TNPSC தேர்விற்கு அல்லும், பகலும் படித்து தேர்வு எழுதிவிட்டு வேலை கிடைக்காதா ? என்று ஏங்கும் தமிழ்நாடு போட்டி தேர்வாளர்களே சற்று உங்கள் பார்வையை RRB(Railway Recruitment Board)பக்கம் திருப்புங்கள்.
1000 GroupD பதவிகளுக்கு கூட 10 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துவிட்டு TNPSC மூலமாக ஒரு வேலை வாங்க முடியாதா என ஏங்குகிறோம். மிகவும் சிரமப்பட்டு படிக்கிறோம். நமக்கு நாமே போட்டியை ஏற்படுத்திக்கொள்கிறோம்.
ஆனால், எந்தவித கடினமும் இல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய அரசு பணிகளையும் வட மாநிலத்தவர்கள் தட்டிச் செல்கிறார்கள்.இதற்கு காரணம் நம்மிடையே RRB, SSC, UPSC, IBPS, SBI, SAIL, IOCL, BHEL, BEL, BEML, INDIAN POSTAL DEPARTMENT, BANKING EXAM, DEFENCE FACTORY, ISRO...... இன்னும் இது போன்ற பல்வேறு மத்திய அரசு நிறுவனங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததே.
இவற்றை பற்றி நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.இத்துறையில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கான விளம்பரம் வரும்போது விண்ணப்பம் அனுப்ப வேண்டும். இத்தேர்வில் வெற்றிப்பெற பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
இரயில்வே தேர்வுகளில் வெற்றிப்பெறுவது மிகவும் எளிது. அதுவும் TNPSC போட்டி தேர்விற்காக படிப்பவர்களுக்கு இது இது மிக மிக எளிது. வடஇந்திய மாநிலத்தவர்கள் அதிகமானோர் தெற்கு ரயில்வேயில் பணிப்புரிகிறார்கள். இதற்கு காரணம் நாம் நம்முடைய எதிர்ப்பு தெரிவிக்காததே. நம்முடைய எதிர்ப்பு என்பது ரயில்வே தேர்வுகளில் வெற்றிப்பெறுவது மூலமாக காட்ட வேண்டும். அனைத்து இரயில்வே தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க வேண்டும். அதில் நாம் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று பணிக்கு செல்ல வேண்டும். அவ்வாறு செய்தால் வட இந்திய இளைஞர்களின் வருகை தானாக குறையும்.
இரயில்வே துறை தேர்வுகளில்
வெற்றிப்பெற எளிய வழிமுறைகள்:
1.ஏற்கெனவே நடந்து முடிந்த தேர்வுகளின் வினாத்தாள்களின் தொகுப்பை (கடந்த 5-10 ஆண்டுகள்) படித்தாலே நமது வெற்றி 60% உறுதி செய்யப்பட்டு விடும்.
மீதியுள்ள 40%
2.6முதல் 10 வகுப்பு வரையுள்ள கணிதம், அறிவியல், சமூகவியல் புத்தகங்களை மேலோட்டாமாக படித்தாலே போதுமானது.
3.நடப்பு நிகழ்வுகள்.
இதில் விளையாட்டு, மத்திய மாநில துறை அமைச்சர்கள், துறை தலைவர்கள், செயலர்கள், கூட்டமைப்பு, உலக அமைப்புகள், மிகப்பெரிய தனியார் நிறுவனங்கள் சம்மந்தமான கேள்விகள் இடம்பெறும்.
4.Mental Ability Questions.
5.இரயில்வே துறை சம்பந்தமான கேள்விகள் 1 அல்லது 2.(இது NTPC தேர்வுகளுக்கு மட்டும் பொருந்தும்)
இம்முறையில் படித்தாலே RRB தேர்வுகளில் எளிதாக வெற்றிப்பெறலாம்.
(இத்தகவல் தமிழகத்தில் அரசு வேலை தேடும் அனைவருக்கும் சென்று சேர்ந்து SOUTHERN RAILWAY RRB ல் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். )
*RRB-DETAILS*
ரெயில்வே குரூப் D தேர்வு பற்றிய சில தகவல்கள்:
(நண்பர்கள் பலரின் ரெயில்வே தேர்வு குறித்த சந்தேகங்களுக்காக எனக்கு தெரிந்ததை இங்கு பதிவிடுகின்றேன்)
* இந்தியாவின் அனைத்து ரெயில்வே ஆட்சேர்ப்பு வாரியங்களும் (RRB) ஒருங்கிணைந்த அறிவிப்பினை (CEN No 02/2018) வெளியிட்டுள்ளன.
* மொத்த பணியிடங்கள் 62907 இதில் தென்னக ரெயில்வேக்கு (2979+EX SERVICEMAN 597+OH 12+HH 18)
* வயது வரம்பு 18 -31(விதிகளின் படி வயது வரம்பு சலுகை உண்டு)
* கல்வித் தகுதி :
#10ம் வகுப்பு
#10ம் வகுப்பு மற்றும் National Apprenticeship Certificate (NAC) granted by NCVT
#10 ம்வகுப்பு மற்றும் ITI from institutions recognised by
NCVT/SCVT
இதில் 10ம் வகுப்பு தகுதி மட்டும்(ITI,NCVT அல்லாது DIPLAMO,ENGINEERING முடித்திருந்தாலும் கூட) உடைய நபர்கள் கீழ்க்கண்ட பதவிகளுக்கு மட்டும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்
HELPER / MEDICAL
HOSPITAL ATTENDANT
ASSISTANT POINTSMAN
GATEMAN
*PORTER / HAMAL / SWEEPER CUM PORTER-(*தென்னக ரயில்வேயில் இந்த ஒரு பதவிக்கு மட்டும் 10ம் வகுப்பு தகுதி மட்டும் உடையவர்கள் விண்ணப்பிக்க முடியும்)
மேலும் 10 ம்வகுப்பு மற்றும் NAC, ITI from institutions recognised by NCVT/SCVT முடித்தவர்கள் அறிக்கையில் உள்ள அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
*சம்பள வீதம் ரூ.18000 + படிகள் (ஏழாவது ஊதியக்குழு Pay Matrix Level 1)
*விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலமாக மட்டும்.
*விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 10.02.2018
* விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.03.2018
* சென்னை R R B வலைதளம்: www.rrbchennai.gov.in
விண்ணப்பிப்பதற்க்கு முன் தெரிந்துகொள்ள வேண்டியவை
• தேர்வினை தமிழில் எழுதலாம்.
• ஆன்லைன் ல் விண்ணபிக்க OBC சான்றிதழ் தேவை இல்லை.OBC NON CREAMY/CREAMY ஆப்சன் ஐ தேர்வு செய்தால் போதுமானது.(CV க்கு செல்லும் போது மட்டும் அனெக்சர் II ல் குறிப்பிடப்பட்ட மாதிரி வடிவத்தில் கட்டாயம் OBC சான்றிதல் தேவை)
• OBC NONCREAMY LAYER/OBC CREAMY LAYER எது என தேர்வு செய்ய வேண்டும்.
• சமீபத்தில் 1-12-2017 க்கு பின் எடுக்கப்பட்ட புகைப்படம் 20-50 kb jpeg format (பெயர் மற்றும் புகைப்படம் எடுக்கப்பட்ட தேதி கட்டாயம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்)
• கண்ணாடி,தொப்பி அணிந்த புகைப்படங்கள்,ஒரு பக்கம் பார்த்தது போல் எடுத்த படங்கள் ஏற்கப்படாது.கண் காது மூக்கு நன்றாக தெளிவாக தெரியும்படி இருக்க வேண்டும் ஏனெனில் தேர்வின் கடைசி நிலை வரை இதே புகைப்படம் பயன்படுத்தப்படும்.
• SC/ST விண்ணப்ப தாரர்கள் தங்களுடைய ஜாதி சான்றிதழை ஸ்கேன் செய்து 50KB-100KB அளவில் JPEG மாதிரியில் வைத்துக்கொள்ள வேண்டும்.
• Scribe Photograph in color (Wherever applicable): JPEG image of size 20 to 50KB
• அறிக்கையில் குறிப்பிட்ட கல்வி தகுதி உடையவர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கான மருத்துவ தகுதி பெற்றுள்ளோமா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.(A2,B2,B2,C1)
• தற்போது பயன்பாட்டில் உள்ள இமெயில் ID மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது)
தேர்வுக்கட்டணம்:
1. For all candidates except the fee concession categories mentioned below at Sl No 2 ` 500/-
2 ` 250/-* For Candidates belonging to SC / ST / Ex-Serviceman / PWDs / Female / Transgender / Minorities / Economically backward class. *This fee shall be refunded duly deducting bank charges, on appearing in CBT. -250/-
விண்ணப்பிக்கும் முறை:
GO TO rrbchennai.gov.in choose notification 2 and apply
• முதலில் அனைத்து விதிமுறைகளையும் தெளிவாக படித்தப்பின் விண்ணப்பிக்க தொடங்க வேண்டும்.
• எந்த RRB க்கு விண்ணப்பிக்க உள்ளீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.(ஒருவர் ஏதேனும் ஒரு RRBக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்)
• திரையில் தெரியும் பக்கத்தில் name, Date of Birth and Father's name as per para 1.7 of General Instruction, Mother's name, Aadhar number, State, SSLC/Matric Roll number, Year of passing SSLC/MATRIC, mobile number and email-id and then submit for registration. Candidates with ITI/NAC qualification alone can enter Roll number/year of passing for ITI/NAC qualification instead of SSLC/Matric இவற்றை சன்றிதழ்களில் உள்ளது போன்றே பதிவு செய்ய வேண்டும்.தகவல்களை பதிவு செய்த பின் தங்கள் மொபைல் க்கு OTP கிடைக்கப்பெறும் அதனை பதிவு செய்தபின் தங்களுக்கு ஒரு REGISTRATION NUMBER வழங்கப்படும்.அதை வெய்து PART1 பதிவு செய்ய வேண்டும்.
• PART1 பதிவு முறையில் provide the details of Educational qualification, Community, Gender, Religion, ExSM, PWD, CCAA, Minority, Economically backward class, Age relaxation eligibility category as applicable and other details.இவற்றை பதிவு செய்த பின் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.(NET BANKING/OFFLINE CHALAN/POSTAL CHALLAN முறையில் கட்டணம் செலுத்தலாம்).
• கட்டணம் செலுத்திய நிலவரம் உறுதி செய்த பின் PART II பதிவு செய்ய வேண்டும்.இதில் போஸ்ட் PREFERENCEஐ தேர்வு செய்ய வேண்டும் இது கட்டாயம்) Set priority / preferences for posts: If the candidate is eligible for more than one post based on his educational qualification and other details furnished, he/she must set the priority/preferences for the posts. The list of posts (in the selected RRB) for which a candidate is eligible will be displayed. The candidates can set their priority/preferences by clicking on the “Set Priority” button for the various posts that they are eligible for, in the RRB they are applying to. The candidates can fill in the preferences for all the posts listed, or a few of them as per their choice. But at least one preference must be given.
• தேர்வு மொழியினை தேர்வு செய்ய வேண்டும்.தமிழில் தேர்வு எழுதலாம்.
• பின்னர் முகவரி தேர்வு மையம் இதறபிற விவரங்கள் பதிவு செய்தபின்,புகைப்படத்தினை பதிவேற்றம் செய்து SUBMITசெய்ய வேண்டும்.
The Registration number, Selected RRB, email id and mobile number cannot be changed.
தேர்வு செய்யும் முறை:
1.முதலில் கணினி வழியாக CBT தேர்வு நடத்தப்படும்
2.தேர்வு பெற்றவர்கள் PHYSICAL TEST க்கு அழைக்கப்படுவார்கள்
(FOR MALE:Should be able to lift and carry 35 kg of weight for a distance of 100 metres in 2 minutes in one chance without putting the weight down and Should be able to run for a distance of 1000 metres in 4 minutes and 15 seconds in one chance.
FOR FEMALE: Should be able to lift and carry 20 kg of weight for a distance of 100 metres in 2 minutes in one chance without putting the weight down and Should be able to run for a distance of 1000 metres in 5 minutes and 40 seconds in one chance.)
3.பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு
4.மருத்துவ பரிசோதனை.
#நேர்முகத் தேர்வு இல்லை
எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்:
Question Type and Syllabus: The Questions will be of objective type with multiple choices and are likely to include questions pertaining to:
a. Mathematics Number system, BODMAS, Decimals, Fractions, LCM, HCF, Ratio and Proportion, Percentages, Mensuration, Time and Work; Time and Distance, Simple and Compound Interest, Profit and Loss, Algebra, Geometry and Trigonometry, Elementary Statistics, Square root, Age
Calculations, Calendar & Clock, Pipes & Cistern etc.
b. General Intelligence and reasoning Analogies, Alphabetical and Number Series, Coding and Decoding, Mathematical operations, Relationships, Syllogism, Jumbling, Venn Diagram, Data Interpretation and Sufficiency, Conclusions and Decision making, Similarities and Differences, Analytical Reasoning, Classification, Directions, Statement – Arguments and Assumptions etc.
c. General Science th The syllabus under this shall cover Physics, Chemistry and Life Sciences of 10 standard level.
d. General Awareness on current affairs in Science & Technology, Sports, Culture, Personalities, Economics, Politics and any other subjects of importance.
குறிப்பு: (எனது அனுபவத்தில்)
• TNPSC அளவிற்கு ரெயில்வே தேர்வு அவ்வளவு கடினமாக இருக்காது
• நெகடிவ் மார்க் உள்ளதால் அதற்கு ஏற்ப பயிற்சி செய்ய வேண்டும்
• மேற்கண்ட சிலபஸில் உள்ள பகுதிகளை பத்தாம் வகுப்பு தரத்தில் நன்கு படித்தாலே போதுமானது அதற்கு மேல் படித்தாலும் நன்று.கணிதத்தில் அதிக அளவிலான கேள்விகள் இடம் பெறும்.
• எழுத்து தேர்வு மற்றும் உடற்கூறு தேர்வில் வெற்றி பெற்று விட்டால் அதற்கு பின் CV,MEDICAL TESTல் வெற்றி பெறுவது எளிது.
• இதுவரை நடந்த தேர்வுகளில் வடமாநிலத்தவர் மற்றும் அண்டை மாநிலத்தவரே அதிக ஆதிக்கம் செலுத்துகின்றனர்.காரணம் நம் தமிழ் நாட்டில் ரெயில்வே தேர்வு பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம்.நமக்கு தகுதி இல்லாமல் இல்லை.TNPSCபடிக்கும் நபர்களுக்கு நிச்சயம் ரெயில்வே தேர்வு மிக எளிதானதே.
• இனி வரும் காலங்களில் அதிக அளவிலான தமிழர்கள் ரெயில்வே
தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதே எனது விருப்பம்.
• கடின உழைப்பிற்கு நிச்சயம் பலன் உண்டு.
எனக்கு தெரிந்ததை இங்கு பதிவிட்டுள்ளேன்.நண்பர்கள் அனைவரும் APPLYசெய்து தேர்வில் வெற்றிபெற என் வாழ்த்துக்கள்.
உங்கள் ******************
நன்றி...........
No comments:
Post a Comment