Wednesday, January 31, 2018

சந்திர கிரகணம்:-


சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வருதலே சந்திர கிரகணம் ஆகும்
இன்று சந்திர கிரகணம் மட்டுமல்ல... சூப்பர் மூன் (பூமிக்கு அருகில் நிலவு வரும் நிகழ்வு), ப்ளு மூன் (ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமி) என்று மூன்று முக்கிய நிகழ்வுகள் ஒரே நாளில் ஏற்படுகிறது.
சந்திர கிரகணம், ஒரே மாதத்தில் இரண்டாவது பௌர்ணமி, சூப்பர் மூன் என மூன்று நிகழ்வுகள் ஒன்றாக நடந்தது மார்ச் 31, 1866ம் ஆண்டு. அதன்பின் 152 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ஜனவரி 31, 2018ம் ஆண்டு சந்திர கிரகணம், ஒரே மாதத்தில் இரண்டாவது பௌர்ணமி, சூப்பர் மூன் என மூன்று நிகழ்வுகள் நிகழ்கிறது.
நீல நிலா :-
ஒரே மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் தோன்றும் போது நிலாவின் நிறங்களில் மாற்றங்கள் ஏற்படுகிறது. அதாவது வாயு மண்டலத்தில் எரிமலைப் புகையும் தூசும் அதிகம் இருந்தால் நிலாவின் நிறம் நீலமாகத் தெரியும்.
2018ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இது. இன்று (ஜனவரி 31) முழு சந்திர கிரகணம் ஏற்படுவதால் பசிபிக் பெருங்கடல் அப்பகுதியில் கொந்தளிப்புடன் காணப்படும் என்று கூறப்படுகிறது.
பிளட் மூன் :-
சந்திர கிரகணத்தின்போது, சூரிய ஒளி நிலாவின் மீது நேரடியாக படாது என்ற போதிலும் வளி மண்டலத்தால் சிதறடிக்கப்படும் சூரிய ஒளியானது, நிலவின் மேல்படும். அதிக அலை நீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் நிலாவை அடைகிறது. இதனால், நிலா சிவப்பாகவும் தோன்றும். இது பிளட் மூன் என்று அழைக்கப்படும்.
சந்திர கிரகணத்தை எளிமையாக ஞாபகம் வைத்துக்கொள்ள:-
"சந்திரா MES " (Moon & Earth & Sun)

No comments:

Post a Comment