Saturday, January 6, 2018

TNPSC ANNUAL PLANNER - 2018


2018ம் ஆண்டிற்கான TNPSC அட்டவணை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2018-ம் ஆண்டுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. 3 ஆயிரத்து 325 பணி யிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது.

2018-ம் ஆண்டுக்கான திட்ட அறிக்கை குறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2015-ம் ஆண்டில் 12 தேர்வுகள் நடத்தப்பட்டு 5 ஆயிரத்து 28 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.

2016-ம் ஆண்டில் 17 தேர்வுகளை நடத்தி 6 ஆயிரத்து 383 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு இருக்கின்றன.

கடந்த ஆண்டில் 12 ஆயிரத்து 218 காலிப்பணியிடங்களை நிரப்ப தேர்வுக்கால அட்டவணை வெளியிடப்பட்டது. பின்னர் கூடுதலாக அட்டவணையில் தெரிவிக்காத பதவிகளுக்கும் சேர்த்து அறிவிக்கை வெளியிடப்பட்டன. அவற்றில் 18 தேர்வுகள் நடத்தப்பட்டன. மீதமுள்ள 6 தேர்வுகள் இந்த ஆண்டில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடத்தப்பட உள்ளன.

மேலும் கடந்த 2 ஆண்டு காலத்தில் பல்வேறு போட்டி தேர்வுகள் தொடர்பான, 99 பாடத்திட்டங்கள் வல்லுனர் குழு கொண்டு மேம்படுத்தப்பட்டன. கடந்த 5 ஆண்டில் தேர்வுகள் நடத்தப்பட்டு பல்வேறு காரணங்களால் முடிவு செய்யப்படாமல் இருந்த தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் பல்வேறு வகையான 23 பதவிகளில் 3 ஆயிரத்து 325 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் நேர்முகத்தேர்வு கொண்ட குரூப்-2 தேர்வு மூலம் 1,547 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு மே மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்பட உள்ளது. குரூப்-1 தேர்வில் 57 பணியிடங்களுக்கு ஜூன் மாதம் 3-வது வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

இந்த காலிப்பணியிட எண்ணிக்கை தேர்வுக்கு முன்னரோ அல்லது தேர்வுக்கு பிறகும் கூட மாறுதலுக்குட்பட்டது.


இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி மூலம் 3,235 காலியிடங்கள் நிரப்பப்படுகிறது: வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை வெளியீடு:

இந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலமாக ஏறத்தாழ 3 ஆயிரத்து 235 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என்று அறிவித்துள்ள டிஎன்பிஎஸ்சி, இதற்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.

2018-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டது. இந்த அட்டவணையை டிஎன்பிஎஸ்சி இணையளத்திலும் (www.tnpsc.gov.in) தெரிந்துகொள்ளலாம். அதன்படி, இந்த ஆண்டு குரூப்-2 பதவிகள், தொழிலாளர் அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர், உதவி தோட்டக்கலை அலுவலர், மீன்வள ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர், அரசு உதவி வழக்கறிஞர், அருங்காட்சியக காப்பாட்சியர், நூலகர், உடற்கல்வி இயக்குனர் என 23 விதமான பதவிகளில் 3 ஆயிரத்து 235 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வுமுறை, பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment