Thursday, January 18, 2018

தமிழாசிரியர் சிறப்புப் பெயர்

1. தெய்வப்புலவர், செந்நாப் போதார், பொய்யில் புலவர், நான்முகனார், நாயனார், தேவர், முதற்பாவலர், மாதானுபங்கி, பெருநாவலர் - திருவள்ளுவர்

2. தம்பிரான் தோழர், வன்தொண்டன் - சுந்தரர்

3. தமிழ் மூதாட்டி, அருந்தமிழ்ச் செல்வி - ஒளவையார்

4. புலனழுக்கற்ற அந்தணன், விவிரித்த கேள்வி விளங்கு புகழ்புலவர், குறிஞ்சிக்கவி - கபிலர்

5. மாத முனிவன், மாமுன், தமிழ்முனி, குறுமுனி, திருமுனி, முதல் சித்தர் - அகத்தியர்

6. வரலாற்றுப் புலவர் - பரணர்

7. இலக்கியச் சிங்கம் - நக்கீரன்

8. அரசத் துறவி - இளங்கோவடிகள்

9. அம்மை - காரைக்காலம்மையார்

10. காப்பியனார் - தொல்காப்பியனார்

11. சாத்தன் - சீத்தலைச் சாத்தனார்

12. இன்தமிழ் ஏசுநாதர், சம்மந்தர் - திருஞானசம்பந்தர்

13. கவிமணி - தேசிய விநாயகம் பிள்ளை

14. அப்பர் - திருநாவுக்கரசர்

15. தென்னவன் பிரம்மராயன், திருவாதவூரார், வாதவூரடிகள், ஆளுடைய பிள்ளை - மாணிக்கவாசகர்

16. தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி, புதுக்கவிதையின் தந்தை, விடுதலைக்கவி, உணர்ச்சிக்கவி, தேசியக் கவி, பாட்டுக்கொரு புலவன், சிந்துக்குத் தந்தை, புதுமைக்கவி, மகாகவி, நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலை - பாரதியார்

17. கவிச்சக்கரவர்த்தி, விருத்தக்கவி - கம்பர் (கம்பரைப் புகழ்நதவர் சடையப்ப வள்ளல்)

18. சூடிக்கொடுத்த சுடர்கொடி, பாவை நாச்சியார் - ஆண்டாள்

19. தமிழ்வியாசர் - நம்பியாண்டார் நம்பி

20. அருண்மொழித் தேவர் - சேக்கிழார்

21. பட்டர்பிரான் - பெரியாழ்வார்

22. வெண்பாப்புலவர் - புகழேந்தி

23. தமிழ்த் தென்றல் - திரு.வி.கல்யாண சுந்தரனார்

24. உவமைக்கவிஞர் - சுரதா

25. புரட்சிக் கவிஞர், புரட்சிக்கவி, பாவேந்தர், புதுமைக்கவிஞர், இயற்கை கவிஞர், பூங்காட்டுத் தம்பி, கனகசுப்புரத்தினம், தமிழ் நாட்டின் ரசூல் கம்சத் தேவ் - பாரதிதாசன்

26. நாமக்கல் கவிஞர், காந்தியக் கவிஞர் - வெ.இராமலிங்கம் பிள்ளை

27. பரணிப்புலவர் - ஜெயங்கொண்டார்

28. ஆசுகவி - காளமேகப்புலவர்

29. சந்தக்கவி - அருணகிரிநாதர்

30. சன்மார்க்க கவி, வள்ளலார் - இராமலிங்க அடிகளார்

31. திருமங்கை மன்னன் - திமங்கையாழ்வார்

32. கவியரசு - கண்ணதாசன்

33. மகாவித்துவான் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை

34. சிறுகதை மன்னன்- ஜெயகாநாதன், புதுமைப்பித்தன்

35. சுஜாதா - இரங்கராஜன்

36. தமிழ் அண்ணல் - டாக்டர் இராமபெரியகருப்பன்

37. கிறிஸ்துவக் கம்பன் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை. இவர் இரட்சண்ய யாத்திரிகம் எனும் நூலின் ஆசிரியர். இந்நூல் பில்க்ரிம்ஸ் பிரோகிரஸ் எனும் ஆங்கில நூலின் தழுவலாகும்)

38. பதிப்புச் செம்மல் - ஆறுமுக நாவலர்

39. சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுப்பிள்ளை

40. மொழி ஞாயிறு - தெய்வநேயப் பாவாணர்

41. தத்துவக் கவிஞர் - திருமூலர்

42. கர்ம வீரர், கறுப்பு காந்தி, கல்வி கண் திறந்தவர், கிங் மேக்கர், படிக்காத மேதை - காமராசர்

43. அண்ணல், மகாத்மா, தேசப்பிதா - காந்தியடிகள்

44. தமிழர் தந்தை - சி.பா. ஆதித்தனார்

45. தமிழ்நாட்டின் வால்டர்ஸ்காட், தமிழ் வரலாற்று நாவலின் தந்தை - கல்கி

46. தனித்தமிழ் இசைக்காவலர் - இராஜா அண்ணாமலைச் செட்டியார்

47. சந்தக்கவி - அருணகிரிநாதர்

48 - ரசிகமணி - டி.கே.சி

49. தனித்தமிழ் இயக்கத் தந்தை - மறைமலையடிகள்

50. தமிழ்த் தாத்தா- உ.வே.சாமிநாத ஐயர் -இயர் பெயர் வேங்கடரத்தினம். இவருக்கு சாமிநாதன் என்ற பெயரை வைத்தவர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை. இவரே உ.வே.சு.வின் ஆசிரியர். இவர் வாழ்க்கை வரலாறின் பெயர் என் சரிதம்

No comments:

Post a Comment