Sunday, December 10, 2017

ஈ.வே. இராமசாமி

ஈ.வே. இராமசாமி பற்றிய சில தகவல்கள்:-
🎩 இவர் பிறந்தவிடுதல- 17 செப்டம்பர் 1879
🎩 இவர் பிறந்த ஊர் - ஈரோடு
🎩 இவர் 13 வயதில் திருமணம் செய்ய கொண்டார்.
🎩 19 வயதில் இல்லற வாழ்க்கை துறந்தார்.
🎩 1919 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
🎩 1921 சென்னை மாநில காங்கிரசு கமிட்டியின் தலைமை நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
🎩 1923 காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
🎩 1924 கேரளாவில் உள்ள வைக்கத்தில் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்து கொண்டார்.
🎩 வைக்கத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலய நுழைவு சட்டத்தை எதிர்த்து போராடினார்.
🎩 வைக்கம் போராட்டத்தின் இறுதியில் திருவிதாங்கூர் அரசு ஆலய நுழைவு தடைச் சட்டம் தளர்த்தி அனைவரும் ஆலயத்திற்குள் நுழையலாம் என அறிவித்தது.
🎩 வைக்கம் போராட்டம் காரணமாக இவருக்கு "வைக்கம் வீரர்" என்ற பட்டம் வழங்கப்பட்டது.
🎩 காங்கிரஸ் நிதியுதவியுடன் சேரன்மகாதேவி என்னும் இடத்தில் நடத்தப்பட்ட குருகுலம் பள்ளியை இவர் பார்வையிட்டார்.
🎩 1925 சுயமரியாதை இயக்கம் செங்கல்பட்டு நடந்த மாநாட்டில் தோற்றுவித்தார்.
🎩 இவர் நடத்திய பத்திரிகை -  குடியரசு, புரட்சி, விடுதலை
🎩 சமுதாயத்தில் நிலவும் தீமைகள் அனைத்திற்கும் காரணம் ஏழ்மையே என்பதை உணர்ந்தார்.
🎩 இவர் டாக்டர். எஸ்.தருமாம்மாளுக்கு அளித்த பட்டம் - வீரத்தமிழன்னை
🎩 இவருக்கு சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் டாக்டர். எஸ். தருமாம்பாள் அளித்த பட்டம் - பெரியார்
🎩 1937 நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி படுதோல்வி அடைந்தது.
🎩 1944 சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் நீதிகட்சி திராவிட கழகம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
🎩 இவர் தென்னாட்டு சாக்ரடீஸ் என்று அழைக்கப்பட்டார்.
🎩24 டிசம்பர் 1973 இயற்கை எய்தினார்.
🎩 இவருக்கு UNESCO விருது வழங்கிய ஆண்டு - 1970
🎩 இவருக்கு மத்திய அரசு அஞ்சல் தலை வெளியிடப்பட்ட ஆண்டு - 1978

No comments:

Post a Comment