ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) எழுதுபவர்களின் கவனத்திற்கு...!!
ஆசிரியர் தகுதித் தேர்வு (வுநுவு) எழுதுபவர்களின் கவனத்திற்கு...!!
✎ 1 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களின் தரத்தை உறுதிப்படுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.
✎ தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு 'ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு" களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது.
✎ இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள்.
தேர்வில் பங்கேற்பதற்கான தகுதிகள்
✎ தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ள விதிமுறைகளின் படி ஆசிரியர் பட்டயம், பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.
✎ தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்ற, ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும்.
தேர்வுத் தாள்கள்
✎ இத்தேர்வுகள் இரண்டு தாள்களைக் கொண்டது. தேர்வு வினாக்கள் அனைத்தும் ஒரு மதிப்பெண் வினாக்களாக இருக்கும்.
✎ ஒவ்வொரு தாளுக்கும் மொத்த மதிப்பெண்கள் 150.
✎ ஒவ்வொரு தேர்வுக்குமான காலம் 180 நிமிடங்கள். இத்தேர்வில் பொதுப்பிரிவினர் 60மூ மதிப்பெண்களும், இடஒதுக்கீட்டுப்பிரிவினர் 55மூ மதிப்பெண்களும் பெற்றால் தேர்ச்சி அடையலாம்.
முதல் தாள்
✎ முதல் தாளுக்கான வினாத்தாள் அமைப்பு கீழ்காணும் தலைப்பில் குறிப்பிட்ட மதிப்பெண்களுக்குரியதாக இருக்கும்.
✎ குழந்தைகள் மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை - 30 மதிப்பெண்
✎ மொழித்தாள் -1 (கற்பிக்கும் மொழி) - 30 மதிப்பெண்
✎ மொழித்தாள் -2 (விருப்ப மொழி) - 30 மதிப்பெண்
✎ கணிதம் - 30 மதிப்பெண்
✎ சுற்றுச்சு ழலியல் - 30 மதிப்பெண்
✎ ஆசிரியர் பயிற்சி (பட்டயப் படிப்பு) முடித்தவர்கள் மட்டும்
இரண்டாம் தாள்
✎ குழந்தைகள் மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை (கட்டாயம்) - 30 மதிப்பெண்
✎ மொழித்தாள் - 1 (கட்டாயம்) - 30 மதிப்பெண்
✎ மொழித்தாள் - 2 (கட்டாயம்) - 30 மதிப்பெண்
✎ (அ) கணிதம் மற்றும் அறிவியல் (கணிதம் மற்றும் அறிவியல் ஆசிரியர்களுக்கு மட்டும்) - 60 மதிப்பெண்
✎ (ஆ) சமூகவியல் - (சமூகவியல் ஆசிரியர்களுக்கு மட்டும்) - 60 மதிப்பெண்
✎ (இ) பிற ஆசிரியர்கள் இதில் ஏதேனும் ஒன்றில் தேர்வு எழுதினால் போதுமானது.
✎ கல்வியியல் பட்டம் பெற்றவர்கள் மட்டும்
மேலும் சில தகவல்கள் :
✎ ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் (ஆசிரியர் பயிற்சி (பட்டயப் படிப்பு) முடித்தவர்கள் மட்டும்) முதல் தாளையும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் (கல்வியியல் பட்டம் பெற்றவர்கள்) இரண்டாம் தாளையும் எழுத வேண்டும்.
✎ ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் (ஆசிரியர் பயிற்சி (பட்டயப் படிப்பு) மற்றும் கல்வியியல் பட்டம் பெற்றவர்கள் என இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்கள்) இரண்டு தாள்களையும் எழுத வேண்டும்.
✎ தேர்வில் வெற்றி பெற பொதுப்பிரிவினர் 90 மதிப்பெண்களும், இடஒதுக்கீட்டுப்பிரிவினர் 82 மதிப்பெண்களும் பெறவேண்டும்.
✎ இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால், அது 7 ஆண்டுகளுக்குச் செல்லத்தக்கதாக இருக்கும். ஒருவர் இந்தத் தேர்வில் தனது மதிப்பெண்ணை அதிகரித்துக்கொள்ள மீண்டும் தேர்வு எழுதலாம்.
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான(TET Exam) வினா - விடைகள், பாடத்திட்டங்கள், பள்ளி புத்தகங்கள், வருடாந்திர வினாத்தாள்கள், மாதிரி வினாத்தாள்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய நித்ராவின் TET செயலியை பெற கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
http://bit.ly/2IZoRml