Thursday, August 10, 2017

RTI Rajendran

தகவல் பெறும் உரிமைச் சட்டம் குறித்த புதிய தொகுப்பினை இன்று (09/08/2017)  பயிற்சியாளர்களுக்கு கருவூல கணக்கு ஆணையர் திரு. தென்காசி ஜவஹர், I.A.S., அவர்கள் வழங்கினார். இச்சட்டத்தினை புரிந்துகொள்வதற்கு ஏதுவாக இடது பக்கத்தில் ஆங்கிலத்திலும் அதன் தமிழ் வடிவம் வலது பக்கத்திலும் இடம் பெறச்செய்யப்பட்டுள்ளது.  மேலும்  தகவல் கோருபவர்களுக்கு 30 நாட்கள் வரை காத்திராமல் உடனுக்குடன் தகவல்களை அளித்திட ஏதுவாக இதுவரை பணியாளர் துறையால் வெளியிடப்பட்டிருந்த சுற்றறிக்கைகளின் சாராம்சங்கள்  இப்புத்தகத்தில் வரிசையாக தொகுக்கப்பட்டுள்ளது.  அதுமட்டுமல்லாமல், மாநில தகவல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள மாதிரிப்  படிவங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.  பயிற்சியாளர்களிடையே உரையாற்றிய ஆணையர் அவர்கள் ஓய்வூதியர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு 48 மணி நேரத்திற்குள் தகவல் அளிக்க வேண்டும் என்று  கேட்டுக்கொண்டார்.  (ஆறு மாதத்திற்கு மேலான உழைப்பிற்குபின் இத்தொகுப்பு  புத்தக வடிவில் வெளிவரும்போது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது) கருவூல கணக்கு ஆணையர் திரு. தென்காசி ஜவஹர், I.A.S., மற்றும் கூடுதல் இயக்குநர் (நிர்வாகம்) அவர்களுடன் நான்...........

RTI Rajendran



No comments:

Post a Comment