Monday, March 26, 2018

*தமிழகம் பற்றிய பொது அறிவு குறிப்புகள்*

1. தமிழகத்தின் முதல் கவர்னர் – ஜார்ஜ் மெக்கார்டினி
2.தமிழகத்தின் முதல் கவர்னர் – ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை (சுதந்திரத்திற்கு பிறகு)
3.தமிழகத்தின் முதல் இந்திய கவர்னர் – கிருஷ்ண கிமார சிங்ஜி பவசிங்ஜி
4.தமிழகத்தின் முதல் பெண் கவர்னர் – செல்வி. பாத்திமா பீவி
5.இந்தியா குடியரசு ஆனபோது தமிழக ஆளுநராக இருந்தவர் – கிருஷ்ண குமாரசிங்ஜி பவசிங்ஜி
6.இரண்டு முறை தமிழகத்தின் ஆளுநராக பதவி வகித்தவர் – சுர்ஜித்சிங் பர்னாலா
7.தமிழகத்தில் நீண்ட காலம் ஆளுநராக இருந்தவர் – சுர்ஜித்சிங் பர்னாலா (நவம்பர் 3, 2004 – ஆகஸ்ட் 31, 2011, சுமார் 6 ½ ஆண்டுகள்)
8. தமிழகத்தின் குறுகிய காலம் ஆளுநராக இருந்தவர் – எம்.எம்.இஸ்மாயில் (அக்டோபர் 27, 1980 முதல் நவம்பர் 4, 1980 வரை, 9 நாட்கள் தற்காலிக ஆளுநர்)
9. தமிழ்நாட்டில் முதல் முதலமைச்சர் – திரு. சுப்புராயலு ரெட்டியார்
10.இந்தியா சுதந்திரம் அடைந்தபோது தமிழக முதல்வராக இருந்தவர் – திரு. ஒமந்தூர் ராமசாமி ரெட்டியார்
11.சுதந்திர இந்தியாவில் முதல் பொதுத்தேர்தல் முடிந்த பிறகு தமிழக முதல்வரானவர் – திரு. இராஜாஜி
12.தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன்
13.தமிழகத்தில் மிக நீண்டகாலம் (தொடர்ந்து) முதல்வராக இருந்தவர் – எம்.ஜி.ராமச்சந்திரன் (ஜூன் 30, 1977 முதல் டிசம்பர் 24, 1987 வரை – 10 ஆண்டுகள் 5 மாதங்கள் 25 நாட்கள்)
14.மிகக்குறுகிய காலம் முதல்வராக இருந்தவர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (ஜனவரி 17, 1988 முதல் ஜனவரி 30, 1988 வரை முதல்வராக இருந்தார் – 24 நாட்கள்)
15.தமிழகத்தில் மிக அதிகமுறை முதல்வர் பதவி வகித்தவர் – திரு. மு. கருணாநிதி (5 முறை)
10 பிப்ரவரி 1969 – 4 ஜனவரி 1971
15 மார்ச் 1971 – 31 ஜனவரி 1976
27 ஜனவரி 1989 – 30 ஜனவரி 1991
13 மே 1996 – 13 மே 2001
13 மே 2006 – 13 மே 2011
16.தேர்தல்களில் போட்டியிட குறைந்தபட்ச வயது வரம்பு:
மக்களவை தேர்தல் – 25
மாநிலங்களவை தேர்தல் – 30
சட்டப்பேரவை தேர்தல் – 25
சட்ட மேலவை தேர்தல் – 30
உள்ளாட்சி அமைப்பு தேர்தல் – 21
வாக்களுக்கும் வயது – 18
17. வேட்பாளரின் டெபாசிட் தொகை
பொது பிரிவினர்:
மாநில சட்டமன்ற தேர்தல் – ரூ.10,000/-
நாடாளுமன்ற தேர்தல் – ரூ.25,000/-
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்:
மாநில சட்டமன்ற தேர்தல் – ரூ.5,000/-
நாடாளுமன்ற தேர்தல் – ரூ.12,500/-
18. கிராமசபை கூடும் நாட்கள்:
குடியரசு தினம் – ஜனவரி 26
தொழிலாளர் தினம் – மே 1
சுதந்திர தினம் – ஆகஸ்ட் 15
காந்தி ஜெயந்த் – அக்டோபர் 2
19. தமிழ்நாட்டில் மொத்தம் 12,620 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.
20. தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 421 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.
21. தமிழ்நாட்டில் அதிக கிராம பஞ்சாயத்துக்களைக் கொண்ட மாவட்டம் விழுப்புரம். இதில் 1104 கிராம பஞ்சாயத்துக்கள் அமைந்துள்ளன.

No comments:

Post a Comment