Wednesday, April 11, 2018

எரிதல் மற்றும் சுடர்:-

🔥 எரியகூடிய அனைத்து பொருட்களும் - எரிபொருள்.

🔥 ஒரு பொருள் எரிய தேவைப்படும் குறைந்த பட்ச வெப்பநிலை - எரி வெப்பநிலை

🔥 எரிதலின் வகைகள்:-
1. தன்னிச்சையாக எரிதல்
2. வேகமாக எரிதல்
3. மெதுவாக எரிதல்
4. முற்றுபெறா எரிதல்

1. தன்னிச்சையாக எரிதல்:-
🔥 சில எரிபொருட்கள் எந்த ஒரு துண்டுதலும் இன்றி தன்னிச்சையாக தீ பற்றிக் கொள்ளும்.
(எ.கா.) வெண் பாஸ்பரஸ்

2. வேகமாக எரிதல்: -
🔥 உடனடியாக எளிதில் தீப்பற்றி எரிதல் நிகழ்வு - வேகமாக எரிதல்.
(எ.கா.) பட்டாசு வெடித்தல், கற்பூரம் எரிதல், மெக்னீசியம் நாட எரிதல், மண்ணெண்ணெய் எரிதல்

3. மெதுவாக எரிதல்:-
🔥 குறைந்த வேகத்தில் எரியும் எரிதலுக்கு - மெதுவாக எரிதல்
(எ.கா.) நம் உடலில் நடைபெறும் ஆக்ஸிஜன் ஏற்றம்.
குளுக்கோஸ் + ஆக்ஸிஜன் ➡ Co² + நீர் + ஆற்றல்

4. முற்றுபெறா எரிதல்:-
🔥 எரிபொருளோடு ஆக்ஸிஜன் போது எரிதல் வினை நிகழும்

🔥 கார்பன் + ஆக்ஸிஜன் = கார்பன் மோனாக்சைடு
(எ.கா.) இரும்பு துருப்பிடித்தல்

🔥 மின் கசிவால் ஏற்படும் தீயை அனைக்க பயன்படுவது - கார்பன் டெட்ரா குளோரைடு, தின்ப கார்பன் டை ஆக்சைடு

🕯 சுடரின் அமைப்பு:-
1. எரியாத பகுதி (Zobe on non - combustion)
2. குறைவாக எரியும் பகுதி (Zone of pratial)
3. முழுவதுமாக எரியும் பகுதி (Zone of Complete combustion)

🔥 எரிபொருள் வகைகள்:-
1. திண்ம எரிபொருள்
2. திரவ எரிபொருள்
3. வாயு எரிபொருள்

🔥 திரவ பெட்ரோலிய வாயு = புரொப்பேன் (15%) + பியூட்டேன் (85%)

🔥 சாண எரிவாயு = மீத்தேன் + ஈத்தேன்

No comments:

Post a Comment