ஆகமம் என்றால் என்ன? பிராமணர்கள் மட்டுமே
கடைபிடிப்பதுதான் ஆகமமா?இது சொல்லின்
குற்றமா? இல்லை பொருளின் குற்றமா?
---------------------------------------------
-----------------------------------
ஆகமம் என்றால் என்ன?
-------------------------------------
ஆ + கமம் = ஆகமம்; ஆ - பசு; கமம் -
கட்டுப்படுத்துவது; இங்கே பசுவை
கட்டுப்படுத்துவதாக பொருள் வராது;
பசுவானது தொழுவத்தில் கட்டப்பட்டு
இருக்கும் அதே போல் உயிரானது உடலோடு
கட்டுப்பட்டிருக்கும். அத்தகைய உயிரை
கட்டுப்படுத்தி பரம்பொருளை உணரச்
செய்வதே ஆகமம் என்ப்படும்.
ஆகமம் என்பது சுத்தமான தமிழ் வார்த்தை.
இதை மாணிக்கவாசகர் எளிமையாக
பாடியிருக்கிறார். “ஆகமும் ஆகி நின்ற” என்ற
கூற்றின் மூலம் உணர்த்துவது என்ன?
இறைவனே ஆகமத்தை படைத்தார் என்பது
பொருள்படும். ஆகமம் என்றால் வேதம்
எனவும் கூறலாம்.
ஒரு திருஸ்தளத்தில் எது சரி? எது கூடாது?;
எது மனித வாழ்க்கைக்கு உகந்தது? எது
தீமையை பயிற்றுவிக்கும்? முக்தி அடையும்
வழி யாது? போன்றவற்றை கற்றுக்
கொடுப்பதே ஆகமம் எனப்படும்.
உதாரணம்:
-----------------
உதாரணத்திற்கு நம் முன்னோர்கள் நம்மை
இவ்வாறு அறிவுருத்துவார்கள் “வீட்டில் உள்ள
பழக்கம்தான் வெளியில் வரும்” என்பார்கள்.
இதன் உள்ளர்த்தம் என்ன? எவன் ஒருவனுக்கு
அவன் வீட்டில் உள்ளவர்களால் நல்ல பழக்க
வழக்கத்தையும், மேலான்மையையும் கற்றுக்
கொடுக்கப்படுகிறானோ அவன் வெளியேயும்
சான்றோனாக மதிக்கப்படுவான்என்பதே.......
கோவில் = கோ + இல் அதாவது அரசன் வாழும்
இல்லம் கோவில் எனப்படும். இங்கே அரசன்
என்பவர் இறைவன். அரசன் எவ்வாறு தன்
நாட்டு மக்களுக்கு நல்லவைகளை போதித்து
நல்லவனாக மாற்றுகிறானோ.... அதே
பொருப்பு இறைவனிடமும் இருக்கிறது. இந்த
காரணத்தினால்தான் கோவிலில் ஆகமம்
பின்பற்றப்படுகிறது...
யாருக்கு ஆகமம் பொருந்தும்?
--------------------------------------------
நமது வேதங்கள் படி பார்த்தால் பிறப்பால்
ஒருவன் பிராமணன் அல்லன். அவன் சாத்வ
குணத்தாலே அவனது வர்ணம் தீர்மானிக்கப்பட
ுகிறது. அந்த வகையில் பார்த்தால் ஆகமத்தை
இவர்தான் உணர வேண்டும் என்றில்லை
இறைவனை உணர்ந்த எவரும் உணரலாம்.
---------------------------------------------
-------------------------------------
இன்னும் நமது தர்மத்தில் வேதம், ஆகமம்
போன்றவை பின்பற்றப்படுவதால்தான்
இன்னமும் நமது சனாதான தர்மத்தை
அறிவியல் சார்ந்த சமயம் என்கின்றனர். இந்த
காரணத்தினால்தான் நமது தர்மம் அழிக்க
முடியாத ஒன்றாக இருக்கிறது. இந்துகளே நாம்
அனைவரும் பொருள் அறிந்து செயல்பட
வேண்டும். பொருளும் அறியாமல், ஆதியும்
அறியாமல் செயல்படுவதற்கு நாம் ஒன்றும்
கருஞ்சட்டை களவானிக் கூட்டம் அல்ல......
ஆகமம் என்பதன் பொருள் என்ன?
சிவனை வணங்கினால் சிறப்பான வாழ்வு
வரும் என்கின்றன ஆகம விதிகள், அந்த ஆகமம்
என்பதன் பொருள் என்ன?
ஆ-ஆகதம்
சிவ பத்ராஸ்ச-சிவ பெருமான் வாக்கிலிருந்து
வந்த
க-கதம்து கிரிஜா கதௌ -கிரிஜா என்ற
பார்வதிக்கு உபதேசிக்கப்பட்டது.
ம-மதஞ்ச வாசுதேவஸ்ச -வாசுதேவனாம்
மகாவிஷ்ணு வால் தன் மதம் ஏற்றுக்
கொள்ளப்பட்டது.
ம்-தஸ்மாது ஆகம
ஈரித:- இவை அனைத்தும் சேர்ந்ததே ஆகமம்.
ஆகம விஷயங்கள் இரகசியங்களை
அறிந்தவர்கள் சுக போக வாழ்க்கையை
அடைவார்கள
1 . சிவாகமங்கள்:
ஆகமங்கள் என்பவை இறைவனால்
அருளப்பெற்ற நூல்களாகும். இவை மனித
குலத்தவர்கள் நித்திய மோட்ச நிலையை
அடைவதற்குரிய வழிமுறைகளைப்
போதிக்கின்றன.
சிவபெருமான் மகேந்திர மலையில்
அமர்ந்திருந்து ஆகமங்களை அருளினார் என்று
மாணிக்க வாசக சுவாமிகள் திருவாசகத்தில்
குறிப்பிடுகின்றார்.
மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும்
என்று கீர்த்தித் திரு அகவலில் குறிப்பிடுகின்ற
ார்.
சிவபெருமான் தமது ஐந்து முகங்களாலும்
இருபத்தெட்டு ஆகமங்களை அருளினார். இவை
சிவபேதம், ருத்திரபேதம் என்று இரண்டு
வகைப்படும்.
சிவபேதத்தில் பத்து ஆகமங்களும்,
ருத்திரபேதத்தில் பதினெட்டு ஆகமங்களும்
உள்ளன.
இந்த இருபத்தெட்டு ஆகமங்களின் பெயர்கள்
வருமாறு:
காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம்,
அஜிதம்,
தீப்தம், சூக்ஷ்மம், சகஸ்ரம், அம்சுமான்,
சுப்ரபேதம், விஜயம், நிச்வாசம், ஸ்வாயம்பு,
அநலம் ( ஆக்னேயம் ), வீரம், ரௌரவம்,
மகுடம், விமலம், சந்திரஞானம், முகபிம்பம்,
புரோக்கீதம், லளிதம், ஸித்தம், சந்தானம்,
சர்வோக்தம், பாரமேச்வரம், கிரணம், வாதுளம்
என்பனவாம்.
தற்போது, பெரும்பான்மையானகோயில்களின்
பூஜைகள் காமிகம் அல்லது காரண ஆகம
முறைப்படியே செய்யப்படுகின்றன. சில
கோயில்களில் மகுடாகம முறைகள்
வழக்கத்தில் உள்ளன. தில்லைச் சிதம்பரம்
கோயிலில் நிகழ்த்தப்படும் பூஜை முறையான
பதஞ்சலி பூஜா விதானம் மகுடாகமத்தையே
ஒத்திருக்கின்றது. மற்றும் சில கோயில்களில்,
வாதுளாகமமும், பாரமேச்வரமும்
பின்பற்றப்படுகின்றன.
சைவ ஆகமங்கள் : சைவ ஆகமங்கள் 28
ஆகும். அவையாவன,
1) காமிகம் - திருவடிகள் 2) யோகஜம் -
கணைக்கால்கள் 3) சிந்தியம் - கால்விரல்கள்
4) காரணம் - கெண்டைக்கால்கள் 5) அஜிதம்
அல்லது அசிதம் - முழந்தாள் 6) தீப்தம் -
தொடைகள்
7) சூக்ஷ்மம் - குய்யம் (அபான வாயில்) 8)
சகஸ்ரகம் அல்லது ஸ்ஹஸ்ரம் - இடுப்பு
9) அம்சுமதம் அல்லது அம்சுமான் - முதுகு
10) சுப்ரபேதம் - தொப்புள்
11) விஜயம் - வயிறு 12) நிஷ்வாசம் அல்லது
நிச்வாசம் - நாசி 13) ஸ்வயம்புவம் அல்லது
ஸ்வாயம்புவம் - முலை மார்பு 14) அனலம்
அல்லது ஆக்னேயம் - கண்கள் 15) வீரபத்ரம்
அல்லது வீரம் - கழுத்து 16) ரௌரவம் -
செவிகள் 17) மகுடம் - திருமுடி 18) விமலம்
- கைகள் 19) சந்திரஞானம் - மார்பு 20) பிம்பம்
- முகம்
21) புரோத்கீதம் - நாக்கு 22) லளிதம் -
கன்னங்கள் 23) சித்தம் - நெற்றி 24) சந்தானம்
- குண்டலம்
25) சர்வோக்தம் அல்லதி ஸர்வோத்தம் -
உபவீதம் 26) பரமேஸ்வரம் அல்லது
பரமேசுரம் - மாலை
27) கிரணம் - இரத்தினா பரணம் 28) வாதுளம்
Advocate.drt.roopesh.cbe.🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹
கடைபிடிப்பதுதான் ஆகமமா?இது சொல்லின்
குற்றமா? இல்லை பொருளின் குற்றமா?
---------------------------------------------
-----------------------------------
ஆகமம் என்றால் என்ன?
-------------------------------------
ஆ + கமம் = ஆகமம்; ஆ - பசு; கமம் -
கட்டுப்படுத்துவது; இங்கே பசுவை
கட்டுப்படுத்துவதாக பொருள் வராது;
பசுவானது தொழுவத்தில் கட்டப்பட்டு
இருக்கும் அதே போல் உயிரானது உடலோடு
கட்டுப்பட்டிருக்கும். அத்தகைய உயிரை
கட்டுப்படுத்தி பரம்பொருளை உணரச்
செய்வதே ஆகமம் என்ப்படும்.
ஆகமம் என்பது சுத்தமான தமிழ் வார்த்தை.
இதை மாணிக்கவாசகர் எளிமையாக
பாடியிருக்கிறார். “ஆகமும் ஆகி நின்ற” என்ற
கூற்றின் மூலம் உணர்த்துவது என்ன?
இறைவனே ஆகமத்தை படைத்தார் என்பது
பொருள்படும். ஆகமம் என்றால் வேதம்
எனவும் கூறலாம்.
ஒரு திருஸ்தளத்தில் எது சரி? எது கூடாது?;
எது மனித வாழ்க்கைக்கு உகந்தது? எது
தீமையை பயிற்றுவிக்கும்? முக்தி அடையும்
வழி யாது? போன்றவற்றை கற்றுக்
கொடுப்பதே ஆகமம் எனப்படும்.
உதாரணம்:
-----------------
உதாரணத்திற்கு நம் முன்னோர்கள் நம்மை
இவ்வாறு அறிவுருத்துவார்கள் “வீட்டில் உள்ள
பழக்கம்தான் வெளியில் வரும்” என்பார்கள்.
இதன் உள்ளர்த்தம் என்ன? எவன் ஒருவனுக்கு
அவன் வீட்டில் உள்ளவர்களால் நல்ல பழக்க
வழக்கத்தையும், மேலான்மையையும் கற்றுக்
கொடுக்கப்படுகிறானோ அவன் வெளியேயும்
சான்றோனாக மதிக்கப்படுவான்என்பதே.......
கோவில் = கோ + இல் அதாவது அரசன் வாழும்
இல்லம் கோவில் எனப்படும். இங்கே அரசன்
என்பவர் இறைவன். அரசன் எவ்வாறு தன்
நாட்டு மக்களுக்கு நல்லவைகளை போதித்து
நல்லவனாக மாற்றுகிறானோ.... அதே
பொருப்பு இறைவனிடமும் இருக்கிறது. இந்த
காரணத்தினால்தான் கோவிலில் ஆகமம்
பின்பற்றப்படுகிறது...
யாருக்கு ஆகமம் பொருந்தும்?
--------------------------------------------
நமது வேதங்கள் படி பார்த்தால் பிறப்பால்
ஒருவன் பிராமணன் அல்லன். அவன் சாத்வ
குணத்தாலே அவனது வர்ணம் தீர்மானிக்கப்பட
ுகிறது. அந்த வகையில் பார்த்தால் ஆகமத்தை
இவர்தான் உணர வேண்டும் என்றில்லை
இறைவனை உணர்ந்த எவரும் உணரலாம்.
---------------------------------------------
-------------------------------------
இன்னும் நமது தர்மத்தில் வேதம், ஆகமம்
போன்றவை பின்பற்றப்படுவதால்தான்
இன்னமும் நமது சனாதான தர்மத்தை
அறிவியல் சார்ந்த சமயம் என்கின்றனர். இந்த
காரணத்தினால்தான் நமது தர்மம் அழிக்க
முடியாத ஒன்றாக இருக்கிறது. இந்துகளே நாம்
அனைவரும் பொருள் அறிந்து செயல்பட
வேண்டும். பொருளும் அறியாமல், ஆதியும்
அறியாமல் செயல்படுவதற்கு நாம் ஒன்றும்
கருஞ்சட்டை களவானிக் கூட்டம் அல்ல......
ஆகமம் என்பதன் பொருள் என்ன?
சிவனை வணங்கினால் சிறப்பான வாழ்வு
வரும் என்கின்றன ஆகம விதிகள், அந்த ஆகமம்
என்பதன் பொருள் என்ன?
ஆ-ஆகதம்
சிவ பத்ராஸ்ச-சிவ பெருமான் வாக்கிலிருந்து
வந்த
க-கதம்து கிரிஜா கதௌ -கிரிஜா என்ற
பார்வதிக்கு உபதேசிக்கப்பட்டது.
ம-மதஞ்ச வாசுதேவஸ்ச -வாசுதேவனாம்
மகாவிஷ்ணு வால் தன் மதம் ஏற்றுக்
கொள்ளப்பட்டது.
ம்-தஸ்மாது ஆகம
ஈரித:- இவை அனைத்தும் சேர்ந்ததே ஆகமம்.
ஆகம விஷயங்கள் இரகசியங்களை
அறிந்தவர்கள் சுக போக வாழ்க்கையை
அடைவார்கள
1 . சிவாகமங்கள்:
ஆகமங்கள் என்பவை இறைவனால்
அருளப்பெற்ற நூல்களாகும். இவை மனித
குலத்தவர்கள் நித்திய மோட்ச நிலையை
அடைவதற்குரிய வழிமுறைகளைப்
போதிக்கின்றன.
சிவபெருமான் மகேந்திர மலையில்
அமர்ந்திருந்து ஆகமங்களை அருளினார் என்று
மாணிக்க வாசக சுவாமிகள் திருவாசகத்தில்
குறிப்பிடுகின்றார்.
மன்னு மாமலை மகேந்திர மதனிற்
சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும்
என்று கீர்த்தித் திரு அகவலில் குறிப்பிடுகின்ற
ார்.
சிவபெருமான் தமது ஐந்து முகங்களாலும்
இருபத்தெட்டு ஆகமங்களை அருளினார். இவை
சிவபேதம், ருத்திரபேதம் என்று இரண்டு
வகைப்படும்.
சிவபேதத்தில் பத்து ஆகமங்களும்,
ருத்திரபேதத்தில் பதினெட்டு ஆகமங்களும்
உள்ளன.
இந்த இருபத்தெட்டு ஆகமங்களின் பெயர்கள்
வருமாறு:
காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம்,
அஜிதம்,
தீப்தம், சூக்ஷ்மம், சகஸ்ரம், அம்சுமான்,
சுப்ரபேதம், விஜயம், நிச்வாசம், ஸ்வாயம்பு,
அநலம் ( ஆக்னேயம் ), வீரம், ரௌரவம்,
மகுடம், விமலம், சந்திரஞானம், முகபிம்பம்,
புரோக்கீதம், லளிதம், ஸித்தம், சந்தானம்,
சர்வோக்தம், பாரமேச்வரம், கிரணம், வாதுளம்
என்பனவாம்.
தற்போது, பெரும்பான்மையானகோயில்களின்
பூஜைகள் காமிகம் அல்லது காரண ஆகம
முறைப்படியே செய்யப்படுகின்றன. சில
கோயில்களில் மகுடாகம முறைகள்
வழக்கத்தில் உள்ளன. தில்லைச் சிதம்பரம்
கோயிலில் நிகழ்த்தப்படும் பூஜை முறையான
பதஞ்சலி பூஜா விதானம் மகுடாகமத்தையே
ஒத்திருக்கின்றது. மற்றும் சில கோயில்களில்,
வாதுளாகமமும், பாரமேச்வரமும்
பின்பற்றப்படுகின்றன.
சைவ ஆகமங்கள் : சைவ ஆகமங்கள் 28
ஆகும். அவையாவன,
1) காமிகம் - திருவடிகள் 2) யோகஜம் -
கணைக்கால்கள் 3) சிந்தியம் - கால்விரல்கள்
4) காரணம் - கெண்டைக்கால்கள் 5) அஜிதம்
அல்லது அசிதம் - முழந்தாள் 6) தீப்தம் -
தொடைகள்
7) சூக்ஷ்மம் - குய்யம் (அபான வாயில்) 8)
சகஸ்ரகம் அல்லது ஸ்ஹஸ்ரம் - இடுப்பு
9) அம்சுமதம் அல்லது அம்சுமான் - முதுகு
10) சுப்ரபேதம் - தொப்புள்
11) விஜயம் - வயிறு 12) நிஷ்வாசம் அல்லது
நிச்வாசம் - நாசி 13) ஸ்வயம்புவம் அல்லது
ஸ்வாயம்புவம் - முலை மார்பு 14) அனலம்
அல்லது ஆக்னேயம் - கண்கள் 15) வீரபத்ரம்
அல்லது வீரம் - கழுத்து 16) ரௌரவம் -
செவிகள் 17) மகுடம் - திருமுடி 18) விமலம்
- கைகள் 19) சந்திரஞானம் - மார்பு 20) பிம்பம்
- முகம்
21) புரோத்கீதம் - நாக்கு 22) லளிதம் -
கன்னங்கள் 23) சித்தம் - நெற்றி 24) சந்தானம்
- குண்டலம்
25) சர்வோக்தம் அல்லதி ஸர்வோத்தம் -
உபவீதம் 26) பரமேஸ்வரம் அல்லது
பரமேசுரம் - மாலை
27) கிரணம் - இரத்தினா பரணம் 28) வாதுளம்
Advocate.drt.roopesh.cbe.🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹
No comments:
Post a Comment