] நிறுவனம் வெளியிட்டுள்ள செயலி எது ?

விடை –  UberEATS
.
28) நிதிப் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம் 2003 ஐ { FISCAL RESPONSIBILITY AND BUDGET MANANGEMENT [ FRBM] ACT } மறுசீராய்வு செய்ய அமைக்கப்பட்ட N.K. சிங் கமிட்டி வழங்கிய பரிந்துரை என்ன ?

விடை –  நிதி பற்றாக்குறை 3% க்குள் இருக்க வேண்டும் என்பதை 3 முதல் 3.5% வரை இருக்கலாம் என பரிந்துரை வழங்கியுள்ளது.
.
29) சமுதாய வானொலிகளில் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு நிமிடங்கள் வர்த்தக விளம்பரங்கள் ஒளிபரப்பி கொள்ள மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது?

விடை –  7 நிமிடங்கள்

.
30) நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், கொல்கத்தாவில் இருந்து தப்பிச்சென்ற நிகழ்வின் 76வது ஆண்டை முன்னிட்டு, அவர் தப்பி செல்ல பயன்படுத்திய கார் மறு சீரமைப்பு செய்து ஜனாதிபதி முன்னிலையில்
வெளிவிடப்பட்டது. அந்த காரின் பெயர் என்ன ?

விடை –  Audi  Wanderer W24 [ ஜெர்மனி தயாரிப்பு ]

31) TROPHICAL PARASITOLOGY CONFERENCE எங்கு நடைபெற்றது?

விடை –  இந்திய வெப்பமண்டல ஒட்டுண்ணியியல் கழகத்தின் 10வது தேசிய மாநாடு நடைபெற்ற இடம் – புதுச்சேரி
.
32) இந்தியாவின் முதல் ஊரக ஸ்கேட்டிங் பூங்கா எங்கு துவங்கப்பட்டுள்ளது?

விடை –  JANWAAR ( BUNDELKHAND ) மத்திய பிரதேசம்
.
33) இந்தியாவின் முதல் ரொக்க பரிவர்தனை இல்லாத கிராமமான அகோதராவை தத்து எடுத்த வங்கி எது ?

விடை – ICICI வங்கி
.
34) தீவிரவாதி பர்ஹான் வாணி சுட்டு கொல்லப்பட்ட பின், காஷ்மீர் சிறுவர்களுக்கு இலவச பயிற்சி மற்றும் கூடுதல் கல்வி சார்ந்த பயிற்சிகள் வழங்க, ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையின் பெயர் என்ன ?

விடை –  OPERATION SCHOOL CHALO ( இது தொடர்பாக ராணுவத்தினர் பயன்படுத்திய முழக்கம் -  I don’t need money and fame, I need books and school )
.
35) STATE OF THE STATE CONCLAVE 2016 எங்கு நடைபெற்றது ?

விடை –  புதுடெல்லி
.
36) 5வது சர்வதேச சுற்றுலா அங்காடி எங்கு நடைபெற்றது ?

விடை –  இம்பால் ( மணிப்பூர்) [5TH INTERNATIONAL TOURISM MART]
.
37) மேற்கு வங்கத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் பெயர் என்ன ?

விடை –  SABUJSATHI
.
38) குழந்தைகள் உரிமைகளுக்கு எதிரான புகார்களை பதிவு செய்ய மகாராஷ்டிரா மாநில அரசு வெளியிட்டுள்ள செயலி [ APP ] என்ன ?

விடை –  CHIRAG  App [ CHILD HELPLINE FOR INFORMATION ON THEIR RIGHTS AND TO ADDRESS THEIR GRIEVANCES ]
.
39) சில்லறை நோட்டு தட்டுப்பாடு ஏற்பட்ட பொழுது ஆதாருடன் இணைந்த கூப்பன்களை வெளியிட்ட மாநில அரசு எது ?

விடை –  தெலுங்கானா [ IDFC வங்கியுடன் இணைந்து ]
.
40) தெலுங்கானா மாநில கைத்தறி துணிகள் தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர் யார் ?

விடை –  நடிகை சமந்தா
.
41) சமீபத்தில் NASA அனுப்பிய , அடுத்த தலைமுறை வானிலை செயற்கைக்கோள் எது ?

விடை –  GOES – R
.
42) சமீபத்தில் ஜப்பான் அனுப்பிய, இணை வட்டப்பாதையில் சுற்றக்கூடிய, அடுத்த தலைமுறை வானிலை ஆராய்ச்சி செயற்கைக்கோள்  [NEXT GENERATION GEOSTATIONARY METEOROLOGICAL SATELITE] எது ?

விடை –  HIMAWARI – 9 ( HIMAWARI MEANS SUNFLOWER )
.
43) Hubble தொலைநோக்கிக்கு மாற்றாக , அதனைவிட 100 மடங்கு செயல் திறன் மிக்க தொலைநோக்கியை NASA உருவாக்கியுள்ளது . அதன் பெயர் என்ன ?

விடை –  JAMES WEBB TELESCOPE
.
44) மலேசியா அரசின் டத்தோ விருது பெற்ற தமிழகத்தை சேர்ந்தவர் யார் ?

விடை –  ராமநாதபுரம் மாவட்டம், தினைக்குளத்தை பூர்வீகமாகச் கொண்ட முகம்மது யூசுப்.
இவர் சிறந்த குடிமகன், மனிதநேயம் மற்றும் வர்த்தகம் ஆகிய 3 பிரிவுகளில் மலேசிய அரசின் உயரிய டத்தோ விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

.
45 ) தமிழக சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?

விடை –  சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கே.ஆர்.ராமசாமி M.L.A.
.
46) அவசர ஊர்தி படகு சேவை எங்கு துவங்கப்பட்டுள்ளது?

விடை –  AMBULANCE BOAT SERVICE மும்பை
.
47) இந்தியா - சீனா எல்லையான டெம்சோக் செக்டார் பகுதியில், எந்த திட்டத்தின்கீழ் கிராமங்களில் பாசன கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றன ?

விடை –  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்
.
48) லோசர் திருவிழா தொடர்பான மாநிலம் எது?

விடை –  ஜம்மு & காஷ்மீர்
.
49) 2017ல் நடைபெறுகின்ற ஐந்து மாநில தேர்தல்களில் வாக்களிப்பதின் அவசியத்தை உணர்த்த தேர்தல் ஆணையம், எந்த சமூக வலைத்தளத்துடன் இணைந்து பிரச்சாரம் மேற்கொண்டது ?

விடை –  முகநூல் ( FACEBOOK )
.
50) சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத விமான நிலையம் [ECO FRIEND AIRPORT ] என்ற சிறப்பை பெற்றுள்ள விமான நிலையங்கள் எது ?

விடை –  சண்டிகர் & வதோரா

.
51) கும்பகோணத்தில் உள்ள குளங்கள் மற்றும் நீர்நிலைகளின் தற்போதைய நிலை பற்றி ஆராய உயர்நீதிமன்றம் அமைத்த விசாரணை அதிகாரி யார் ?

விடை –  ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி சோலைமலை
.
52) ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது குறித்து ஆராய ஏற்படுத்தப்பட்ட விசாரணை ஆணையத்தின் தலைவர் யார் ?

விடை –  ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்வரன்
.
53) இந்தியாவின் முதல் மகிழ்ச்சி ரயில் சந்திப்பு நிலையம் [ HAPPINES JUNCTION ] எது ?

விடை –  சோன்பூர் [ Sonepur ] பீகார்
.
54) சமீபத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை அமுல் செய்த இந்தியாவின் அண்டை நாடு எது ?

விடை –  ஸ்ரீலங்கா

55) உலகின் மிகச்சிறந்த சட்டங்கள் பட்டியலில் இந்தியாவின் தகவல் அறியும் உரிமை சட்டம் எந்த இடம் பெற்றுள்ளது ?

விடை –  நான்காவது இடம்
.
56) சமீபத்தில் தலாய்லாமாவிற்கு கவுரவ குடியுரிமை வழங்கிய நகரம் எது ?

விடை –  மிலன் ( இத்தாலி )
.
57) சமீபத்தில் உலகின் மிகப்பெரிய டைனோசர் காலடி தடம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ?

விடை –  கோபி பாலைவனம்
.
58) இந்தியாவின் முதல் வடிவமைப்பு யாத்திரை ( FIRST DESIGN YATRA ) எங்கு துவங்கப்பட்டது ?

விடை –  கோழிக்கோடு
.
59) பன்றிகளில் உள்ள நாடாப்புழுக்களை அழிக்க இந்திய நிறுவனம் கண்டு பிடித்துள்ள தடுப்பு மருந்தின் பெயர் என்ன ?

விடை –  CYSVAX –  CYSTICERCOSSIS VACCINE ( Indian Immunologicals Ltd (IIL) Hyderabad )
.
60) 2016 சின்ஹன் டொன்கே ஓபன் கோல்ப் போட்டியில் பட்டம் வென்றவர் யார் ?

விடை –  ககன்ஜித் புல்லர்

61) FIFA சார்பில் 17வயதுக்கு உட்படோர்க்கான ஆண்கள் கால்பந்து போட்டி - 2017 எங்கு நடைபெறவுள்ளது ?

விடை –  இந்தியா
.
62) FIFA சார்பில் 17வயதுக்கு உட்படோர்க்கான பெண்கள் கால்பந்து போட்டி – 2016 எங்கு நடைபெற்றது ?

விடை –  ஜோர்டான்  -- ( சாம்பியன் = வடகொரியா )
.
63) FIFA சார்பில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டி 2018ல் எங்கு நடைபெறவுள்ளது?

விடை –  ரஷ்யா
.
64) பிரான்சில் நடைபெற்ற ரயில்வே துப்பாக்கி சுடுதல் போட்டியில் பட்டம் வென்ற அணி எது ?

விடை –  இந்திய ரயில்வே
.
65) HOOGEVEEN செஸ் போட்டியில் பட்டம் வென்றவர் யார் ?

விடை –  அபிஜித் குப்தா
.
66) பிலிப்பைன்ஸ்ல் நடைபெற்ற ஆசிய ஆணழகன் போட்டியில் பட்டம் வென்றவர் யார் ?

விடை –  பாலகிருஷ்ணன்
.
67) ஐரோப்பாவின் மனித உரிமைகள் விருதான ஷக்ரோவ் விருது பெற்றவர்கள் யார் ?

விடை –  நாடியா முராட் மற்றும் லமியா ஹாஜி பஷர் [ Nadia Murad & Lamiya Aji Bashar]
.
68)  MISSION  MADUMEHA எதனோடு தொடர்புடையது?

விடை –  ஆயுர்வேதத்தின் மூலம் நீரிழிவு நோய் வராமல் தடுப்பது மற்றும் காப்பது.
.
69) " நம்பிக்கை கடன் " என்ற திட்டத்தை துவக்கிய வங்கி எது ?

விடை –  ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
.
70) இந்தியாவின் மிகப்பெரிய STARTUP INCUBETOR எங்கு துவக்கப்பட்டுள்ளது?

விடை –  ஹுப்பள்ளி ( ஹூப்ளி ) கர்நாடகா
.
71) இந்திய ராணுவத்தின் புதிய தளம் ரூ.1500 கோடி செலவில் எங்கு அமைக்கப்படவுள்ளது ?

விடை –  Morena மாவட்டம், மத்திய பிரதேசம்.
.
72) முதன்முறையாக வாக்களித்த புதிய பெண் வாக்களர்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் வழங்கப்பட்ட பரிசு என்ன? ஆண் வாக்களர்களுக்கு வழங்கப்பட்ட பரிசு என்ன? எந்த மாநில தேர்தலில் இவை வழங்கப்பட்டது?

விடை –  பெண்களுக்கு – பிங்க் நிற டெடி பியர் பொம்மை == ஆண்களுக்கு  -- பேனா ==  கோவா மாநில சட்டப்பேரவை தேர்தல்
.
73) மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவதற்கு எதுவாக சிறப்பான பயிற்சி மையம் அமைக்க , மத்திய விளையாட்டு அமைச்சகம் சார்பில் எங்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது?

விடை –  குஜராத்
.
74) ஹஜ் புனித யாத்திரை செல்வோருக்கான மானியங்களை மறு சீரமைப்பு செய்வதற்கு அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் யார் ?

விடை –  அப்சல் அமானுல்லா
.
75) டாக்டர் H.R. நாகேந்திரா கமிட்டி எதனோடு தொடர்புடையது?

விடை –  யோகா மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது பற்றி ஆராய.
.
76) அமிதாப் சௌத்ரி கமிட்டி எதனோடு தொடர்புடையது ?

விடை – தற்போதைய சூழலில்  ஆயுள் காப்பீடு நிறுவனங்களின் சந்தையை ஆராய்தல் மற்றும் வாடிக்கையாளர்களின் நலன்களை பாதுகாப்பது பற்றி ஆராய்தல்.
.
77) Computer Society of India & Nihilent Technologies இணைந்து வழங்கிய e Governance Award பெற்ற மாநிலங்கள் எவை ?

விடை –  தெலுங்கானா & ராஜஸ்தான்
.
78) எண்ணூர் காமராஜர் துறைமுகத்துக்கு அருகே கடலில் விபத்து ஏற்படுத்திய இரண்டு சரக்கு கப்பல்களின் பெயர் என்ன?

விடை –  பி.டபிள்யூ. மேப்பிள் ( ஈரான் ) & எம்.டி.டான் காஞ்சிபுரம்
.
79) National Confederation of Human Rights Organizations (NCHRO) வழங்கும் முகுந்தன் C. மேனன் விருது பெற்றவர் யார் ?

விடை –  டாக்டர்.சுரேஷ் கைர்னார்
.
80) 20வது தேசிய மின் ஆளுமை மாநாடு எங்கு நடைபெற்றது? அம்மாநாட்டின் கருப்பொருள் என்ன?

விடை –  விசாகப்பட்டினம் ., கருப்பொருள் -   Digital Transformation

No comments:

Post a Comment