Wednesday, January 3, 2018

திருநங்கை

நன்றி -- Mahesh Raja
==================
.
நண்பர் மகேஷ் ராஜா, திருநங்கைகளில் சிறப்பிடம் பெற்றவர்கள்  பற்றிய தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த பட்டியலில் விடுபட்டுள்ள சில செய்திகளை  கீழே குறிப்பிட்டுள்ளேன். அதனையும் சேர்த்து படித்துக் கொள்ளுங்கள்.

.
01) 2017ல்  ஆந்திரா அரசு 18 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு மாதம் ரூபாய் 1500 பென்சன் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

{ 2012ல்  தமிழக முதலவராக இருந்த ஜெயலலிதா, 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கு மாதம் ரூபாய் 1000 பென்சன் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.  

2016ல் கேரளா அரசு 60 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு பென்சன் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

ஒடிஷா மாநில அரசு 2016ல் திருநங்கைகளுக்கு பென்சன், இலவச மருத்துவ வசதி, மற்றும் ரேசனில் இலவச உணவுப்பொருட்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. }

02) இந்தியாவிலேயே முதலாவதாக நெல்லை மனோன்மணியம் பல்கலைக் கழகம், திருநங்கைகளுக்கு  இலவச கல்வி வழங்கப்படும் என ஜூன் 2017ல் அறிவித்துள்ளது.  அதன் பின் ஜூலை 2017ல் இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக் கழகம் திருநங்கைகளுக்கு  இலவச கல்வி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

03) இந்தியாவிலேயே முதன்முறையாக காவல்துறை உதவி ஆய்வாளராக தேர்வு செய்யப்பட்ட திருநங்கை பிரித்திகா யாஷினி [ சேலம் கந்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ], தருமபுரியில் உள்ள காவல்நிலையத்தில் 6 மாத பயிற்சிக்குப்பின் சென்னையில் உள்ள சூளைமேடு காவல்நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியேற்றுள்ளார்.

[ பரமக்குடியைச் சேர்ந்த  திருநங்கை நஸ்ரியா இரண்டாம் நிலை காவலர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ]

04) ராஜஸ்தானில் கங்கா குமாரி என்னும்  திருநங்கை காவலர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

05) மருத்துவகல்லூரி மருத்துவமனைகளில் திருநங்கைகளுக்கென பிரத்தியோக கிளினிக்குகள் துவங்கப்படும் என அறிவித்துள்ள மாநிலம் -- கேரளா

No comments:

Post a Comment