Monday, February 26, 2018

*சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்*

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் பட்டியல்:

ஆண்டு - படைப்பு (தன்மை) - படைப்பின் எழுத்தாளர்

1955 - தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு) - ரா. பி. சேதுப்பிள்ளை
1956 - அலை ஓசை (நாவல்) - கல்கி கிருஷ்ணமூர்த்தி
1957 - (விருது வழங்கப்பட வில்லை)
1958 - சக்கரவர்த்தித் திருமகன்  (இராமாயணத்தின் உரைநடை) - சி. ராஜகோபாலச்சாரி
1959 - (விருது வழங்கப்பட வில்லை)
1960 - (விருது வழங்கப்பட வில்லை)
1961 - அகல் விளக்கு (நாவல்) - மு.வரதராசனார்
1962 - அக்கரைச்சீமை (பயண நூல்) - சோமு (மீ. ப. சோமசுந்தரம்)
1963 - வேங்கையின் மைந்தன் - அகிலன் (பி. வி. அகிலாண்டம்)
1964 - (விருது வழங்கப்பட வில்லை)
1965 - ஸ்ரீ ராமானுஜர் (வாழ்க்கை வரலாறு) - பி. ஸ்ரீ ஆச்சார்யா
1966 - வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு  (வாழ்க்கை வரலாறு) - ம. பொ. சிவஞானம்
1967 - வீரர் உலகம் (இலக்கிய விமர்சனம்) - கி. வா. ஜகன்னாதன்
1968 - வெள்ளைப் பறவை (கவிதை) - அ. சீனிவாச ராகவன்
1969 - பிசிராந்தையார் (நாடகம்) - பாரதிதாசன்
1970 - அன்பளிப்பு (சிறுகதைகள்) - கு. அழகிரிசாமி
1971 - சமுதாய வீதி (நாவல்) - நா. பார்த்தசாரதி
1972 - சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) - ஜெயகாந்தன்
1973 - வேருக்கு நீர் (நாவல்) - ராஜம் கிருஷ்ணன்
1974 - திருக்குறள் நீதி இலக்கியம்  (இலக்கிய விமர்சனம்) - கே. டி. திருநாவுக்கரசு
1975 - தற்கால தமிழ் இலக்கியம்  (இலக்கிய விமர்சனம்) - ஆர். தண்டாயுதம்
1976 - (விருது வழங்கப்பட வில்லை)
1977 - குருதிப்புனல் (நாவல்) - இந்திரா பார்த்தசாரதி
1978 - புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (விமர்சனம்) - வல்லிக்கண்ணன்
1979 - சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) - தி. ஜானகிராமன்
1980 - சேரமான் காதலி (நாவல்) - கண்ணதாசன்
1981 - புதிய உரைநடை (விமர்சனம்) - மா. ராமலிங்கம்
1982 - மணிக்கொடி காலம் (இலக்கிய வரலாறு) - பி. எஸ். ராமையா
1983 - பாரதி : காலமும் கருத்தும்  (இலக்கிய விமர்சனம்) - தொ. மு. சிதம்பர ரகுநாதன்
1984 - ஒரு காவிரியைப் போல - லட்சுமி திரிபுரசுந்தரி
1985 - கம்பன் : புதிய பார்வை  (இலக்கிய விமர்சனம்) - அ. ச. ஞானசம்பந்தன்
1986 - இலக்கியத்துகாக ஒரு இயக்கம்  (இலக்கிய விமர்சனம்) - க. நா. சுப்பிரமணியம்
1987 - முதலில் இரவு வரும்  (சிறுகதைத் தொகுப்பு) - ஆதவன்
1988 - வாழும் வள்ளுவம் (இலக்கிய விமர்சனம்) - வா. செ. குழந்தைசாமி
1989 - சிந்தாநதி (சுயசரிதக் கட்டுரைகள்) - லா. ச. ராமாமிர்தம்
1990 - வேரில் பழுத்த பலா (நாவல்) - சு. சமுத்திரம்
1991 - கோபல்ல கிராமத்து மக்கள்  (நாவல்) - கி. ராஜநாராயணன்
1992 - குற்றாலக் குறிஞ்சி (வரலாற்று நாவல்) - கோவி. மணிசேகரன்
1993 - காதுகள் (நாவல்) - எம். வி. வெங்கட்ராம்
1994 - புதிய தரிசனங்கள் (நாவல்) - பொன்னீலன் (கண்டேஸ்வர பக்தவல்சலன்)
1995 - வானம் வசப்படும் (நாவல்) - பிரபஞ்சன்
1996- அப்பாவின் சிநேகிதர்  (சிறுகதைத் தொகுப்பு) - அசோகமித்ரன்
1997 - சாய்வு நாற்காலி (நாவல்) - தோப்பில் முகமது மீரான்
1998 - விசாரணைக் கமிஷன் (நாவல்) - சா. கந்தசாமி
1999 - ஆலாபனை (கவிதைகள்) - அப்துல் ரகுமான்
2000 - விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் (விமர்சனம்) - தி. க. சிவசங்கரன்
2001 - சுதந்திர தாகம் (நாவல்) - சி. சு. செல்லப்பா
2002 - ஒரு கிராமத்து நதி  (கவிதைகள்) - சிற்பி பாலசுப்ரமணியம்
2003 - கள்ளிக்காட்டு இதிகாசம்  (நாவல்) - வைரமுத்து
2004 - வணக்கம் வள்ளுவ  (கவிதைகள்) - ஈரோடு தமிழன்பன்
2005 - கல்மரம் (நாவல்) - ஜி. திலகவதி
2006 - ஆகாயத்துக்கு அடுத்த வீடு  (கவிதைகள்) - மு.மேத்தா
2007 - இலையுதிர் காலம் (நாவல்) - நீல. பத்மநாபன்
2008 - மின்சாரப்பூ (சிறுகதைகள்) - மேலாண்மை பொன்னுசாமி
2009 - கையொப்பம் (கவிதைகள் (மொழிபெயர்ப்பு) - புவியரசு
2010 - சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) - நாஞ்சில் நாடன்
2011 - காவல் கோட்டம் (புதினம்) - சு. வெங்கடேசன்
2012 - தோல் (புதினம்) - டி. செல்வராஜ் [1]
2013 - கொற்கை ((புதினம்) - ஜோ டி குரூஸ் [2]
2014 - அஞ்ஞாடி - பூமணி [3]
2015 - இலக்கியச் சுவடுகள்  (திறனாய்வு நூல்) - ஆ. மாதவன்
2016 - ஒரு சிறு இசை (சிறுகதைகள்) - வண்ணதாசன்[4]
2017 - காந்தள் நாட்கள்

ஆசியாவிலேயே முதன்மையான சில விசயங்கள்:-

தமிழகம் :

1. தமிழக அரசு முத்திரை கோபுரம் –ஸ்ரீவில்லிபுத்த ூர் ஆண்டாள் கோபுரம்

2. தமிழகத்தின் நுழைவாயில் – தூத்துக்குடி

3. தமிழகத்தின் மான்செஸ்டர் – கோயம்புத்தூர்

...4. மக்கள் தொகை அதிகமுள்ள மாவட்டம் – கோயம்பத்தூர்

5. மக்கள் தொகை குறைந்த மாவட்டம் – பெரம்பலூர்

6. மிக உயரமான தேசியக்கொடி மரம் –புனித ஜார்ஜ் கோட்டை (150 அடி)

7. மிகப் பெரிய பாலம் இந்தியாவின் முதல் கடல்வழி பாலம் – பாம்பன் பாலம் ( ராமேஸ்வரம் )

8. மிகப் பெரிய தேர் – திருவாரூர்தேர்

9. மிகப்பெரிய அணைக்கட்டு – மேட்டுர் அணை

10. மிகப் பழமையான அணைக்கட்டு – கல்லணை
11. மிகப்பெரிய திரையரங்கு (ஆசியாவில்) – தங்கம் (மதுரை – 2563 இருக்கைகள்)

12. மிகப்பெரிய கோயில் – தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில்

13. மிகப்பெரிய கோயில் பிரகாரம் – ராமேஸ்வரம் கோயில் பிரகாரம்

14. மிகப்பெரிய கோபுரம் – ஸ்ரீ ரெங்கநாதர் கோயில் கோபுரம் (திருச்சி)

15. மிகப்பெரிய தொலைநோக்கி – காவலூர் வைணுபாப்பு (700 m)

16. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா [ 2,636 m (8,648 ft) ]

17. (உலகின்) மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (14 km )

18. மிக நீளமான ஆறு – காவிரி (760 km)

19. மக்கள் நெருக்கம் அதிகமுள்ள மாவட்டம் – சென்னை (25937/km2)

20. மக்கள் நெருக்கம் குறைவாக உள்ள மாவட்டம் – சிவகங்கை (286/km2)

21. மலைவாசல் தலங்களின் ராணி – உதகமண்டலம்

22. கோயில் நகரம் – மதுரை

23. தமிழ்நாட்டின் ஹாலந்து – திண்டுக்கல் (மலர் உற்பத்தி)

24. (ஆசியாவில்) மிகப்பெரிய பேருந்து நிலையம் – கோயம்பேடு பேருந்து நிலையம்

25. மிகப்பெரிய சிலை – திருவள்ளுவர் சிலை (133 அடி)

26.  வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில் பகலும், இரவும் சரியாக

12 மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்?
மார்ச் 21.

27.ஒரு தடவை கூட லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார்?
திரு. சரண்சிங்.

.28. தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நூல் எது?
மோகனாங்கி

வினா விடைகள் :

01. ஒரு போதும் மலராத பூ - அத்திப்பூ

02. வேர் இல்லாத தாவரம் - இலுப்பை

03. உலகில் வறுமையான நாடு - ருவாண்டா

04. விவாகரத்து செய்யமுடியாத நாடு - அயர்லாந்து

05. ஜப்பான் தீவுகளின் எண்ணிக்கை - 4

06. ஆட்சி மாற்றம் இல்லாத நாடு - மெச்சிக்கோ

07. அந்தமான் தீவுகளின் எண்ணிக்கை - 204

08. உலகில் மிக அதிகமாக மின்னலால் பாதிக்கப்படும் நாடு – பனாமா

09. உலகில் மின் தடை இல்லாத நாடு - குவைத்

10. மூன்று அடிப்படை நிறங்கள் - சிவப்பு , மஞ்சள் , நீலம்

11. 365 நாட்கள் கொண்ட ஆண்டு முறையை ஏற்படுத்தியவர் - வாழசவா

12. உலோக நாணயங்கள் புழக்கத்தில் இல்லாத நாடு - பராகுவே
(தென்அமெரிக்கா )

13. பூச்சியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்திய நாடு - இந்தியா

14. சத்தில்லாத உணவு - நீர்

15. கலப்படம் செய்யமுடியாத உணவுப்பொருள் - கோழிமுட்டை

16. பசுமைப்புரட்சி ஏற்பட்ட வருடம் - 1960 தாயகம் - மெச்சிக்கோ

17. அமெரிக்க பசுமைப் புரட்சியின் பிறப்பிடம் - பொஸ்டன்

18. உலகில் மிக பிரபலமான பொழுதுபோக்கு - தபால் தலை சேகரிப்பு

19. சுத்தமான தங்கத்தின் கரட் - 24கரட்

20. கடல் நீர் நீலமாக இருக்கும் அளவு - 10 அடி

Saturday, February 24, 2018

⛱வடிவமைப்பாளர்கள்

⛺சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலையை வடிவமைத்தவர் - சபர்ணா ராய் சவுத்ரி.

⛺பழைய டெல்லியை வடிவமைத்தவர் - ஷாஜகான்.

⛺புது டெல்லியைவடிவமைத்தவர் - எட்வின் லூட்தயன்ஸ்.

🌺 அதிக தகவல்களுக்கு TNPSC - நண்பர்கள் Fb குரூப்பை பாருங்க 🍁

⛺கல்கத்தா மாநகரை வடிவமைத்தவர் - ஜாப் சார்நாக்.

⛺சண்டிகரை வடிவமைத்தவர் - லேதகார் பூசியர்.         

⛺ஐதராபாத்தை வடிவமைத்தவர் - முகமது அலி குதுப்ஷா.

Monday, February 19, 2018

TNPSC GROUP-II

TNPSC போருக்கு தேவையான ஆயுதங்கள் :
=======================
🙏TNPSC- PRELIMS🙏  -    GROUP 2
* ) TNPSC SYLLABUS

* ) TNPSC LAST 5 YEARS      
      OLD QUESTION PAPER
    1 ) SAKTHI PUBLICATION 
          OLD Q BANK BOOK

👉*LANGUAGE 😗

     1 ) *GENERAL TAMIL 😗 
            SAMACHER :6 - 12TH 
            BOOKS

      2 ) VENBHA GENERAL 
            TAMIL BOOK

      3 ) Devira book

                ( OR )

      👉 1 ) *GENERAL ENGLISH 
            SAMACHER : 6 -     12TH    BOOKS 
           
           2 ) VENKATRAMAN 
           GENERAL ENGLISH 
           BOOK

👉 *APTITUDE 😗

    1 ) SAMACHER 6 -10TH 
          MATHS BOOKS     
         ( SYLLABUS BASED )

     2 ) R S AGARWAL - 
          QUANTITY APTITUDE
     
     3 ) kanniyan

     4 )Yesuva

     5 )A to Z book
  

👉 *CURRENT AFFAIRS 😗

      1 ) DINAMANI ,THE  
       HINDU TAMIL NEWS 
       PAPER

      2 ) TNPSC PORTAL

             ( OR )

    1 ) IYACHAMY CURRENT 
         AFFAIRS

     2 ) MANANNA CURRENT 
        AFFAIRS

     3 )Pothu Arivu ulagam
                    or 
         Exam master monthly        book

   

👉*HISTORY 😗

     1 ) SAMACHER 6 - 12TH 
           BOOKS ( SYLLABUS 
           BASED )

     2 ) ARIHANT GK BOOK - 
           2017 ( M PANDY )

      3) இந்திய விடுதலை       போராட்ட வரலாறு -கே.வெங்கடேசன்

      4 ) தற்கால தமிழ்நாட்டு வரலாறு -கே.வெங்கடேசன்

      5) இந்திய வரலாறும் பண்பாடும் -சங்கர சரவணன்

👉 *INDIAN POLITY 😗

      1 ) INDIAN IAS ACADEMY  
           POLITY BOOK
                 ( OR )

       2 ) BAKYA INDIAN 
             POLITY BOOK

        3 ) ARIHANT  BOOK - 
             2017 ( M PANDEY )

        4) சமச்சீர் புத்தகம் -6 முதல்  12 வரை

👉*GEOGRAPHY 😗

        1 ) SAMACHER 6 - 12H 
              BOOKS
        

👉 *ECONOMY 😗

        1 )  6 to12TH BOOK     
             ( 11TH BOOK  MUST )

        2 ) ARIHANT GK BOOK 
              -2017 ( M PANDEY )

        3) இந்திய பொருளாதாரம்-கலிங்க மூர்த்தி

👉 *SCIENCE 😗

      1 ) SAMACHER 6 -  10 TH 
           BOOKS ( SYLLABUS 
           BASED )

       2 ) இயற்பியல் 12 ஆம்  வகுப்பு -6, 8வது பாடம்

       3 ) வேதியியல்  
     11 ஆம் வகுப்பு -17, 18 வது  பாடம் 
      12 ஆம் வகுப்பு -21, 22 வது பாடம்

       4 ) தாவரவியல் 
        11  ஆம் வகுப்பு -2,4, 7 வது பாடம் 
         12 ஆம் வகுப்பு -3, 4, 6  வது  பாடம்

       5 )  விலங்கியல் - 
         11ஆம் வகுப்பு - 3 வது பாடம் 
         12 ஆம் வகுப்பு - 1,5,6 வது  பாடம் 
   

👉 *COMMON GK 😗

    ( INDIA'S FIRST , LAST,.. )

     1 ) ARIHANT GK BOOK - 
           2018 ( M PANDEY )

     2 ) MANORAMA YEAR 
           BOOK -2018

                ( OR )
       1 ) VIKADAN YEAR BOOK 
             - 2018

🙏முதன்மை  தேர்வு🙏

👉1) இந்திய மற்றும்  தமிழக  அளவில் அறிவியல்  தொழில்நுட்பத்தின் பங்கு மற்றும் தாக்கம் , மேம்பாடு 
  

     *பழைய அறிவியல் புத்தகம் 8 to 10
        -2004 பதிப்பு

     *6 -12வது அறிவியல்  
புத்தகம்  புதியது

     *SPECTRUM PUBLICATION

👉2) மத்திய மற்றும்  மாநில ஆட்சிமுறை மற்றும் தமிழக சிறப்பு

     * 6 முதல் 12 வரை உள்ள அரசியலமைப்பு  புத்தகம்

       * பாக்கியா அல்லது  இந்திய ஐஏஸ் அகாடமி  அரசியலமைப்பு  புத்தகம்

      * அரிஹாந்த் அரசியலமைப்பு -ஆங்கில  வடிவில் 
      
       * தமிழ்நாடு நிர்வாகம் -கே.வெங்கடேசன்

👉3) சமூக பொருளாதார போக்குகள்  இந்திய ,தமிழக  அளவில்

      * 11, 12  Economics வது புத்தகம்

        * இந்திய பொருளாதாரம் -கலிங்கமூர்த்தி

         * இந்திய  பொருளாதார வளர்ச்சி -மா.பொ குருசாமி

               மற்றும்

நடப்பு நிகழ்வுகள்

      * தினமணி , தினஇந்து செய்தி தாள்

       * மன்னனா மாத இதழ்

        * பொது அறிவு உலகம் 

         * எக்ஸாம் மாஸ்டர்  இதழ்

ஆசையே துன்பத்திற்கு காரணம் - *இது புத்தர் சொன்னது !*🙄
ஆசையே உன் வெற்றிக்கு காரணம் - *இதை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சொன்னது !!*😍
ஆசை என்பது மனிதனுக்கு பொதுவானது !
அரசு பணி வாங்கவேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் உண்டு , ஆனால் , சிலர் மட்டுமே அரசு பணியை அடைய முடிகிறது !
ஏன் , ஏன் , ஏன் .......??????

வெறும் ஆசை மட்டும் பட்டுவிட்டு உழைக்காமல் இருந்தால் தோல்விதான் மிஞ்சும் - இதை தான் புத்தர் சொன்னார் !🙄

ஆசைபடு , எதுவாக ஆக நினைக்கிராயோ அதை பற்றி கனவு கான் ! அதை எப்படி அடைய வேண்டும் என்ற சூட்சமத்தை தேடிகொண்டே இரு ! திட்டமிடு , செயல்படுத்து ! ஆசை - முயற்சி - பயிற்சி - எழுச்சி - இதை தான் தேர்ச்சி பெற்றவர்கள் சொன்னது !😍  
தோழர்களே......நாம் அனைவரும் *வெற்றியின் முகவர்கள் !* கங்கனம் கட்டிவிட்ட குதிரை போன்று ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும் ! எதுக்கும் அசர கூடாது ! 💪
போற்றுவோர் போற்றட்டும் !
புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும் !! என்ற *கமகபிரியனின்* வரிகள் தான் நம் நினைவிற்கு வரவேண்டும் .
இடையூறு இல்லாத அமைதியான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திகொண்டு தினம்தோறும் குறைந்தது *6 - 8 மணி நேரம் கடின உழைப்பு* வேண்டும் ! அதிக தேர்வுகள் எழுதி பார்த்து உங்கள் தரத்தை நீங்களே சோதனை செய்து கொள்ளலாம் !
ஒரே குறிக்கோள் கொண்டு செயல்படுங்கள் *ஆறு மாதத்தில் அரசு பணியை அடைந்துவிடலாம் !*😎
தொடர் முயற்சியும் , இடைவிடாத பயிற்சியும் , வெற்றிக்கு வித்திடும் !! 😊

*அரை காசு* பெற்றாலும் *அரசு பணியில்* பெறுவோம்  !
*கால் காசு* பெற்றாலும் *கவர்மெண்ட்* பணியில் பெறுவோம் !!😎

*RRB(Railway Recruitment Board)*

TNPSC தேர்விற்கு அல்லும், பகலும்  படித்து தேர்வு எழுதிவிட்டு வேலை கிடைக்காதா ? என்று ஏங்கும் தமிழ்நாடு போட்டி தேர்வாளர்களே சற்று  உங்கள் பார்வையை RRB(Railway Recruitment Board)பக்கம் திருப்புங்கள்.

        1000 GroupD  பதவிகளுக்கு கூட 10 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துவிட்டு TNPSC மூலமாக ஒரு வேலை வாங்க முடியாதா என ஏங்குகிறோம். மிகவும் சிரமப்பட்டு படிக்கிறோம். நமக்கு நாமே போட்டியை ஏற்படுத்திக்கொள்கிறோம்.

      ஆனால், எந்தவித கடினமும்  இல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு பணிகளையும் வட மாநிலத்தவர்கள் தட்டிச் செல்கிறார்கள்.இதற்கு காரணம் நம்மிடையே RRB, SSC, UPSC, IBPS, SBI, SAIL, IOCL, BHEL, BEL, BEML, INDIAN POSTAL DEPARTMENT, BANKING EXAM, DEFENCE FACTORY, ISRO...... இன்னும் இது போன்ற பல்வேறு மத்திய அரசு நிறுவனங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததே.

     இவற்றை பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.இத்துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கான விளம்பரம் வரும்போது விண்ணப்பம் அனுப்ப வேண்டும். இத்தேர்வில் வெற்றிப்பெற பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.    
    இரயில்வே தேர்வுகளில் வெற்றிப்பெறுவது மிகவும் எளிது. அதுவும் TNPSC போட்டி தேர்விற்காக படிப்பவர்களுக்கு இது இது மிக மிக எளிது. வடஇந்திய மாநிலத்தவர்கள் அதிகமானோர் தெற்கு ரயில்வேயில் பணிப்புரிகிறார்கள். இதற்கு காரணம் நாம் நம்முடைய எதிர்ப்பு தெரிவிக்காததே. நம்முடைய எதிர்ப்பு என்பது ரயில்வே தேர்வுகளில் வெற்றிப்பெறுவது மூலமாக காட்ட வேண்டும். அனைத்து இரயில்வே தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க வேண்டும். அதில் நாம் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று பணிக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செய்தால் வட இந்திய இளைஞர்களின் வருகை தானாக குறையும்.

      இரயில்வே துறை தேர்வுகளில்
வெற்றிப்பெற எளிய வழிமுறைகள்:

1.ஏற்கெனவே நடந்து முடிந்த தேர்வுகளின் வினாத்தாள்களின் தொகுப்பை (கடந்த 5-10 ஆண்டுகள்) படித்தாலே நமது வெற்றி 60% உறுதி செய்யப்பட்டு விடும்.

மீதியுள்ள 40%
2.6முதல் 10 வகுப்பு வரையுள்ள கணிதம், அறிவியல், சமூகவியல்  புத்தகங்களை மேலோட்டாமாக படித்தாலே போதுமானது.

3.நடப்பு நிகழ்வுகள்.
    இதில் விளையாட்டு, மத்திய  மாநில துறை அமைச்சர்கள், துறை தலைவர்கள், செயலர்கள், கூட்டமைப்பு, உலக அமைப்புகள், மிகப்பெரிய தனியார் நிறுவனங்கள் சம்மந்தமான கேள்விகள் இடம்பெறும்.

4.Mental Ability Questions.
5.இரயில்வே துறை சம்பந்தமான கேள்விகள் 1 அல்லது 2.(இது NTPC தேர்வுகளுக்கு மட்டும் பொருந்தும்)

இம்முறையில் படித்தாலே RRB  தேர்வுகளில் எளிதாக வெற்றிப்பெறலாம்.

(இத்தகவல்  தமிழகத்தில் அரசு வேலை தேடும் அனைவருக்கும் சென்று சேர்ந்து SOUTHERN RAILWAY RRB ல் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். )

*RRB-DETAILS*

ரெயில்வே குரூப் D தேர்வு பற்றிய சில தகவல்கள்:


(நண்பர்கள் பலரின் ரெயில்வே தேர்வு குறித்த சந்தேகங்களுக்காக எனக்கு தெரிந்ததை இங்கு பதிவிடுகின்றேன்)


* இந்தியாவின் அனைத்து ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்களும் (RRB) ஒருங்கிணைந்த அறிவிப்பினை (CEN No 02/2018) வெளியிட்டுள்ளன. 

* மொத்த பணியிடங்கள் 62907 இதில் தென்னக ரெயில்வேக்கு (2979+EX SERVICEMAN  597+OH 12+HH 18)

 * வயது வரம்பு 18 -31(விதிகளின் படி வயது வரம்பு சலுகை உண்டு)


*  கல்வித் தகுதி : 

#10ம் வகுப்பு


#10ம் வகுப்பு மற்றும் National Apprenticeship Certificate (NAC) granted by NCVT 


#10 ம்வகுப்பு மற்றும் ITI from institutions recognised by 

NCVT/SCVT


இதில் 10ம் வகுப்பு தகுதி மட்டும்(ITI,NCVT அல்லாது DIPLAMO,ENGINEERING முடித்திருந்தாலும் கூட) உடைய நபர்கள் கீழ்க்கண்ட பதவிகளுக்கு மட்டும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்


HELPER / MEDICAL

HOSPITAL ATTENDANT

ASSISTANT POINTSMAN

GATEMAN

*PORTER / HAMAL / SWEEPER CUM PORTER-(*தென்னக ரயில்வேயில் இந்த ஒரு பதவிக்கு மட்டும் 10ம் வகுப்பு தகுதி மட்டும் உடையவர்கள் விண்ணப்பிக்க முடியும்)


மேலும் 10 ம்வகுப்பு மற்றும் NAC, ITI from institutions recognised by NCVT/SCVT முடித்தவர்கள் அறிக்கையில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.


*சம்பள வீதம் ரூ.18000 + படிகள் (ஏழாவது ஊதியக்குழு Pay Matrix Level 1)

*விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலமாக மட்டும்.

*விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 10.02.2018

*  விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.03.2018

* சென்னை R R B வலைதளம்: www.rrbchennai.gov.in


விண்ணப்பிப்பதற்க்கு முன் தெரிந்துகொள்ள வேண்டியவை

• தேர்வினை தமிழில் எழுதலாம்.

• ஆன்லைன் ல் விண்ணபிக்க OBC சான்றிதழ் தேவை இல்லை.OBC NON CREAMY/CREAMY ஆப்சன் ஐ தேர்வு செய்தால் போதுமானது.(CV க்கு செல்லும் போது மட்டும் அனெக்சர் II ல் குறிப்பிடப்பட்ட மாதிரி வடிவத்தில் கட்டாயம் OBC சான்றிதல் தேவை)

• OBC NONCREAMY LAYER/OBC CREAMY LAYER எது என தேர்வு செய்ய வேண்டும்.

• சமீபத்தில் 1-12-2017 க்கு பின் எடுக்கப்பட்ட புகைப்படம் 20-50 kb jpeg format (பெயர் மற்றும் புகைப்படம் எடுக்கப்பட்ட தேதி கட்டாயம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்)

• கண்ணாடி,தொப்பி அணிந்த புகைப்படங்கள்,ஒரு பக்கம் பார்த்தது போல் எடுத்த படங்கள் ஏற்கப்படாது.கண் காது மூக்கு நன்றாக தெளிவாக தெரியும்படி இருக்க வேண்டும் ஏனெனில் தேர்வின் கடைசி நிலை வரை இதே புகைப்படம் பயன்படுத்தப்படும்.

• SC/ST விண்ணப்ப தாரர்கள் தங்களுடைய ஜாதி சான்றிதழை ஸ்கேன் செய்து 50KB-100KB அளவில்  JPEG மாதிரியில் வைத்துக்கொள்ள வேண்டும்.

• Scribe Photograph in color (Wherever applicable): JPEG image of size 20 to 50KB

• அறிக்கையில் குறிப்பிட்ட கல்வி தகுதி உடையவர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கான மருத்துவ தகுதி பெற்றுள்ளோமா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.(A2,B2,B2,C1)

• தற்போது பயன்பாட்டில் உள்ள இமெயில் ID மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது)


தேர்வுக்கட்டணம்:

1. For all candidates except the fee concession categories mentioned below at Sl No 2 ` 500/-

2 ` 250/-* For Candidates belonging to SC / ST / Ex-Serviceman / PWDs / Female / Transgender / Minorities / Economically backward class. *This fee  shall be refunded duly deducting bank charges, on appearing in CBT.  -250/-


விண்ணப்பிக்கும் முறை:

GO TO rrbchennai.gov.in choose notification 2 and apply

• முதலில் அனைத்து விதிமுறைகளையும் தெளிவாக படித்தப்பின் விண்ணப்பிக்க தொடங்க வேண்டும்.

• எந்த RRB க்கு விண்ணப்பிக்க உள்ளீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.(ஒருவர் ஏதேனும்  ஒரு RRBக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்)

• திரையில் தெரியும் பக்கத்தில்  name, Date of Birth and Father's name as per para 1.7 of General Instruction, Mother's name, Aadhar number, State, SSLC/Matric Roll number, Year of passing SSLC/MATRIC, mobile number and email-id and then submit for registration. Candidates with ITI/NAC qualification alone can enter Roll number/year of passing for ITI/NAC qualification instead of SSLC/Matric இவற்றை சன்றிதழ்களில் உள்ளது போன்றே பதிவு செய்ய வேண்டும்.தகவல்களை பதிவு செய்த பின் தங்கள் மொபைல் க்கு OTP கிடைக்கப்பெறும் அதனை பதிவு செய்தபின் தங்களுக்கு ஒரு REGISTRATION NUMBER வழங்கப்படும்.அதை வெய்து PART1 பதிவு செய்ய வேண்டும்.

• PART1 பதிவு முறையில் provide the details of Educational qualification, Community, Gender, Religion, ExSM, PWD, CCAA, Minority, Economically backward class, Age relaxation eligibility category as applicable and other details.இவற்றை பதிவு செய்த பின் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.(NET BANKING/OFFLINE CHALAN/POSTAL CHALLAN  முறையில் கட்டணம் செலுத்தலாம்).

• கட்டணம் செலுத்திய நிலவரம் உறுதி செய்த பின் PART II பதிவு செய்ய வேண்டும்.இதில் போஸ்ட் PREFERENCEஐ தேர்வு செய்ய வேண்டும் இது கட்டாயம்) Set priority / preferences for posts: If the candidate is eligible for more than one post based on his educational qualification and other details furnished, he/she must set the priority/preferences for the posts. The list of posts (in the selected RRB) for which a candidate is eligible will be displayed. The candidates can set their priority/preferences by clicking on the “Set Priority” button for the various posts that they are eligible for, in the RRB they are applying to. The candidates can fill in the preferences for all the posts listed, or a few of them as per their choice. But at least one preference must be given.

• தேர்வு மொழியினை தேர்வு செய்ய வேண்டும்.தமிழில் தேர்வு எழுதலாம்.

• பின்னர் முகவரி தேர்வு மையம் இதறபிற விவரங்கள் பதிவு செய்தபின்,புகைப்படத்தினை பதிவேற்றம் செய்து SUBMITசெய்ய வேண்டும்.

The Registration number, Selected RRB, email id and mobile number cannot be changed.


தேர்வு செய்யும் முறை:


1.முதலில் கணினி வழியாக CBT தேர்வு நடத்தப்படும் 

2.தேர்வு பெற்றவர்கள் PHYSICAL TEST க்கு அழைக்கப்படுவார்கள்

(FOR MALE:Should be able to lift and carry 35 kg of weight for a distance of 100 metres in 2 minutes in one chance without putting the weight down and Should be able to run for a distance of 1000 metres in 4 minutes and 15 seconds in one chance.

FOR FEMALE: Should be able to lift and carry 20 kg of weight for a distance of 100 metres in 2 minutes in one chance without putting the weight down and Should be able to run for a distance of 1000 metres in 5 minutes and 40 seconds in one chance.)

3.பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு

4.மருத்துவ பரிசோதனை.


#நேர்முகத் தேர்வு இல்லை


எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்:


Question Type and Syllabus: The Questions will be of objective type with multiple choices and are likely to include questions pertaining to: 


a. Mathematics Number system, BODMAS, Decimals, Fractions, LCM, HCF, Ratio and Proportion, Percentages, Mensuration, Time and Work; Time and Distance, Simple and Compound Interest, Profit and Loss, Algebra, Geometry and Trigonometry, Elementary Statistics, Square root, Age 

Calculations, Calendar & Clock, Pipes & Cistern etc.


 b. General Intelligence and reasoning Analogies, Alphabetical and Number Series, Coding and Decoding, Mathematical operations, Relationships, Syllogism, Jumbling, Venn Diagram, Data Interpretation and Sufficiency, Conclusions and Decision making, Similarities and Differences, Analytical Reasoning, Classification, Directions, Statement – Arguments and Assumptions etc.


 c. General Science th The syllabus under this shall cover Physics, Chemistry and Life Sciences of 10 standard level.


 d. General Awareness on current affairs in Science & Technology, Sports, Culture, Personalities, Economics, Politics and any other subjects of importance.


குறிப்பு: (எனது அனுபவத்தில்)

• TNPSC அளவிற்கு ரெயில்வே தேர்வு அவ்வளவு கடினமாக இருக்காது

• நெகடிவ் மார்க் உள்ளதால் அதற்கு ஏற்ப பயிற்சி செய்ய வேண்டும்

• மேற்கண்ட சிலபஸில் உள்ள பகுதிகளை பத்தாம் வகுப்பு தரத்தில் நன்கு படித்தாலே போதுமானது அதற்கு மேல் படித்தாலும் நன்று.கணிதத்தில் அதிக அளவிலான கேள்விகள் இடம் பெறும்.

• எழுத்து தேர்வு மற்றும் உடற்கூறு தேர்வில் வெற்றி பெற்று விட்டால் அதற்கு பின் CV,MEDICAL TESTல் வெற்றி பெறுவது எளிது.

• இதுவரை நடந்த தேர்வுகளில் வடமாநிலத்தவர் மற்றும் அண்டை மாநிலத்தவரே   அதிக ஆதிக்கம் செலுத்துகின்றனர்.காரணம் நம் தமிழ் நாட்டில் ரெயில்வே தேர்வு பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம்.நமக்கு தகுதி இல்லாமல் இல்லை.TNPSCபடிக்கும் நபர்களுக்கு நிச்சயம் ரெயில்வே தேர்வு மிக எளிதானதே.

• இனி வரும் காலங்களில் அதிக அளவிலான தமிழர்கள் ரெயில்வே 

 தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதே எனது விருப்பம்.

• கடின உழைப்பிற்கு நிச்சயம் பலன் உண்டு.


எனக்கு தெரிந்ததை இங்கு பதிவிட்டுள்ளேன்.நண்பர்கள் அனைவரும் APPLYசெய்து தேர்வில் வெற்றிபெற என் வாழ்த்துக்கள்.


உங்கள் ******************


நன்றி...........






Sunday, February 18, 2018

TNPSC Corrections

வணக்கம்,

** TNPSC கொடுத்துள்ள உத்தேச விடையில் உள்ள தவறான விடைகளுக்கு  எப்படி மெயில் அனுப்ப வேண்டும்? என்று ஒரு வினாவிற்கு மட்டும் தயாரித்து உள்ளேன், இதனை அப்படியே காபி செய்து, இந்த விண்ணப்பத்தின் இறுதியில் உங்கள் பெயர், பதிவு எண், ஊர் ஆகியவற்றை மாற்றி இன்றே கீழ்கண்ட மின் அஞ்சல் முகவரிகளுக்கு மெயில் அனுப்பவும்.

** முக்கியமாக நான் கொடுத்துள்ள நான்கு புகைப்படங்களையும் இணைத்து அனுப்ப வேண்டும், இணைக்க மறந்து விட வேண்டாம்.

** உங்களுக்கு வேறு தவறான வினாக்கள் இருப்பது தெரிந்தால் இது போன்று உரிய விளக்கம் மற்றும் ஆதாரத்துடன் மெயில் அனுப்பவும்.

மின் அஞ்சல் முகவரிகள்:
coetnpsc.tn@nic.in, 
contacttnpsc@gmail.com

மின் அஞ்சல் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 21.02.2018, 11.59 PM

** என் பெயரை எடிட் செய்து உங்கள் பெயரில் அனுப்பவும், எனது பெயரிலேயே அப்படியே அனுப்பி விடாதீர்கள், பதிவு எண் மிக முக்கியம்.

** இக் கேள்வியால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் மெயில் அனுப்ப வேண்டும். இதுவும் ரொம்ப முக்கியம்.

** சொல்லப் போனால், இது போன்ற தவறான விடைகளை ஆராய்ந்து முடிவு செய்யப்பட்ட இறுதி விடைச் சாவியை (FINAL ANSWER KEY) வெளியிட வேண்டும். ஆனால் அவ்வாறு TNPSC செய்வது இல்லை, மற்றபடி, தேர்வு முடிவின் போது உங்களுக்கு கூடுதல் மதிப்பெண் கொடுத்து விடுவார்கள்.

** நல்லதே நடக்கும் என்று நம்புவோம். நன்றி.

அன்புள்ள
அஜி
சென்னை.

PLEASE SHARE IT.
-----------------------------------------------------------------------------------------

மதிப்பிற்குரிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு,

வணக்கம்.

கடந்த 11.02.2018 அன்று நடைபெற்ற CCSE-04 தேர்வில் பொதுத் தமிழ் பகுதியில்,  கீழ்க்கண்ட  வினா  கேட்கப்பட்டு இருந்தது:

பொருந்தாத சொல்லைக் கண்டறிதல்: மாணிக்கம், முத்து ,பவளம், கிளிஞ்சல்
(A) மாணிக்கம்
(B) முத்து
(C) பவளம்
(D) கிளிஞ்சல்

(பார்க்க இணைக்கப்பட்ட புகைப்படம்  1)

கடந்த புதன் (13.02.2018) அன்று  TNPSC வெளியிட்டுள்ள உத்தேச விடைச் சாவியில் இக் கேள்விக்குப் பதிலாக "கிளிஞ்சல்" என்று குறிக்கப்பட்டு உள்ளது. (பார்க்க இணைக்கப்பட்ட புகைப்படம்  2).

கிளிஞ்சல் தவிர மற்ற மூன்றும் (முத்து, பவளம், மாணிக்கம்) நவரத்தின வகையினைச் சார்ந்தது என்றும் "கிளிஞ்சல்" அந்த வகையில் பொருந்தாதது என்பது போல பொருள் கொண்டு நீங்கள் அந்த விடையை தேர்ந்து எடுத்து போல் உணர முடிகிறது.

ஆனால்  ஒன்பதாம் வகுப்பு, பருவம் - 3ற்கான சமச்சீர் புத்தகத்தில், இடம் பெற்றுள்ள "உயிர்க் கோளம் " என்ற பாடத்தில், பக்கம் 67 ல், கடலில் இருந்து கிடைக்கும் பொருட்கள் என்று " முத்து, பவளம், கிளிஞ்சல், கடற்பஞ்சு, சங்கு" என கொடுக்கப்பட்டு உள்ளது, (பார்க்க இணைக்கப்பட்ட புகைப்படம்  3).

மேலும் அந்தப் பாடத்தினைத் தொடர்ந்து வரும் பயிற்சி வினாவில், பக்கம் 89-ல் , இதே கேள்வி கொடுக்கப்பட்டு உள்ளது, அதில் கடலில் இருந்து கிடைக்கும் பொருட்களில் பொருந்தாத சொல்லாக "மாணிக்கம்" கொடுக்கப்பட்டு உள்ளது (பார்க்க இணைக்கப்பட்ட புகைப்படம்  4) .

எனவே  பெரும்பாலான தேர்வர்கள் சமச்சீர் புத்தகத்தின் அடிப்படையில், கடலில் இருந்து கிடைக்கும் பொருட்களில் பொருந்ததாக மாணிக்கத்தினை விடையாக அளித்துள்ள படியால் , இந்த விடையையும் கருத்தில் கொண்டு தேர்வர்கள் பாதிக்கப் படாதவாறு மேற்கண்ட  கேள்விக்கு உரிய மதிப்பெண் வழங்குமாறு  பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள
அஜி, (Ur full Name with initial)
பதிவு எண்: 00000000   (UR register number)
சென்னை. (Ur Place)
நாள்: 18. 02.2018
----------------------------------------------------------------------------------------------

Saturday, February 17, 2018

T.M.C.

*“டி.எம்.சி” என்றால் என்ன தெரியுமா??*

*Thousand Million Cubic[TMC] ஆயிரம் மில்லியன் கன அடி என்று பொருள்.*
ஒரு டிஎம்சி கணக்கெடுப்பு - 1 பில்லியன் கன அடி ஆகும்.

*கன அளவு*: ஒரு பொருள் எவ்வளவு இடத்தை எடுக்கின்றது என்பதைக் குறிக்கும் ஒரு கணித அளவாகும்.

அப்படியெனில்

ஒரு கன அடி என்பது 28.3 லிட்டர் நீருக்கு சமம்.

*டிஎம்சி அளவிடும் முறை :*
கால்வாயின் குறுக்கே ஒரு சிறிய தடுப்பணையை கட்டி அதில் ஒரு மீட்டருக்கு ஒரு மீட்டர் என்ற அளவில் ஒரு மதகு மட்டும் இருக்கும், மதகை திறப்பதன் மூலம் ஒரு வினாடியில் வெளியேறும் நீரின் அளவை கணக்கிட்டால் போதும். ஒரு மணி நேரத்தில் எத்தனை லிட்டர் நீர் வெளியேறியது என்பதை கணக்கிடலாம்.

டிஎம்சியின் கணக்கீடு மற்றும் அவற்றின் பயன்பாடுகள் :

*ஒரு டிஎம்சி எவ்வளவு லிட்டர் - 1 பில்லியன்(100 கோடி) கன அடி.*

கடந்த முறை மற்றும் இம்முறை வழங்கப்பட்ட நீரின் அளவு என்ன? மற்றும் அவற்றின் *நன்மை தீமைகள் :*
கடந்த முறை வழங்கிய டிஎம்சி யின் அளவு - 192 டிஎம்சி.

இம்முறை வழங்கிய டிஎம்சி யின் அளவு 177.25 டிஎம்சி.
கடந்த முறையை விட குறைக்கப்பட்ட 14.75 டிஎம்சி நீரால் தமிழகத்திற்கு 41,767,34,87,232 (சுமார் 41,767 கோடியே 34 லட்சம்) லிட்டர் நீர் இழப்பு ஏற்படும்.

Friday, February 16, 2018

*புலவர் பிறப்பிடங்கள் :-*

அற்புதமான தகவல்கள்
****************************
1) கம்பர் பிறந்த ஊர் – தேரழுந்தூர் (மயிலாடுதுறைக்கு அருகில்)
2) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊர் தேரூர்
3) மருதகாசி பிறந்த ஊர் – மேலக்குடிக்காடு
4) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த ஊர் செங்கப்படுத்தான்காடு
5) கண்ணதாசன் பிறந்த ஊர் சிறுகூடல்பட்டி
6) அந்தகக் கவி வீரராகவர் பிறந்த ஊர் – பூதூர்
7) குமரகுருபரர் பிறந்த ஊர் – திருவைகுண்டம்
8) மாணிக்கவாசகர் பிறந்த ஊர் திருவாதவூர்
9) கபிலர் பிறந்த ஊர் திருவாதவூர்
10) பாரதிதாசன் பிறந்த ஊர் புதுச்சேரி
11) நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் பிறந்த ஊர் மோகனூர்
12) வாணிதாசன் பிறந்த ஊர் வில்லியனூர்
13) சுரதா பிறந்த ஊர் பழையனூர்
14) சர்.சி.வி.ராமன் பிறந்த ஊர் திருவானைக்காவல்
15) முடியரசன் பிறந்த ஊர் பெரியகுளம் (தேனி மாவட்டம்)
16) பாரதியார் பிறந்த ஊர் எட்டயபுரம்
17) காளமேகப் புலவர் பிறந்த ஊர் நந்தி கிராமம் (அ) எண்ணாயிரம்
18) திரு.வி.க . பிறந்த ஊர் தண்டலம் (துள்ளம்)
19) கியூரி எங்கு பிறந்தார் போலாந்து
20) முத்துராமலிங்க தேவர் பிறந்த ஊர் பசும்பொன்
21) இராமசாமி பிறந்த ஊர் ஈரோடு
22) இராமலிங்க அடிகளார் பிறந்த மாவட்டம் எது கடலூர்
23) இராமலிங்க அடிகளார் பிறந்த ஊர் மருதூர்
24) எம்.ஜி.ஆர் பிறந்த ஊர் கண்டி (இலங்கை)
25) ந.பிச்சமூர்த்தி பிறந்த ஊர் கும்பகோணம் (தஞ்சை மாவட்டம்)
26) கலைவானர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த ஊர் ஒழுகநேரி
27) நல்லாதணார் பிறந்த ஊர் திருத்து
28) காமராசர் பிறந்த ஊர் விருதுநகர்
29) காந்தி பிறந்த மண் போர்பந்தர்
30) கணிதமேதை இராமானுஜன் பிறந்த ஊர் ஈரோடு
31) வைணவ ஆச்சாரியர் இராமானுஜர் பிறந்த ஊர் திருப்பெரும்புதூர்
32) குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் திருவஞ்சைக்களம்
33) தேவநேய பாவணார் பிறந்த ஊர் சங்கரன்கோவில்
34) சிவப்பிரகாச சுவாமிகள் பிறந்த ஊர் தாழைநகர்
35) பூதத்தாழ்வார் பிறந்த ஊர் (மாமல்லபுரம்)காஞ்சிபுரம்
36) சுந்தரர் பிறந்த ஊர் திருமுனைப்பாடி
37) ஆதிசங்கரர் பிறந்த ஊர் காலடி (கேரளா)
38) குருநானக் பிறந்த ஊர் தாள்வண்டி
39) ராமானந்தர் பிறந்த ஊர் அலகாபாத்
40) தமிழ் தாத்தா உ.வே.சா பிறந்த ஊர் உத்தமதானபுரம்
41) திருவள்ளுவர் பிறந்த ஊர் மயிலாப்பூர்
42) தாராபாரதி பிறந்த ஊர் குவளை
43) அழகிய சொக்கநாத புலவர் பிறந்த ஊர் தச்சனூர்
44) மீனாட்சி சந்தரனார் பிறந்த ஊர் எண்ணெய் கிராமம்
45) தாயுமானவர் பிறந்த ஊர் திருமறைக்காடு (எ) வேதாரண்யம்
46) பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் திருமறைக்காடு (எ) வேதாரண்யம்
47) பூதஞ்சேந்தனார் பிறந்த ஊர் மதுரை
48) க.சச்சிதானந்தன் பிறந்த ஊர் பருத்தித்துறை
49) புகழேந்தி புலவர் பிறந்த ஊர் பொன் விளைந்த களத்தூர் (பெருங்களத்தூர்)
50) அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் இரட்டணை
51) அஞ்சலையம்மாள் பிறந்த ஊர் முதுநகர் (கடலூர்)
52) வீரமாமுனிவர் பிறந்த ஊர் காஸ்திக்கிளியோன் (இத்தாலி)
53) செயங்கொண்டார் பிறந்த ஊர் தீபங்குடி
54) பாஸ்கரதாஸ் பிறந்த ஊர் மதுரை
55) எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை பிறந்த ஊர் கரையிருப்பு
56) பெருஞ்சித்திரனார் பிறந்த ஊர் சமுத்திரம்
57) மீரா பிறந்த ஊர் சிவகங்கை
58) சேக்கிழார் பிறந்த ஊர் குன்றத்தூர்
59) திருநாவுகரசர் பிறந்த ஊர் திருவாமூர்
60) நீ.கந்தசாமி புலவர் பிறந்த ஊர் பள்ளியகரம்
61) சிற்பி பிறந்த ஊர் ஆத்துப் பொள்ளாச்சி
62) நா.காமராசன் பிறந்த ஊர் மீனாட்சிபுரம் (தேனி)
63) சாலை இளந்திரையன் பிறந்த ஊர் சாலை நயினார் பள்ளிவாசல்(நெல்லை)
64) சிவாஜி பிறந்த ஊர் சிவநேர்
65) முத்துசுவாமி தீட்சிதர் பிறந்த ஊர் திருவாரூர்
66) சியாமா சாஸ்திரிகள் பிறந்த தஞ்சாவூர்
67) ஆறுமுக நாவலர் பிறந்த ஊர் யாழ்ப்பாணம் நல்லூர்
68) நம்மாழ்வார் பிறந்த ஊர் ஆழ்வார் திருநகரி
69) வள்ளியம்மை பிறந்த ஊர் ஜோகன்ஸ்பெர்க்
70) உடுமலை நாராயணக்கவி பிறந்த ஊர் பூவிளைவாடி (பூளவாடி) என்னும் பூளைவாடி
71) ஜி.யூ.போப் பிறந்த ஊர் எட்வர்டு தீவு (பிரான்ஸ்)
72) திருப்பூர் குமரன் பிறந்த ஊர் சென்னிமலை
73) அண்ணாமலையார் பிறந்த ஊர் சென்னிகுளம்
74) டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த ஊர் புதுக்கோட்டை
75) ஆனந்தரங்கர் பிறந்த ஊர் பெரம்பூர்
76) நம்பியாண்டர் நம்பி பிறந்த ஊர் திருநாரையூர்
77) தஞ்சை வேதநாயக சாஸ்திரி பிறந்த ஊர் திருநெல்வேலி (தஞ்சையில் படித்தார்)
78) மாயூரம் வேதநாயகம் பிள்ளை குளத்தூர் (திருச்சி)
79) மகாவீரர் பிறந்த ஊர் குன்டகிராமம்
80) புத்தர் பிறந்த ஊர் கபிலவஸ்து (லும்பினி)
81) அம்பேத்கர் பிறந்த ஊர் அம்பவாடே
82) அன்னை தெரசா பிறந்த நாடு அல்பேனியா
83) கவிக்கோ அப்துல் ரகுமான் பிறந்த ஊர் மதுரை
84) திரிகூடராசப்ப கவிராயர் பிறந்த ஊர் மேலகரம் (திருநெல்வேலி)
85) பொய் சொல்லா மாணிக்கம் பிறந்த ஊர் வயிரவன்கோவில்
86) தீரர் சத்தியமூர்த்தி பிறந்த ஊர் திருமயம்
87) சுப்பிரமணிய சிவா பிறந்த ஊர் வத்தலகுண்டு
88) பரிமேலழகர் பிறந்த ஊர் காஞ்சிபுரம்
89) அடியார்க்கு நல்லார் பிறந்த ஊர் நிர (கொங்கு நாடு)
90) அருணகிரிநாதர் பிறந்த ஊர் திருவண்ணாமலை
91) அருணாசல கவிராயர் பிறந்த ஊர்
92) இராமசந்திர கவிராயர் பிறந்த ஊர்
93) பட்டிணத்தார் பிறந்த ஊர்
94) வில்லிபுத்தூரார் பிறந்த ஊர் சனியூர் (திருமுனைப்பாடி நாடு)
95) ஒளவையார் பிறந்த ஊர் உறையூர் (சோழநாடு பாணர்குடி)
96) ஒட்டக்கூத்தர் பிறந்த ஊர் மலரி
97) திருமழிசை ஆழ்வார் பிறந்த ஊர் திருமழிசை
98) பேயாழ்வார் பிறந்த ஊர் மயிலாப்பூர்
99) பொய்கையாழ்வார் பிறந்த ஊர்
100) திருஞான சம்பந்தர் பிறந்த ஊர் சீர்காழி🌹🌹