Wednesday, April 11, 2018

*தாவரவியல்*

நேற்றைய 7ம் வகுப்பு தொடர்ச்சி...
1. தண்டு தொகுப்பு:-
🌱 தாவரத்தின் தரைக்கு மேல் உள்ள தொகுப்பு - தண்டு
🌱 கருவின் முளைக்குருத்திலிருந்து தண்டு வளர்கிறது.
🌱 தண்டின் தொகுப்பில் மையத் தண்டு, கிளைகள், கணு, கணு இடைப்பகுதி, இலை, மொட்டு, மலர், காய் மற்றும் கனிகள் காணப்படுகின்றன.
🌱 இளம் தண்டு பசுமையாகவும், முதிர்ந்த தண்டு பழுப்பு நிறமாகவும் இருக்கும்.
🌱 தண்டிலிருந்து இலை தோன்றுகின்ற பகுதி கணு எனப்படும்.
🌱 இரண்டு அடுத்தடுத்த கணுக்களுக்கு இடையே உள்ள தூரம் கணுவிடை தூரம்.
♨தண்டின் பணிகள்:
🌱 கிளை, இலை, மலர், கனி இவற்றைத் தாங்குதல்.
🌱 நீரையும், கனிமங்களையும் வேரிலிருந்து தரைக்கு மேல் உள்ள பாகங்களுக்கும், உணவுப் பொருட்களை இலையிலிருந்து தாவரத்தின் பிற பாகங்களுக்கும் கடத்துகின்றன.
2. இலை:-
🍃 இலை என்பது தண்டின் மெல்லிய, பசுமையான, தட்டையான பக்கவாட்டு வளரிகள் எனப்படும்.
🍃 இலையின் மூன்று முக்கிய பாகங்கள்:
1. இலைதாள்
2. இலைகாம்பு
3. இலையடிப் பகுதி
🍃 இலையின் பணிகள்:
1. உணவு தயாரித்தல்
2. வாயு பரிமாற்றம்.
3. நீராவிப் போக்கு

3. மலர்:
🍃 மலர் என்பது இனப்பெருக்க உறுப்பாகும்.
🍃 பாலினப் பாலினப்பெருக்கத்திற்கு உதவுகிறது.
🍃 மகரந்த சேர்க்கை மற்றும் கருவுறுதல் நிகழ்ச்சிக்குப் பின் மலர் கனியாக மாற்றமடைகிறது.
🍃 மலரின் பாகங்கள் - 4
1. புல்லி வட்டம்
2. அல்லி வட்டம்
3. மகரந்தத்தாள் வட்டம்
4. சூலக வட்டம்
🍃 மலரின் ஆண்பாகம் மகரந்தத்தாள் வட்டம்.
🍃 மகரந்தப்பையில் மகரந்தத்நூல்கள் என்ற ஆண் கேமிட்டுகள் உருவாகிறது.
🍃 மலரின் பெண் பெண் பாகம் சூலக பெண்
🍃 சூலக பகுதிகள் - 3
1. சூலதண்டு
2. சூல் தண்டு
3. சூல் பை
♨ மலரின் பணிகள்:
🍃 மலரின் வாசனை திரவியங்கள், மருந்து பொருள்கள் தயாரிக்க பெரிதும் உதவுகின்றன.
🍃 குறிஞ்சி மலர் 12 வருடங்கள் ஒருமுறை மட்டுமே பூக்கும்.
🍃 இது தமிழ் நாட்டில் மட்டுமே காணப்படும்.
🍃 குறிஞ்சி மலர் கடைசியாக பூர்த்த ஆண்டு - 2006

No comments:

Post a Comment