Tuesday, December 19, 2017

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய சில தகவல்கள்:-

🇮🇳 இவர் பிறந்த ஆண்டு - 23 ஜனவரி 1897
🇮🇳 இவர் பிறந்த ஊர் - கட்டாக் (ஒடிசா)
🇮🇳 1920 ல்   ஐ.சி.எஸ். தேர்வில் வெற்றி பெற்றார். பயிற்சி காலத்திலேயே பதவியை துறந்தார்.
🇮🇳 1921 இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார்.
🇮🇳 1934 பம்பாய் காங்கிரஸ் சோஷ்யலிஸ்ட் கட்சியை முற்போக்கு எண்ணங்களை கொண்ட காங்கிரஸ் தலைவர்களுடன் இணைந்து துவங்கினார்.
🇮🇳 1938 ஹரிபுராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார்
🇮🇳 1939 திரிபுரா வில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டார்
🇮🇳 காந்தி நிறுத்திய பட்டாபி சித்தாரா மையாவை தோற்கடித்து திரிபுரா காங்கிரஸ் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்
🇮🇳 காங்கிரஸ் தலைவராக இருந்த போது நேருவுடன் இணைந்து தேசிய திட்டக்குழு ஒன்றை நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்படுத்தினார்
🇮🇳 1939 ஃபார்வார்டு பிளாக் கட்சி துவக்கினார்.
🇮🇳 1941 வீட்டு காவலில் இருந்து ஆப்கானியர் போல் வேடமிட்டு ஜெர்மனிக்கு தப்பி சென்றார்
🇮🇳 1942 பர்மா சென்றார்
🇮🇳 1943 சிங்கப்பூரில் ராஷ் பிகாரி போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் தளபதியாக பதவி ஏற்றார்.
🇮🇳 இந்திய தேசிய ராணுவம் இதற்கு வேறுபெயர் - ஆசாத் இந்த் ஃபாஜ்
🇮🇳 1944 இந்தியாவின் தற்காலிக அரசாங்கம் ஒன்றை சிங்கப்பூரில் அமைத்தார்
🇮🇳 ஜப்பான் கைப்பற்றி அளித்த அந்தமான் நிக்கோபார் தீவுகளை, அந்தமானுக்கு ஷாகீத் என்றும், நிக்கோபாருக்கு சுயராஜிய தீவு என்றும் பெயர் மாற்றினார்
🇮🇳 இவர் காந்தியை தேச பிதா (அ) தேச தந்தை என அழைத்தார்
🇮🇳 காந்தி இவரை தேச பக்தர்களின் இளவரசர் என்று அழைத்தார்
🇮🇳 நேதாஜி என்பதன் பொருள் - (நேதா - தலைவர், ஜி - மரியாதை)
🇮🇳 இவர் முக்கிய முழக்கங்கள் - டெல்லி சலொ, ஜெய்ஹிந்த்
🇮🇳 இவர் பாங்காக்கிலிருந்து டோக்கியோவிற்கு செல்லும் வழியில் 18 ஆகஸ்ட் 1945 விமான விபத்தில் இறந்தார் என கூறப்படுகிறது.
🇮🇳 இவர் இறப்பிற்கு காக அமைக்கப்பட்ட கமிட்டி - முகர்ஜி கமிட்டி
🇮🇳 இவருக்கு கொடுக்க வந்த பாரத ரத்னா விருதை இவரது குடும்பம் வாங்க மருந்து விட்டது.

No comments:

Post a Comment