Monday, December 11, 2017

கர்மவீரர் காமராசர்

கர்மவீரர் காமராசர் பற்றிய சில தகவல்கள்:-
👑 இவர் பிறந்த ஆண்டு - 15 ஜூலை 1903
👑 இவர் பிறந்த ஊர் - விருதுபட்டி (விருதுநகர்)
👑 1924 ஆண்டு வைக்கம் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
👑 1930 தன்னாட்சி இயக்கத்தின் போது தமிழகத்தில் ராஜாஜியுடன்  சேர்த்து வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் இயக்கத்தில் கலந்து கொண்டார்.
👑 உப்பு சத்தியாக்கிரகத்தின் போது கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
👑 1931 ம் ஆண்டு காந்தி - இர்வின் ஒப்பந்தம் படி விடுதலை செய்யப்பட்டார்.
👑 1940 தனது சத்தியாகிரகம் போராட்டம் திட்டங்களுக்கு காந்தியிடம் அனுமதி பெற வார்தா பயணமானார்.
👑 வார்தா செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
👑 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது கைது செய்யப்பட்டு அமராவதி சிறையில் 3 ஆண்டுகள் அடைக்கப்பட்டார்.
👑 15 ஆகஸ்ட் 1947 இந்தியா சுதந்திரம் அடைந்த போது சத்தியமூர்த்தி வீட்டில் தேசிய கொடியை ஏற்றினார்.
👑 1954, 1957, 1962 மூன்று ஆண்டுகள் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு 9 ஆண்டுகள் பணியாற்றினார்.
👑 இவர் முதல்வராக இருந்த போது கொண்டு வரபட்ட முக்கிய திட்டம் -  மதிய உணவு திட்டம்.
👑 மதிய உணவு திட்டம் உலகளாவிய பெரிதும் வரவேற்கப்பட்டது.
👑 1964 லால் பகதூர் சாஸ்திரி, 1966 இந்திரா காந்தி இவர்கள் பிரதமர்கள் ஆவதற்கு முக்கிய பங்கு ஆற்றினார்.
👑 அரசை உருவாக்குபவர் என்ப் போற்றப்பட்டார்.
👑 கே.திட்டம் என்ற திட்டத்தின் படி கட்சிப் பணிக்காக தனது பதவியை இராஜினாமா செய்தார்.
👑 இவருக்கு வழங்கப்பட்ட சிறப்பு பெயர்கள் - கர்ம வீ்ரர், பெருந்தலைவர், கருப்பு காந்தி, படிக்காத மேதை
👑 இவர் இறந்த ஆண்டு - 2 அக்டோபர் 1975
👑 1976 நடுவண் அரசு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment