கண்டேல்வால், உஷா தொரட் கமிட்டிகள் எதற்காக அமைக்கப்பட்டன? - டி.என்.பி.எஸ்.சி முதல் யு.பி.எஸ்.சி வரை
இந்திய பொருளாதாரம் (Indian Economy)
வங்கிகளின் முறைகளை மூன்றாக பிரிக்கலாம்.
1. கோர் பேங்கிங் (Core Banking)- கிளைகள் அடங்கிய குழுவாக வங்கி சேவைகளை NEFT (National Electronic Fund Transfer ) மற்றும் Real Time Gross Settlement (RTGS ) மூலம் வழங்குவது
2. ரீடெயில் பேங்கிங் ( Retail Banking ) - நேரடியாக நுகர்வோர் மற்றும் பயணாளிகளுடன் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது
3. நேரோ பேங்கிங் (Narrow Banking ) - கடன்கள் அல்லாமல் இருப்பில் உள்ள பணம் (liquid ) மற்றும் அரசு பத்திரங்கள் (Bonds) ஆகியவற்றை மட்டுமே கையாள்வது. வங்கிகளைப் பொறுத்தவரையிலும் சில முக்கிய துறைச்சொற்களை தெரிந்து கொள்வது அவசியம்.
Bank Rate (பேங்க் ரேட்): மத்திய வங்கி ( ரிசர்வ் வங்கி ) கடன் மற்றும் பிற நிதிகளுக்கு மற்ற வங்கிகளிடம் நிர்ணயிக்கும் வட்டி விகிதம்
Cash Reserve Ratio (கேஷ் ரிசர்வ் விகிதம்): வாடிக்கையாளர்களின் வைப்பு பணத்தில் வணிக வங்கிகள் கையிருப்பு பணமாக (liquid)வோ அல்லது வைப்பாகவோ மத்திய வங்கியுடன் ( ரிசர்வ் வங்கி) வைத்திருக்கவேண்டிய விகிதம்.
Statutory Liquidity Ratio (ஸ்டாட்டூடரி லிக்குவிடிடி விகிதம்): வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் முன்னர் வணிக வங்கிகள் பணமாக, தங்க இருப்புகளாக, அரசு பத்திரங்களாக வைத்திருக்க வேண்டிய விகிதம்
Repo Rate: மத்திய வங்கி (ரிசர்வ் வங்கி) வணிக வங்கிகளுக்கு பத்திரங்களின் அடிப்படையில் வழங்கும் பணத்துக்கான விகிதம்.
Reverse Repo Rate: மத்திய வங்கி (ரிசர்வ் வங்கி ) வணிக வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதற்கான விகிதம்.
உதாரண கேள்வி:
Statement 1 ரெப்போ ரேட் அதிகரித்தால் பணப் புழக்கம் குறைகிறது.
Statement 2 ரெப்போ ரேட் குறைந்ததால் பணப் புழக்கம் அதிகரிக்கிறது.
இவற்றில் எது சரி
1 only
2 only
Both are correct ( பதில் )
Both are wrong
விளக்கம் : ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டை அதிகரித்தால் வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு செலுத்த வேண்டிய வட்டி விகிதம் அதிகரிக்கிறது. அதிகப் பணத்தை ரிசர்வ் வங்கிக்கு செலுத்த வேண்டியதால், வாடிக்கையாளர்களுக்கு கடன்களாக வழங்கப்படும் பணத்தின் அளவு குறைகிறது. பண புழக்கமும் குறைகிறது. இதே லாஜிக்கை ரெப்போ ரேட் குறையும் போது பயன்படுத்தினால், பணப்புழக்கம் ஏன் உயர்கிறது என்பதையும் நாம் எளிதாக புரிந்து கொள்ளலாம்.
இப்படி வங்கிகளின் பல்வேறு செயல்பாடுகளையும் அதற்காக பயன்படுத்தப்படும் சொற்களையும் தெரிந்துகொண்ட பின் ரிசர்வ் வங்கி, அதன் தோற்றம், சிறப்பம்சங்கள், முக்கிய சட்டங்கள், அடுத்ததாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் பட்டியல், அவைகளின் முக்கிய அம்சங்கள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதேபோல், வங்கிகளை மேம்படுத்த மற்றும் சீர்திருத்தங்கள் கொண்டு வர அமைக்கப்பட்ட கமிட்டிகள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். அவற்றில் சில முக்கிய கமிட்டிகளின் பட்டியல் இதோ
நரசிம்மன் கமிட்டி
தாமோதரன் கமிட்டி
கண்டேல்வால் கமிட்டி
பிமல் ஜலான் கமிட்டி
உஷா தொரட் கமிட்டி
எம்.வி. நாயர் கமிட்டி
தீபக் மொகந்தி கமிட்டி
அடுத்ததாக, சில முக்கிய நிதி நிறுவனங்களைப் பற்றியும் தெரிந்து கொள்வோம். இன்டஸ்ட்ரியல் டெவெலப்மென்ட் பேங்க் ஆஃப் இந்தியா ( IDBI), ஸ்மால் இன்டஸ்ட்ரீஸ் டெவலப்மென்ட் பேங்க் ஆஃப் இந்தியா, யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா, நேஷனல் ஹவுசிங் பேங்க், முத்ரா ( MUDRA) பேங்க் உள்ளிட்ட நிறுவனங்களையும் வங்கிசார் திட்டங்களையும் தெரிந்து கொள்ளுங்கள.
உதாரண கேள்வி:
Statement 1 : உஷா தோரட் கமிட்டி வங்கிசாரா நிதி நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்டது (Non Banking Financial Institutions)
Statement 2 : MUDRA வங்கிகள் ஸ்மால் இன்டஸ்ட்ரீஸ் டெவலப்மென்ட் பேங்க் ஆஃப் இந்தியாவின் உப நிறுவனம்
1 is correct
2 is correct
Both are correct ( பதில்)
Both are wrong
அடுத்ததாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது பண சந்தை ( money market ), மூலதன சந்தை (capital market), நிதிசார் இடை நிறுவனங்கள் ( Financial Intermediaries), பங்குச் சந்தை ( Stock market ), காப்பீடுகள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றைப் பற்றி. இவை சார்ந்த முக்கியச் சட்டங்கள், விதிகள், இவற்றின் சிறப்பம்சங்களைக் குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். உதாரணம் : காப்பீட்டு விதிகள் 2015, IRDAI ( இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி அன்ட் டெவெலப்மென்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா), SEBI( செக்கியூரிட்டிடீஸ் அன்ட் எக்ஸ்சேஞ்ச் போர்ட் ஆஃப் இந்தியா) சட்டம் 2014 போன்றவை.