Thursday, August 31, 2017

IAS Exam website




ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக பிரத்யேக மற்றும் இலவச பயிற்சி இணையதளத்தை ஆஃபிஸர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து ஆஃபிஸர்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் நிர்வாகிகள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளான இஸ்ரேல் ஜெபசிங், இணை இயக்குநர் ஆர்.ரங்கராஜன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது:
ஐஏஎஸ் தேர்வுக்கு தகுதிச் சுற்று, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் தயாராக வேண்டும். இந்தத் தேர்வில் அன்றாட நிகழ்வுகள் (current Affairs) குறித்த கேள்விகள் அதிகளவில் கேட்கப்படுகின்றன.
தேர்வுக்காக எதைப் படிக்க வேண்டும்; எதைப் படிக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். ஏனெனில் முக்கியச் செய்திகள், நிகழ்வுகளுடன் கூடுதலான அல்லது முக்கியமற்ற நிகழ்வுகளையும் சேர்த்து படிக்கும்போது அவற்றை நினைவில் வைத்துக் கொள்வது கடினமான ஒன்றாகும்.
இதைக் கருத்தில்கொண்டு தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக www.steelframeofindia.org என்ற பிரத்யேக மற்றும் இலவச இணையதளத்தைத் தொடங்கியுள்ளோம். ஐஏஎஸ் தேர்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய சர்தார் வல்லபாய் படேல் நினைவாகவே இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் நீதிமன்றங்களில் தினமும் வெளியாகும் முக்கிய தீர்ப்புகள், மத்திய- மாநில அரசுகளின் சலுகைகள் மற்றும் திட்டங்கள் உள்பட அனைத்து துறை சார்ந்த நிகழ்வுகள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும். நன்கு தேர்வு செய்த தகவல்கள் மட்டுமே இதில் பதிவேற்றப்படுவதால் எதைப் படிக்க வேண்டும் என குழப்பம் அடையத் தேவையில்லை. தகவல்கள் தொடர்பாக சந்தேகங்கள் இருந்தால் வினாப் பட்டியலில் அதைப் பதிவிடலாம். இதைத் தொடர்ந்து சந்தேகத்துக்குரிய இணையதளத்தில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் பதிலளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் கேட்டறியலாம்.
ஆன்-லைன் வகுப்புகள்: ஐஏஎஸ் தேர்வர்களுக்கு மற்றொரு வசதியாக ஆன்-லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. நேரடியாக வகுப்பில் சேர முடியாத மாணவர்கள், நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு இந்த வகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வழக்கமான பயிற்சி வகுப்புகளில் அளிக்கப்படும் கற்பித்தல் விடியோவாக பதிவேற்றம் செய்யப்பட்டு தேர்வர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆன்-லைன் வகுப்புகளுக்கு வழக்கமான பயிற்சி வகுப்பைக் காட்டிலும் 30 சதவீத கட்டணம் குறைவாகும். கிராமப்புற மாணவர்கள், நேரடியாக வகுப்புகளுக்கு வர முடியாத சூழ்நிலையில் உள்ள மாணவர்களின் நலனுக்காக இந்தப் புதிய சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஆன்-லைன் வகுப்பு சேர விரும்புவோர் www.officersiasacademy.com என்ற இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.

மூலக்கதை படிக்க
நண்பர்களுடன் பகிரவும்

நடப்புநிகழ்வுகள்


வரவிருக்கும் 2017 VAO தேர்விற்கு தயாராகிக் கொண்டிருப்பவரா நீங்கள்?
இதோ உங்களுக்காக பாடவாரியாக கீழே கொடுக்கபட்டுள்ளது படித்து பயனடைவீர்....

பொது அறிவு -நடப்புநிகழ்வுகள்

இந்திய வீரர்களும் தொடர்புடைய விளையாட்டுகளும்

1. சாய்னா நெஹ்வால், பி.வி.சிந்து - பேட்மிட்டன்

2. விஸ்வநாதன் ஆனந்த் - செஸ்

3. மேரிகோம், சரிதா தேவி - குத்துச்சண்டை

4. மங்கல்சிங் சாம்பியா, தீபிகா குமாரி - வில்வித்தை

5. விஜேந்தர் சிங் - குத்துச் சண்டை

6. ககன் நரங், அபிநவ் பிந்த்ரா, ரஞ்சன் ஜோதி - துப்பாக்கி சுடுதல்

7. ஆர்த்தி குப்தா - கடல் நீச்சல்

8. கர்ணம் மல்லேஸ்வரி, குஞ்சராணி தேவி - பளு தூக்குதல்

9. தேவேந்திர ஜஜாரியா - தடகளம்

10. ஏ. சரத் கமல் - டேபிள் டென்னிஸ்

11. தீப் அஹ்லாவத் - குதிரைஏற்றம்

12. ஜோதி ரந்தவா - கோல்ஃப்

13. அஞ்சு ஜார்ஜ் - நீளம் தாண்டுதல்

14. கரீந்தர் கவுர், இக்னேஷ் திர்கி - ஹாக்கி

15. டானியா சச்தேவ் - செஸ்

16. ராகேஷ் குமார், தேஜஸ்வினி - கபடி

17. இஷார் சிங் தியோல், பிரிஜா ஸ்ரீதரன் - தடகளம்

18. ரவிகுமார் - பளுதூக்குதல்

19. ரவீந்தர்சிங், ராஜீவ் தோமர் - மல்யுத்தம்

20. சோம்தேவ் தேவ்வர்மன், ரோஹன் போபண்ணா - டென்னிஸ்

21. தேஜஸ்வினி சவந்த் - துப்பாக்கி சுடுதல்

22. விராத் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, தோனி, சச்சின் டெண்டுல்கர் - கிரிக்கெட்

23. பிரசண்டா கர்மாகர் - நீச்சல்

24. ராஜ்பால்சிங், ஜஸ்ஜித் கௌர் - ஹாக்கி

25. ஜீவாலா கட்டா - பாட்மிட்டன்

26. சுனில் சேத்ரி - கால்பந்து

27. சதீஷ் ஜோஷி - துடுப்பு படகு

28. கிருஷ்ணா பூனியா - வட்டு எரிதல்

29. தீபிகா குமாரி - வில்வித்தை

30. மிதாலி ராஜ் – கிரிக்கெட

நடப்பு -- 2017 விம்பிள்டன்



01) ஆண்கள் ஒற்றையர் பட்டம் வென்றவர் யார்?
02) ஆண்கள் இரட்டையர் பட்டம் வென்றவர் யார்?
03) பெண்கள் ஒற்றையர் பட்டம் வென்றவர் யார்?
04) பெண்கள் இரட்டையர் பட்டம் வென்றவர் யார்?

#விடை

01) வெற்றி -  ரோஜர் பெடரர் ., ( தோல்வி - மரின் சிலிக் )

02) வெற்றி - L. Kubot & M. Melo  , ( தோல்வி  -- O.Marach & M. Pavic )

03) வெற்றி - முருகுஷா , ( தோல்வி  -- வீனஸ் வில்லியம்ஸ்  )

04) வெற்றி  --  E. Makarova & E. Vesnina ., ( தோல்வி  -- M. Niculescu  &  H. Chan )

Wednesday, August 30, 2017

தோழி மற்றும் அரசியல் அறிவியல்

🍦கண்ணகி தோழி - தேவந்தி

🍦மாதவியின் தோழி - சுதமதி, வயந்தமாலை

🍦மணிமேகலை தோழி - சுதமதி


பொது அறிவு :அரசியலமைப்பு

அரசியல் கட்சிகள்

தேசிய கட்சி அங்கீகாரம்

ஒரு கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் 6% வாக்குகள் மக்களவை தேர்தலில் பெற்றிருக்க வேண்டும். ஏதாவது ஒரு மாநிலத்தில் அல்லது மாநிலங்களில் குறைந்தது 4 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

மாநில கட்சி அங்கீகாரம்

ஒரு கட்சி மாநில அங்கீகரிக்கப்பட, மாநில பொதுத் தேர்தலில் குறைந்தது 6% வாக்குகள் பெற வேண்டும். மேலும் குறைந்தது இரண்டு எம்.எல்.ஏக்களாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

தற்போது 7 தேசிய கட்சிகள் உள்ளன. (2009 ஆம் ஆண்டு தேர்தல்) அவை.

1. இந்திய தேசிய காங்கிரஸ் (INC)

2. பாரதீய ஜனதா கட்சி (BJP)

3. பகுஜன் சமாஜ் கட்சி (BSP)

4. கம்யூனிஸ்ட் கட்சி (CPI-M)

5. கம்யூனிஸ்ட் கட்சி (CPI)

6. தேசியவாத காங்கிரஸ் (NCP)

7. ராஷ்ட்ரி ஜனதா தளம் (RJD)

தற்போது 40 மாநில கட்சிகள் உள்ளன.

மேலும் 980 பதிவு செய்த அங்கீகாரம் பெறாத கட்சிகள் உள்ளன.

உச்சநீதிமன்றம் (Art. 124 -147)

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் பிறநீதிபதிகளை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.

உச்சநீதிமன்றமானது ஒரு தலைமை நீதிபதியையும் 30 நீதிபதிகளையும் (30+1) கொண்டது.

Art.129 உச்சநீதிமன்றம் பதிவுறு மன்றம் (Court of Record)

Art.131 முதன்மைப்பணி (Original Jurisdiction)

Art.132 மேல்முறையீட்டு அதிகாரம்

Art.143 ஆலோசனை அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை

Art.137 தனது தீர்ப்பை மறுபரீசீலனை செய்தல் (Revisory Jurisdiction)

Art.32 நீதிப்பேராணை அதிகாரம் உச்சநீதிமன்றம் டெல்லியில் அமைந்துள்ளது

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயது 65

உயர்நீதிமன்றம்

• இந்தியாவில் 24 உயர்நீதிமன்றங்கள் உள்ளன

• இந்தியாவின் முதல் உயர்நீதிமன்றம் கல்கத்தா

• இந்தியாவின் இரண்டாவது உயர்நீதிமன்றம் பம்பாய்

• இந்தியாவின் மூன்றாவது உயர்நீதிமன்றம் மெட்ராஸ்

• மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா பெயர்கள் முறையே சென்னை, மும்பை, கொல்கத்தா என பெயர் மாற்றம் செய்யப்பட்ட போதிலும் உயர்நீதிமன்றங்களின் பெயர்கள் மாற்றப்படவில்லை.

• குவஹாட்டி உயர்நீதிமன்றம் அதிக பெஞ்சுகளைக் கொண்டுள்ளது

• மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் 2004 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.


  • • உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது 62 ஆக இருந்ததை 65 என மாற்ற கேபினட் தீர்மானித்துள்ளது.

*வல்லெழுத்து மிகும் இடம்*, *மிகா இடம்*




தமிழின் 18 மெய்யெழுத்துக்களை வல்லினம் (6), மெல்லினம் (6), இடையினம் (6) என்று மூன்று பிரிவாகப் பிரிப்பர். மெய்யெழுத்துகள் 18இல், க, ச, ட, த, ப, ற ஆகிய 6 எழுத்துகள் மட்டுமே வல்லெழுத்துகள் ஆகும். இவற்றுள் ட, ற ஆகியவை இரண்டும் ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வாரா. வல்லின எழுத்துகளுள் க, ச, த, ப ஆகிய நான்கு மட்டுமே ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வரும்.


தமிழில் சில சொற்களுக்குப் பின்னர் வரும் சொற்களில் ககரம், சகரம், தகரம், பகரம் ஆகிய எழுத்துக்களில் தொடங்கும் சொற்கள் இருந்தால் அவ்விரண்டு சொற்களுக்கும் இடையே வல்லின மெய் எழுத்து மிகும். இவ்வாறு மிகும் இடங்களில் க், ச், த், ப் என்ற வல்லெழுத்துக்கள் தோன்றும். இவை உரிய இடங்களில் வரவில்லையானால், அந்தத் தொடரிலோ, வாக்கியத்திலோ, பொருளின் பொருத்தமும், உரிய அழுத்தமும், ஓசை நயமும், தெளிவும் இரா. சில நேரங்களில் பொருள் வேறுபாடும் ஏற்பட்டு விடும்.

*வல்லெழுத்துக்கள் மிகும் இடங்கள்*

அ, இ, உ சுட்டெழுத்துக்களின் பின்
அ + காலம் = அக்காலம்
இ + சமயம் = இச்சமயம்
உ + பக்கம் = உப்பக்கம் ('உ' எனும் சுட்டெழுத்து வழக்கில் இல்லை)
எ என்னும் வினா எழுத்தின் பின்
எ + பொருள் = எப்பொருள்
அந்த, இந்த, எந்த என்னும் அண்மை, சேய்மைச் சுட்டுகள் மற்றும் வினாச் சுட்டுகளின் பின்
அந்த + காலம் = அந்தக் காலம்
இந்த + சிறுவன் = இந்தச் சிறுவன்
எந்த + பையன் = எந்தப் பையன்
அப்படி, எப்படி, இப்படி என்னும் சொற்களின் பின்
அப்படி + கேள் = அப்படிக் கேள்
இப்படி + சொல் = இப்படிச் சொல்
எப்படி + பார்ப்பது = எப்படிப் பார்ப்பது
இரண்டாம் வேற்றுமை உருபுக்குப்பின் (ஐ)
அவனைக் கண்டேன்
செய்யுளைச் சொன்னேன்
அவளைத் தேடினேன்
குறளைப் படித்தேன்
நான்காம் வேற்றுமை உருபுக்குப்பின் (கு)
அவனுக்குக் கொடுத்தேன்
அவளுக்குச் சொன்னேன்
என, ஆக என்ற சொற்களுக்குப்பின்
எனக் கூறினான்
அவனாகச் சொன்னான்
ஆறாம் வேற்றுமைத் தொகையில் அஃறிணைப் பெயர்களின் பின் வல்லெழுத்துகள் மிகும்.

*வல்லெழுத்து மிகா இடங்கள்*

அது, இது, எது; அவை, இவை, எவை; அன்று, இன்று, என்று; அத்தனை, இத்தனை, எத்தனை; அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு ; அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு என்னும் சொற்களின் முன் வரும் வல்லினம் மிகாது.

அது, இது, எது என்னும் சொற்களின் பின்
அது காண்
எது செய்தாய்
இது பார்
ஏது, யாது என்னும் சொற்களின் பின்
ஏது கண்டாய்
யாது பொருள்
அவை, எவை, இவை, யாவை
அவை பெரியன
யாவை போயின
அத்தனை, எத்தனை, இத்தனை
அத்தனை செடி
எத்தனை பசு
அவ்வளவு, எவ்வளவு, இவ்வளவு
அவ்வளவு தந்தாய்
எவ்வளவு செய்தாய்
இவ்வளவு துணிவு
அங்கு, எங்கு, இங்கு என்னும் சொற்களின் பின்
அங்கு செல்
எங்கு கற்றாய்
இங்கு பார்

*சில மென்றொடர்க் குற்றியலுகரத்திற்குப்பின்*
அன்று சொன்னான்
என்று தந்தான்
இன்று கண்டான்
மென்று தின்றார்
வந்து சேர்ந்தான்

மாநிலங்கள் சிறப்புகள்:




1] எந்த மாநில அரசு இந்திரா உணவகம் திட்டத்தை தொடங்கியுள்ளது = கர்நாடகா

2] எந்த மாநில கிராமப்புற மேம்பாட்டுக்கு நபார்டு வங்கி ரூ.1,350 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது = ராஜஸ்தான்

3] இந்தியாவின் முதல் ரயில்வே பேரழிவு மேலாண்மை மையம் எங்கு அமையவுள்ளது? = கர்நாடகா

4] இந்தியாவின் முதல் விமான பல்கலைக்கழகமான ராஜீவ் காந்தி தேசிய விமானப் பல்கலைக்கழகம் எங்கு அமையவுள்ளது = உத்ரபிரதேசம்

5] அனைத்து மாநில மற்றும் ஒன்றியப்பிரதேசங்களின் முதன்மை தேர்தல் அலுவலர்கள் மாநாடு எங்கு நடைபெற்றது = புதுடெல்லி

6] மின்னுற்பத்திக்காக நிலக்கரி பயன்பாட்டை செயல்படுத்த உள்ள முதல் இந்திய மாநிலம் = குஜராத்

7] தரமான கல்வியை வழங்குவதற்காக,ஹமரி ஷால கைசி ஹோ என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்திய மாநிலம் = மத்தியபிரதேசம்

8] அரசு பெண் தொழில்முனைவோரை பயிற்றுவிப்பதற்காக ஃபேஸ்புக்கின் She Means Business எனும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது = ஒடிஷா

9] மொபைல் தெரப்பி வாகனத்தை தொடங்கிய மாநிலம் = பீகார்

10] யானைகளை பாதுகாப்பதற்காக தேசிய அளவிலான "கஜ் யத்ரா தொடங்கிய இடம் = புதுடெல்லி

11] ஊழலை அறவே ஒழிக்க கண்காணிப்பு முறையை பலப்படுத்த உள்ள மாநிலம் = ஒடிஷா

12] நாமமி கங்கே ஜக்ரிட்டி யாத்ரா என்ற புதிய விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கிய மாநிலம் = உத்திர பிரதேசம்

13] இந்தியாவின் முதல் குறுங்காடுகள் எங்கு உருவாக்கப்படுகிறது= சட்டிஸ்கர்

14] பிரபு கீ ரசோய் (கடவுளின் சமையலறை) எனப் பெயரிடப்பட்டுள்ள இலவச உணவகம் தொடங்கிய மாநிலம் = உத்ரபிரதேசம்

15] இந்தியாவின் முதல் ஹெலிகாப்டர் டாக்சி சேவை எங்கு தொடங்கப்பட உள்ளது = பெங்களூர்

16] 14 வயதுக்கு குறைவான குழந்தைகளை தஹி ஹன்டி விழாவில் பங்கேற்க அனுமதி மறுத்த மாநிலம் = மகாராஷ்ட்ரா

17] இலவச வேட்டி சேலைகளை வழங்க முடிவு செய்துள்ள மாநிலம் = ஆந்திரபிரதேசம்

18] திரவ நைட்ரஜனை கொண்டு பாதுகாக்கப்படும் பானம் அல்லது உணவு பொருள்களை அதிகாரப்பூர்வமாக தடை செய்துள்ள மாநிலம் = ஹரியாணா

19] 2017 INDIA - ASEAN இளைஞர் மாநாட்டை நடத்தவுள்ள மாநிலம் = மத்திய பிரதேசம்

20] கப்பல் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்காக இந்தியாவில் கப்பல் சுற்றுலாவின் எழுச்சி எனும் திட்டம் எங்கு தொடங்கப்பட்டது?
= மகாராஷ்ட்ரா (மும்பை)

21] அப்னி காடி அப்னா ரோஜ்கர் திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் =பஞ்சாப்

22] தக்காளி விலைக்கு எதிராக தக்காளி ஸ்டேட் வங்கி எங்கு தொடங்கப்பட்டது = உத்ரபிரதேசம்

23] தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகளுக்கு மாத ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு அளிக்க முடிவு செய்துள்ள மாநிலம் = கேரளா

24] கட்டாய மத மாற்றம் அல்லது தூண்டுதலால் மதமாற்றம் செய்யப்படுவது போன்றவை ஜாமினில் வெளிவரமுடியாத குற்றமென சட்டம் இயற்றியுள்ள மாநிலம் = ஜார்கண்ட்

25] கனரா வங்கி தனது முதல் டிஜிட்டல் வங்கி கிளை CANDI யை எங்கு துவக்கியுள்ளது = கர்நாடகா(பெங்களூர்)