Friday, April 13, 2018

*புறநானூறு :-*

* புறம்+நான்கு+நூறு = புறநானூறு
* புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்ட நூல் ஆதலால் புறநானூறு எனப் பெயர் பெற்றது.
* புறம் என்பது ஒருவரின் வீரம், கொடை, கல்வி முதலிய சிறப்புகளைக் குறிக்கும்.

திணை = புறத்திணை
பாவகை = ஆசிரியப்பா
பாடல்கள் = 400
புலவர்கள் = 157
அடி எல்லை = 4-40

🌺 அதிக தகவல்களுக்கு  TNPSC - நண்பர்கள்  fb குரூப்பை பாருங்க 🍁

* எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
* இந்நூலிலுள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பாடப்பெற்றவை.
* புறநானூற்றில் 11 திணைகளும், 65 துறைகளும் கூறப்பட்டுள்ளன.
* புறநானூற்றில் கூறப்படாத திணை = உழிஞைத் திணை.
* இப்பாடல்கள் பண்டைத் தமிழ் மன்னர்களின் ஆட்சிச், சிற்பம், கொடை, கல்வி முதலியவற்றை விளக்குகிறது.
* இந்நூலின் சில பாடல்களை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
* புறநானூற்றில் மிக அதிக பாடலை பாடியவர் : ஔவையார்
* முதல் 266 பாடல்களுக்கு பழைய உரை உள்ளது.
* 267-400 பாடல்களுக்கு உ.வே.சா உரை உள்ளது.
* நூலினை முதலில் பதிப்பித்தவர் = உ.வே.சா

* வேறுபெயர் : புறம்,புறப்பாட்டு,தமிழ்க்கரூவூலம்,
தமிழர் வரலாற்றுக்களஞ்சியம்.

No comments:

Post a Comment