Saturday, August 19, 2017

VAO - 2017

*VAO Mission*
==================
வி.ஏ.ஓ தேர்வில் பின்வரும் பகுதிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

தமிழ் (அ) ஆங்கிலம் - 80 கேள்விகள்
கணிதம் - 20 கேள்விகள்
வி.ஏ.ஓ பகுதி - 25 கேள்விகள்
பொது அறிவு - 75 கேள்விகள்

வி.ஏ.ஓ கேள்வி பத்தாம் வகுப்புத்தரம் என்பதால் கேள்விகள் மிக எளிதாகவே (நேரடி வினாக்கள்) இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இருப்பினும் 6 முதல் 12-ஆம் வகுப்புவரை பாடபுத்தகங்களை படித்தவர்கள், தமிழ் 76+, கணிதம் 18+, வி.ஏ.ஓ பகுதி 23+ மற்றும் பொது அறிவு (நடப்பு நிகழ்வுகள் தவிர) என அனைத்திலும் எளிதாக மதிப்பெண்கள் பெற முடியும்.

கடந்தமுறை நடப்பு நிகழ்வுகளிலிருந்து 21 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. உங்கள் வெற்றியை தீர்மானிப்பதில் நடப்பு நிகழ்வுகளுக்கு தனிப்பங்கு உள்ளது என்பதை மறந்துவிடவேண்டாம்.

கடந்த தேர்வில்(குரூப் 2) நடப்பு நிகழ்வுகள் நான் படித்த பகுதியிலிருந்து வரவில்லை ஆதலால் நான் நடப்பு நிகழ்வுகள் படிக்கபோவதில்லை என முடிவெடுப்பது முட்டாள்தனம்.

மேலும், அரசுவேலை என்பதும் அவ்வளவு எளிதல்ல ஒரே முயற்சியில் பெறுவதற்கு. கல்லை கூட மீண்டும் செதுக்க செதுக்கத்தான் அழகான சிற்பம் கிடைக்கிறது. பல தோல்விகளுக்குப் பின்னர் தான் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்பதை மறவாதீர்கள்.

வி.ஏ.ஓ தேர்வு அறிவிப்பு வெளியாவதற்குள், நான் இந்த பகுதியில் கொஞ்சம் வீக் என கூறுவதை விடுத்து அதில் பெரும்புலமை பெறுங்கள். எத்தனை காலிப்பணியிடங்கள் வெளிவந்தாலும் முதல் இடத்தை பிடிப்பேன் என்ற முனைப்பில் படியுங்கள்.

இன்றிளைப்பாருவோம் என்றிருந்தால் - வழி என்னென்ன ஆகுமோ ஓரிவில் (பாடத்திட்டம் மாறலாம்)
சாதனைப்பூக்களை ஏந்துமுன்னே -இங்கு நல்ல செடி இளைப்பாறிடுமோ ? (வெற்றி பெறும் வரை போராடுங்கள்)

வெற்றி நமதே....

வாழ்த்துகள்....💪💪🙏

No comments:

Post a Comment