Tuesday, November 28, 2017

Maths - Aptitude

Aspire G K: 28/11/2017

திறனாய்வுத் தேர்வு - வயது கணக்குகள்

1) தற்போது சுரேஷ் மற்றும் ரமேஷ் வயது விகிதம் 6 : 1 என்றால் 4 வருடங்களுக்கு பிறகு இருவருடைய வயது விகிதம்
32 : 7. எனில் சுரேஷின் தற்போதையே வயது என்ன?

விடை: 60

விளக்கம்:

சுரேஷின் தற்போதையே வயது = 6x
ரமேஷின் தற்போதையே வயது = x
(6x+4)/(x+4)= 32/7
7(6x+4)=32 (x+ 4)
42x+ 28 =32 x+128
42x- 32 x=128 - 28
10x= 100
x= 100/10
X= 10
சுரேஷின் தற்போதையே வயது
=6x=6 *10=60

2) இரு சகோதரிகளின் தற்போதைய வயது விகிதம் 9 : 2. ஐந்து வருடங்களுக்கு முன் அவர்களின் வயது விகிதம் 22 : 1. எனில் அவர்களின் தற்போதைய வயது என்ன?

விடை: 27, 6

விளக்கம்:

இரு சகோதரிகளின் தற்போதைய வயது =9x,2x
(9x- 5)/(2x- 5) =22/1
1(9x- 5) = 22 (2x - 5)
9x - 5 = 44x - 110
44x - 9x = 110 - 5
35x = 105
X= 3
இரு சகோதரிகளின் தற்போதைய வயது
= 9 * 3, 2 * 3= 27, 6

3) 3 நபர்களின் தற்போதைய வயது விகிதம் 3 : 5 : 9. 4வருடங்களுக்கு முன்பு அவர்களின் வயது கூடுதல் 39 எனில், 6 வருடங்களுக்கு முன்பு ஒவ்வொருவரின் வயது என்ன?

விடை: 3, 9, 21

விளக்கம்:

3 நபர்களின் தற்போதைய வயது = 3x, 5x, 9x
4 வருடங்களுக்கு முன்பு வயதுகளின் கூடுதல் = 39
4 வருடங்களுக்கு முன்பு ஒவ்வொருடைய வயது = (3x - 4), (5x- 4), (9x - 4)
4 வருடங்களுக்கு முன்பு வயதுகளின் கூடுதல்,
(3x - 4)+ (5x- 4)+ (9x - 4) = 39
3x- 4 +5x - 4 +9x- 4 =39
17x - 12 =39
17x= 39+ 12 =51
X= 51/17
 =3
அவர்களின் தற்போதைய வயது = 3 *3, 5 * 3, 9 * 3 = 9, 15, 27
6 வருடங்களுக்கு முன்பு அவர்களின் வயது = 9 - 6, 15 - 6, 27 - 6
= 3, 9, 21

4) ஒரு நபர் தனது மகனை விட 42 வயது கூடுதல் வயதுதுடையவர், 2 ஆண்டுகளில் அவரின் வயது மகனின் வயதைப்போல இரு மடங்கு ஆகும் எனில் மகனின் தற்போதைய வயது என்ன?

விடை: 40

விளக்கம்:

மகனின் தற்போதைய வயது =x
தந்தையின் தற்போதைய வயது = 42+x
இரண்டு ஆண்டுகளில் மகனின் வயது
 = x+2
இரண்டு ஆண்டுகளில் தந்தையின் வயது = (42+x)+2
இரு ஆண்டுகளில் தந்தையின் வயது மகனின் வயதை விட இரு மடங்கு,
2(x+2) = 42+x+2
2x+  4 = 44 +x
X= 44 - 4 =40
மகனின் தற்போதைய வயது = 40



திறனாய்வுத் தேர்வு - சதவீதம்

1. செவ்வகத்தின் நீளத்தை 20% அதிகரித்து அகலத்தை 10% குறைத்தால் பரப்பளவில் ஏற்படும் மாற்றத்தைக் காண்க.

விடை : 8%

விளக்கம் :
பரப்பளவில் ஏற்படும் மாற்றம் =X+Y+(xy/100)
= 20×(-10)+(20* (-10)) /100
=10 - (200/100)
= 8
பரப்பளவில் 8% அதிகரிக்கும்.

2. ஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் விலை பட்ஜெட்டுக்கு முன்பு 30% அதிகரிக்கப்பட்டு பட்ஜெட்டுக்கு பின்பு 15% அதிகரிக்கப்பட்டது. எனில் மொத்த அதிகரிப்பு சதவீதத்தைக் காண்க.

விடை : 49.5%

விளக்கம் :
மொத்த அதிகரிப்பு சதவீதம் =X+Y+  (xy/100)
=30+15 +[(30)(15)] /100
= 45+4.5
மொத்த அதிகரிப்பு சதவீதம்
=49.5%

3. 40 ன் 15% மானது மற்றொரு எண்ணின் 25% ஐ விட 2 அதிகம் எனில் அந்த எண் யாது?

விடை : 16

விளக்கம் :
அந்த எண்ணை x என்க
கொடுக்கப்பட்ட தகவலின் படி
40 (15/100)=(x* (25/100))+2
600 /100 = (25x+ 200)/100
(600 *100) /100 = 25 x + 200
600 - 200 =25x
400 = 25x
x= 16

4. ஓர் எண்னின் 25% உடன் 25 யைக் கூட்டினால் அந்த எண் கிடைக்கும் எனில் அந்த எண் யாது?

விடை : 100/3

விளக்கம் :
அந்த எண்ணை x என்க
கொடுக்கப்பட்டுள்ள தகவலின் படி
(X* 25/100)+25 = x
25x +2500 =100x
75x= 2500
X=100/3
அந்த எண் = 100/3

5. ஒரு எண்ணிற்கும் அதன் 2/5 பங்கு எண்ணிற்கும் இடையே உள்ள வித்தியாசம் 510 ஆகும். ஆகவே, அந்த எண்ணின் 10% யாது எனக் காண்க.

விடை : 85

விளக்கம் :
அந்த எண்ணினை x எனக் கொள்க.
பிறகு, x - (2x/5) =510
5x - 2x =510 *5
3x= 510* 5
x= (510 * 5)/ 3
X= 850
ஆகவே, 850 என்ற எண்ணில் 10% = 850* (10/100)
ஆகவே, 850 என்ற எண்ணில் 10%
= 85


TNPSC Tamil.

No comments:

Post a Comment