Saturday, August 19, 2017

நடப்பு நிகழ்வுகள்

🌷🌹

            நடப்பு நிகழ்வு வினா விடைகள் - ஆகஸ்ட் 2017

1. 2017ஆம் ஆண்டிற்கான தேசிய புவியியல் விருது பெற்றவர் யார்? - செர்ஜியோ டாபிரோ வலேச்கோ

2. பிரபு கீ ரசோய் (கடவுளின் சமையலறை) எனப் பெயரிடப்பட்டுள்ள இலவச உணவகம் எங்கு தொடங்கப்படவிருக்கிறது? -  உத்தரப் பிரதேசம்

3. உலகின் மிக அரிதான மீனாக எந்த மீன் இனத்தை ஆந்திரா பல்கலைக்கழகத்தின் கடல்வாழ் வனத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது? - இரயிச்சாபாலு

4. இந்தியாவின் முதல் ஹெலிகாப்டர் டாக்சி சேவை எங்கு தொடங்க உள்ளதாக தும்பி ஏவியேஷன் நிறுவனம் அறிவித்துள்ளது?  -  பெங்களூர்

5.  பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளுக்கான ஒருங்கிணைந்த வேளாண் ஆராய்ச்சி மையம் எங்கு அமைய உள்ளது ? -  இந்தியா

6. ஆகஸ்ட் 2017-ல் உலக வங்கியின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் யார்? -  அபர்னா

7. BIMSTEC நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் 15 வது கூட்டம் எங்கு நடைபெற உள்ளது ? - நேபாளம்

8. சமீபத்தில் காலமான பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர் சன்வார் லால் ஜேட் எந்த தொகுதியை சேர்ந்தவர் ? -  அஜ்மீர்

9. ஆகஸ்ட் 2017-ல் உச்ச நீதிமன்றத்தின் எத்தனையாவது தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்?  -  45-ஆவது

10. ஆகஸ்ட் 2017-ல் சென்னைக்கான அமெரிக்கத் துணைத் தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?  -  ராபர்ட் பரஜெஸ்

11. ஆகஸ்ட் 2017-ல் லண்டனில் நடைபெற்ற 16-ஆவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், ஆடவர் 800மீ. ஓட்டத்தில், 1 நிமிடம் 44.67 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கப் பதக்கம் வென்றவர் எந்த நாட்டைச் சார்ந்தவர் ?  -  பிரான்ஸ்

12. ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, எந்த மாநிலத்தில் துணை கலெக்டராக பொறுப்பேற்றார்?  -  ஆந்திரம்

No comments:

Post a Comment